1500 க்கு வாழ்த்தெழுதிய
ஈரம் காய்வதற்கு முன்பே
2000 க்கு வாழ்த்தெழுத வைத்தீர்கள்.
செந்தில்வேல் சார்...!
அசராத உழைப்பு உங்களுடையது.
அலுக்காத வாழ்த்து
எங்களுடையது.
நடிகர் திலகம் வாழும்
மனசிலிருந்து...
நல்வாழ்த்துகள்.
Printable View
1500 க்கு வாழ்த்தெழுதிய
ஈரம் காய்வதற்கு முன்பே
2000 க்கு வாழ்த்தெழுத வைத்தீர்கள்.
செந்தில்வேல் சார்...!
அசராத உழைப்பு உங்களுடையது.
அலுக்காத வாழ்த்து
எங்களுடையது.
நடிகர் திலகம் வாழும்
மனசிலிருந்து...
நல்வாழ்த்துகள்.
மையம் திரியில் குறுகிய காலத்தில் இரண்டாயிரம் பதிவுகளைக் கடந்துள்ள சக்திவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.
தரிசனம்-2.
-------------
தாவணிக் கனவுகள்.
----------------------
தொடர்கிறது...
----------------
உடம்பை ஒரு துப்பாக்கி போல்
நிமிர்த்திக் கொண்டு "ஜெய்ஹிந்த்" சொல்லி சல்யூட்
செய்த பிற்பாடு, நிமிர்த்திய
உடம்பைக் கொஞ்சம் கூட
தளர்த்தாமல், "சர்ர்...ரரட்" என்று
அரை வட்டமடித்துத் திரும்பும்
அந்த ராணுவத் திரும்பல்...
ஒரு நடிப்புக் கலைஞன், தன்னை முழுமையாகக்
கலையின் வசம் ஒப்படைத்து
விட்டதன் அற்புத உதாரணம்.
---------------
கொடி வணக்கம் செய்து விட்டு
கம்பீரம் மாறாமல் நடந்து
சென்று, சைக்கிள் ஒன்றின்
பழுது நீக்கும் பணியைத்
துவக்குகிறார், கேப்டன் சிதம்பரம்.
பாவாடை,தாவணி அணிந்த, சுப்ரமணியத்தின் மூன்றாம் தங்கை அங்கே வருகிறாள்.
ஓரக் கண் கொண்டு அவளை
முறைத்தபடியே கேப்டன்
அவளிடம் கேட்கிறார்.. "டேய்..
உன்னைத்தான்டா.. இதுதான்
வேலைக்கு வர்ற நேரமா?"
-வயது வந்த ஒரு பெண் பிள்ளையை "வாடா..போடா"
என்று அழைக்கும் உரிமை
தாய், தந்தையருக்கே உண்டு.
கேப்டன் இவ்விதமாய் அந்தப்
பெண்ணை அழைக்கிறார் என்றால்.. அந்தக் குடும்பத்தின்
வளர்ச்சியில் அவர் காட்டும்
அக்கறை நமக்குப் புரிகிறது.
"அதான்.. ஒரு எட்டு வயசுப் பையனை வேலைக்கு வச்சிருந்தேன்னா.. இந்நேரம்
'கரகர'ன்னு பம்பரமாச் சுத்திருப்பான். நாலஞ்சு
பொட்டப் புள்ளங்க இருக்கிற
குடும்பமாச்சே.. அந்த நாலு
ரூவாக் கூலி உனக்குக் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்
பாரு.. என்னைச் சொல்லணும்.
ஏன் இவ்வளவு லேட்? தூங்கிட்டு வரியா?"
-"வசன உச்சரிப்பு" என்பதை
ஆங்கிலத்தில் "Dialogue delivery " என்று சொல்கிறோம்.
"Delivery"ஐ "பிரசவம்" எனும்
பொருள்படப் பார்க்கையில்
அது, நடிகர் திலகத்திற்கே வெகுவாகப் பொருந்துகிறது.
அழகு சிதையாத, அம்சமான
வார்த்தைக் குழந்தைகளைப் பிரசவித்த ஆண் தாய்- நடிகர் திலகம்.
"இல்ல கேப்டன். எங்க அண்ணனுக்கு முதுகு வலின்னு சொல்லிச்சு. அதான்
பிடிச்சு விட்டுட்டு வர்றேன்."
இந்த இடத்தில், அந்தக் குடும்பத்தின் மீது உரிமையும்,
அக்கறையும் கொண்ட பெரிய
மனிதரைத்தான் நாம் பார்க்கிறோம்.. நடிகர் திலகத்தின் உருவத்தில்.
"ஆங்.. துரை பெரிய கலெக்டரு. ராத்திரி பகலா
வேலை பார்த்துக் களைச்சு
வர்றாரு. அவருக்கு முதுகு
புடிச்சு விட வேண்டியதுதான்.
குடிகாரப் பய.. அப்பன் இல்லாத
வீடாச்சே..? அவன் ஸ்தானத்துல இருந்து குடும்பத்தை கவனிப்பான்னு
நெனைச்சேன். என்னிக்கு
அவன் குடிக்க ஆரம்பிச்சானோ... அன்னிக்கே எனக்கும், அவனுக்கும் விட்டுப் போச்சு.
அவன் பேச்சே எடுக்காதே.
அவன் 'டாபிக்'கே வேணாம்."
வசனம் என்பதை யார் வேண்டுமானாலும் எழுதி,
பேசுவதை யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். ஆனால், சுப்ரமணியம் என்கிற இளைஞனின் மீது தனக்கு
ஏற்பட்டிருக்கிற அவநம்பிக்கையைத் தெரியப்படுத்தும் சிதம்பரம்
என்கிற பெரியவராகவே, அதைப் பேசுவது ஒரே ஒரு
நடிகர் திலகத்தால் மட்டுமே
முடியும்.
'எனக்கும், அவனுக்கும் விட்டுப் போச்சு' என்று சொல்லும் போது, அவரது கைவிரல்கள் செய்யும் பாவனையை, எந்த வசனம்
கொண்டு ஈடு செய்ய முடியும்?
"ஆமா... ஒரு பத்துப் பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி, ஒரு சிமெண்ட்
கம்பெனி முதலாளிகிட்ட
நானே உங்கண்ணனைக்
கூட்டிட்டுப் போனேன். ஒரு
வாரம் கழிச்சு வந்து பாருன்னாரே.. உங்க அண்ணன்
போனானா?"
"போனாரு."
"என்ன ஆச்சு?"
"வேலை இல்லேன்னு சொல்லிட்டாங்க".
"நான்.. மிலிட்டரிக்காரன்
ரெகமண்டேஷன்னு உங்கண்ணன் சொன்னானா?"
- அந்த "நான்" என்பதை கர்வமாக நடிகர் திலகம்
பேசும் போதுதான் எத்தனை
அழகு?
"சொன்னாரு."
"அதுக்கென்ன சொன்னாரு?"
"அந்த மிலிட்டரிக்காரன் கிடக்கான். அவனுக்கு வேற
வேலை இல்லன்னு சொன்னாரு."
என்னவோ.. கசப்பு மருந்து
குடித்த குழந்தையாட்டம்,
இந்த இடத்தில் நடிகர் திலகம்
முகம் போகிற போக்கைப்
பார்க்க வேண்டுமே?
ஒரு சின்னப் பெண்ணின் முன் தான் அவமானப்பட்டு விட்டதை கடுமையாக இல்லாமல், வேடிக்கையாக வெளிக்காட்ட வேண்டிய சவாலான உடல் மொழிகள். அவருக்குத் தெரியாத மொழியா? பின்னுகிறார்.
கேப்டன், இதைத் திசை
திருப்புவதற்காக அந்தப்
பெண்ணைக் கண்டிக்கிறார்.
"வேலைக்கு லேட்டா வர்றது.
தொண தொணன்னு பேசிக்கிட்டிருக்கிறது".
-----------------
இரண்டு, மூன்று வண்டிகளுக்கு
"ஓவர் ஆயில்" செய்ய வேண்டும் என்று அதற்கு
வேண்டிய சாமான்களின்
பட்டியலைக் கொடுத்து வாங்கி
வரச் சொல்லி சுப்ரமணியத்தின்
தங்கையை அனுப்பிய பின்
பழுது பார்க்க வந்த சைக்கிளின்
"பங்க்சர்" போடத் துவங்குகிறார் கேப்டன்.
பழுதுக்காக சைக்கிளை விட்ட
வாலிபன் வந்து, "பங்க்சர்
போட்டாச்சுங்களா?" என்று
கேட்க..
"உன் "பங்க்சர்" தான்பா பார்த்துக்கிட்டிருக்கேன்." என்று
கூறி விட்டு, எழுந்து நடந்து
சென்று காற்றடிக்கும் பம்பு
ஒன்றை எடுத்து வருகிறார்..
கேப்டன்.
"பங்க்சர்" ஒட்டுறதுக்குத் தண்ணி பிடிச்சு வைக்கச்
சொல்லியிருந்தேன்" என்று
சொல்லியபடியே கேப்டன்,
ஒரு தட்டு போட்டு மூடி
வைத்திருந்த வாளியை மூடியை எடுத்து விட்டுப்
பார்க்க...
நீல நிறம் கொண்ட அந்தப்
பெரிய வாளி, நீரின்றிச்
சிரிக்கிறது...
நடிகர் திலகம் இல்லாத திரையுலகம் போல்... வெறுமையாக.
(...தொடரும்...)
முத்தையன்
தங்களை மிகவும் பாதித்த ராஜபார்ட் ரங்கதுரை, தாங்கள் அளித்த நிழற்படங்களின் மூலம் எங்களையும் பாதித்து விட்டது.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 11.12.2015 அன்று மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஸ்டைலில் கலக்கிய ராஜா திரைப்படம் வெளியாகிறது படத்தின் ஸ்டைலான போஸ்டர் உங்கள் பார்வைக்கு....
தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு மற்றும் ரசிகர்கள் சார்பில் வைக்கப்டும் வரேவற்பு பேனர்கள். மக்கள்தலைவரின் ராஜா சிறப்பு பக்கம் காண visit www.sivajiganesan.in
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...8d&oe=56DE5BD6
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
2000 பதிவுகளை கடந்த மக்கள்தலைவரின் புகழ் பரப்பி எங்கள் செந்தில்வேல் அவர்களை வாழ்த்த முடியாது... சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 11.12.2015 அன்று மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஸ்டைலில் கலக்கிய ராஜா திரைப்படம் வெளியாகிறது படத்தின் ஸ்டைலான போஸ்டர் உங்கள் பார்வைக்கு....
தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு மற்றும் ரசிகர்கள் சார்பில் வைக்கப்டும் வரேவற்பு பேனர்கள். மக்கள்தலைவரின் ராஜா சிறப்பு பக்கம் காண visit www.sivajiganesan.in
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...76&oe=56D85F42
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Congrats Mr Senthilvel for reaching another milestone. Thanks for posting valuable articles of
NT.
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது சென்னை, அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் மற்றும் அடையாறு கிளை ஊழியர்கள் இணைந்து நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி மக்களுக்கு சுமார் 4,000 உணவுப் பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளையும், மீட்பு பணிகளையும் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதே போல் பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தனது வீட்டிலே தனது மேற்பார்வையில் உணவு தயாரித்து கொடுத்தார் என்பதனை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல், மக்கள்தலைவரின் புகழ் காக்கும் ரசிகர்களாகிய நாமும் நம்மால் முடிந்தளவு உணவு தயாரித்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை மக்கள் நலமுடன் வாழ அனைவரும் பிரார்த்திப்போம்.
http://www.sivajiganesan.in/Images/0712_10.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
வருங்காலத்தில் மக்கள்தலைவரின் புகழ் காக்க புறப்பட்டிருக்கும் அன்னை இல்லத்தின் வம்சவிளக்கு கலையுலகின் வின் ஸ்டார் விக்ரம் பிரபு அவர்கள் அன்னை இல்லத்திற்கு அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.
http://www.sivajiganesan.in/Images/0712_13.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் படை வீரர்கள் ஆங்காங்கே தங்கள் பகுதியில் ஆரவாரமில்லாமல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது. மயிலாடுதுறையில் நண்பர் சேகர் அவர்கள் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட ரூ.25,000 மதிப்பிலான உதவிகளை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது போல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவாஜி ரசிகர்கள் தாங்கள் செய்யும் பணியை உளமாரப்பாராட்டுகிறேன்.
Great news for Madurai fans. It will be a gala show at Central. Share the celebrations here for the
benefit of all the fans.
வாழ்த்து தெரிவித்த
ராகவேந்திரா சார்,வாசு சார்,ஆதவன் சார்,கோபு சார்,சுந்தரராஜன் சார்
ஆகியோருக்கு என் நன்றிகள்.
நமது நண்பர் பொள்ளாச்சி கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் http://i1065.photobucket.com/albums/...psrpt9jq34.jpg
http://i1065.photobucket.com/albums/...ps8wl7ufkz.jpg
1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார்.
ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.
ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள்.
ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார்.
சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார்.முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியேசெயல்பட்டுக் கொண்டிருந்தார்.
பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா (கவனிக்கவும்..... அன்று அறிஞர் அண்ணா எதிர் கட்சி) திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.“சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார்.கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சிகண்டு நாம் பெருமைப்படுகிறோம்.
Rks
குறிப்பாக உணரவேண்டியது யாதெனில் :
முதல்வராக இருந்தாலும் அதிகாரிகளுடன் வெள்ளத்தில் அது மார்பளவு வெள்ளம் ஆக இருந்தாலும் அந்த இடத்திற்கு சென்று பார்த்து அறிந்து வருவதில் கூட கர்ம வீரர் காமராஜர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் முன்னோடியாக ஒரு உதாரண புருஷராக விளங்கினார் !
ஆகையால் தான் கர்ம வீரரின் ஆட்சியினை ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்கு பிறகு தமிழகம் கண்ட ஒரே ஒரு முழுமையான ஒரு பொற்கால ஆட்சியாக இன்றும் மக்கள் பெருமை போங்க பேசுகின்றனர் !
Dear senthilvel sir,
congratulations for crossing 2000 valuable posts
Congrats Mr. Senthilvel for your 2000 postings.
http://i1065.photobucket.com/albums/...psaol5qfzq.jpg
http://i1065.photobucket.com/albums/...psxwjjqkmj.jpg
http://i1065.photobucket.com/albums/...psijbb4klt.jpg
http://i1065.photobucket.com/albums/...pslq1dvyfb.jpg
http://i1065.photobucket.com/albums/...psussqfmpi.jpg
http://i1065.photobucket.com/albums/...pswkrgebt2.jpg
http://i1065.photobucket.com/albums/...pskfpwymn5.jpg
மக்களுக்கு அவசர தேவை காலங்களில் கூட செயல் படாத டம்மி அரசாங்கங்கள் வாய்ந்த மாநிலங்களில் தனிமனிதர்களும் சமூக அமைப்புகளும் மற்றும் இளைய திலகம் பிரபு போன்ற பொன்மனம் படைத்த நடிகர்கள் மட்டுமே தம்மால் எவ்வளவு உதவிகள் முடியுமோ அவ்வளவு உதவிகளையும் எந்த சுயநலமும் இல்லாமல் செய்து வருகிறார்கள் !
http://i501.photobucket.com/albums/e...psu9hueftn.jpg
இளைய திலகம் பிரபு அவர்கள் தம்மால் ஆன உதவிகளை நீரில் மூழ்கிய குடும்பங்களுக்கு அந்தந்த இடங்களுக்கு சென்று வழங்கிகொண்டிருக்கிறார்.
அதுபோல திரு பிரபு அவர்களுடைய மைந்தரும் வளரும் நடிகரும் ஆன திரு விக்ரம் பிரபு அவர்களும் ஒரு பக்கம் சத்தமில்லாமல் நிறைய உணவு, உடை மற்றும் அதியவச்ய பொருட்களை மக்களுக்கு வழங்கிகொண்டிருப்பது மிகவும் பாராட்ட தக்கது !
வாழ்க அன்னை இல்லத்தில் வாரிசுகள் !
வளர்க அவர்களது நற்பண்பும் கொடையுள்ளம் !
PHOTOS COURTESY : Mr. SENTHILVEL KOVAI....THANKS SIR !!
RKS
ரத்த பாசம் படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் திலகம் ஒரு கேள்வி கேட்பார். உலகிலே நாம் கூறும் மிக பெரும் பொய் எது என்று. அதற்கு உரிய பதிலான நீடூழி வாழ்க என்றும் நாம் வாழ்த்துகிறோம் ஆனால் யாரும் நீடூழி வாழ்வதில்லையே என்று கூறி ஒரு பாவனை கலந்த சிரிப்பை உதிர்க்கும் காட்சி மிக அட்டகாசம்
இனிய திரி நண்பர்களே !
புயலோ மழையோ வறட்சியோ சுழற்சியோ எதுவாக இருந்தாலும் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் முதலில் ஓடி, விளம்பரம் இல்லாமல் உதவும் குணம் கொண்ட நடிகர் திலகம் மற்றும் அவரது வாரிசுகள் இளைய திலகம் பிரபு மற்றும் அதனை தொடரும் இனிய திலகம் திரு விக்ரம் பிரபு அவர்கள் மற்றும் அன்னை இல்லத்தின் சக்ரவர்த்தி, ராஜகுமாரன், இளைய ராஜகுமாரன் ரசிகர்களும், பக்தர்களும், ஆரதகர்களும் தான் என்பதை சமீபத்திய வெள்ளம் அணிவகுப்பில் மற்றும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.
கோவை சேர்ந்த திரு சக்திவேல், செந்தில்வேல் (மையம் ) , நல்ல காரியங்களை நல்ல விதமாக வருடம் தோறும் தொண்டாக செய்துகொண்டிருக்கும் மதுரை திரு சுந்தர் ராஜன், அதற்க்கு உறுதுணையாக இருந்துகொண்டு தாமும் பொருள், பணம் மற்றும் இதர உதவிகள் செய்யும் திரு vcs ( மையம் ) திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திரு அண்ணாதுரை (அகில இந்திய சிவாஜி மன்றம்), திரு ராமசந்திரன் (மையம் SP சௌதரி ), திரு திருச்சி accountant பாஸ்கர் சென்னையை சேர்ந்த திரு ராமஜயம் (சமூக நல பேரவை ) , திரு நெஞ்சில் இன்பா இன்னும் பல மாவட்டங்களில் உள்ள எண்ணற்ற நடிகர் திலகத்தின் பிள்ளைகள் குழுக்களாக , இருவராக, ஒருவராக இப்படி பலவாறாக பதிக்கப்பட்ட மக்களுக்கு பூரண உதவிகளை செய்துவருவது மிக மிக பாராட்ட தக்கது !
இந்த ஈகை குணம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு தம்மால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோகத்தொடு செய்துள்ளது வாழ்துதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய உயர்ந்த செயலாகும் !
நடிகர் திலகம் திரி சார்பில் அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக எனது நன்றியை வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்
நடிகர் திலகம் அவர்களின் ஆன்மா இதனை கண்டு எந்தளவிற்கு சந்தோஷப்படும் என்பதை நாம் அறிவோம் ! அந்த புனித ஆன்மாவின், திரை உலக சித்தரின் ஆசியும், வாழ்த்துக்களும், அருளும் நமக்கு எப்போதும் உண்டு !
ஜெய் ஹிந்த் !
Rks
9000 பதிவுகளை செய்த முத்தையன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..அன்புடன் முத்தையன்..என்ன செய்வது நண்பர்களே..உங்கள் திரிக்கு பதிவுகள் மேற்கொள்வதால்..மக்கள் திலகத்தின் திரியில் எனக்கு மதிப்பில்லை..மக்கள் திலகத்தின் பங்கேற்பதால்..உங்கள் திரியில் மதிப்பில்லா...9000 பதிவுகள் உங்களுக்காக செய்தும்..என்ன சொல்வது..ஒன்று மட்டும் உங்கள் திரிகளில் ஏகப்பட்ட பகுதிகளை நான் நிறைவு செய்திருக்கிறேன்..அந்த பதிவுகளே போதும்..
http://i63.tinypic.com/28b5wrm.jpg
http://i68.tinypic.com/w0nsxi.jpg
எனக்கு தோன்றிய ஒரு சிறு யோசனை:
சென்னையில் உள்ள நமது திரியை சேர்ந்த எவரேனும் ஒருவர் (குறிப்பாக நமது ராகவேந்திரா சார்,சந்திரசேகரன் சார் போன்ற சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் )தங்களது account number and bank name இங்கே பகிர்ந்தால் வெளி ஊர்களில் இருக்கும் என்னைப்போன்ற பல பேர்கள் தங்களால் முடிந்த அளவு பணத்தை அந்த வங்கி கணக்கிலே டெபொசிட் செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது திரியின் சார்பாக உதவ முடியும் .இது தொடர்பாக நமது திரி நண்பர்களின் கருத்தை தெரியபடுத்தவும்
வருகிறது விளம்பரம்
தினத்தந்தி
முழுப்பக்கம்
http://i1065.photobucket.com/albums/...psm7iirm5g.jpg
கோவை பதிப்பு தினத்தந்தி http://i1065.photobucket.com/albums/...pswoklzlfg.jpg
மதுரை பதிப்பு தினத்தந்தி http://i1065.photobucket.com/albums/...psqoqnurqc.jpg
தினத்தந்தி
முழுப்பக்கம் http://i1065.photobucket.com/albums/...psa3l7pjo2.jpg
தினத்தந்தி
முழுப்பக்கம் http://i1065.photobucket.com/albums/...pslqckhpiv.jpg
Originally Posted by ravikiransurya View Post
மக்களுக்கு துன்பம் வரும்போது அது அந்த காலமாக இருந்தாலும் சரி...எந்த காலமாக இருந்தாலும் சரி....நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்கள், பக்தர்கள் தம்மால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்திய வெள்ள நிகழ்வுகளில் இரு ரசிகர்கள் குழுக்களும் தம்மால் இயன்ற அளவிற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகள் செய்துள்ளதை நண்பர்கள் வாயிலாக தெரிந்துகொள்ள, இணையதளங்கள் மூலம் பார்க்க, நேர்ந்தது...!
இந்த நல்ல காரியங்களை செய்த மக்கள் திலகம் பக்தர்களுக்கும், உதவிகள் செய்வதற்கு ஒரு குழுவாக செயல்பட திட்டமிட்டு வழிநடத்தியுள்ள, திரு எம் ஜி ஆர் அவர்களின் வயதில் மூத்தவராக இருந்தும் செயலில் இளைஞராக உள்ள "முரட்டு பக்தர்" "பழுத்த அனுபவசாலி" மற்றும் "சிறந்த அறிவு" "ஆற்றல்" கொண்டவருமான பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும், சைதாபேடையை சேர்ந்த "இளம் புயல்" "செயல் வீரர்" திரு ராஜ்குமார் அவர்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக எனது வாழ்த்துக்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
இரு திலகங்களின் ஆன்மாக்கள் தங்களுடைய இந்த நற்செயல்களை பார்த்து பெருமைகொள்ளும், ஆசீர்வாதம் செய்யும் என்பது நிச்சயம் !
வளர்க உங்கள் நற்பணி ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் !
Rks
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது :
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி !
வெள்ளம் வந்த அன்றே, இந்த நிவாரண பணிகளில் முழுமையாக புயல் வேகத்தில் இறங்கி, சமூக பணியாற்றியவர் சைதை திரு. ராஜ்குமார் அவர்கள். இத்தனைக்கும், பிரதான ஜோன்ஸ் சாலையில், முழங்கால் அளவு நீர் ஓடிகொண்டிருக்கும்போதே, அவர் களப்பணியாற்றினார். பின்னர்தான் நான் அவருடன் இணைந்து செயலாற்றினேன். மேலும், நான் கல்லூரியில் பணிபுரிவதால், அரசாங்கமும், கல்லூரி நிர்வாகமும் எனக்கு தொடர் விடுமுறை அளித்த காரணத்தால்தான், நானும் இந்த பணியில் பங்கேற்க முடிந்தது. எனவே என்னுடைய பங்கு பெரிதல்ல.
இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும், உதவிகளும் நல்கிய நடிகர் திலக திரி அன்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
மாலைமுரசு சிறப்புமலர் http://i1065.photobucket.com/albums/...psmcxscirh.jpg
விநியோகஸ்தர்களின் வாழ்த்துக்கள். http://i1065.photobucket.com/albums/...ps6ebvpreu.jpg
http://i1065.photobucket.com/albums/...psetdk0d3c.jpg
http://i1065.photobucket.com/albums/...pswraoagmh.jpg
http://i1065.photobucket.com/albums/...psk7hpwt6k.jpg
http://i1065.photobucket.com/albums/...ps7mockhes.jpg
http://i1065.photobucket.com/albums/...psbieovmta.jpg
NO LIKE..NO COMMANDS..PLE..MY FR..THANGAS..its my Duty..Ok..
http://i68.tinypic.com/30hpi5h.jpg
பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில்
http://i1065.photobucket.com/albums/...psbaiibsuh.jpg