http://i47.tinypic.com/2rfc03c.jpg
Printable View
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலத்திறமை
1) ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”
2) அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?
"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."
(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )
நமது பொன்மனசெம்மலை இதயக்கனி என்று அழைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 44வது நினைவு நாளினையொட்டி
சென்னையில், எம்.ஜீ.ஆர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி :
http://i50.tinypic.com/azf1g0.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் அழகு தோற்றம்
http://i49.tinypic.com/2heyo3l.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள்திலகம் தன்னுடைய திரைப்படங்களில் அண்ணாவின்
புகழை நிலைநாட்டினார் அதில் உங்கள் பார்வைக்கு சில
http://i47.tinypic.com/34gaa9s.jpg
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
Dear Sailesh Sir,
It made my eyes filled with tears, on seeing the clipping from Manippayal. Thank you so much for your exhibiting the clipping, at this right time. Peraringar Anna is the great Leader accepted by our beloved M.G.R. and he was the person who brought pride to our Tamil Nadu State. Our beloved MGR followed him until his death.
That is why these two personalities still live in the hearts of Tamilians, in the world.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
Dear Ramamoorthy Sir,
A fine compilation, from our beloved MGR starred songs, praising the great Peraringnar Anna.
Congratulations.
Thank you so much.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
http://i125.photobucket.com/albums/p...ps48df8900.jpg
Today is our beloved MGR's mentor Peraringnar Anna's 44th death Anniversary.
One of my friend Chandran Veersamy article about MGR's mentor.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக 23 மாதங்கள்தான் இருந்தார்.
அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்து காட்டினார்.
தமிழ்நாடு எனத் தாயகத்திற்குப் பெயர் சூட்டினார்.
இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்.
சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தார்.
இவற்றில் முதன்மையானது நமது நாட்டிற்குச் சென்னை மாகாணம் - சென்னை ராஜ்ஜியம் - மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் 'தமிழ்நாடு' என அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்தார் .
மகனுக்குத் தாய்தான் பெயர் சூட்டுவாள். ஆனால், இங்கோ தாய்க்கு மகன் பெயர் சூட்டிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது.
அறிஞர் அண்ணா 15.09.1909இல் பிறந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி (இரவு) 12-22 மணிக்கு மரணமடைந்தார்.
http://i125.photobucket.com/albums/p...ps8791c74b.jpg
உலகத்தில் எந்த நாட்டிலும் இருபெரும் தலைவர்கள் சமாதி அருகருகே இருந்ததில்லை. இரண்டும் அப்படி இருப்பது நமது தமிழ்நாட்டில் மட்டுமே எதையும் தாங்கும் இதயங்களான பேரறிஞர் அண்ணா அவர்களும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களும் தான். இதுவும் ஒரு சாதனை.
வேலூர் சத்துவாச்சாரியில் சரியாக காலை 10 மணியளவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
மக்கள்திலகத்தின் சிலைக்கும் மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது
http://i49.tinypic.com/ndpmvn.jpg
http://i125.photobucket.com/albums/p...psf3e41f4d.jpg
அண்ணனை மறக்காத தம்பிகள்.
கடலூர் மாவட்டம், படம் உதவி செந்தில்குமார்.
FROM DINAMALAR
http://i48.tinypic.com/apfe6v.jpg
Sir,
The young pose of our beloved Leader's Leader Perrarignar Anna (otherwise known as Thennattu Gandhi, Innaattu Ingersoll) is really superb.
Thank you so much Ravichandran Sir. I cherish the olden days with his sweet memories, when I was a small boy. Perarignar Anna only named my younger Brother, as "Anbarasan".
THANKING YOU, once again.
Ever Yorurs
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
1966 பொங்கல் அன்று மக்கள் திலகத்தின் அன்பே வா திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வந்த நேரம் அவரது அடுத்த படமான சத்யா மூவிஸ் நான் ஆணையிட்டால் 21 நாட்கள் இடைவேளையில்
4.2.1966 அன்று திரையிடப்பட்டது .
நான் ஆணையிட்டால் - அன்பே வா இரண்டு படங்களும் வெற்றி கரமாக ஓடிகொண்டிருக்கும் போதே மூன்றாவது படமாக 14 நாட்கள் இடைவெளியில் தேவரின் முகராசி படம் 18-2-1966 அன்று வெளிவந்தது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - திண்டாட்டம் .
அன்பேவா -1966 வசூலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது .
முகராசி - சென்னை நகரில் மட்டும் நூறு நாட்கள் ஓடியது .
அன்பேவா - முகராசி இரண்டு வெற்றி படங்களுக்கு நடுவே நான் ஆணையிட்டால் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை .
ஆனாலும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இந்த மூன்று படங்களும் தித்திக்கும் விருந்தாக அமைந்தது .
அன்பேவா படத்தில் மக்கள் திலகம் பணக்கார தொழில் அதிபராகவும்
நான் ஆணையிட்டால் படத்தில் கொள்ளையர்களை திருத்தும் சீர்திருத்தவாதியாக வும்
முகராசியில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் .
மொத்தத்தில் மூன்று படங்களும் முக்கனி .
குலேபகாவலி, புதுமைப் பித்தன் - இவ்விரு திரைப்படங்களும் மோசர் பேர் நிறுவனத்தின் மூன்று பட நெடுந்தகடு வரிசையில் வெளியிடப் பட்டுள்ளன.
http://i1146.photobucket.com/albums/...ps584eeaac.jpg
http://i46.tinypic.com/2hciwxk.jpg
பேரறிஞர் அண்ணா நினைவுநாள்
http://i45.tinypic.com/33uy58j.jpg
சட்டப்பேரவையில் அண்ணா & மக்கள் திலகம்
http://i45.tinypic.com/xlilxs.jpg
மறைந்த தன் மகனுக்கு அஞ்சலி செலுத்த அறிஞர் அண்ணாவின் தாயார் பங்காரு அம்மையாரை அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியுடன் அண்ணாவின் உடலருகே கொண்டு வரும் மக்கள் திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.
எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.
நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.
அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!
இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.
ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!
எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!
நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.
இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
நடிகர் நாகேஷ் அவர்கள் முதன்முதலில் ஒரு நாடகத்தில் ஓரிரு நிமிடங்கள் வந்து போகும் வயிற்றுவலிக்காரனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த அந்த முக்கிய பிரமுகர், நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர், 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!' என்று சொல்லி நாகேஸ்வரன் என்கிற நாகேஷை மேடைக்கு அழைத்து, 'நாகேஸ்வரன் என்கிற பெயர் கொண்ட இவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்!' என்று சொல்லி பரிசுக்குரிய கோப்பையை கொடுத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே தான். இதில் ஹைலைட் என்னவென்றால், நாகேஷ் இதற்க்கு முன்பு எம்.ஜி.ஆரை பார்த்ததே இல்லை. எனவே தனக்கு பரிசு கொடுப்பவர் யாரென்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதை நினைத்து பலமுறை சிரித்திருக்கிராராம் நாகேஷ்.
from Net
பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு நாளில் அவரது குடும்பத்தினருடன் புரட்சித் தலைவர்
http://i47.tinypic.com/30csrjn.jpg
arputham.asathal,athuthan purtchithalaivan
nandri jai sirhttp://i49.tinypic.com/2powj2d.jpg