இப்பதான் எல்லாம் கூடி வந்து அவரு சீரியலுக்கு எல்லாம் டைட்டில் பாட்டு போட்டு கொடுத்தாரு அதுக்குள்ள முட்டிகிச்சா? ஹம்ம்ம்.. தலைக்கும் சும்மா இருக்க முடியல போல :(
Quote:
'இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழா மேடையில் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் கருத்து மோதல் நடந்ததே... என்ன பிரச்னை?''
''வளர்ச்சி. வளர்ச்சிதான் காரணம். நான் இன்னிக்கு வரைக்கும் வளர்ந்ததா நினைக்கவே இல்லை. என் மண்ணும் வாசமும் என்கிட்ட அப்படியே இருக்கு. அவன் வளர்ந்துட்டதா நினைச்சி, உடம்புக்குப் போர்வை போர்த்திக்கலாமா? முகத்துக்குக் கண்ணாடி போட்டா, முழு முகமும் மறைஞ்சிடுறது இல்ல. நான் நிதர்சனமானவன். இது ஜனங்களுக்கும் தெரியும். நீ யார் என்பதை ஜனங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது? நீ பட்ட கஷ்டம் மற்றவர்களுக்குப் பாடமாக, ஊக்கமாக இருக்கும். அதைவிட்டுட்டு, நான் புருஷாத்தமம் பண்ண விரும்பலைனு சொன்னா எப்படி?''