Idaz Mottu Virindhida -BandhaPaasam -PS PBS -VR -MaayavaNathan
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண்பாவை
பி சுஷீலாவும் சாவித்திரியும்
அழகிய பொய்க்கோப அசைவில் சிணுங்க
ஸ்ரீநிவாஸ் காதல் மன்னனுக்காய் மென்மையான அணுக
மாயவநாதன் ஆழமான கவித்துவ வரிகளில்
தாவித் தாவி நடைபோடும் இசை
ஸ்வரம் பாடும் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பழைய பாடல்களின் சிறப்புக்கு தனியொரு உதாரணம்
சேலஞ்சிங்கான காக்க வைத்த காதல் வரிகள் PS PBS சிரத்தையோடு பாடியிருக்கிறார்கள்
வரிகள் ஆன்லைனில் எங்கும் இல்லை என்று எண்ணுகிறேன்
அதையும் முயற்சிப்போம்..
இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும் சித்திரப் பெண்பாவை
கண்பட்டு மறைந்தென்னை
விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ
முகம் குங்கும நிறமாமோ
எனை கண்டு துவண்டு குழைந்திட நின்றவர்
கவிஞனின் உறவாமோ
சொன்ன சொல்லை மறந்தவர்
என்னை மறந்தவர் யாரெனத் தெரியாதோ
வரத் தாமதம் எதனாலோ
அது காதலின் குணமாமோ
இளந்தென்றலில் மணமாவாள்
அள்ளிக் கொண்டதும் சேயாவாள்
நான் வந்ததும் பனியாவாள்
ஏன் இன்றவள் பகையானாள்
கொடி கண்டதும் கிளையாவார்
இசை வந்ததும் மொழியாவார்
மலர் கண்டதும் வண்டாவார்
கனி கண்டதும் கிளியாவார்
இளம் மலருக்கு கோபமும் வருமோ
வரும் வண்டுக்கு இது தெரியாதோ
அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ
அதைக் கண்டது யார் என்ன கதையோ
அந்த வள்ளுவன் குரல் போலே
அவள் வகைக்கொரு சுவையாவாள்
கருங்கல்லினில் மனமாமோ
எனைக் கண்டதும் இளகாதோ
அவர் கண்களும் சிறையாமோ
அதில் கன்னியர் இரையாமோ
இழை கல்லிலும் எடுப்பாரோ
அதை பின்னியும் முடிப்பாரோ
அன்பு தழைக்கிற இடமென்ன மனமோ
விதை தெளிக்கிற இடமென்ன விழியோ
நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ
கொஞ்சம நெருங்கிட நெருங்கிட துணிவோ
இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திட பயிராகும் முத்தமிழ்
மனமொத்து நடந்தொருமித்தவுளந்தனில்
வைத்தது நெறியாகும்
இளங்க்காவியம் அரங்கேறும்
தென்றல் காதினில் ஸ்வரம் பாடும் ..
http://www.youtube.com/watch?v=J5y24pHyYVw&feature=channel_video_title
சாவித்திரி ஜெமினி அருமையான சேர்க்கை
கண்பட்ட ' ஜோடியும் கூட
மலை முகில்களுக்கிடையே உலா வருவது
இந்த ஜோடிக்காகவே அதிகம் அமையப்பெற்ற காமரா வித்தை
அடிக்கடி காரிலே பவனி வந்தது எல்லாம்
இடையே சேர்த்துக்கொள்ளப்பட்ட உண்மை ,பல படங்களில்
கோபத்தில் முதுகைத் திருப்பிக் கொண்டு நடப்பதாக இருந்தாலும்
பிளவுஸ் பாட்டர்ன் அழகும் நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் இல்லையா
சாவித்திரியின் மென்மையான அலங்காரம்
போட்டிருப்பது ஜன்னல் இல்லாத ஜாக்கெட் என்றாலும்
தென்றல் அடிக்கிறதா இல்லையா ?
Regards