Originally Posted by
rajaramsgi
நன்றி k.
சில பலவீனகள் உண்மை தான்.
ஆனால் வைரமுத்துவை விட்டு பிரிந்ததையும், பாரதிராஜா போன்றவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதையும் பலவீனங்களாக எடுத்து கொள்ள முடியவில்லை. இவர்கள் இருவரும் ராஜாவோடு இனைந்து காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் கொடுத்தார்கள் தான். இவர்கள் இருவரும் திறமையானவர்கள், புத்திசாலிகள் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். அதே சமயம்,
இதே பக்கத்தில், பலம் என்ற பகுதியில் "12. புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும் சாதாரண இயக்குனராக இருந்தாலும் குறைவில்லாத தரத்துடன் இசை அமைத்தது." என்றிருக்கிறது. இந்த பலமும், முன்னர் சொன்ன பலவீனங்களும் முரண்பாடாக தோன்றவில்லை?
பாரதிராஜா ஒரு 25 படங்கள், வைரமுத்து 400 பாடல்கள் (சரியான கணக்கு தெரியவில்லை) என்று ராஜாவுடன் வேலை செய்த எண்ணிக்கையை வைத்து கொண்டால் கூட, இளையராஜாவின் உயரத்திற்கு இந்த உருப்படிகள் பலமாக இருந்தவையா என்று என்னுடைய அறிவுக்கு எட்ட வில்லை.
அதே சமயம், ராஜா போட்ட ஒரு பாடல், சரியில்லை, சில வாத்தியங்களின் ஓசைகள் சலிப்பை தருகின்றன, மாற்றம் செய்ய வேண்டும், பால்களின் வேகம், ரிச்னஸ் கூட்ட வேண்டும் என்று அவரிடத்தில் எடுத்து சொல்ல ஆள் இல்லை, அதை கேட்கின்ற பக்குவம் அவரிடத்தில் குறைவு என்பது என்னுடைய கருத்து. அவருடைய தீவிர பக்தர்களை போன்ற ரசிகர் கூடத்தில் நானும் ஒருவன் என்பதால், என்னுடைய இந்த கருத்துக்காக யாரும் கோபப்படாதீர்கள்.