Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் 100 வது படம் ஜெமினியின் ''ஒளிவிளக்கு '' இன்று 47 ஆண்டுகள் நிறைவு தினம் .
1936ல் நடிக்க துவங்கி ,11 ஆண்டுகளில் படிப்படியாக முன்னேறி கடுமையான போராட்டங்களை எதிர் கொண்டு
1947ல் ''ராஜகுமாரி '' படத்தில் மூலம் கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கபெற்றார் . 1954ல் மலைக்கள்ளன் மூலம்
திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்றும் , திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்றும் நிலையான புகழ் பெற்றார் .
1965ல் எங்க வீட்டு பிள்ளை படம் மூலம் மக்கள் திலகத்தின் புகழும் , சாதனைகளும் இமயத்தின் உச்சிக்கே சென்று
விட்டது .உலக திரைப்பட வரலாற்றில் அதிக ரசிகர்களையும் , அதிக மன்றங்களையும் , பெற்ற நடிகராக இருந்தார்
மக்கள் திலகத்தின் 100 வது படமாக ஒளிவிளக்கு 20.9.1968ல் வெளிவந்து மாபெரும் சாதனைகள் புரிந்தது .கடந்த
47 ஆண்டுகள தொடர்ந்து திரை அரங்கில் ஓடிக்கொண்டு வருவது இமாலய சாதனை .
ஒளிவிளக்கு படத்தின் சாதனைகள் , சிறப்பு மலரின் பதிவுகள் , நண்பர்களின் கருத்துக்கள் ..........
தொடரும் ........