நன்றி முரளி - நல்ல நியூஸ் .உங்கள் உண்மையின் வெள்ளிச்சம் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை ,ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வது இல்லை என்ற வரிகளுக்கு உண்மையில் உயிர் ஊட்டுகின்றது !!
அன்புடன் ரவி
Printable View
நன்றி முரளி - நல்ல நியூஸ் .உங்கள் உண்மையின் வெள்ளிச்சம் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை ,ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வது இல்லை என்ற வரிகளுக்கு உண்மையில் உயிர் ஊட்டுகின்றது !!
அன்புடன் ரவி
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு அவரின் ஒரு சில கதாபாத்திரங்களை வெகுவாக பிடிக்கும். அவரின் ஸ்டைல், gestures, உடல் மொழி அதற்கு காரணமாக இருக்கலாம். அப்படி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட Dr.ராஜா என்ற பட்டாக்கத்தி பைரவன் இன்று முதல் நாகர்கோவில் பயனீர் முத்து அரங்கில் தினசரி 4 காட்சிகளாக உலா வருகிறார். நாஞ்சில் மக்கள் குதூகலத்துடன் வரவேற்பதாக செய்தி.
நாஞ்சில் நகர மக்கள் இன்று முதலே காண்கிறார்கள் என்றால் கொங்கு நாட்டு மக்கள் இன்னும் பத்து தினங்களில் இதே பைரவனை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மக்களை மகிழ்விக்க எங்கள் தங்க ராஜா வரும் மார்ச் 14ந் தேதி முதல் கோவை ராயல் திரையரங்கிற்கு விஜயம் செய்கின்றார். நேற்று குறிப்பிட்ட surprise இதுதான். 14ந் தேதி முதல் வெளியாவதாக இருந்த சொர்க்கம் வேறு ஒரு தேதியில் வெளியிடப்படும் என தெரிகிறது. சரியான தேதி தெரிந்தவுடன் அது இங்கே பதிவிடப்படும்.
அன்புடன்
ரவி,
உங்கள் விமர்சனங்களையும் படித்தேன். உங்கள் ஆதங்கத்தையும் படித்தேன். விமர்சனங்கள் சுருக்கமாக சுவையாக இருந்தது. ஆதங்கத்தை பொறுத்தவரை ஒரு சில வார்த்தைகள்.
எப்போதும் நான் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறோம் என்றால் அதை முழுமையாக எழுதி முடித்து விட்டு பதிவிடுவது நல்லது. காரணம் எழுதுபவர்களுக்கும் சரி படிப்பவர்களுக்கும் சரி, அது முழுமையான ஒரு அனுபவமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் continuity விட்டு போகும். இப்போது கோபால் கௌரவத்தைப் பற்றி எழுதியது அப்படித்தான் ஆகி போனது. ஆகவே முழுமையாக prepare செய்வது நல்லது.
நான் இந்த காரணத்தை சொல்லவில்லை. நான் விமர்சனம் எழுதிய படத்தைப் பற்றி அனைவரும் பங்களிப்பு செய்தவுடன் அடுத்த படத்திற்கு போகலாமே என்றால் அதில் ஒரு நடை முறை சிக்கல் இருக்கிறது. அந்தப் படத்தை பற்றி எனக்கு தெரியாது என்றால் நான் எனக்கு தெரிந்த படத்தை பற்றி எழுதப் போய் விடுவேன். இது public forum. யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நாம் தடுக்க முடியாது.
ஒவ்வொருவரும் மனதில் ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். நமது ரசிகர்களை விடுங்கள். வேறு சிலர் இருக்கிறார்கள். இந்த திரியில் வரும் ஒரு சில பதிவுகளை தனியாக எடுத்து quote செய்து வேறு ஒரு கலர் கொடுக்க முயற்சிப்பார்கள். உதாரணத்திற்கு நான் சந்திப்பு படத்தின் வசூலை பதிவு செய்தேன். உடனே ஒருவர் வருவார். பாருங்கள் சந்திப்பு படத்தை glorify செய்கிறார் என்பார். குறிப்பிட்ட படத்தைப் பற்றிய செய்தியை பதிவு செய்வதற்கும் படத்தை புகழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் [ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்படிபட்டவர்களுக்கு இந்த வித்தியாசம் புரியும். ஆனால் வேண்டுமென்றே அதை திரிப்பார்கள்]. இன்னொருவர் வருவார். பெருந்தலைவர் என்ற வார்த்தை வந்திருக்கிறது. ஆகவே அரசியல் எழுதுகிறார் என்பார். ஆக இதையெல்லாம் நாம் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.
நானுமே உங்கள் பிராப்தம் மற்றும் மூன்று தெய்வங்கள் ஆகிய படங்களைப் பற்றிய விமர்சனங்கள் படித்தவுடன் அந்த காலங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆரம்பித்தேன். நேரம் கிடைக்காததனால் முடிக்க முடியவில்லை. அதே போன்று வேறு சில திரிகளை பற்றி குறிப்பிட்டு ஒரு ஒப்பீடு செய்திருந்தீர்கள். அதை பற்றி சில வார்த்தைகளும் நேரம் கிடைக்கும் போது கூற விரும்புகிறேன்.
சுருக்கமாக சொன்னால் உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள். அதற்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஆதரவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ரவியின் சுருக் விமர்சனங்களை பாராட்டும் இதே நேரத்தில் சிரத்தை எடுத்து தங்க மலை ரகசியம் பற்றி விஸ்தாரமாக எழுதிய தம்பி ராகுல் ராமிற்கு வாழ்த்துகள்!
அன்புடன்
நண்பர்களால் வெளியிடப்பட்ட மலர் ஒன்றில் இருந்து
தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய 'பாவை விளக்கு' நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின.
புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர். அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள். பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.) வேலை பார்த்தார்.
ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி. பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி 'கலைமகள்' முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின. 'கலைமகள்' முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின் 'பெண்' என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உலகில் அகிலன் புகழ் பெற்றார். அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார்.
அகிலனின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால், எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன. 1957 மத்தியில் 'கல்கி'யில் 'பாவை விளக்கு' தொடர் கதையை அகிலன் எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை - வசன ஆசிரியராக விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது.
'பாவை விளக்கு' கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார். கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார். படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன் கேட்டுக்கொண்டார். ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது.
சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற முடிவு செய்தார். அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். ஏ.பி.நாகராஜன் யூனிட்டில் எடிட்டராக இருந்த விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து 'விஜயகோபால் பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியை தொடங்கினர். அந்த பேனரில் 'பாவை விளக்கு' படமாகியது. கதாநாயகனாக (எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார்.
கதாநாயகனை 4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை. 1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல் ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார். 2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும் நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை.
செங்கமலம் வேடத்தில் குமாரி கமலா. 3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள். இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி. 4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில் உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை இழக்கிறாள்.
ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும் உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார். அகிலனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார்.
குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில் தோன்றி, 'காவியமா, நெஞ்சில் ஓவியமா?' என்று பாடும் காட்சி, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்', 'சிதறிய சலங்கைகள்போல' முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.
குறிப்பாக, 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி...' பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1960 தீபாவளிக்கு 'பாவை விளக்கு' வெளியாகியது. படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், 'ஒருவனை 4 பெண்கள் காதலிப்பதா?' என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக பிரிந்து விவாதம் செய்தன.
படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின. சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை. பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம், உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.
சிவாஜிகணேசனை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரை 'படிக்காத மேதை' ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு பலரும் கூறினர். நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படம், நூறு நாட்களை நெருங்கத்தான் முடிந்தது. - courtesy malaimalar
இனிய நண்பர் சிவா அவர்களுக்கு
தாங்கள் தர்மம் எங்கே திரைப்படத்தை பார்த்திருபீர்களேயானால் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" என்ற பாடல் ஒன்று வரும்.
அதில் ஒரு முக்கியமான வரி ஒன்று உண்டு - அது - "ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை " என்பது. அதைப்போல நடிகர் திலகம் அவர்களுடைய புகழ் மறைக்ககூடியது அல்ல !
மேலும் நம் நடிகர் திலகம் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அவருக்கு எப்போதும் புகழ் சேர்க்கும்.
அதற்காக நாம் மற்றவர்களை இகழவேண்டும் என்ற நிர்பந்த நிலைக்கு நம்மை நாமே தள்ளவும் கூடாது.
நடிகர் திலகம் அவர்கள் நன்கொடைகள் வலது கரம் செய்ய இடது கரம் அறியாத வகை. இது நடிகர் திலகத்தின் முடிவு. நாம் அந்த நற்குணத்தை பற்றி எழுதி அல்லது பதிவு செய்யலாம்.
இதில் மற்றவர்களை எதற்கு இழுக்கவேண்டும் ?
உண்மை என்றிருந்தாலும் சக்திவாய்ந்தது !
மார்ச் மாதம் வெளிவர இருக்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்.
ஆயினும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
சென்னை - மார்ச் 14 - தங்கச்சுரங்கம் / வெள்ளை ரோஜா
காஞ்சிபுரம் - மார்ச் 14 - தங்கச்சுரங்கம் / நான் வாழ வைப்பேன் / நீதி
கோவை - மார்ச் 14 - எங்கள் தங்கராஜா
மதுரை - மார்ச் 14 - வைர நெஞ்சம்
நாகர்கோயில் - மார்ச் 14 - சந்திப்பு
MARCH 14th - THANGACHURANGAM @ YOUR FAVORITE THEATER
http://www.youtube.com/watch?v=AgUzhulHAvk
டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது
Steps Involved
1. Visit www .photobucket.com
2. Get yourself registered
3. After registering , you can now upload the images saved on your desktop
4. Now click the image saved in your login page
5. The image will expand
6. On right hand side there is a profile of URLs – select the URL under image
7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting
8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger
9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint
You can send me a PM in case you could not succeed in this attempt
ரவிகிரண்சூரியா சார்
மற்றவர்களை இழுத்து இகழவேண்டும் என்று நான் நினைக்கவில்லை
இமேஜில் இருந்து அந்த வசனம் என்னுடையதல்ல
அத்துடன் அது 1982 ஆம் ஆண்டு தியாகி படத்தின் வெளியீட்டின்போது
வெளியிடப்பட்ட மலரில் இருந்து எடுக்கப்பட்டது
முன்னர் சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வெளியிட்ட மலர் நோட்டீஸ்
போன்றவற்றில் இப்படித்தான் ஒருவரை ஒருவர் இழுத்து எழுதிக்கொண்டிருந்தார்கள்
அவற்றையாவது விட்டுவடலாம் தற்போழுது வெளிவந்துகொண்டிருக்கும்
ஒலிக்கிறது உரிமைக்குரல் எம் ஜி ஆர் ரசிகர்களிடம் வாங்கி படித்து பாருங்கள்
என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள என்று தெரியும்
;
ஒரு படித்த மேதாவியாம்
எழுதுகிறார் ப்ராப்தம் பட சந்திரகலா வைர நெஞ்சம் பத்மபிரியா
பற்றி எழுதச்சொல்லி
அங்கே அவர் சொல்லும் விடயம் என்ன?
எலலாவற்றையும் விட்டுவிடுங்கள்
உங்கள் பரந்தமனபான்மைக்கு பாராட்டுக்கள்
mgr - sivaji ரசிகர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் திட்டிக்கொண்டும் தூற்றிக்கொண்டும் தான் இறக்கும் வரை இருக்க வேண்டுமா ? -
நல்ல உள்ளம் கொண்ட பல mgr ரசிகர்களை தனது பத்திரிகை வாயிலாக தேவையில்லாமல் தூண்டிவிடும் உரிமைக்குரல் பத்திரிகை மற்றும் vcd dvd உரிமையாளர் பன்முகம் கொண்ட திரு b s ராஜு அவர்களுக்கு இரு திலகங்களின் ஒத்த கருத்துடைய பல ரசிகர்களின் சார்பாக கேள்வி. !
சமீபத்தில் வெளிவந்த உரிமைக்குரல் பதிவில் mgr ரசிகர்கள் சிவாஜி ரசிகர்களுக்கு குடைபிடிக்கிறார்கள் என்ற தொனியில் இதன் ஆசிரியர் திரு ராஜு அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவருக்கு அனைத்து நல்லுள்ளங்கள் சார்பாக இந்த கேள்விகள் !
1) இரு திலக ரசிகர்களும் இறக்கும் வரையில் ஒருவரை ஒருவர் இழித்துகொண்டும், பழித்துகொண்டும்தான் இருக்கவேண்டுமா ?
2) நல்ல எண்ணத்துடன் இருவரும் நட்பு பாராட்டுவதில் உமக்கு என்னையா அவ்வளவு வயிதெரிச்சல் ?
3) நீங்கள் முதலில் ஒரு ஞாயவாதியாக நடந்ததுண்டா ? வியாபாரம் என்று வரும்போது, பத்திரிகையில் சிவாஜி பற்றி தவறான தகவலுடன், இழித்தும் பழ்ழித்தும் கீழ்த்தரமாக எழுதுவது தான் பத்திரிகை தர்மமா ?
4) தங்களுடைய cd மற்றும் dvd நிறுவனமாம் uk மூவீஸ் மற்றும் uk கோல்டன் மொவீஸ் மற்றும் akshi வீடியோ ஆகிய நிறுவனங்கள் மூலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திரைகாவியங்களான நானே ராஜா, தாய் , எங்கள் தங்கராஜா , சத்ரபதி சிவாஜி (பக்த துகாரம் தெலுகு படம் மொழிபெயர்ப்பு ) மேலும் பல சிவாஜி படங்கள் வெளியிட்டு லக்ஷங்கள் சம்பாதித்து அந்த நன்றி விஸ்வாசம் துளி கூட இல்லாமல், இப்படி பத்திரிகையில் சிவாஜி பற்றி தூற்றுவதும், mgr - sivaji ரசிகர்களை தன்னுடைய சுய லாபத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை பார்பதை இத்துடன் தயவு செய்து நிறுத்திகொள்ளுங்கள் !
சிவாஜியை தூற்றி எழுதினால்தான், mgr sivaji ரசிகர்களை தூண்டிவிட்டு சண்டைபோட செய்தால் தான் mgr அவர்கள் புகழ் மேலும் பரவும் என்ற தவறான ஒரு துர்போதனை செய்வது ஒரு கேவலமான ஈன செயல் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். காலம் இப்படியே சென்றுவிடாது ! ஒரு நாள் நல்ல உள்ளம் கொண்ட அனைத்து mgr ரசிகர்களும் உண்மையை உணரும் போது உங்கள் நிலை எவ்வளவு பரிதாபத்திற்கு உரியதாகிவிடும் என்று இப்போதே எண்ணி பார்த்தல் நலம் !
இரண்டு ஆடுகளை மோதவிட்டு அதிலிருந்து வடியும் ரத்தம் குடிக்கும் வழக்கம் கொண்ட நரிகுணம் என்றுமே வெற்றிகொண்டதில்லை !
வாழ்க இரு திலகங்களின் புகழ் ! ஒழிக நரிகுணம் கொண்ட மனிதர்கள் !
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜியிடம் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு, தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பார். ஆனால், கடைசியில் ஏதாவது ஒரு புதுமை செய்து, பார்ப்பவர்களின் மொத்த கவனத்தையும், தன் பக்கம் இழுத்து விடுவார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். பாசமலர் படத்தில், சிவாஜி கம்பெனி முதலாளி; அவரிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்காக சண்டை போடும் ஜெமினி கணேசன், கேள்வி மேல கேள்வி கேட்பார். பதிலுக்கு எதுவும் பேசாமல், ஒரு பென்சிலை கத்தியால் சீவிக் கொண்டே இருப்பார் சிவாஜி. ஜெமினி பேசப் பேச, சிவாஜிக்கு கோபம் அதிகமாகும். ஆனால், எதுவும் பேசாமல், பென்சிலை சீவுவதிலேயே கவனமாக இருப்பார். ஆனால், ஜெமினி கணேசன் பேசி முடித்ததும், கோபமாக அவரைப் பார்த்து, 'வெளியே போ... தொழிற்சாலையை இழுத்து மூடினாலும், ஒரு மெழுகுவர்த்தி வச்சு, இந்த ராஜூ வேலை செய்வான்...' என்று, ஒரே வரி வசனம் மட்டும் பேசுவார்; தியேட்டரே அதிரும்.
மற்றொரு காட்சியில், சிவாஜி வீட்டுக்கு வருவார். தோட்டத்திலே, அவரது தங்கை சாவித்திரியும், காதலன் ஜெமினி கணேசனும் பேசிக் கொண்டிருப்பர். பணக்காரருக்குரிய ஆணவத்தில், பீரோவிலிருந்து ரிவால்வரை எடுத்துக் கொண்டு, ஆவேசத்துடன் வேகமாக வருவார் சிவாஜி. அப்போது, ஜெமினியிடம், 'எங்க அண்ணாவை எதிர்த்து தான், வாழ்க்கை நடத்தணும்ன்னா, அந்த வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை. அவரோட முழு சம்மதத்தோடு, ஆசிர்வாதத்தோடு, நாம் சேருவதை தான், நான் ஒத்துக் கொள்வேன்...' என்று, சாவித்திரி சொல்வதை கேட்பார். பாசத்தில் கண்ணீர் வழியும்.
தான் கொண்டு வந்த ரிவால்வரை வைத்து, கண்ணீரை துடைக்கும் அந்த, ஒரு காட்சியிலேயே, தன் மன ஓட்டத்தை அழுத்தமாக காட்டியிருப்பார்.
சிவாஜியை பற்றி, குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம்... அவர் நடித்த பல படங்கள், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். தன்னை விட கதாநாயகிக்கு தான், முக்கியத்துவம் அதிகம் என்று தெரிந்தும், முழு மனதோடு, நடிக்க ஒப்புக் கொள்வார்.
அந்த வரிசையில், கை கொடுத்த தெய்வம், படம் முழுக்க முழுக்க நடிகை சாவித்திரியின் படம். அந்த மாதிரி படங்களிலும், தன் தனித்தன்மையை காண்பித்து, ஆடியன்சை, தன் பக்கம் திருப்பி விடுவார் சிவாஜி. இப்படத்திற்கு, கதை, வசனம், எழுதி, பிரமாதமாக இயக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நடிகை சாவித்திரிக்கு, நானும் மிகப் பெரிய விசிறி. என் மகள் மதுவந்தியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிவாஜியை அழைக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். 'யார்ரா அந்த அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளை?' என்றார்.
'நடிகை சாவித்திரியின் பேரன்...' என்றேன். சிவாஜியின் முகம் மலர்ந்து, 'ஓ, அப்படியா வெரி குட்...' என்றார். தேதியை சொன்னதும், 'என்னடா இது, இப்படி செய்துட்டே... அன்னிக்கு, நான் தஞ்சாவூரிலே இருக்கிறனேடா...' என்றார். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கண்டிப்பாக பங்ஷனுக்கு வர்றீங்க...' என்று, உரிமையுடன் சொல்லி விட்டு, கிளம்பினேன்.
நிச்சயதார்த்த விழா விற்கு, தஞ்சாவூரிலிருந்து, காரிலேயே சென்னைக்கு வந்து, தன் வீட்டிற்கு கூட போகாமல், நேராக விழாவிற்கு வந்து விட்டனர் சிவாஜியும், அவரது மனைவி கமலா அம்மாவும். விழா முடியும் வரை, அங்கேயே இருந்து மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த, 1964ல் ஏ.பி.நாகராஜனின் இயக்கத் தில், சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த, நவராத்திரி திரைப்படம் வெளியானது. நடிப்பில், முகபாவத்தில், பல கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி காண்பித்திருப்பார் சிவாஜி. சாவித்திரியை கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்து வரும் காட்சியில், சிவாஜி மனநோய் மருத்துவராக வருவார்.
இரண்டு கைகளையும் பின்புறம் கட்டி, மெதுவாக நடந்து செல்லும் சிவாஜி, கருணை சிரிப்போடு, ஒரு நிலையில் நிற்பார்; பின் திரும்பி வருவார். மேஜை மீது இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை லாவகமாக எடுத்து கழுத்தில் மாட்டி, திரும்பி போவார். அதாவது, வந்திருக்கும் பேஷன்ட் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல, நல்ல நிலையில் இருப்பவர் தான் என்பதை, டயலாக் எதுவும் பேசாமல், தன் நடையாலேயே வெளிப்படுத்தி, ரசிகர்களின் கைத் தட்டலை வாங்கி விடுவார்.
சிவாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் மேஜர் சுந்தர்ராஜன். அவர் மேடையில் நடித்த ஞான ஒளி, கல்தூண் போன்ற நாடகங்கள், பின் சிவாஜி நடிப்பில், வெற்றிப் படங்களாக ஆகியிருக்கின்றன. சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், ஞான ஒளி மற்றும் பாரத விலாஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக, சிவாஜி கணேசன், பணி ஆற்றிய போது, அவருக்கு வலது கரமாக, நடிகர் சங்கத்தின் காரியதரிசியாக பணி ஆற்றியிருக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். நடிகர் சங்கத்திற்கு, சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில், இடம் வாங்கி, கட்டடம் கட்டி, அதில், நாடக அரங்கு, சிறிய தியேட்டர் எல்லாம் உருவாக சிவாஜியும், மேஜரும், விகே.ராமசாமியும் முக்கிய காரணகர்த்தாக்கள். இப்போது, கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நடிகர் சங்க இடம் வெறிச்சோடி இருக்கிறது என்பது, எல்லா நடிகர், நடிகைகளுக்கும் வருத்தம் தரக் கூடிய விஷயம்.
— தொடரும்.
பார்த்ததில் பிடித்தது -14
நடிகர் திலகத்தின் ராஜா ராணி படங்கள் என்று சொன்னால் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் படம் எது ? உத்தமபுத்திரன்
எனக்கும் அப்படி தான் , ஆனால் அந்த நினைப்பு நான் எழுத போகும் படத்தை பார்த்ததும் சற்று மாறியது , காரணம் ?
நடிகர் திலகத்தின் படங்களில் நாம் அவரிடம் இருந்து என்னை எதிர்பார்ப்போம் ? அதுவும் அவர் ராஜா ராணி கதையில் தோன்றி உள்ளார் என்று அறிந்து
பிரமாண்டமான அரங்கு அமைப்பு , நட்சத்திர பட்டாளம் , சண்டைகள் ,
இது தான் உங்கள் விருப்பம் என்றல் நீங்கள் நான் எழுதி இருக்கும்
மருதநாட்டு வீரன் படத்தை மிகவும் ரசிப்பீர்கள்
இனி இந்த படத்தின் கதை பற்றி விரிவாக
படத்தின் பெயர் போடும் போதே ஒரு வித ஆர்வம் தொற்றி விடுகிறது , காரணம் , இந்த படத்தின் பிரமாண்டத்தின் அளவு பின்னாடி வரும் காட்சிகளை பார்த்ததும் , எந்த அளவுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு வைக்க வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது
படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு கணீர் குரலில் சமாதானமே தேவை என்று ஒரு எழுச்சி நாயகன் வெள்ளை குதிரையில் பாடி கொண்டு வருகிறார் (வேறு யார் நம்ம சிவாஜி சார் தான் )
அவர் காணும் காட்சியோ கொடுரம் , ஒரு வயசானவர் தண்ணி குடிக்க முயலும் பொது அரசு சிப்பிகளால் தடுக்க படுகிறார் , பின் அந்த புரட்சி நாயகன் அந்த வயசானவருக்கு உதவி செய்து விட்டு தன் வீட்டுக்கு செளுகிறார் , அங்கே அவர் அன்னை அவருக்கு சாப்பாடு போடும் பொது தான் நமக்கு புரிகிறது , அந்த புரட்சி வீரனின் வீட்டில் ஏழ்மை
குடி இருபது , அந்த புரட்சி வீரன் பட்டாளத்தில் சேர முடிவு செய்கிறார் ,கூடவே அவர் நண்பர் (கருணாநிதி )
அந்த புரட்சி வீரன் நாட்டின் தலைநகருக்கு செல்லுகிறார் , அங்கே அவர் தான் காப்பாத்திய வயசானவர்வை சந்திக்கிறார் , அந்த சமயம் பார்த்து அந்த ஊரின் இளவரசி வரும் பொது , அவர் மேல் பூவை எரிந்து கவனத்தை ஈர்க்கிறார் அவரை கைது செய்து அழைத்து வர உத்தரவு இடுகிறது அரசாங்கம்
இது நடப்பது மருத நாட்டில்
அடுத்த காட்சி நடப்பது சொர்ணபுரி என்ற ஊரில் ஒரு முஸ்லிம்
ராஜா வின் மாளிகையில் , அங்கே இருப்பது ராஜா அலாவுதீன் அல்ல ,அவரின் தம்பி மற்றும் அவரின் மந்திரி , இருவரும் தப்பி ஓடிய ராஜா அலாவுதீன் மற்றும் அவரின் மகளின் இருப்பிடம் பற்றி விசாரிகிரர்கள்
அவர்களின் யுகம் ராஜாவும் அவர் மகளும் மருத நாட்டுக்கு தஞ்சம் அடைந்து இருப்பார்கள் என்று நினைத்து , மருத நாட்டில் இருக்கும் அவர்களின் நண்பனும் , ராஜாவின் மைத்துனரும் வீரகேசி (psv ) . வீரகேசி மருத நாட்டின் ராஜாவாக வேண்டும் என்பதே ஆசை , அதற்கு துணையாக சொர்ணபுரி ராஜாவின் தம்பியுடன் கூட்டு சேர்ந்து சதி செய்கிறார்.
சொர்ணபுரி ராஜா அலாவுதீன் மற்றும் அவர் மகள் இருவரும் நாடோடியாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள் , அலாவுதீன் மருத நாட்டின் ராஜாவின் நெருங்கிய நண்பர் , தன் நண்பரை காணவில்லை என்ற கவலையில் அவரை தன் மைத்துனர் வீரகேசியை தேட சொல்லுகிறார் ராஜா .
இந்த நேரத்தில் தான் புரட்சி வீரன் மருத நாட்டுக்கு , அதுவும் ராஜாவின் மாளிகைக்கு வருகிறார் , வந்த இடத்தில அவரின் வீரத்தை கண்டு , ராஜா அவரை பற்றி கேட்கிறார் , ஏனென்றால் அந்த வீரனின் வாள்வீச்சு மன்னருக்கு முத்துசேர்வையை நினைவுபடுத்துகிறது அவரோ தன் தந்தை தான் முத்துசேர்வை என்றும் தன் பெயர் ஜீவகன் என்று தெரிவிக்கிறார்
ஆம் அந்த புரட்சி வீரனின் பெயர் (சிவாஜியின் பெயர் ) ஜீவகன்
ஜீவகன் வீரத்தில் கவரபடுகிறார் இளவரசி ரத்னா , ஜீவகன் தன் தாயை பார்க்க அவர் வீட்டுக்கு செல்லும் பொது இளவரசி ரத்னா அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்கிறார்
அலாவுதீன் மற்றும் அவர் மகள் ஆஷா இருவரும் ஜீவகனின் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள்
ஆஷா மற்றும் ஜீவகன் இருவரும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து தப்பாக புரிந்து கொண்டு சென்று விடுகிறார் ரத்னா
அலாவுதீன் தன் நண்பர் மருத நாட்டின் ராஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ஜீவகன் மூலமாக
மருத நாட்டின் ராஜா ஜீவனுக்கு கோட்டை தளபதியாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்கிறார் , இதற்கு ராஜாவின் இரண்டாம் மனைவி , மற்றும் வீரகேசி இருவரும் எதிர்ப்பு தெரிவிகிறார்கள் .
அடுத்த நாள் சபைக்கு அடிபட்டு தாமாதமாக வருகிறார் ஜீவகன் , அவரின் மேல் பொய் குற்றச்சாட்டை, ஜீவகன் ஒரு ஒற்றன் என்று தெரிவிக்கிறார் வீரகேசி (MR சந்தானம் , மற்றும் ராம்சிங் உதவி உடன் )
ஜீவகன் சிறைக்கு அனுப்ப படுகிறார்
ஜீவகன் நண்பரின் (கருணாநிதி ) உதவியால் தப்பிக்கும் பொது , வீர்கேசி தெரியாமல் உதவி விடுகிறார் , தன் திட்டம் இது தான் என்று சொல்லிவிடுகிறார்
ஜீவகன் தப்பி ஓடி அலாவுதீன் மற்றும் அவர் மகள் ஆஷா இருவரையும் காபாத்தி விடுகிறார் , இதில் ஜீவகனின் தாய் தண்ணியில் குதித்து ஒரு கிராமத்து மக்களின் உதவியினால் உயிர் பிழைக்கிறார் (இது ஜீவகன்க்கு தெரியாது)
ஜீவகன் , அலாவுதீன் , ஆஷா பவளநாடுக்கு சென்று விடுகிறார்கள் , அங்கே மாளிகையில் சமையல் வேலை செய்து வாழ்கையை நடத்துகிறார்கள் , அந்த நாட்டின் ராஜா பார்த்திபன் ஆஷாவின் நடவடிக்கையில் ஒரு ராஜகலையை கண்டு விசாரிக்கிறார் , அவரிடம் அணைத்து உண்மையும் சொல்லி விடுகிறார்கள் மூவரும்
வீரகேசி அந்த சமயம் அங்கே வந்து ரத்னாவை பார்த்திபன்க்கு கல்யாணம் செய்து வைக்க மன்னர் பூபதி (மருத நாட்டின் ராஜா) விரும்புவதாக சொல்ல , பார்த்திபன் தந்திரமாக ஜீவகனுக்கு ரத்னாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார் (கல்யாணத்தில் புகை அதிகமாக வர வைத்து , அதே சமயம் ஜீவகன் குருக்கள் தோற்றத்தில் வேஷம் போட்டு கொண்டு கார்யத்தை சாதிகிரர்கள் )
தன் தந்தை இறந்த செய்தி கேட்டு நாட்டுக்கு திரும்பும் பார்த்திபன் , வீரகேசி சிறைபிடித்து விடுகிறார் , ரத்னாவும் , ஜீவகன் இருவரும் கொஞ்சம் நாட்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்
ஜீவகன் மன்னரிடம் இருந்து செய்தி வரத்தினால் அவரை தேடி செல்லும் பொது , ரத்னாவின் மேல் களங்கம் சுமத்தி அவரை நாட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் வீரகேசி (ரத்னா கர்ப்பமாக இருக்கிறார் )
ரத்னா அவர் மாமியார் உடன் வாழ்கிறார் , (தெரியாமல் )
ஜீவகன் மற்றும் அவர் நண்பர் இருவரும் பார்த்திபன் இருக்கும் சிறைக்கு சென்று அவரை பார்த்து விட்டு செல்லும் பொது , வழி தவறி ஒரு கிராமத்துக்கு சென்று விடுகிறார்கள் , அந்த கிராமத்தில் தன் தாய் , மனைவி , குழந்தை இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார் ஜீவகன்
பூபதிக்கும் அவர் மனைவிக்கும் , வீரகேசி மேல் சந்தேகம் , அலாவுதீன் பூபதியை பார்த்து ஒரு உண்மையை சொல்லி விடுகிறார் , அதாவது பூபதியின் ஒரு குழந்தை தான் ஆஷா என்று
வீரகேசி மன்னரை கொன்று நாட்டை அடைய திட்டம் தீட்டுகிறார் , அதன்படி , மனனர் இறந்த உடன் தான் தான் ராஜா என்று மன்னர் எழுதியது போல MR சந்தானத்தை வைத்து forgery செய்து விடுகிறார்
திட்டம் நிறைவேறிய உடன் தன் மாமாவை கொன்று , அக்காவை சிறையில் அடைகிறார் , சந்தானம் தன் பிள்ளையை பற்றி கேட்டதும் அவரையும் கொன்று விடுகிறார் வீரகேசி , அடிபட்ட சந்தானம் ராணியை பார்த்து , தன் மகன் தான் இப்போலோது , ராணியின் மகனாக இருபதை சொல்லி விடுகிறார் (அதாவது ஆஷா தான் ரத்னாவின் தங்கை , அவளுக்கு தம்பி கிடையாது )
முடிவில் ஜீவகன் வீரகேசியை வீழ்த்தி நாட்டை காப்பாற்றி வெற்றி அடைந்து விடுகிறார்
முடிவில் நாட்டின் ராணியாக ரத்னாவும் , தளபதியாக ஜீவகன் இருக்க , ஜீவகன் நாட்டின் சமாதானம் தான் உலகத்தின் புதிய மொழி என்று அறிவிக்கிறார்
சுபம்
இனி படத்தை பற்றி
இந்த படத்தின் முதல் ஆச்சர்யம் , இந்த படத்தில் மொத்தம் நான்கு ஒளிபதிவாளர்கள் சம்பத்,ராஜாராம் , கிருஷ்ணன் , பார்த்தசாரதி , அடுத்தது settings , சீன் effects , ஓவியம் , இது அனைத்தும் ஒரே வார்த்தையில்
பிரமாண்டம்
அடுத்தது நம்மவரின் performance , எனக்கு ஆச்சர்யம் தான் , அவரின் முந்திய படங்களை பார்க்க பார்க்க தான் தெரிகிறது அவரை எந்த அளவுக்கு நாம் இன்னும் அலசவேண்டும் என்றும் , எப்படி இவரை
under estimate செய்து விட்டோம் என்று, யார் சொன்னது , பாலாஜி சாரின் படங்களில் இருந்து தான் நம்மவர் action ஹீரோ என்று (நானும் அப்படி தான் நினைத்தேன் ) காரணம் அவரின் நடிப்பு அப்படி , அதனால் அவரின் பிற சிறப்புகளை மறந்து விடுகிறோம்
இந்த படத்தில் தான் அவர் என்ன ஒரு அழகு , கம்பீரம் , அதே வருடத்தில் வந்த பாசமலரில் இருந்த செண்டிமெண்ட் நாயகனாக இவர் , நம்ப கஷ்டம் தான் , கூடு விட்ட கூடு பாய்வது என்றால் இது தானோ
முதல் காட்சியில் இருந்து என்ன ஒரு கம்பீரம் , அந்த முதியவரை காப்பதும் காட்சியில் சண்டையில் என்ன ஒரு quickness , aglieness இதை மிகை படுத்தி சொல்ல வில்லை , ஒரு நபர் ஒருத்தரை குளத்தின் படியில் நின்று கொண்டு தூகிவீசுவதும் , மரத்தின் விழுதை பிடித்து கொண்டு , குதித்து see saw போன்ற பலகையில் எதிராளிகளை தள்ளி விடுவதும் சுலபம் இல்லை
அதுக்கு அடுத்த காட்சி தன் வீட்டில் , தன் நண்பனிடம் உரையாடும் காட்சி அவர் ஒரு மொழி அழகன் என்று மீண்டும் ஒரு முறை பறைசாற்றுகிறது , அந்த காட்சியில் அவர் பேசும் வசனம் ரத்தினம் (தன் எதிராளிகள் பற்றி வருடமோ 1961 , பல விஷயங்களை நினைக்க தோண்டுகிறது முரளி சாரின் அரசியல் சூழ்நிலை கட்டுரைகளை எடுத்து படித்தால் இதை இன்னும் ரசிக்க முடியுமோ ?)
அதற்கு அடுத்த காட்சியில் அதாவது , தான் சிறை பிடித்து , அழைத்து வரும் காட்சி :
எல்லோரும் மனோகரவை நினைத்து இதை பார்த்தல் ஒரு வித ஆச்சர்யமும் , அதிர்ச்சியும் தான் மிஞ்சும் , காரணம் , அதில் அவர் எரிமலை என்றால் , இதில் தான் என்ன ஒரு அலட்சியம் , நீ என்னை கைது செய்து இருப்பது என்னை ஒன்னும் செய்து விடாது போலே ஒரு அலட்சிய பார்வை ,குறும்பு பார்வை , அலடல் நடை.
PSV அவரை வாம்புக்கு இழுத்து சண்டை போடா வைக்கும் பொது , என்ன ஒரு வேகம் , ஒரு நபர் கத்தி இல்லாமல் , கத்தி வைத்து இருப்பவர் உடன் சண்டை போட என்ன ஒரு துணிச்சல் வேண்டும் , சண்டை போட்டு விட்டு படையில் சேர்ந்ததும் அவர் அலட்டலாக ஒரு பார்வை பார்த்து நடப்பது இருக்கே ,
இனி எங்கே போவோம் இதை காண ?
என்னும் ஒரு சண்டை காட்சியில் , பகைவர்கள் அனைவரும் சுற்றி நிற்க நடிகர் திலகம் பாஞ்சு ,உருண்டு , மீண்டும் எழுந்து சண்டை போடும் லாவகம் இருகிறதே , ஆர்வமும் ,உடலில் வலுவும் இல்லாமல் ஒருவர் இப்படி செய்ய முடியாது , டுப் போட்டால் தெரிந்து விடும் , இதில் தான் 4 cameraman ஆயிற்றே , நடிகர் திலகத்தின் முகம் நன்றாக தெரிகிறது
சரி வெறும் சண்டை மட்டும் தான performance காட்சிகள் இல்லையா என்றால் அதுவும் உண்டு
தான் குற்றவாளியாக நிற்கும் பொது , அவர் முகத்தில் தான் என்ன ஒரு அப்பாவித்தனம் , சோகம் , அதுவும் அவர் தன் காதலி ஜமுனாவை பார்க்கும் பொது நீ கூட சொல்ல மாட்டாயா என்று கேட்பது போல் உள்ளது , இடைவேளை சமயத்தில் தன் தாயையை பிடித்து வைத்து எதிரிகள் மிரட்டும் பொது , அவரின் தேசிய பற்று தெரிகிறது
இடைவேளைக்கு பிறகு அவரின் ஒப்பனைகள் ஏராளம் , நடிப்பில் variety ஏகச்சகம்
சமையல்காரனாக பாண்டியநாட்டில் நுழையும் காட்சியில் அவர் தோற்ற்றம் , குரல் , முடி அனைத்தும் அசல் சமையல்காரன் , ஒரு நாட்டின் போர் வீரன் பணிவு மிக்க நடை நடக்க முடியுமா , எங்கள் நடிகர் திலகத்தினால் முடியும்
அடுத்ததாக சீன தேசத்து ஜோசியகாரனாக அவர் PSV உடன் பேசும் காட்சி , குரலில் மீண்டும் ஒரு மாற்றம் , அதுவும் அந்த chinese பாஷை , அதை மொழி பெயர்க்க கருணாநிதி என்று கொஞ்சம் சிரிக்க உத்தரவாதம்
பார்த்திபனின் யோசனை படி ப்ரோகிதர் வேஷத்தில் மீண்டும் தோன்றி நம்மளை அசர அடிக்கிறார்
தன் காதல் மனைவியை பார்க்க மீண்டும் ஒரு வேஷம் , அடையாளமே தெரியவில்லை
கடைசியாக பார்த்திபனை சந்திக்கும் பொது , ஒரு முஸ்லிம் get up
எழுதவே கஷ்டமாக இருக்கிறது , இவர் எப்படி தான் இப்படி செய்தார் இதை hats off to the legend
இந்த படத்தின் கதைக்கு பொருத்தமான வில்லன் PSV , ஹெரோஇனே ஜமுனா , மோசட் under rated காமெடியன் கருணாநிதி அனைவரும் கலக்கி இருக்கிறார்கள் , கதை அப்படி ,(கதாசிரியரின் பெயர் இல்லை , கட் ஆகி விட்டது ) இயக்கம் TR ரகுநாத் , இசை வெங்கட்ராமன் , பாடல்கள் , கண்ணதாசன் , மருகதாசி
படத்தின் running time கிட்ட தட்ட 2.45 நேரம்
இந்த படம் ஏன் கவனத்தை ஈர்க்கவில்லை என்று தெரியவில்லை
Dear Sivaa sir,
hats off to you upload of Collection records of NT, appreciate your hardwork
Dear Ravikiran Suriya sir,
Your reply , shot back, razor sharp answers are always needed as we need a strong person like you, congrats sir, keep going & keep on going
Dear Murali sir,
Really happy that you mentioned my name since Iam a great fan of your writings
Expecting to make us happy more by your writings
அன்பு ராகுல்ராம்,
மருத நாட்டு வீரன் படத்தை பற்றிய பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அவ்வளவாக யாரும் எழுதாத படங்களை தேடி [தங்கமலை ரகசியம், மறுத்த நாடு வீரன்] பிடித்து எழுதுவது அதை அனைவரும் ரசிக்க வேண்டுமே என்பதற்காக விஸ்தாரமாக எழுதுவது என்பது பாராட்டுக்குரியது. உங்கள் எழுத்து மேலும் சிறக்க ஒரு சின்ன suggestion. கதை சுருக்கம் எழுதி முடித்தவுடன் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் படித்துப் பார்த்தால் அதில் உள்ள பழுதுகளை நீக்கி இன்னும் சற்றே கோர்வையாக சொல்ல முடியும். சற்றே முயற்சி செய்தால் அந்த லாவகம் பிடிபடும். வாழ்த்துகள்.
இந்தப் படத்தை நான் முதன் முறை பார்ப்பது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம். மதுரை கல்பனா திரையரங்கில் நண்பகல் 11.30 மணிக் காட்சி. அந்த நேரம் தமிழகத்திலே சட்டமன்ற தேர்தல் முடிவுற்ற நேரம். முடிவுகள் வெளி வந்து விட்ட நேரம். ரத்த பாசம் ஜூன் 14ந் தேதி வெளியாவதாக இருக்கிறது. அதற்கு முன்பாக இந்தப் படம் நண்பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. ஒரு விதமான சோர்வு நிலை ரசிகர்கள் மத்தியில் இருக்குமோ என்ற எண்ணம் என் மனதிலே அலையடித்துக் கொண்டிருந்த நேரம். நானும் நண்பர் ஒருவரும் செல்கிறோம்.
மதுரை தெரிந்தவர்களுக்கு கல்பனா திரையரங்கம் பற்றி தெரிந்திருக்கும். அது சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள ஒரு அரங்கம். மதுரை தலைமை தபால் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஆரம்பித்து யானைக்கல் வரை செல்லும் வடக்கு வெளி வீதி என்ற பெயரில் அமைந்த நீண்ட சாலை. அந்த மெயின் சாலையிலிருந்து சிம்மக்கல் பகுதியில் இடது புறம் திரும்பி சற்றே சென்றால் கல்பனா திரையரங்கை அடையலாம். வீட்டிலிருந்து மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளை சுற்றி தளவாய் அக்ரஹாரம் வழியாக சொக்கநாதர் கோவிலை தாண்டி சென்று வடக்கு வெளி வீதியை அடைந்தோம் நாங்கள். முதல் ஷாக் [அல்லது pleasant surprise] அரங்கத்தின் வாசலில் நின்றிருந்த கூட்டம். சாதாரண கூட்டம் இருக்கும் என நினைத்து சென்ற எங்களுக்கு கூட்டத்தை பார்த்தவுடன் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒரு வழியாக டிக்கெட் வாங்கி உள்ளே செல்கிறோம்.
எடுத்தவுடன் படம் [noon show-வில் இது ஒரு வசதி]. டைட்டில் கார்டில் நடிகர் திலகம் பெயர் வந்தவுடன் பெரிய வரவேற்பு என்றால் முதலில் அவர் பாடல் காட்சியில் அறிமுகமாகும் போது அரங்கமே அதிர்ந்தது. ஏற்கனவே பலமுறை உணர்ந்திருந்தாலும் மீண்டும் அன்று நிரூபணமான உண்மை என்னவென்றால் வெளியில் என்னவெல்லாம் நடந்தாலும் திரையுலகில் நடிகர் திலகத்தை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்பதும் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் நடிகர் திலகத்தின் படங்களை விட்டு விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்பதற்கான அத்தாட்சியாகவும் அமைந்தது.
பிறகு படம் எனக்கு பல surprise-களை அளித்தது. விழி அலை மேலே பாடலும் பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா போன்ற பாடல் காட்சிகளிளெல்லாம் ஒரே அலப்பரை. ராகுல் குறிப்பிட்டது போல சண்டை காட்சிகளிளெல்லாம் அரங்கில் ஒரே ஆரவாரம். அவரின் ஒவ்வொரு get up change-ற்கும் தியேட்டரில் கைதட்டல் பிறக்கிறது. சுருக்கமாக சொன்னால் எந்த எதிர்பார்புமின்றி படம் காண சென்ற எங்களுக்கு நல்ல திருப்தி.
வெளியான சமயத்தில் ஏன் பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றால் ரிலீஸ் வருடமும் சுற்றி நின்ற நமது படங்களுமே காரணமானது. 1961-ம் வருடம் மார்ச் 16 அன்று வெளியான பாவ மன்னிப்பு [மருத நாட்டு வீரன் வெளியானது 1961 ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி] மருத நாட்டு வீரன் வெளியாகும் போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. 1964 மே 27-ந் தேதி வெளியான பாசமலர் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. அதன் பிறகு வெளியான எல்லாம் உனக்காக மற்றும் ஸ்ரீவள்ளியின் போட்டி. அதுவும் தவிர வெளியான இரண்டே வாரங்களில் அதாவது செப் 9 அன்று முமூர்த்திகளில் ஒருவராய் மூன்று தமிழ்களில் ஒன்றாய் என்றும் விளங்கும் பாலும் பழமும் வெளியானது.
இப்படிப்பட்ட சூழலில் மருத நாட்டு வீரன் ஜீவகனுக்கு வரவேற்பு சற்றே குறைந்ததில் வியப்பொன்றுமில்லை. அதே நேரத்தில் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் படம் அமோக வெற்றி அடைந்தது. அதைதான் நடிகர் திலகமே தனது ஒரு வரி comment ல் "கேரள மக்கள் அமோக வரவேற்பளித்தனர்" என்று குறிப்பிட்டிருப்பார்.
அன்புடன்
சிவா சார்,
வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி.
RKS,
Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது. வாழ்த்துகள்.
ரவி,
உங்கள் பதிவின் தொடர்ச்சியாக நான் எழுதுவதாக சொன்ன பதிவை விரைவில் பதிய முயற்சிக்கிறேன்.
அன்புடன்
Dear Murali sir,
Your experience in 1980 on watching this Marudha naatu veeran was too good , thank you sir
Regarding your suggestion , I will definitely take care to reduce the mistakes and read once again the story before I post
Rahul,
I am proud of your perseverance and Dedication. I want to thank specially your parent for nurturing the old values with good aesthetics to youngster like you. Keep it up. My blessings.
டியர் சிவா சார் / கோல்டு ஸ்டார் சதீஷ் சார்,
நடிகர்திலகத்தின் சாதனைப் பட்டியல் பதிவுகளுக்கு நன்றி.
From the bottom of my heart I thank Gopal sir and KC Sekar sir
Dear Ravi Kiran suriya Sir,
Thanks for posting ENgal thanga raja pictures
இந்தத்திரிக்கு என்ன நடந்ததுவிட்டது?
கண் திருஷ்ட்டியா?
சதியா?
ஜெகபதி ஆர்ட்ஸ் பட நிறுவனத்தினரது
தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து
எங்கள் தங்க ராஜா
உத்தமன்
பட்டாக்கத்தி பைரவன்
ஆகிய 3 படங்கள் வெளிவந்திருந்தன
இவை 3 படங்களும் இலங்கையில் மாபெரும் சாதனை படைத்திருந்தன
எங்கள் தங்க ராஜா யாழ்நகரில் நள்ளிரவுகாட்சியுடன் ஆரம்பித்து
ஒரே நாளில் 7 காட்சிகள் நடைபெற்று சாதனை நிலை நாட்டியதுடன்
கொழும்பு யாழ்நகர் இரண்டு இடங்களிலும் 100 நாட்களை கடந்தது
உத்தமன் இலங்கையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தயது
இரண்டு இடங்களில் வெள்ளிவிழா கண்டதுடன் கொழுப்பில்
200 நாட்களை கண்டது வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது
பட்டாக்கத்தி பைரவன் கொழும்பு யாழ்நகர் இரண்டு இடங்களிலும்
100 நாட்களை கண்டதடன் வசூலிலும் சாதனை படைத்தது
யாழ்நகரில்
எங்கள் தங்க ராஜா 4 லட்சத்தை தாண்டியது
உத்தமன் பட்டாக்கத்தி பைரவன்
இரண்டும் 7 லட்சத்துக்கு மேல் வசூல் பெற்றன
எங்கள் தங்க ராஜா கொழும்பு .....சென்ரல்....100..நாட்கள்
........................................யாழ்நகர்.. ......ராஜா...........126..நாட்கள்
உத்தமன்...................கொழும்பு.......சென்ரல்.. .......203..நாட்கள்
..............................ஃ.....யாழ்நகர்...... ..ராணி.............179..நாட்கள்
பட்டாக்கத்தி பைரவன்.....கொழும்பு..ஜெஸிமா..103..நாட்கள்
...............................................யாழ ்நகர்....சிறிதர்.......100..நாட்கள்