-
http://www.tamilbase.com/index.php?o...ews&Itemid=318
'யானை இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது நடிகர் திலகம் சிவாஜிக்குதான் பொருந்தும். அண்மையில் டிஜிட்டல் வடிவில் வெளிவந்த 'கர்ணன்', சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களின் பணப் பெட்டியை பொக்கிஷமாக்கி ஓயவில்லை, அதற்குள் 'வசந்த மாளிகை' வந்திருக்கிறது. பொன்மகன் வந்தான், பொருள் வாரி தந்தான் என்று சிவாஜியை புகழாத தியேட்டர்களே கிடையாது என்கிற அளவுக்கு 1972 லிருந்தே கலெக்ஷனை கொட்டிக் கொண்டிருக்கிறது வசந்த மாளிகை. தெலுங்கில் 'எவருக்கோசம்... இது எவருக்கோசம்...?' என்று நாகேஸ்வரராவ் பாடியதைதான் இங்கே நமக்காக 'யாருக்காக இது யாருக்காக?' முழங்கினார் சிவாஜி.
உதடு துடிக்க, கண்கள் சிவக்க, கையில் விஷக் கிண்ணத்தோடு அவர் பாட பாட 'அவசர தேவை ஒரு காதல் தோல்வி' என்கிற அளவுக்கு அந்த நடிப்பின் மீது உயிராய் திரிகிற ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் புகழ், பெருமை! 'மதுவைதானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே, விஷயத்தை இல்லையே?' என்று காதல் தோல்வி தத்தளித்து தளும்ப தளும்ப அவர் வாணிஸ்ரீயை பார்த்து பேசுகிற டயலாக்கை கேட்டு மயக்கம் போட்டு விழுந்த ரசிகர்கள் அப்போது ஏராளமாம்.
'பார்... என் காதல் தேவதைக்காக நான் கட்டிய வசந்த மாளிகையை பார்...' என்று சொல்லிக் கொண்டே அவர் ஒவ்வொரு படியாக ஏறுகிற அழகை பார்க்க இப்பவே 'வசந்த மாளிகை' ஓடும் தியேட்டர்களுக்கு முண்டியடித்துக் கொண்டு ஓடலாம். பாலமுருகனின் வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு உயிராக அமைந்ததெல்லாம் தமிழ் சினிமாவுக்கு அமைந்த வரம்.
இப்போதைய தமன்னா, ஸ்ரேயா, நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அனுஷ்காவையெல்லாம் ஒரு குடுவையில் போட்டு கலக்கினாலும் ஒரு வாணிஸ்ரீக்கு ஈடாகாது அந்த கலவை! அப்படியொரு செதுக்கி வைத்த பேரழகோடு நடித்திருக்கும் வாணிஸ்ரீ யின் பிடிவாதத்தையும், ஆணவத்தையும், ஏழ்மையின் நேர்மையையும், இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
இப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளையும் கே.வி.மகாதேவன் இசையையும் இதற்கு முன்பும் ஓராயிரம் முறை கேட்டுவிட்டோம். இவ்வளவுக்கு பிறகும் தியேட்டரில் அதை கேட்கும்போது மனசும் உடலும் பித்து பிடித்துக் கிடக்கிறதே... அந்த உணர்வை என்னவென்று சொல்ல?
ஆடி மாதத்தில் காற்றடிக்கும், ஐப்பசி மாசத்தில் மழையடிக்கும் என்பதெல்லாம் பருவநிலை மாறும் போதுதான் நடக்கிற சமாச்சாரங்கள். 'வசந்தமாளிகை' படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மனசுக்குள் மழையும் காற்றும் நிச்சயம். இதோ- இந்த முறை டிஜிட்டலையும் சினிமாஸ்கோப்பையும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறது அது.
ஆசை தீர அனுபவிச்சுட்டு சொல்லுங்க ரசிகர்களே!
-
Sivajiyal mattume intha record ai seya mudiyum.
-
Vasantha maligai update
பல ஊர்களிலிருந்தும் வரும் தகவல்கள் மகிழ்ச்சியாகவும் வியப்பூட்டும் வண்ணமும் உள்ளன.
நண்பர் ஒருவரை தொடர்பு கொண்ட போது காஞ்சீபுரத்தில் படம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கிட்டத் தட்ட ஹவுஸ்புல் என்றும் கூறினார். இது காலை 11.10 மணி அளவில்.
மதுரையில் நான்கு திரையரங்குகளிலுமே தினசரி 4 காட்சிகளாகத் திரையிடப் பட்டுள்ளது. புதுப் படங்கள் கூட ஒரே ஊரில் மூன்று திரையரங்குகளில் வெளியிடப் பட்டாலும் ஓரிரு காட்சிகள் தான் திரையிடப் படும். நான்கு திரையரங்குகளிலுமே பெருவாரியாக மக்கள் வருகை புரியும் செய்தி மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது
-
இந்தியாவின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் .....
மேலும் படிக்க
-
ஒரு படம் 40 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் பண்ணும்போதும் கூட அதே உற்சாகத்தோடு ரசிகர்களின் விசில் சத்தங்களோடு பார்க்க முடியுமா? முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் சிவாஜிகணேசன்.
மேலும் படிக்க
-
மதுரையில் சுகப்ரியா அரங்கில் காலைக் காட்சிக்கே ரசிகர்கள் திரண்டு விட்டதாக நண்பர் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார் அனைத்து அரங்குகளிலும் இது போன்ற நிலைமை என்று சொன்னார் பிரியா complex-ஐ சுற்றி அரங்கே தெரியாதபடி பானர்கள் வைக்கப்பட்டிருபதாக சொன்னார்.
திருச்சி சோனா அரங்கம் almost full என்றும், 1200 இருக்கைகள் அமைந்துள்ள கோவை அர்ச்சனா அரங்கில் 60 சதவீதம் audience அதை தவிர கோவை காவேரி அரங்கில் கணிசமான மக்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் செய்தியை நண்பர் ராமஜெயம் பகிர்ந்து கொண்டார்
ஜோ,
நெல்லை குமரி மாவட்டங்களின் விநியோகஸ்தர் முதலில் சரியான ஒத்துழைப்பு தரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் தமிழகமெங்கும் வெளியிட உரிமை பெற்றுள்ள நபருக்கும் நெல்லை மாவட்ட வினியோகஸ்தருக்கும் உடன்பாடு ஏற்பட்டு படத்தை வெளியிட முயற்சிகள் எடுத்துள்ளனர், சிறிது கால தாமதமானதால் நல்ல அரங்குகள் ஒப்பந்தம் செய்ய சற்று அவகாசம் தேவைப்பட்டது. நெல்லை குமரி அரங்குகளில் மார்ச் 15 அன்று வெளியாகிறது.
இது போன்றே சேலம் மாவட்டத்தில் முன்னர் வெளியான இதே விநியோகஸ்தர் [ராஜா கவுண்டர்] வெளியிட்ட ஒரு படத்தில் ஏற்பட்ட Financial issue காரணமாக சேலம் நாமக்கல் தவிர மற்ற ஊர்களில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சேலம், நெல்லை குமரி மாவட்ட அரங்குகளும் சேர்ந்திருந்தால் எண்ணிக்கை 90-ஐ நெருங்கியிருக்கும்.
மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்.
அன்புடன்
-
திரு வாசு சார்,
கர்ணனையும் ஆனந்தையும் ஒப்பிட்ட தங்கள் கவிதை டாப்.இன்னுமொரு மூன்று நான்கு நாட்களுக்கு தங்களை பிடிக்க முடியாது ம்ம்ம்ம் .......(ஒரு பொறாமை கலந்த பெருமூச்சுடன் ) ஜமாயுங்கள்
திரு ராகவேந்திரா சார்,
ஆல்பர்ட் தியேட்டர் பேனர்களின் புகைப்படங்களை உடனுக்குடன் வழங்கியதற்கு நன்றி
திரு முரளி சார்,
மதுரை மாவட்ட நிலவரம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தகவலுக்கு நன்றி
-
தகவலுக்கு நன்றி முரளி சார்.
தங்கள் மதுரையின் செய்தித்தாள் விளம்பர கட்டிங்குகள் இதோ.
மதுரையிலிருந்து பேப்பர்ஸ் கட்டிங் அனுப்பிய என் தங்கைக்கு நன்றி!
http://i1087.photobucket.com/albums/...t%20-2/5-9.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-14.jpg
-
-