http://i59.tinypic.com/zwet5c.jpg
Printable View
தலைவருக்கு வர்ணம் பூசபடுகிறது
http://i58.tinypic.com/2mh7zas.jpg
தலைவருக்கு வர்ணம் பூசபடுகிறது
http://i61.tinypic.com/2r5dtux.jpg
இன்று எங்கள் குலதெய்வம் பிறந்தநாள்
http://i57.tinypic.com/es0pid.jpg
பொன் தைத்திங்கள் மங்கலதிருநாளாம்; மகிழ்ந்தனரே மாதோர்குலமும், மக்களுமே
தரணியிலே ஒளிவெள்ளம், தங்க திருமகனின் பிறப்பாலே; தாயோரின் மகிழ்ச்சி உள்ளம்;
தர்மத்தின் தலைவனை தாலாட்டி பாடுகின்றார் எங்க வீட்டு பிள்ளை இவனென்று.
மாதவம் செய்தனரோ, நோன்பு வளர்த்தனரோ; மன்னாதி மன்னனின் வருகைக்காக, மன்னவனின்
அருளுக்காக, ஆட்சிக்காக, இணையில்லா ஈகைக்காக. மக்களின் துயர் நீக்க வந்த நாடோடி மன்னனுக்காக.
இறைவன் வந்தானே இன்னிசை இசைப்பிரோ, துள்ளியோடி, துதிபாடி இசை பாடுங்கடி, ஆடுங்கடி,
தூயோன் வரவுதனை, புரட்சி தலைவன் வந்தானே. சிங்கம் வளர்த்த எங்கவீட்டுபிள்ளை அவன்தானே
ஏழையின் சிரிப்பினில் இறைவனை கண்டானே, எட்டாவது வள்ளலின் ஏற்றமிகு எழில்தானே
சிந்தையில் வைப்போமே தெய்வத்தாய் திருமகனின் திருப்புகழை, கதிர்காம கந்தனோ, கண்டியில் பிறந்தானே, காவிய தலைவனே, காலத்தை வென்றவனே, கடமையின் உயர்கோன் அரசனே.
பொன்னொளிர் மேனியன், தன்னோளிர் துயவன், மாயோன், மக்களின் காவலன், மக்கள் திலகம் -
புவிபுகழும் மாதவன் - மேய்ப்பன் - மறையோன். ஆனந்த ஜோதியாம் அருள் மழைஜோதியே,
மக்களின் ஒளிவிளக்கே, மாலை நாம் அணிந்தே, திருப்புகழை நாம் வளர்ப்போம் ஆண்டாள் அவள்போலே
அவன் திருநாமம் தான் உரைத்து, திருப்புகழை ஏற்றி வைப்போம்.
ஏழையின் இறைவன் அவன் எங்கவீட்டுபிள்ளை வரம்; மறையாத புகழ் கொண்ட மன்னாதி மன்னன் அமரன்
மக்களின் அருள் விளக்கே, மாற்றாரும் மனம் விரும்பும் அன்னமிட்ட ஆலயமே;
சீலோர்கள் வணங்கும் சக்ரவர்த்தி திருமகனே. மறை ஆளும் மக்கள் திலகமே;
திரை ஆண்ட தென்னவனே; நல்ஆட்சிக்கோர் நாயகன், வெற்றிகோர் விண்எட்டும் வாமனன்.
http://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpg
http://i58.tinypic.com/ou1j45.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 98வது இனிய பிறந்த நாள் .
பல்வேறு மொழிகள் , இனங்கள் , மதங்கள் இவற்றையெல்லாம் தாண்டி அவருடைய ரசிகர்களான நாம் எல்லோரும்
என்றென்றும் மக்கள் திலகத்தை மறக்காமல் அவர் நினைவாகவே பெருமையுடன் வாழ்ந்து இன்று அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நேரத்தில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை உலகளவில் சிறப்பாக எடுத்து செல்ல நாம் எல்லோரும் இன்றே அந்த பணியை துவங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரவித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
இனிய நண்பர்கள் திரு ஜோ மற்றும் திரு ரவிகிரண் சூர்யா அவர்களுக்கும் நன்றி .
பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம்: இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...' என சினிமாவில் பாடியதை போல வாழ்ந்து காட்டியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா துறையிலும் சரி... அரசியல் துறையிலும் சரி தனி முத்திரை பதித்தவர்.
எம்.ஜி.ஆரின் தாயுள்ளம்:
யார் எம்.ஜி.ஆரை சென்று சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டியா? எனதான் கேட்பார். பெற்ற தாய் மட்டுமே குழந்தை சாப்பிட்டதா? பசியுடன் இருக்குமே என துடிக்கும். அந்த தாயுள்ளம் தான் அவருக்கு. அதனால் தான் இன்றும் மக்கள் மனங்களில் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறார்.
பாராட்டிய பாங்கு:
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலம். நடிகை ஸ்ரீதேவி உட்பட தமிழக நடிகர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியது. தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த எம்.ஜி.ஆர்., விரும்பினார். சென்னை மயிலாப்பூரில் திறந்தெவளியில் விழா நடந்தது. என்னையும், இயக்குனர் பாரதிராஜாவையும் அழைத்திருந்தார். விழாவில் ஆர்வக்கோளாறில் நான் பேசிய போது, ''தமிழக மக்களை மட்டுமின்றி நடிகர்களையும் மனதில் வைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து இப்படி பாராட்டு விழா நடத்துகிறார். எனவே நாம் அவருக்கு செய்ய வேண்டியதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் செய்ய வேண்டும்,'' என்றேன். உடனே மைக்கை மூடிய படி எம்.ஜி.ஆர்., ''நீ இப்படி பேசினால் எப்படி? கலைஞர்களை பாராட்டி பேச வேண்டும். என்னை பற்றி பேச வேண்டாம்,'' என்றார்.
ரசிகர்களை இழக்க கூடாது:
விழா முடிந்த பிறகு என்னையும், பாரதிராஜாவையும் அழைத்த எம்.ஜி.ஆர்., அவருடைய பச்சை நிற 4777 காரில் ஏறும்படி கூறினார். காரில் சென்ற போது எங்களை வீட்டில் விடுவதாக கூறிய எம்.ஜி.ஆர்., ''நீ பேசியது எனக்கு ஓட்டு போட வேண்டும் என கூறுவது போல இருந்தது. அதனால் தான் பேச வேண்டாம் என்றேன். நீ இப்ப தான் சினிமாவில் முன்னேறி வருகிறாய். உனக்கு தி.மு.க., உட்பட எல்லா கட்சியினரும் ரசிகர்களாக இருப்பார்கள். நீ இப்படி பேசியதை கேட்டால், தி.மு.க.,காரர்கள் உன் படம் பார்ப்பதை நிறுத்தி விடுவர். எனக்காக நீ எந்தவொரு ரசிகரையும் இழந்து விடக்கூடாது. அதை என்னால் ஜீரணிக்க முடியாது. சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது,'' என்றார். தனக்கு ஓட்டு கேட்பதன் மூலம் ரசிகர்களை இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கூறியதையறிந்து அவரது காலை வணங்க தோன்றியது. தனக்காக வாய்ஸ் கொடுக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கெஞ்சக்கூடிய நிலையுள்ளது. ஆனால் என்னால் ஆதாயம் தேட எம்.ஜி.ஆர்., நினைக்காததை அறியும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும்:
'தாவணிகனவுகள்' படத்தை நடிகர் சிவாஜியை வைத்து இயக்கி நடித்தேன். சிவாஜி, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் பிரிவியூ காட்ட விரும்பினேன். சிவாஜியிடம், மேனகா தியேட்டரில் மதியம் 3.30 மணிக்கு சினிமா பார்க்க வரச் சொன்னேன். எம்.ஜி.ஆர்., முதல்வர் என்பதால் பகலில் பிசியாக இருக்கலாம் என கருதி, மாலை 6.30 மணிக்கு நடிகர் சங்க தியேட்டருக்கு வர சொன்னேன். இருவரையும் தனித்தனியாக வரவேற்று அழைத்து செல்ல வசதியாக இருக்கும் என கருதினேன். ஆனால் திடீரென சிவாஜி, ''மதியம் 3.30 மணிக்கு வேறு ஒரு பணி இருப்பதாக கூறி, மாலை 6.30 மணிக்கு வருகிறேன்,'' என்றார். என் மனைவி பூர்ணிமாவிடம், ''படம் பார்க்க வரும் சிவாஜியை நீ வரவேற்று படம் பார்க்க வை... நான் இடைவெளி நேரத்தில் வந்து சேர்ந்து கொள்கிறேன். கேட்டால் லேப் பணி இருப்பதாக கூறி விடுவோம்,'' என ஏற்பாடு செய்தேன். நான் நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரை வரவேற்று படம் பார்க்க வைத்தேன்.
பரந்த மனப்பான்மை:
இடைவெளி நேரத்தின் போது, ''எம்.ஜி.ஆரிடம் லேப் பணிக்கு சென்று உடனடியாக திரும்பி வருகிறேன்,'' என்றேன். ஆனால் தன்னுடன் அமர்ந்து படத்தை பார் என எம்.ஜி.ஆர்., அனுப்ப மறுத்தார். அந்த படத்தில் சிவாஜி தான் ஹீரோ... இதனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னை விசாரித்தார். வேறுவழியின்றி நடந்ததை தெரிவித்தேன். என்னை கண்டித்த அவர், ''சினிமாவில் ஹீரோ சிவாஜி. சீனியர் ஆர்ட்டிஸ்ட். நீ அவரை வரவேற்று படம் பார்க்க வைத்திருக்க வேண்டும். எனக்காக வந்திருக்க வேண்டாம். உடனடியாக நீ அவருடன் சேர்ந்து படத்தை பார். மீண்டும் இங்கு வர வேண்டாம். நான் மீதி படத்தை பார்த்து செல்கிறேன்,'' என அனுப்பினார். அங்கிருந்து மேனகா தியேட்டருக்கு சென்றேன். படத்தை பார்த்து கொண்டிருந்த சிவாஜி, ''நான் வந்திருக்கிறேன். அப்படி என்ன முக்கிய வேலை,'' என்றார். லேப் பணி என நான் கூறியதும் சிவாஜி, ''எனக்கு எல்லாம் தெரியும். எம்.ஜி.ஆரை படம் பார்க்க அழைத்து விட்டு பாதியில் வந்தால் எப்படி? உடனடியாக நீ சென்று முதல்வரை முழு படம் பார்க்க வைத்து அனுப்பு. ஆயிரம் தான் இருந்தாலும் அவர் இந்த மாநிலத்தின் முதல்வர்,'' என என்னை அனுப்ப முயன்றார். ஆனால் என்னை அங்கு வரக்கூடாது என எம்.ஜி.ஆர்., கண்டிப்பாக கூறியதை தெரிவித்தேன். ஆனாலும் அவர் கேட்காமல் என்னை அங்கிருந்து அனுப்பினார். அப்போது தான் இருவருக்கும் இருந்த பாசம், புரிதல், பரந்த மனப்பான்மையை உணர்ந்தேன்.
வேறு என்ன வேண்டும்:
அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரே (எம்.ஜி.ஆர்.,) என்னை தன் கலைவாரிசாக அறிவித்தது உண்மையில் வரபிரசாதம். வாழ்க்கையில் இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்? இதையெல்லாம் முன்கூட்டி நினைத்ததால் என்னவோ என் அம்மா எனக்கு பாக்யராஜ் என பெயர் வைத்திருக்கிறார்.
திருமண பரிசு:
என் திருமண வரவேற்புக்கு வரும்படி தெரிவித்திருந்தேன். அங்கு வருவதற்கு முன்பாகவே என் வீட்டிற்கு சென்றிருக்கிறார். என் உதவியாளர் பாபுவிடம் இரு பெரிய குத்து விளக்குகளை கொடுத்து, 'தினமும் விளக்கு ஏற்ற சொல்,' என்று கூறிவிட்டு திருமண வரவேற்பிற்கு வந்தார். உனக்கு பாதுகாப்புக்கு 16 வயது சிறுவனை வைத்திருக்கிறாயே என்றார். எனக்கு ஒன்றும் அப்போது புரியவில்லை. வீட்டிற்கு சென்ற போது தான் எம்.ஜி. ஆரின் கேள்விக்கு அர்த்தம் தெரிந்தது.
- கே.பாக்யராஜ்,
இயக்குனர்,
நடிகர். 044 - 4308 1207.
courtesy - dinamalar -17..1.2015
மக்கள் திலகத்தின் 98 வது பிறந்த நாளினையொட்டி, அவரது மாண்பினை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வினை பதிவிடுவதில், மகிழ்ச்சி அடைகிறேன்.
http://i58.tinypic.com/2hgwns8.jpg
1953ம் வருடத்தில் வெளியான “ஜெனோவா” திரைக்காவியம் மக்கள் திலகம் நடிப்பில்,, ஒரே சமயத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரானது.
மக்கள் திலகம் நடித்த இந்த காவித்தின் இயக்குனர் எப். நாகூர். இவர் “ஜெனோவா” காவீயத்தின் பங்குதாரரும் ஆவார். மேலும், இவர் பிரபல ஆர்ட் டைரக்டர் மற்றும் நியூட்டோன் ஸ்டுடியோவின் பங்குதாரர்களில் ஒருவருமாக திகழ்ந்தவர். சிறந்த பண்பாளர், நட்புக்கு முதலிடம் தருபவர்.
இந்த காவியத்துக்காக நம் பொன்மனச்செம்மல் அவர்கள் சம்பளமாக பேற்ற தொகை ரூபாய் 25,000/-. இந்த காவியத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில், நம் மக்கள் திலகம் அவர்கள் புகழ் பெற ஆரம்பித்த கால கட்டத்தில், அவரது அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள், இயக்குனர் – தயாரிப்பாளர் நாகூர் அவர்களிடம், “ தம்பி ராமச்சந்திரனுக்கு முதலில் பேசிய தொகை ரூபாய் 25,000/-. படத்தை முடிக்காதாது உங்கள் குற்றம், எனவே பழைய தொகையை போல மேலும் ஒரு மடங்கு அதிகம் கொடுத்து புது அக்ரீமென்ட் போடுங்கள், அத்தகு நீங்கள் சம்மதித்தால்தான் தொடர்ந்து கால்ஷீட் தேதிகள் கொடுக்க முடியும் “ என்று கண்டிப்பாக ,கூறி விட்டார்.
அதற்கு பதிலாக, இயக்குனர் நாகூர் அவர்கள், திரைப்பட விநியோகஸ்தர் களிடம் விலை நிர்ணயம் செய்து முடித்தாகி விட்டது. மேற்கொண்டு, பணம் கேட்க முடியாது, திடீரென்று, இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டால், எல்லாமே கெட்டு விடும் என்ன செய்வது என்று புரிய வில்லையே ” என்று வருத்தபட்டார்.
இது குறித்து படத்தின் உதவி இயக்குனராக பணி புரிந்தவரிடம் ஆதங்கப்பட்டார், நாகூர் அவர்கள். உடனே, அவரும், “கவலைப்படாதீர்கள், நாம் நேரிலேயே திரு. எம். ஜி. ஆர். அவர்களிடம் கேட்டு விடலாம், வாருங்கள் என்று மறுநாள் அழைத்துப் போனார். எம். ஜி. ஆர். மட்டும் வீட்டிலிருந்தார். இயக்குனரை கண்டதும், எம். ஜி. ஆர். அவர்கள், “ வாங்க முதலாளி “ என அன்புடன் வரவேற்றார். படத் தயாரிப்பாளர்களை முதலாளி என்று அழைப்பது திரு. எம்.ஜி.ஆரின் வழக்கம். இயக்குனர் நாகூர் அவர்கள், வேதனை பொங்க கண்ணீர் உகுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நம் பொன்மனச்செம்மல் அவர்கள், “அழாதீர்கள், என்ன நடந்தது என சொல்லுங்கள் என்றார்.
இயக்குனரும் எம். ஜி. சக்கரபாணி கூறிய அதிக தொகையை பற்றி எடுத்துரைத்து, என்னால் கண்ணியமாக தொழில் செய்ய இயலாமல் போகும்,, உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார்.
“ என்னால், உங்களுக்கு எந்த இடையூறும் வராது. மேற்கொண்டு பணம் எதுவும் நீங்கள் தர வேண்டாம். படத்தை முடித்து தருகிறேன். ஷூட்டிங் எப்போது என்று சொல்லுங்கள், முதலாளி நன்றாக இருந்தால் தான் தொழிலாளி நாங்க வாழ முடியும், சந்தோஷமாக போய் வாருங்கள், முதலில், ஏதாவது சாப்பிடுங்கள் என்று கூறி காப்பி சாப்பிட வைத்து அனுப்பினார்.
இயக்குனர் நாகூர் அவர்களுக்கு, பேராபத்திலிருந்து தப்பித்தது போல ஓர் உணர்வு.
- நன்றி .... கலைமாமணி எஸ். எம். உமர் எழுதிய கலை உலக சக்கரவர்த்திகள் என்ற நூலிலிருந்து -
இப்படிப்பட்ட ஒரு மனித நேயம் மிக்க ஒரு மாபெரும் தலைவர் இனி பிறக்கப் போவதில்லை.
அவரை சந்தித்து உரையாடியவர்களும், அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்தவர்களும், அவரை கண்டவர்களும் பிறவிப் பயன் அடைந்தவர்களே ! அவரது ரசிகர்களாக, பக்தர்களாக, அன்பர்களாக இருப்பது நமக்கு மிகவும் பெருமையே !
மக்களை பெரிதும் நேசித்த, மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த, மக்களால் இன்றும் மறக்கப்படாமல் இருக்கும் மக்கள் திலகம் வாக்களிக்கும் காட்சி :
http://i61.tinypic.com/2cy1etf.jpg
மனிதப்புனிதர் பிறந்த இந்த இனிய மனித நேய திருநாளில், மக்கள் திலகம் திரியினில் தங்கள் பங்களிப்புகளை அளித்து வரும் அன்பர்களுக்கும், நடிகர் திலக திரி அன்பர்களுக்கும், எனது அன்பான வாழ்த்துக்கள்.