தங்களின் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு என் தலையாய நன்றிகள் பம்மலார் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
தங்களின் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு என் தலையாய நன்றிகள் பம்மலார் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்து சிறப்பான பணிபுரிந்தமைக்கு தங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாசுதேவன் சார்,
'வசந்த மாளிகை'யில் நடிகர்திலகத்தின் உடையலங்கார அணிவகுப்பு பிரமாதம். மிகவும் சிரமப்பட்டு திரட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆல்பம் பார்த்தபிறகுதான் அப்படத்தில் நடிகர்திலகம் இத்தனை உடையணிந்து வருகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது. படம் பார்க்கும்போது, அவர் நடிப்பிலேயே மனதைப்பறிகொடுத்து விடுவதால் இதைக்கவனிக்கத்தோன்றவில்லை. சரியாகச்சொன்னால் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு உடையணிந்து நடித்திருக்கிறார்.
இதில் இன்னொரு ஆச்சரியம், இவரால் அந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக முடியும், இந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக முடியும் என்று நமக்கு உணர்த்தும் வகையில், வசந்த மாளிகை படத்துக்கு அடுத்த படமான 'நீதி' படத்தில் டைட்டில் முதல் வணக்கம் வரை ஒரே உடை. 'எங்களது பூமி' பாடலுக்கு மட்டும் இன்னொரு உடையான ஒரு வெள்ளை ஜிப்பா பைஜாமா.
எனவே 'நீதி' படத்தின் உடையலங்காரத்தை நீங்கள் பதிப்பதாயிருந்தால், என்ன தலைகீழாக நின்றாலும் இரண்டு ஸ்னேப்புக்கு மேல் போடவே முடியாது.
1) டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், சட்டை
2) வெள்ளை ஜிப்பா, பைஜாமா
கதை முடிந்தது.
இப்போது துவங்கியிருக்கும் 'திருடன்' பட ஆல்பத்துக்கும் பாராட்டுக்கள்.
DEAR KUMARESAN SIR,
There was no ad for VM release in sunday newspapers,what is the reason?
டியர் கார்த்திக் சார்,
தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு சரியே. நம்மவரால் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக முடியும். ஒரு ட்ரெஸ்ஸே ஆனாலும் நீதியில் அந்த புளூ கலர் ஜீன்சும்,ஷர்ட்டும் அவருக்குத்தான் எத்தனை அழகு! அது கூட இடது பக்க தோள்பட்டையில் சற்று கிழிந்து போய் இருக்கும். வெள்ளை ஜிப்பா, பைஜாமாவை ஜெயகௌசல்யா இவரிடம் தந்து போட்டுக் கொள்ளச் சொன்னவுடன் ஷர்ட்டை மட்டும் கழற்றிவிட்டு வெள்ளை ஜிப்பாவை மட்டும் போட்டுக் கொண்டு வருவார். அந்த ஜிப்பாவுக்காக பிறந்தது போல அவ்வளவு ஸ்லிம்மாக தரிசனம் தருவார். உங்களுக்குத் தெரியாததா? ஜெயகௌசல்யா உடனே "அண்ணா! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கண்ணா!" என்று பாராட்டுவார். உண்மையும் அதுதானே! அவர் ஒருவரைத் தவிர வேறு யார் அத்தனை அழகு? நீதியை நினைக்க வைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார். உங்களுக்காக ஒரு சிறிய அன்பளிப்பு.
http://3.bp.blogspot.com/_2I2hYF2DQt...5.15.07%5D.jpg
http://udhayamgold.files.wordpress.c...pg?w=240&h=271
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
"திருடன்", "நீதி" ஆல்பங்களை வெளியிட்டு திருடனுக்கு நீதி கிடைக்கச் செய்துவிட்டீர்கள் !
[பலமான சாட்சியாக mr_karthik இருக்கும்போது நீதி கிடைக்காமலா போய்விடும் !]
அன்புடன்,
பம்மலார்.
1.10.2011 : 84வது சிவாஜி ஜெயந்தி
சுவரொட்டிகள்-பதாகைகள் ஆல்பம் [தொடர்ந்து நிறைகிறது]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4713.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4717.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4712.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4719.jpg
அன்புடன்,
பம்மலார்.
'திருடன்' திரைவிழா தொடர்கிறது...
'நினைத்தபடி...கிடைத்ததடி... வராதவன் வந்துவிட்டான்'
'திருடன்' திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் படு ஸ்டைலான நடைகளிலும், நடிப்பிலும் நம் மனதை கொள்ளை கொண்டு போகும் அசத்தலான 'நினைத்தபடி... கிடைத்ததடி... வராதவன் வந்துவிட்டான்' பாடலின் வீடியோக் காட்சி. ரசிக்க ஆரம்பிப்போமா?...
http://www.youtube.com/watch?v=LPK9D...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Mr. Kumaresh
Bit concerned i could not see any ad at Lavanya about V.M. releasing dates. Please confirm it would be great if V.M. release dates are announced early.
JAIHIND
M. Gnanaguruswamy