டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய 4000 வது பதிவாக ஹிட்லர் உமாநாத் அலசல் பதிவை அளித்து அசத்தியுள்ளீர்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல படத்தில் உமாநாத்தின் சிங்கநிகர் நடிப்பு, சுருளிராஜன் வில்லுப்பாட்டு (சுப்பு ஆறுமுகம் உதவியுடன்), என்று பல அம்சங்கள் இருந்தும் கால சூழ்நிலையால் படம் சரியாகப் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தங்களுடைய பிறந்தநாளில், 4000 வது பதிவை அளித்த தாங்கள், பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் அனைத்து பரிமாணங்களையும் வெளிக்கொணரும் விதத்தில், இன்னும் பல ஆயிரம் பதிவுகளை அளிக்கவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.