Dear Chandrashekar, I totally agree with you. :)Quote:
Originally Posted by KCSHEKAR
Printable View
Dear Chandrashekar, I totally agree with you. :)Quote:
Originally Posted by KCSHEKAR
பரமசிவம்...Quote:
Originally Posted by PARAMASHIVAN
நீங்கள் குறிப்பிட்டுள்ள 'குங்குமப்பொட்டின் மங்கலம்' பாடல் நடிகர்திலகத்தின் படத்தில் இடம்பெற்றதல்ல.
மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து 1968-ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த "குடியிருந்த கோயில்" படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா பாடியது. மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இப்பாடலை இஸ்லாமிய பெண் கவிஞரான 'ரோஷனாரா பேகம்' என்பவர் எழுதியிருந்தார். இவர் கவிஞர் வாலியின் நண்பரான, கோவையைச்சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள். திரைப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்த ஒரு பாடல் மட்டுமே எழுதினார்.
படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதா இப்பாடலுக்கு நடித்திருந்தனர். ஒரு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்டிருந்த இப்பாடலில் ஜெயலலிதா அழகாக சேலையிலும். எம்.ஜி.ஆர். வழக்கம்போல சிவப்பு கோட், சிவப்பு பேண்ட்டிலும் வருவார்கள். பாடலின் இறுதியில் ராஜஷ்ரீயும், ஜஸ்டினூம் கூடத் தோன்றுவார்கள். கே. சங்கர் படத்தை இயக்கியிருந்தார்.
பாடலை எழுதியவரோ 'இஸ்லாமிய' பெண் கவிஞர். அவர் எழுதிய பாடலோ 'குங்குமப்பொட்டின் மங்கலம்'. நம் நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?.
'குடியிருந்த கோயில்' படமும் சரி, இப்பாடலும் சரி, தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகியுள்ளன, இப்போதும் ஒளிபரப்பாகின்றன.
சாரதா மேடம் அளித்த இமயம் பதிவுகள் அருமை. திரு.ராகவேந்திரன் அளித்த தகவல்களும் நமக்கு புதிது.
Dear Ms.Sharada/Mr.Ragavendra
Many thanks for your wonderful posting on "Imayam". As usual there were a lot of new infos and details.
Looking forward to Mr.Murali Srinivas's post.
Regards
Shivram
நன்றி ராகவேந்தர் / முரளி / ஷிவராம் / சந்திரசேகர்...
முந்திய பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் 'இமயம்' பட விமர்சனத்தில் விடுபட்டுப்போன சில விவரங்கள். குறிப்பாக நடிகர்திலகத்தின் பங்களிப்பு....
'இமயத்தில்' நடிகர்திலகத்தின் பாத்திரம்:
இப்படமும் சரி, அவர் ஏற்றிருந்த கங்காதரன் ரோலும் சரி அவருடைய முழுத்திறமையையும் காண்பிக்க ஏதுவாக அமைந்தவை அல்ல. சொல்லப்போனால், அலட்டிக்கொள்ளாத, மிகவும் 'லைட்'டான பாத்திரம். சிலர் விரும்புவது போல 'யதார்த்த' நடிப்புடன் கூடிய படம். இப்படம் படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில், இவருடைய ரோல் பற்றி ரசிகர்கள் முக்தாவிடம் கேட்டபோது, 'இப்படத்தில் அவருக்கு 35 வயது இளைஞர் ரோல். அதனால் ஜோடியாக ஸ்ரீவித்யா நடிக்கிறாங்க' என்று சொன்னாராம்.
ஸ்ரீவித்யா முதல் முறையாக ஜோடியாக நடித்தபோதிலும், மனைவி ரோலுக்கு மிகவும் அழுத்தமாகப்பொருந்தினார். அப்படத்திலிருந்த நடிகர்திலகத்தின் உடல்வாகுக்கு இவர் உடல்வாகு நன்கு பொருந்தியது. 'கங்கை யமுனை' பாடலில், இவர் நடிகர்திலகத்தின் தோளில் சாய்ந்துகொண்டு போகும்போது ஒரு அந்நியோன்யம் (கெமிஸ்ட்ரி...???) தெரிந்தது. அதனால் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி ரொம்பவே பிடித்திருந்தது.
தன் மனைவியிடம் நெருக்கமாக நின்று பேசும் நேரங்களில் ஸ்ரீவித்யாவின் வயிற்றில் வலது கையால் இடையிடையே செல்ல்மாக குத்துவார். அதைவிட, இதேபோன்ற இன்னொரு சமயத்தில் கணவரிடம் பேசும்போது, சிணுங்கிக்கொண்டே நடிகர்திலகத்தின் வயிற்றில் ஸ்ரீவித்யா குத்தும்போது, இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்களிடையே ஆரவாரம்.
இதற்குமாறாக, வீட்டைவிட்டு வெளியேறும்போது மீரா, நடிகர்திலகத்தைப் பார்த்து, 'நீங்க இரக்கமில்லாத அரக்கன். கோட்டுப் போட்ட காட்டுமிராண்டி' என்று திட்டும்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆட்சேபக்குரல்.
நடிகர்திலகம் தன்னை கெட்டவன் என்று நிரூபிக்க எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் தான் எப்படி முறியடித்தேன் என்பதை தெனாவட்டாக விவரித்து, அந்த தோல்வி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பழத்தை பரிசளிப்பதாக ஜெய்கணேஷ் கிண்டலடிப்பதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், இறுதியாக தன் கோட் பையிலிருந்து சிறுவனின் 'பிறந்த சர்டிபிகேட்'டை எடுத்துக்காட்டி, "பார்த்தியா... யமுனா என் மகன்தான் என்று நீயே கையெழுத்துப்போட்டுக் கொடுத்த ஆஸ்பத்திரி ரெக்கார்ட். இதுக்கு பரிசா என்ன பழத்தைக்கொடுக்கப்போறே?" என்று கேட்க ஆடிப்போகும் ஜெய்கணேஷ் "சார். இதை யார்கிட்டேயும் காட்டிடாதீங்க" என்று கெஞ்ச.....
"நோ... என்னை ஒரு பைத்தியக்காரன்னு நினைச்சுக்கிட்டிருக்காளே ஒரு பைத்தியக்காரி, என்மனைவி, அவ கிட்டே காட்டப்போறேன். தன் தம்பி ஒரு தங்கக்கம்பின்னு நினைச்சுக்கிட்டிருக்கானே ஒரு மடையன், உன் அண்ணன், அவன் கிட்டே காட்டப்போறேன், உன்னை ஒரு யோக்கியன்னு நம்பிக்கிட்டிருக்காளே நான் வளர்த்த ஒரு குட்டிக்கழுதை, அவ கிட்டே காட்டப்போறேன். Look... நாளை நடக்கப்போகும் உன் மாப்பிள்ளை அழைப்புக்கு நான் வருவேன். அதுக்கு முன்னால் உன்னுடைய பாவ சங்கீதத்தை எல்லோருக்கும் முன்னால பாடி முடிச்சுடனும். இல்லே ராகம், தானம், பல்லவியோடு நான் பாடுவேன்.... பேட்டா, எனக்கா பழம் கொடுக்கிறே?. இப்போ நான் உனக்கு கொடுக்கிறேண்டா பழம்" என்று சொல்லி, ஒரு வாழைப்பழத்தை ஜெய்கணேஷ் வாயில் செருகிவிட்டு ஸ்டைலாக நடந்து போகும்போது, கைதட்டலில் அரங்கமே குலுங்கும்.
Thanks Saradha madam for your wonderful writingup about our god's "Imayam" movie. This is one of the NT movie I have not watched till now. But you have fullfilled my wish.
I have watched song "Gangai Yamunai" so many times in DVD. NT is simply superb and from this song NT has show the trend to younger actors how to act in duet songs. Simply superb NT face with Napelese cap.
As you guys will enjoy "Pudiya Paravai" in Chennai, I watch PP in Sydney at my home now. With watching PP in 40 inch LCD TVs, I enjoy NT frame by frame.
But still missing of watching PP in the Madurai theatres on Sunday. I have watched PP in re-release in Madurai Alankar theatre with so much "Allapparai" in theatres. Full of garlands to NT face in theatre and papers and flowers, movies song book and coins flown inside the theatres. Specially thalaivar's walk in the song "Aha melll mella nada" what a style and glamour. Just for this song I can watch PP for life.
Cheers,
Sathish
Thanks Sathish for your appreciation.Quote:
Originally Posted by goldstar
If possible to watch 'Imayam' atleast (as Raghavendar said) for NT / MSV / NB (eventhough Muktha and Professor ASP stands apart).
Yes, as you said NT will be nice with Nepali cap (after 'ullam rendum' in Sivakamiyin Selvan) in the first part of the song, and with Indian National Flag in his left arm in second part.
Between NT & Shree Vidhya, not only Chemistry, but other things like Physics, Biology, Natural Science, Economics, History, Mathematics... all will work-out. Surprise, why directors not used her as NT's pair in further some movies, instead of KRV and Sujatha.
Hi everybody,
Pudhiya Paravai released @ Amaindakarai Lakshmi theatre from this week. Wishing it a grand success.
Roger Ebert on Bonnie & Clyde……
“ There is a moment in "Bonnie and Clyde'' when Bonnie, frightened and angry, runs away from Clyde through a field of wheat, and as he pursues her, a cloud sweeps across the field and shadows them. Seen in a high, wide-angle shot, it is one of those moments of serendipity given to few movies. Today the cloud could be generated by computers; on the day the scene was filmed in Texas, it was a perfectly timed accident of nature “.
It reminds us of a similar moment in one of our own gem of a song, “ Devaney ennai parungal……” from “ Gnana Oli “, isn’t it ?
[/i]
neenga nijamAgavE theriyAmalthAn kEtkireengannu nAnga nambitOm.Quote:
Originally Posted by PARAMASHIVAN