vee yaar
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9a&oe=5A7D55B3
Printable View
என்றும் உங்களுடன் முருகன்
பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சாதனைகள்.
மனோகரா, ராஜாராணி, இல்லறஜோதி, திரும்பிப்பார், அன்னையின் ஆணை படங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் வசன நடிப்பு.
உத்தமபுத்திரன் படத்தில் யாருமே செய்து காட்ட இயலாத ஸ்டைல் நடிப்பு.
பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பழனி படங்களில் அப்பாவி நடிப்பு.
பார் மகளே பார், உயர்ந்த மனிதன் படங்களில் செல்வந்தராக மிடுக்கான நடிப்பு.
தெய்வப்பிறவி, மங்கையர்திலகம், பெண்ணின் பெருமை, நான் பெற்ற செல்வம் என்று மறக்க முடியாத பல குடும்பக் கதைகளில் காவியமான நடிப்பு.
அம்பிகாபதி தொடங்கி திருவிளையாடல், தவப்புதல்வன் என்று பல படங்களில் இடம்பெறும் கர்நாடக இசைப் பாடல்களுக்கேற்ப அசத்த வைக்கும் வாயசைப்பு.
நவராத்திரி, தெய்வமகன், உத்தமபுத்திரன், கட்டபொம்மன் படங்களில் இமாலயச்சாதனை.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, மணமகன் தேவை, சபாஷ்மீனா, பலேபாண்டியா கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு, ராமன் எத்தனை ராமனடி, சுமதி என் சுந்தரி, பாரத விலாஸ், மனிதரில் மாணிக்கம், அன்பே ஆருயிரே படங்களில் நகைச்சுவை நடிப்பு.
கப்பலோட்டிய தமிழன், இரத்தத்திலகம், தாயே உனக்காக, நாம் பிறந்த மண் படங்களில் தேசபக்தியூட்டும் நடிப்பு. கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை படங்களில் பக்தி சிரத்தையான நடிப்பு.
உத்தமபுத்திரன், பெண்ணின் பெருமை, கூண்டுக்கிளி, திரும்பிபார் படங்களில் வில்லன் நடிப்பு.
சிவந்த மண்ணில் தீவிரவாதியாகவும்,
மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் பெரியார் தொண்டனாகவும்
வளர்பிறையில் ஊமையாகவும்,
பாகப்பிரிவினையில் உடல் ஊனமுற்றவராகவும்,
பாலும் பழமும் படத்தில் இடைவேளைக்கு பின் கண் தெரியாத நிலையிலும்
அதே போல் ஆலயமணியில் கால் செயல் இழந்தவராகவும்
படிக்காதமேதை, படித்தால் மட்டும் போதுமா படங்களில் படிப்பறிவு இல்லாவிடினும் பண்பாளராகவும்,
அன்னையின் ஆணையில் பழிக்குப்பழி வாங்கும் இளைஞனாகவும்
பராசக்தி, விடி வெள்ளி, பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள், தங்கை, தங்கைக்காக, என் தம்பி, அண்ணன் ஒரு கோவில் படங்களில் பாசம் மிக்க அண்ணனாகவும்
பார்த்தால் பசி தீரும் படத்தில் படை வீரனாகவும்,
அதே படத்திலும் கை கொடுத்த தெய்வம் படத்திலும் ஆலயமணியிலும் உற்ற நண்பனாகவும்
முரடன் முத்து, ஞானஒளி படங்களில் முரட்டுக்குண முள்ளவராகவும்
பாலும் பழமும் படத்தில் சிறந்த டாக்டராகவும்
அருமை மனைவியை எண்ணி வாடும் அன்புக் கணவராகவும்
கவுரவம் படத்தில் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராகவும்
ராஜபார்ட் ரங்கதுரையில் சிறந்த நாடக நடிகராகவும்
சம்பூர்ண இராமாயணம் படத்தில் அன்புத் தம்பி பரதனாகவும்
திருவிளையாடல் படத்தில் சிவபெருமானின் அத்தனை கோலங்களிலும்
அமரதீபம், இரும்புத்திரை படங்களில் தொழிலாளர் தலைவனாகவும்
பதிபக்தி, நான் சொல்லும் ரகசியம், பாபு படங்களில் ரிக்ஷா தொழிலாளியாகவும்,
காவல்தெய்வம் படத்தில் பனை மரம் ஏறும் தொழிலாளியாகவும்
தில்லானா மோகனாம்பாள், மிருதங்க சக்ரவர்த்தி படங்களில் வித்வானாகவும்
தங்கப்பதக்கம் படத்தில் கடமை தவறாத காவல்துறை உயர் அதிகாரியாகவும் அதே படத்திலும் கல்தூண் படத்திலும் மகனை திருத்தும் தந்தையாகவும்
எங்க மாமாவில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் அன்பு மாமாவாகவும்
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் மனநோயாளியாகவும்
இருவர் உள்ளம், வசந்த மாளிகை, தீபம் படங்களில் பெண்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்து திருந்தியவராகவும்
பாவமன்னிப்பு, அறிவாளி, எல்லாம் உனக்காக, சவாலே சமாளி போன்ற படங்களில் பொதுநலத்தொண்டராகவும்
திருடன், புதிய பார்வை, நீதி, ஞானஒளி, ராஜா போன்ற படங்களில் குற்றவாளியாகவும்
பாவமன்னிப்பு, நான் வணங்கும் தெய்வம், நவராத்திரி, தெய்வமகன் படங்களில் அறுவெறுப்பான முகத்தோற்றத்திலும்
புனர்ஜென்மம் படத்தில் குடிகாரனாகவும்
நவராத்திரி, குங்குமம், எங்கமாமா, ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், திருவெருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களில், ஒரே படத்திலே பல வேடங்களிலும்
பாசமலர், ஆண்டவன் கட்டளை, என் தம்பி, ராமன் எத்தனை ராமனடி, ஞானஒளி, எங்கள் தங்கராஜா, மகாகவி காளிதாஸ், சரஸ்வதிசபதம் போன்ற படங்களில் ஒரே வேடத்தையே இருவேறு மாறுபட்ட பாத்திரங்களாக மாற்றியும்,
இரட்டை வேடங்கள்
வியட்நாம் வீடு, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் முறையே பிராமணத் தந்தையாகவும்
இரண்டு குடும்பத்திற்கு தலைவராகவும் அவன் ஒரு சரித்திரம் படத்தில் கொடுத்து அழிந்த சீமானாகவும்
இரு நாயகிகளுக்கிடையே தவிப்பவராக இரு மலர்கள், பாவைவிளக்கு, பாலாடை, செல்வம், தேனும்பாலும், குல மகள்ராதை, புதியபறவை படங்களில் அசத்தியவரும் அவரே.
பேராசிரியராக ஆண்டவன் கட்ளையில்,
உத்தமபுத்திரன், அன்;னையின் ஆணை, எங்க ஊர் ராஜா, என்மகன், என்னைப்போல் ஒருவன், கௌரவம், மனிதனும் தெய்வமாகலாம் படங்களில் இரட்டை வேடங்களிலும்
பலேபாண்டியா, தெய்வமகன், திரிசூலம் படங்களில் மூன்று வேடங்களிலும்,
நவராத்திரி படத்தில் நவரசம் கலந்த ஒன்பது மாறுபட்ட வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்து உலக சாதனை படைத்தவர் நடிகர் திலகம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...13&oe=5A6A921D
Murali Srinivas
29.10.1970 அன்று வெளியாகி இன்று 47 வருடங்களை கடந்த நமது சொர்க்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காட்சியைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
ஒரு முத்தாரத்தில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்திருப்பார். பார்ட்டி இருக்கிறது. என்னை குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லி மனைவியை கூட்டி வந்திருப்பார். சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார். [அந்தப் போஸில்தான் மனிதன் என்ன handsome...?] முதல் சரணத்தில் (அந்த மாலை இந்தப் பெண்ணின்) விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகம் அமர்ந்திருக்கும் சோபாவிற்கு பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். அவர் கையில் மதுக் கோப்பை இருக்கும். விஜயா பக்கத்தில் வருவதைப் பார்த்தவுடன் பாலாஜி சற்றே சங்கடமாக உணர்ந்து மதுக் கோப்பையை கால்களுக்கிடையே மறைத்துக் கொள்ள முயற்சி செய்வார். நிஜ வாழ்வில் இப்படி ஒன்று நடந்தால் அதாவது கையில் கோப்பையுடன் இருக்கும்போது ஒரு குடும்ப பெண் நண்பனின் மனைவி வந்தால் எப்படி சங்கடப்படுவார்களோ அவ்வளவு இயல்பாக இருக்கும். ராமண்ணா அழகாக எடுத்திருப்பார்.
அந்த சரணம் முடியும். திரும்பி பார்க்கும் விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியின் கைகளில் இருக்கும் கோப்பையிலிருந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் நடிகர் திலகம் காட்டும் reactions!
முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.
நான் இவ்வளவு விளக்கமாக சொன்னதை அந்த உணர்வுகளை மூன்று நான்கு ஷாட்ஸ் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விடுவார் நடிகர் திலகம். அதனால்தானே அவர் நடிகர் திலகம்.
1970 தீபாவளி அன்று, இன்றைக்கு சரியாக 47 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் மதுரை சென்ட்ரலில் ஆரவாரம் கோலாகல கொண்டாட்டம் அலப்பறையோடு மாலைக் காட்சி பார்த்தது இன்றைக்கும் பசுமையாக நெஞ்சில்.
அன்புடன்
Murali Srinivas
29.10.1970 அன்று வெளியாகி இன்று 47 வருடங்களை கடந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகளைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
எங்கிருந்தோ வந்தாள் மிகச் சிறந்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் குறிப்பாக நடிகர் திலகத்தின் Body Language. "ஒரே பாடல்". சாகுந்தலம்" பாடல் காட்சிகள் மற்றும் கடைசி 10 -15 நிமிடங்கள், இந்த இடங்களில் மட்டுமே அவர் நார்மலாக இருப்பார். மற்ற நேரங்களிலெல்லாம் மன நிலை பாதிக்கப்பட்டவராகத்தான் தோன்றுவார். பாதிக்கப்பட்டவராக வரும் போது அவர் நடையே வித்தியாசமாக இருக்கும். இடது தோளை சரித்து இடது கையால் வலது மார்பை தடவிக்கொண்டே நடப்பார். வில்லனோடு சண்டை போடும்போது கூட இது மாறாது. வில்லன் மாடியிலிருந்து விழுந்தவுடன் நடிகர் திலகத்தின் முகத்தை close upல் காட்டுவார்கள். பலதரப்பட்ட உணர்ச்சிகள் அதில் மின்னி மறையும். அந்த இடத்திலிருந்து திரும்பி நடப்பார், Oh! அவருக்கே உரித்தான அந்த ராஜ நடை வரும். அது மட்டுமல்ல தான் எங்கிருக்கிறோம் என்பதை போல சுற்றும் முற்றும் பார்ப்பார். அப்போது தான் போட்டிருக்கும் ஜிப்பா கிழிந்திருப்பதை (வில்லனோடு சண்டை போடும்போது கிழிந்திருக்கும்) கவனிப்பார். ஏன் கிழிந்த சட்டை அணிந்திருக்கிறோம் என்பது போல ஒரு முக பாவம் காட்டுவார், class. ஜெயலலிதா வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் கூட்டி சென்று அவருக்கு குணமாகி விட்டதை சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட இறுதியில் தன் தாயிடம் யார் இந்த பொண்ணு என்பாரே! அரங்கத்தையே அதிர வைக்கும் வசனம். அது போல ஜெயலலிதா ஒவ்வொரு இடமாக அழைத்து சென்று நடந்த விஷயங்களை பற்றி சொல்லும் போது ஞாபகம் வருவது போல தெரியும் ஆனால் சிரித்து கொண்டே ஞாபகம் இல்லை என்று கை விரிப்பார். அதிலும் குறிப்பாக JJ, நடிகர் திலகம் எழுதிய கவிதையின் ஆரம்ப வரிகளான ,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று
என்னிடத்தில் வந்து நின்று
என்று சொல்ல, உடனே நடிகர் திலகம் அதை தொடர்ந்து
பார்த்து மகிழ்ந்ததென்னவோ; பின்
பாராமல் போனதென்னவோ
என்று சொல்லி முடிப்பார். "ஞாபகம் வருதிலே! ஞாபகம் வருதிலே" என்று JJ துள்ளி குதிக்க, "இது நான் காலேஜ் படிக்கும் போது எழுதின கவிதை, எப்பவும் ஞாபகம் இருக்கும்" என்று நடிகர் திலகம் கூலாக சொல்ல, JJ வெறுத்து போய் கத்துவார். அருமையாக இருக்கும். அந்த காட்சியின் போது நடிகர் திலகம் ஒரு க்ரீம் கலர் புஃல் ஸ்லீவ் ஷர்ட்டும் அதே கலரில் pantsம் போட்டிருப்பார். ரொம்ப handsome ஆக இருப்பார். அது போல் சிரிப்பில் உண்டாகும் ராகத்தில் பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் முடிவிலே தோள்களை முன்னாடி சாய்த்து இரண்டு கைகளையும் loose ஆக தொங்கவிட்டு அந்த பக்கமும் இந்த பக்கமுமாக ஆட்டியபடி ஒரு ஸ்டெப் போடுவார். காத்திருந்து கைதட்டுவார்கள்.
துஷ்யந்தன் ஸ்டைல் பற்றி குறிப்பிட வேண்டும். நடிகர் திலகத்தின் மற்ற படங்களை ஒப்பிடும் போது இதில் ஸ்டைல் குறைவுதான். "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" காட்சியில் அவருக்கே உரித்தான அந்த போஸ் அதாவது இடது கால் மேல் படியிலும் வலது கால் கீழ் படியிலும் வைத்து நின்று பாடுவார். அதை விட்டால் துஷ்யந்தனாக வரும் போது காட்டும் ஸ்டைல். அதிலும் சகுந்தலையிடம் விடை பெற்று செல்லும் போது ஒரு கை தூக்கி போய் வருகிறேன் என்று முகபாவத்திலேயே காட்டுவது, தியேட்டரில் கைதட்டல் காதை கிழிக்கும். (இதே நாளில் வெளியான சொர்க்கம் படத்தில் ஸ்டைலோ ஸ்டைல் என்று சொல்லும் வண்ணம் அதகளம் பண்ணியிருப்பார்).
இந்த இரண்டு படங்களும் ஒன்றாக வெளியான நேரத்திலும் சரி அதன் பிறகு அவை ஓடிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி மதுரையில் ஞாயிறு மாலையன்று எந்த படத்திற்கு போவது என்று ரசிகர்கள் கூடி நின்று விவாதித்து முடிவு எடுப்பார்கள் ஒரு ஞாயிறு ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் என்றால் அடுத்த ஞாயிறு சென்ட்ரலில் சொர்க்கம் என்று மாறி மாறி இந்த இரண்டு படங்களையும் பார்த்தது நினைவிற்கு வருகிறது.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...70&oe=5A66B3FB
Vasu Devan
'மூன்று தெய்வங்கள்'
'நடப்பது சுகமென நடத்து' பாடல் ஆய்வு.
ஜாஹிர் சார், ராமு சார் இவர்களின் விருப்பத்திற்காக
படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.
கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.
மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.
'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.
அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.
அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.
இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.
சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.
இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.
காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.
கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.
முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!
பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.
நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.
சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச் சான்றுகள்.
'ச்சும்மா' ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.
நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.
முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.
ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.
ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
பாலா
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பாலா
பேசாதே போலி வேதாந்தம்
சாய்பாபா
பாராதே வெறும் பஞ்சாங்கம்
டி.எம்.எஸ்
உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
பாலா
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
டி.எம்.எஸ்
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
மூவரும்
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
பாலா
வரும் நாளை உனதென நினைத்து
டி.எம்.எஸ்
வாழ்வே பெரிதென மதித்து
பாலா
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
டி.எம்.எஸ்
கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்
பாலா
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
சாய்பாபா
கண் போடு மெல்லக் கை போடு
டி.எம்.எஸ்
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
பாலா
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
டி..எம்.எஸ்
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
மூவரும்
செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6d&oe=5A6F9460
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...52&oe=5A7CDBC1
Vasu DevanGroup admin https://www.youtube.com/watch?v=NJYmQ47Mg-ohttps://external.fybz1-1.fna.fbcdn.n...CEWnAI9p6TZidM
Nadappathu sugamena Song | Moondru Deivangal | Sivaji |…
TMS
youtube.com
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
57 வது வெற்றிச்சித்திரம்
அவள் யார்? வெளியான நாள் இன்று
அவள் யார்? 30 அக்டோபர் 1959
http://oi65.tinypic.com/2n6vn7k.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
198 வது வெற்றிச்சித்திரம்
பைலட் பிரேம்நாத் வெளியான நாள் இன்று
பைலட் பிரேம்நாத் 30 அக்டோபர் 1978
200 நாட்களுக்குமேல் ஓடிய வெற்றிச்சித்திரம்
http://oi66.tinypic.com/123v0qt.jpghttp://oi65.tinypic.com/1jx3sj.jpg
http://oi64.tinypic.com/8zocb8.jpghttps://upload.wikimedia.org/wikiped...t_premnath.jpg
இன்று இரவு 10 மணிக்கு K டிவியில்
பசும் பொன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d2&oe=5A7281F8
சபா
1988 ஆம் ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் ஆலயத்திற்கு
பெரிய ஆலயமணி காணிக்கை
செலுத்தியது எத்தனை பேருக்கு
தெரியும்! ! இரவு வணக்கம்! !
............................................
Subramanian Natarajan செய்யும் உதவியை அடுத்தவருக்கு தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்பவர் நமது நடிகர் திலகம்.
................................
Saravanan Shanmugam VILAMBARAM PADUTHATHA KALIUGA KARAN,KALAI DEIVAM,KALAIMA MANNAN PALA KODIGALI VARI VALUNGAIYA ORA KODAI VALLAL EN THALAIVAN ,ANNAN SHIVAJIGANESAN THAAN.
.......................................
Hari Krishnan தலைவா் கா்ணன்.வலது கை கொடுப்பது இடது கைக்கு தொியாது
...............................
Natraj Chitty அவர் எல்லாருக்கும் உதவி செய்தார். ஆனால் விளம்பரப்படுத்த வில்லை.
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
58 வது வெற்றிச்சித்திரம்
பாகப் பிரிவினை வெளியான நாள் இன்று
பாகப் பிரிவினை 31 அக்டோபர் 1959
200 நாட்களுக்குமேல் ஓடிய வெற்றிச்சித்திரம்
http://oi63.tinypic.com/14sl3sw.jpghttp://oi67.tinypic.com/10hj9qr.jpg
Sivaji Peravai
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
நடிகர்திலகம் சிவாஜி 90 -வது பிறந்தநாளையொட்டி, அகமதாபாத் தமிழ்ச் சங்கம் சார்பில், "சிவாஜியும் தமிழும்" என்ற மாபெரும் தமிழ் விழா, 28 -10 - 2017 , சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நேரமின்மை காரணமாக "கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்" என்ற தலைப்பில் என்னுடைய உரையை முழுமையாக நிகழ்த்த முடியவில்லை.
அதனால், என்னுடைய முழுமையான உரையினை நம் ரசிக நண்பர்களுக்காக அளிக்கிறேன். அதன்மீது நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
-----------------------------------------------------------------------------------
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
K .சந்திரசேகரன்
தலைவர்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை
------------------------------------------------------------------------------------
கலையும்> கலாச்சாரமும்தான் ஒரு நாட்டை> ஒரு மாநிலத்தை அடையாளப்படுத்தும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்> கலைப் பொக்கிஷமாம் நடிகர்திலகத்திற்கு அவமரியாதை நேர்ந்தது துரதிஷ்டம். நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட்டது. சரி மணிமண்டபத்தில்தானே வைக்கிறார்கள் என்று ஆறுதல் அடையலாம் என்றால்> சிங்கமென நின்றிருந்த சிலையைக் கூண்டில் அடைத்த மாதிரி> பெயரளவிற்கு ஒரு மணிமண்டபம் - ரசிகனின் மனவேதனைக்கு> அகமதாபாத் தமிழ்ச் சங்கம் இன்று மருந்து தடவியிருக்கிறது. பல்வேறு தமிழ்ச் சங்கங்கள்> சான்றோர்கள்> பெரியோர்கள் இணைந்து> தமிழும் - சிவாஜியும் என்ற தலைப்பில்> சென்னையில் விழா எடுத்து சிறப்பு செய்திருக்கிறார்கள். இவ்விழாவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையும் பங்கேற்பதிலே பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
இந்தத் தலைப்பில் பேசலாம் என்று அதுபற்றிய தகவல்களைத் திரட்டியபோது அனுமார் வால் போல நீண்டுகொண்டே இருந்தன.
ஆனாலும் அவற்றில் சில> உங்களுக்காக மட்டுமல்ல> புரியாமல் இன்னமும் உளறிக்கொண்டிருக்கும் சிலருக்காகவும் வெளியிடவேண்டியது எனது கடமை என்றே நினைக்கிறேன்..
திரையுலகில் சாதாரண நிலையிலிருந்த நடிகர்> நடிகைகள்> சிறிய தயாரிப்பாளர்கள்> இயக்குனர்கள் என்று பலதரப்பினரையும் பெரிய படமுதலாளிகளாக ஆக்கிய பெருமை நடிகர்திலகம் சிவாஜியையே சாரும். நடிகர்திலகத்தை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் வாழ்ந்தார்கள்> வளர்ந்தார்கள் - இதுதான் வரலாறு.
எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்> நடிகர்திலகம் சிவாஜி ஒரு நடிகர் மட்டுமே> அவர் பணம் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தார்> வேறு என்ன செய்தார் என்று. அதற்கெல்லாம்> ;தற்போது விடைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவர் ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. அதேபோல> சம்பாதிக்கும் எல்லோரையும்போல தையல் இயந்திரம்> நோட்டுப் புத்தகம் போன்றவைகளை விழா நடத்திக் கொடுக்கவில்லை.
அண்ணல் அம்பேத்கார்> பெரியார்> மார்ஷல் நேசமணி> வீரபாண்டிய கட்டபொம்மன். திருவள்ளுவர் என்று அனைத்து பெரியோர்களுக்கும் தன செலவில் சிலைகளை நிறுவிய நடிகர்திலகம்> தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்> தான் நேசித்த பெருந்தலைவர் காமராஜருக்கு சிலைகள் அமைத்து பெருமைசேர்த்தார்.
சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் 1959-ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
1961-ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்யுள்ளார்
1962-ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்தார்.
பெருந்தலைவர் காமராஜர்> பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தபோது> முதல் நபராக ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் நடிகர்திலகம்.
நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் வழங்கினார்.
1968-ல் உலகத் தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே> திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி அவர்கள். ஆனால் இன்று நடிகர்திலகம் சிலைக்கு அங்கு இடமில்லை> வைக்க அரசுக்கு மனமில்லை.
சிலையும் அமைத்து உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் அள்ளித்தந்து அண்ணா அவர்களை அசர வைத்தவர் சிவாஜி.
1965- ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம். திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும்> பெங்களூரில் தனக்குப் பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும். மொத்தம் 500 பவுன் கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் சிவாஜி.
அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் யுத்த நிதியாக வழங்கினார்.
மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் ரூபாயை வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றhர்;.
வெள்ளிவிழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தார்.
1972-ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானப்படையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
1961-ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் நிதியாக வழங்கினார்.
தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை ( அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி) நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ளவையெல்லாம்> அவர் செய்தவற்றில் ஒரு துளிதான். இவையே இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகள் இருக்கும்.
சினிமா> சமுதாயத்திற்கு மட்டுமல்ல> அரசியலிலும் பல கட்சிகளுக்கு கர்ணனாகத்தான் திகழ்ந்தார் நடிகர்திலகம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்தபடியாக> கட்சியை வளர்ப்பதற்காக> தன்னுடைய நாடகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சி அலுவலகங்கள் கட்ட பெருமளவில் நிதிஉதவி அளித்தவர் சிவாஜி. கம்யூனிஸ்ட் கட்சிக்காக மயிலாடுதுறையில் கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவா அவர்களிடம் நிதியுதவி அளித்திருக்கிறார். இவ்வளவு ஏன், இன்று நாம் இந்த நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில்> தி.மு.க வை வளர்த்தவர்கள் வரிசையில் நடிகர்திலகம் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. தி.மு.கழகத்தை வளர்ப்பதற்காக> சிவாஜி நிறைய நாடகங்களை> ஒரு பைசா கூடப் பெற்றுக்கொள்ளாமல் நடத்திக்கொடுத்து நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார் என்று கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி பல அரசியல் கட்சிகளுக்கும்கூட பிரதிபலன் பாராமல் உதவியவர் நடிகர்திலகம்.
நன்றியா - அது என்ன என்று கேட்கும் இவ்வுலகில்> தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை நன்றி பாராட்டியவர் நடிகர் திலகம்.
தன்னுடைய தொழில் பக்தியால்> நேரந்தவறாமையால்> திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேல் கோலோச்சிய நடிகர்திலகம் சிவாஜி> விளம்பரமில்லாமல் வாரிக் கொடுத்து> திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணனாக வாழ்ந்து மறைந்தார்.
உடலால் மறைந்தாலும்> நடிகர்திலகத்தின் புகழ்> தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
வாய்ப்பளித்தமைக்கு நன்றி
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a9&oe=5A786079
.................................................. .................................................. ....................................
Skannan Skannan
Heart touching genorosity true messages you told our viewers. Today's peoples never know the above messages. Some peoples told Sivaji not give donations for people's. Really Sivaji is the KARNAN, no advertisement is to be given him.
.................................................. ............................
Sampath Murugan
நடிகர்திலகம் அவர்களை பற்றிய அவதூறு பிரச்சாரத்தைத் தவிடுபொடியாக்க தலைவர் சந்திரசேகரன் அவர்கள் கொடுத்துள்ள இந்தத் தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்து செய்தியை உலகம் அறியச் செய்யவேண்டும்.
.................................................. .................
Neelakantan Subramani
1968ஆம் ஆண்டு வேலூர் அரசு மருத்துவமனை பொன்விழா நினைவு கட்டிடத்திற்காக வியட்நாம் வீடு நாடகம் நடத்தி வசூல் தொகை ஒருலட்சம் கொடுத்தார் முதல் முதலாக அவரையும் அவர் நடித்த நாடகத்தையும் ஒருசேர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
.................................................. ..................
அற்புத நடிகரின் நவம்பர் மாத வெளியீடுகள்
1) ரங்கூன்ராதா 1 / 11 /1956
2) இருமலர்கள் 1 /11 /1967
3) ஊட்டிவரை உறவு 1 /11 /1967
4) லட்சுமி வந்தாச்சு 1 / 11 /1986
5) வைரநெஞ்சம் 2 /11 /1975
6) டாக்டர் சிவா 2 /11 /1975
7) முரடன் முத்து 3 /11 /1964
8) நவராத்திரி 3 /11 /1964
9) வெள்ளை ரோஜா 4 / 11 /1983
10) கண்கள் 5 /11 /1953
11) விஷ்வரூபம் 6 /11 /1980
12) காத்தவராயன் 7 /11 /1958
13)கப்பல் ஓட்டிய தமிழன் 7 /11 /1961
14) சிவந்த மண் 9 /11 /1969
15) அண்ணன் ஒரு கோயில் 10 / 11 /1977
16) பெம்புடு கொடுகு (தெலுங்கு) 11 /11 /1953
17) செல்வம் 11 /11 /1966
18) படிக்காதவன் 11/ 11 /1985
19) கள்வனின் காதலி 13 /11 /1955
20) அன்பைத்தேடி 13 /11 /1974
21)பரிட்சைக்கு நேரமாச்சு 14 /11 1982
22) ஊரும் உறவும் 14 /11 /1982
23) அன்னை இல்லம் 15 /11 /1963
24) லட்சுமி கலியாணம் 15 /11 /1968
25) ஆலயமணி 23 /11 /1962
26) பாதுகாப்பு 27 /11 /1970
27) உயர்ந்த மனிதன் 29 /11 /1968
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
34 வது வெற்றிச்சித்திரம்
ரங்கோன் ராதா வெளியான நாள் இன்று
ரங்கோன் ராதா 1 நவம்பர் 1956
https://upload.wikimedia.org/wikiped...goon_Radha.jpg
https://i.ytimg.com/vi/kTYi8iuB1kc/hqdefault.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
116 வது வெற்றிச்சித்திரம்
இருமலர்கள் வெளியான நாள் இன்று
இருமலர்கள் 1 நவம்பர் 1967
https://s-media-cache-ak0.pinimg.com...00d1b385d0.jpg
https://upload.wikimedia.org/wikiped...u_Malargal.jpg
இதே நாளில் ஊட்டிவரை உறவு படமும் வெளிவந்தது
இரண்டு படங்களும் 100 நாட்களை கடந்து சாதனை
படைத்தன
http://oi65.tinypic.com/2ugmjx1.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
117 வது வெற்றிச்சித்திரம்
ஊட்டிவரை உறவு வெளியான நாள் இன்று
ஊட்டிவரை உறவு 1 நவம்பர் 1967
http://oi64.tinypic.com/fx6po8.jpghttps://i.ytimg.com/vi/ETCOOHQ0X_k/hqdefault.jpghttps://movie-upload.appspot.com/ima...59396020289536
https://upload.wikimedia.org/wikiped...VaraiUravu.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
262 வது வெற்றிச்சித்திரம்
லட்சுமி வந்தாச்சு வெளியான நாள் இன்று
லட்சுமி வந்தாச்சு 1 நவம்பர் 1986
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8b&oe=5A6B2DA8
https://goodtamilfilms.files.wordpre...12/1_laxmi.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
178 வது வெற்றிச்சித்திரம்
வைர நெஞ்சம் வெளியான நாள் இன்று
வைர நெஞ்சம் 2 நவம்பர் 1975
https://i.ytimg.com/vi/grkq2BEHx0s/hqdefault.jpg
https://i.ytimg.com/vi/CwuoMhLXcFg/hqdefault.jpghttps://upload.wikimedia.org/wikiped...ira_Nenjam.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
179 வது வெற்றிச்சித்திரம்
டாக்டர் சிவா வெளியான நாள் இன்று
டாக்டர் சிவா 2 நவம்பர் 1975
http://1.bp.blogspot.com/-7yke03DVy1...0/download.jpg
https://upload.wikimedia.org/wikiped...x-Dr._Siva.jpg
Vanamamalai Kallapiran
தாத்தா சாகேப் பால்கே விருது அண்ணலுக்கு கிடைத்தபிறகு திருவனந்தபுரத்தில் ஆயிரங்கள்கூடிய பல்கலைக்கழகம் செனட் அரங்கில் கேரளியர் ஒருப்பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தினர்.நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அரங்குநிறைந்து வழிந்து. கவிந்தது. முதலில் விழாவின் தொடக்கத்தில் சிவாஜிக்கு வரவேற்பு..அரங்கத்தில் நுழையும் போது இருபக்கமும் அழகிய மங்கையர் மலர்தூவி வரவேற்க ஆயிரம் கரங்கள் கூப்பி இசைக்க ஆர்வலர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய மேடைக்கு அழைத்துச்சென்றனர்.ஒவ்வொருவரின் மனதிலும் ஆச்ச...ரியக்குறி!உள்ளார்ந்த நேசமுடன் கேரளியர் அந்த மகாக்கலைஞனை ஆதரித்து நடத்தியது வியப்பை அளித்தது.தொடர்ந்து ந.தி.யின் திரைப்பட கிளிப்பிங்ஸ் அருமையான மலையாள வர்ணனைகளுடன். காண்பித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க ச்செய்தது.மேடையில் அனைத்து திரை உலக ஜாம்பவான்கள் மோகன்லால் மம்மூட்டி பிரபு உள்பட சிம்மக்குரலோனுக்கு மரியாதை செய்தது கண்டால் தமிழர்களான நம்மை ஏளனம் செய்தது போல் இருந்தது.ஆம் நாம் எந்தக் காலத்திலும் அந்த மாமேதைக்கு இப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததில்லை.காட்சிகள் இன்றும் நெஞ்சில் பசுமை.இதுவரை இது போன்று ஒரு நிகழ்ச்சி தமிழகத்திலும் சரி கேரளத்திலும் சரி எந்தக் கலைஞனுக்கும் எடுக்கப்பட்டதில்லை.அந்நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் செய்தி இதழில் கலைக்குரிசிலை பற்றி நான் வாழ்த்தி எழுதிய கட்டுரை கலைவேந்தன் ந.தி.யின் மைந்தன் பிரபுவிடம் கைகளில் கொடுக்கப்பட்டது. சரித்திர நிகழ்வின் சாட்சியாக நான்.மலையாளம் அந்த மகாக்கலைஞனை மரியாதை செய்தது.இப்போதும் பிரம்மிப்பூட்டும் நிகழ்வு.நாம் 17.12.17 ல் சந்திக்கும் போது அண்ணல் சிவாஜியைப்பற்றி இன்னும் நிறையப் பேசுவோம். காவிரிக்கரையில் திருச்சி யில் கூடப் போகும் நாளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன்.அனைவரும் வாரீர்.நமது தோழர்கள் அப்துல் ரசாக், பழக்கடை மற்றும் திருச்சி புதுக்கோட்டை தோழர்களுக்கு நன்றி.
ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்
மிருதங்க சக்கரவர்த்தி படம் பார்த்த எம். ஜீ . இராமச்சந்திரன் .......தமிழருவி மணியன் அருமையான பேச்சு
https://www.facebook.com/sixface.aru...1818402512949/
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c7&oe=5A739EF3
https://static.xx.fbcdn.net/rsrc.php...PAXP-deijE.gif
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...61&oe=5A66EB3D
Murali Srinivas
இரு மலர்கள் - ஒரு மீள் பார்வை - பார்ட் I இடைவேளை வரை
01.11.1967 அன்று வெளியாகி இன்றைக்கு 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் பொன் விழா காவியம் பற்றிய ஒரு மீள் பார்வை.
இந்தப் படத்தை எதனை முறை பார்த்திருப்பேன் என சரியாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.
முதலில் பத்மினி. கல்லூரி மாணவியாக கற்பனை செய்வது சற்று கடினமான நெருடலான விஷயம் என்றபோதும் திரைக்கதையமைப்பு அதை மறக்கடித்து விடும். நடிகர் திலகம் நாட்டிய பேரொளி கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்த விஷயம். குறிப்பாக ரசிகர்களை விட பொது மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பிரபலம். அதை உறுதி செய்யும் வண்ணம் அமைந்திருக்கும் பத்மினியின் முதல் பகுதி நடிப்பு. மாதவி பொன் மயிலாள் பாடலும் சரி மன்னிக்க வேண்டுகிறேன் பாடலிலும் சரி பத்மினி முதிர்ச்சி தோற்றத்தையும் மீறி நடிகர் திலகத்தின் இளமை துள்ளலுக்கு ஈடு கொடுத்திருப்பார். குறிப்பாக கடற்கரையில் குளிக்க போய்விடும் நடிகர் திலகத்திடம் நாம் சந்திக்க கிடைப்பதே கொஞ்ச நேரம்தான் அதிலேயும் நீங்க என்னை காக்க வைச்சுட்டு போலாமா என செல்ல கோபம் காட்டுவது, நமது காதல் நிறைவேறமா போய்டுமா என நடிகர் திலகம் சந்தேகப்பட, என் ராஜாயில்லே என் கண்ணில்லெ என்று அவரை அணைத்துக் கொண்டு ஆறுதலை சொல்லும் இடமெல்லாம் நன்றாக செய்திருப்பார். அது போல ஸ்டேஷனில் வைத்து உன் கூடவே நான் வந்துரட்டுமா என நடிகர் திலகம் கேட்க அதுக்கு இப்படியே என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போடுங்க என உணர்ச்சிவசப்படுவது என convincing ஆக செய்திருப்பார்.
நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. அவரின் அறிமுக காட்சி. தூங்கி எழும் நடிகர் திலகம் அலாரம் அடிப்பதை கேட்டு சாந்தி என்று சத்தம் போட கதவை திறந்துகொண்டு காப்பியுடன் விஜயா நிற்பார். யார் அலாரம் வைத்தது என்று நடிகர் திலகம் கோபத்துடன் கேட்க நான்தான் என்பார். எதுக்கு வச்சே என்ன அவசரம் என்று கேட்க அய்யர் வந்துட்டாரு என்பார். அய்யர் எதுக்கு என்று அடுத்த கேள்விக்கு இன்னிக்கு அத்தைக்கு திவசம் அத்தான் என்பார். என்கிட்டே ராத்திரியே ஏன் சொல்லலே என்பார். சரி காபியை குடு என வாங்கி குடிக்க போகும்போது அத்தான் என விஜயா இடைமறிக்க என்ன என்பார். திவசம் கொடுத்து முடிக்கிற வரைக்கும் ஒன்னும் சாப்பிடக் கூடாதுனு சொல்லுவாங்க. என்னை சாப்பிடக் கூடாதுனு சொல்றியா அப்போ ஏன் கொண்டு வந்தே என்று கேட்க இல்லை காப்பி கொண்டு வராம உங்களை எழுப்பினா கோபப்படுவீங்க அதுதான் என்பார் விஜயா. எழுந்து போகும் நடிகர் திலகத்திடம் பேஸ்ட் பிரஷ் சோப்பு துண்டு வெந்நீர் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன் என்று சொல்லுவார் விஜயா. இந்த முதல் காட்சியில் அவர்களின் உறவு முறை அவர்களுக்கிடையே இருக்கும் புரிதல், அத்தான் மேல் விஜயாவிற்கு இருக்கும் அளப்பரிய காதல் அனைத்தையும் அழகாக establish பண்ணி விடுவார்கள்.
தாய் மாமன் மேல் உள்ள பற்று அவருக்கு செய்யும் பணிவிடை, தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சின்ன சின்ன வாக்குவாதம் போன்றவற்றில் ஒரு ஷாக் observer ஆக செயல்படுவது என பயணம் செய்யும் விஜயா தற்செயலாக அத்தானின் டைரியை படித்துவிட்டு நடிகர் திலகம் வேறொரு பெண்ணை விரும்புகிறார் என தெரிந்தவுடன் உள்ளுக்குள் நொறுங்கி போவதை எவ்வித மிகையுமின்றி செய்திருப்பார். வீட்டில் நடிகர் திலகம் காதலிக்கும் விஷயம் தெரிந்தவுடன் மறுநாள் மாலை மாடியில் துணி மடித்துக் கொண்டிருக்கும் விஜயாவிடம் நடிகர் திலகம் ஒரு apologetic tone-ல் பேச ஆரம்பிக்க அவரை நார்மலாக்க, விஜயா பேசும் விதம் நன்றாக இருக்கும். தான் அப்போதும் அவரை முழுமையாக நேசிப்பதை அவரிடமே சொல்லிவிட்டு பிறகு அதற்காக கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன என்று மீண்டும் அவரை திருப்திப் படுத்துவதை வெகு இயல்பாக செய்திருப்பார். பத்மினிக்கு வாங்கின பூவை நடிகர் திலகம் விஜயாவிற்கு கொடுக்க முதலில் மறுக்கும் அவர் மங்கல பொருட்களை பெண்கள் வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது என நடிகர் திலகம் சொல்ல ஆமாம் அதுவும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் உங்க கையாலே கொடுக்குறீங்க, கொடுங்க என்று அப்போதும் அவர் மேல் அன்பை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகு.
லெட்டர் வருவது பற்றி நடிகர் திலகம் இவரிடம் நினைவுபடுத்த அக்டோபர் 10ந் தேதிதானே என்று இவர் பதில் சொல்ல பரவாயில்லையே ஞாபகம் வச்சிருக்கியே உனக்குத்தான் என் மேலே எவ்வளவு அக்கறை என்று நடிகர் திலகம் சொல்ல அது கூட உங்களுக்கு தெரியுதா அத்தான் என கேட்பாரே அனுதாபத்தை அள்ளிக் கொண்டு போவார்.
இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? முதல் காட்சியில் unlike poles attract each other என்று பத்மினியை டீஸ் பண்ணுவதிலே அவரது சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்து விடும். மாதவி பொன் மயிலாள் பாடலில் அவரின் ஸ்டைல், கம்பீரம், நடை மற்றும் ஸ்வரஸ்தானங்களை உச்சரிக்கும் அழகு என்று பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து விடுவார். கொடைக்கானலில் suicide pointற்கு போக முடியுமா என்று கேட்க தனக்கு இருக்கும் Acrophobia (சிலருக்கு உயரமான இடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் பயம்) காரணமாக நடிகர் திலகம் தயங்க (மீண்டும் இமேஜ் பார்க்காமல் நடிக்கும் ஒரே நாயகன்) தான் விரும்பும் பெண்ணின் மனம் கவர அவளின் காதலை பெற இது ஒரு வாய்ப்பு என்றவுடன் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் மேலே செல்ல செல்ல அந்த பயம் அவரை ஆக்ரமிப்பதை அந்த முகபாவத்திலேயே காட்டும் அழகு, எதனால் தனக்கு உயரமான இடங்களை பார்த்தால் பயம் என்பதற்கு சின்ன வயதில் தன் கர்ப்பிணி தாயார் தான் கேட்டதற்காக பரணில் இருக்கும் முறுக்கை எடுக்க ஏணிப்படிகளில் ஏறும்போது கால் நழுவி கீழே விழுந்து இறந்ததை சொல்லும் போதும் மெலோடிராமாவாக ஆக்காமல் வெளிப்படுத்தும் முறை, காதல் கனிந்தவுடன் இரவில் பத்மினி தங்கியிருக்கும் விடுதிக்கு போய் அந்த தவிப்பை வெளிப்படுத்தும் விதம், மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் இளமை கொப்புளிக்கும் துள்ளல், சென்னையில் கடற்கரையில் பத்மினியுடன் காட்டும் அந்த நெருக்கம், அந்த சந்தோஷத்தின் உச்சியில் நிற்கும்போதும் இது நடக்காமல் போய் விட்டால் என்ற சராசரி மனிதனுக்கே உரித்தான ஒரு பயம், ஊருக்கு கிளம்பும் பத்மினியை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் செல்ல அங்கே பத்மினியிடம் இப்படியே உன்கூட வந்துருட்டுமா என்று கேட்கும் அந்த தாபம் உண்மையிலே காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் மனதை அவர் வார்த்தைகளில் உடல் மொழியில் வெளிப்படுத்துவார்.
அதே நேரத்தில் விஜயாவுடனான அவரது சீன்ஸ் அனைத்திலும் ஒரு வித்தியாசம் காட்டியிருப்பார். பொதுவான குடும்பங்களில் மாமா பையன் அத்தை பெண் இவர்களுக்கிடையே இருக்கும் அந்த உரிமை கலந்த டீஸிங், தன்னைப் பார்த்து பயப்படும் விஜயாவை விளையாட்டாக மிரட்டுவது, சில நேரங்களில் தனது அப்பாவின் முன்னிலையில் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும்போது சில நேரங்களில் விஜயா மீது கோபத்தையும் சில நேரங்களில் அவரிடமிருந்து தப்பிக்க விஜயாவின் உதவியையும் நாடும் இடங்களெல்லாம் இயல்பாக இருக்கும். தந்தை நாகையாவிடம் வேறு வழியில்லாமல் தன் காதலை சொல்ல அவர் பத்மினியைப் பற்றி கோவத்தில் பேசும்போது உங்களுக்கு யாருன்னே தெரியாத ஒரு பெண்ணைப் பத்தி இவ்வளவு கேவலமாக பேசுறீங்களே என ஒரு புண்பட்ட மனதோடு அவர் கேட்கும் விதம், மறுநாள் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மாடியில் துணி மடிக்கும் விஜயாவிடம் ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லை ஒரு தயக்கத்துடன் முதல் நாள் நடந்த நிகழ்வை பற்றி பேச ஆரம்பிக்க விஜயா அதை இயல்புடன் எதிர்கொள்ளும் விதம் பார்த்து என் மேலே உனக்கு விருப்பமா என்று கேட்க ஆமாம் என்று விஜயா சொல்ல அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் திலகம் வார்த்தை வராமல் தடுமாறுவது அருமை என்றால் அவர் தவிப்பை பார்த்துவிட்டு விஜயா பக்கத்தில் வந்து நீங்க என் தாய் மாமன் பையன். அதுக்காக நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு ஏதாவது கட்டாயமா என்ன? என்றவுடன் முகம் மாறி spontaneousஆக வாய்விட்டு சிரிப்பாரே அது அற்புதம்.
லெட்டர் வருவதற்காக காத்திருக்கும் அந்த தவிப்பு, மாடியில் நின்றுகொண்டே கீழே நிற்கும் விஜயாவிடம் போஸ்ட்மான் வந்துவிட்டாரா என்று கண்ணாலே கேட்பதும், கதவு தட்டப்பட்டவுடன் வரும் அந்த பரபரப்பும், முதலில் சிவக்கொழுந்துவிற்கு (படத்தில் நாகய்யாவின் பெயர்) மட்டும் ஒரு தபால் என்றவுடன் முகம் போக்கும் போக்கும் போஸ்ட்மான் திரும்பி வந்து சுந்தருக்கு ஒரு லெட்டர் என்றவுடன் வரும் பூரிப்பு, லெட்டரை அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்து கடித வரிகள் மனதுக்குள் பதிவாகாமல் தன் கண்ணே தன்னை ஏமாற்றுகிறதோ என்ற ஐயத்தில் விஜயாவிடம் கொடுத்து படிக்க சொல்ல கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் அவரை பலமாக தாக்க தலை சுற்றி விழும் இடமெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும்.
இடைவேளை வரை மட்டுமே நாகையா. ஆனால் அவர் திரைப்படங்களில் இது ஒரு முக்கியமான படம். மகன் மற்றும் மருமகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துவார். மத்தியானத்திற்கு மேலே வெளியே போறீங்க. ராத்திரி லேட்டா களைச்சு போய் வரீங்க என விஜயா கேட்க ஏம்மா இதை சுந்தர் கேட்க சொன்னானா என ஆவலுடன் கேட்பார் இல்லை நானாத்தான் கேக்கிறேன் என்று விஜயா சொன்னவுடன் வரும் அந்த ஏமாற்றத்தை அசலாக பிரதிபலித்திருப்பார். மகன் வேறொரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் வரும் கோபத்தையும் நன்றாக செய்திருப்பார்.
இது இடைவேளை வரை. இடைவேளைக்கு பிறகு? நாளை
(தொடரும்).
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d6&oe=5A6FB0FF
Vasu Devan
'கலாட்டா கல்யாணம்'
பாடகர்களின் குரல்கள் நடிகர்களுக்கு மாறி ஒலிக்கும் 'கலாட்டா' மாற்றம்.
சமீபத்தில் பதிவிட்ட 'மூன்று தெய்வங்கள்' படத்தின் 'நடப்பது சுகமென நடத்து' பாடலில் பாடகர்களின் குரல் நடிகர்களுக்கு சரியாக கவனிக்கப் படாமலோ அல்லது வேறு அசந்தர்ப்பமான சூழல்களினாலோ மாறி ஒலிப்பதை பார்த்தோம்.
சாயிபாபா குரலில் பாடும் நாகேஷிற்கு திடீரென்று சில வரிகளில் எஸ்.பி.பி குரல் மாறி வரும். இது பற்றி ராமு சார் கூட அற்புதமாக குரல் மாறும் இடங்களை தெரியப்படுத்தி இருந்தார்.
இதே போல 'கலாட்டா கல்யாணம்' படத்திலும் நடிகர்களுக்கு அவர்களுக்கான பின்னணிக் குரல்களும் மாறி ஒலிக்கும். மேலே படியுங்கள். எந்தெந்த வரிகளை யார் யாருக்கு யார் யார் மாற்றி பாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
'கலாட்டா கல்யாணம்' படத்தில் 'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' பாடலில் நடிகர் திலகம், ராஜன் இவர்களுக்கு டி.எம்.எஸ்.அவர்களின் குரல். நாகேஷுக்கு அப்படியே நைஸாக வி.கோபாலகிருஷ்ணனுக்கும் சேர்த்து பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்.
'பத்துப் பதினாறு பிள்ளைகள் பெறலாமோ'
'ஆணைகளை வெறுத்தாயே'
இதை பி.பி.எஸ் நாகேஷுக்குப் பாடுவார். அப்படியே தொடரும் 'மன்மதன் நான்தானே' வரியை கோபாலகிருஷ்ணனுக்கு சாமர்த்தியமாகத் தந்திருப்பார்கள் அதே பி.பி.எஸ்.குரலில்.
இப்போதான் கொஞ்சம் மாறிவிடும்
'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' என்று டி.எம்.எஸ்.அமர்க்களமாக பாட, வாயசைப்பவர் ராஜன். உடனே 'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' என்று சுசீலாவின் குரலுக்கு வாயசைக்கும் ஜோதி அடுத்த வரியான
'மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன'
பாடும்போது ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைப்பார். முன் வரியை சுசீலா குரலுக்கு ஜோதியைப் பாட வைத்தவர்கள் அடுத்த வரியை அதே ஜோதிக்கு ஈஸ்வரியின் குரலைத் தவறாகத் தந்தது முரண்தானே! அதுவும் அந்தக் காலக் கட்டத்திற்கு.
மறுபடியும் ஒரு தவறு. திரும்ப பதிலுக்குப் பாடும் ராஜனுக்கு அதே டி.எம்.எஸ் வாய்ஸ்தானே மீண்டும் ஒலித்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல் மாறாக பி.பி.எஸ் குரல் ராஜனுக்கு மாறி
'முன்னம் காணாத இன்பம் என்னென்ன'
என்று ஒலிக்கும்.
இது எப்படி?
ஒரே ஜோடிக்கு முதலிரண்டு வரிகளை ஒரு பாடகர்களும், அடுத்த இரண்டு வரிகளை வேறு பாடகர்களும் ரிககார்டிங்கில் பாடியிருக்க முடியாது. அது பாடகர்கள் தவறல்ல. காட்சிப்படுத்தியவர்களின் பிழைதான் இது.
ஒருவேளை
'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' டி.எம்.எஸ்.வரிகளை
நடிகர் திலகத்திற்கும்,
'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' சுசீலா வரிகளை
மேடத்திற்கும்
பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.
அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.
'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.
ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு. அதில் பாதி வெற்றியும் பெற்றிருப்பார் நமது டார்லிங் இயக்குனர். மீதியை அட்ஜஸ்ட் செய்து எடுப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.
சரி! ஏதோ ஒன்று. பாடல் அருமை. படமாக்கலும் அருமை. இசையும் அருமை. பாடகர்களும் அருமை. நடிகர்களும், நடிகைகளும் அருமை. நடனமும் அருமை. ஒளிப்பதிவும் அருமை. இயக்கமும் அருமை. பொருட்காட்சியும் அருமை. அதைவிட அருமை நடிகர் திலகத்தின் இளமை.
என்ன சரிதானே!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...37&oe=5AA13A71
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5c&oe=5A74AB2A
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f7&oe=5AA05C87
Murali Srinivas
இரு மலர்கள் - ஒரு மீள் பார்வை - பார்ட் II இடைவேளைக்கு பிறகு
பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].
இடைவேளைக்கு பிறகு கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார் விஜயா. கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.
தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார். கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.
இடைவேளைக்கு பிறகு வரும் நடிகர் திலகம் பற்றி சொல்வதென்றால் மீண்டும் சில paragraphs எழுத வேண்டும். சந்தோஷமான விஷயமல்லவா, எழுதி விடுவோம்.
மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.
முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்
அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று குத்தலாக பேசுவார். கண்ணீர் மல்க கைகூப்பி பத்மினி நடிகர் திலகத்திடம் பேசி முடிச்சாச்சா? இப்படி பேசறதுனால உங்களுக்கு நிம்மதின்னா தாராளமாக பேசுங்க என்று சொல்ல நிம்மதியா எனக்கா என்று ஹஸ்கி வாய்ஸில் நடிகர் திலகம் கேட்பது, உங்களுக்கு இரக்கமே இல்லையா என்று பத்மினி கேட்க இரக்கத்தை பத்தி நீ பேசிறியா? ஒரு பணக்கார வாலிபனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எனக்கே லெட்டர் எழுதினியே அப்போ உன் மனசிலே இரக்கம் இருந்துச்சா என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.
அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும்.
முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.
படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.
மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய அறைக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?
இறுதியாக கிளைமாக்ஸ் அதே மலை உச்சியில் பத்மினி மீது அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது எனும் ரௌத்திர பாவம். எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வரத் தயாரா என்று பத்மினி கேட்க என் வீடு வாசல் சொத்து சொகம் எல்லாத்தையும் விட்டுட்டு வர தயார். ஆனால் என் மனைவியையும் குழந்தையையும் மட்டும் என்னாலே விட்டுட்டு வரவே முடியாது. நான் வேற அவங்க வேற இல்லை என்று உணர்ச்சிப்பூர்வமாக நடிகர் திலகம் சொல்லும் இடம் இருக்கிறதே அதுதான் இந்த படத்திற்கு தாய்குலங்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் வெற்றியையும் பெற்று கொடுத்தது என்பது என் எண்ணம். எந்த கொடைக்கானல் மலையில் உயரத்தை பார்த்து பயப்படும் நேரத்தில் காதல் பிறந்ததோ அதே கொடைக்கானல் மலையில் அதே உயரத்தை பார்த்து பயப்படும் நேரத்தில் அந்த பழைய காதல் மறைந்து கல்யாணத்திற்கு பிறகு வந்த காதல் சாஸ்வதமாவது poetic justice.
நாகேஷ் மனோரமா காமடி சில இடங்களை தவிர்த்து இந்த சீரியஸ் படத்திற்க்கு ஒரு relief ஆக இருக்கும். சில காமெடி வசனங்கள் நாகேஷ் அவருக்கே உரிய பாணியில் பேசுவார். [குழந்தைக்கு பாசம் வர்ற நேரத்தை பார்த்தியா, மாப்பிளை நம்பர் பேப்பரிலே வந்திருக்கு. அச்சு பிழையா இருக்குமோன்னு ஒண்ணுக்கு நாலு பேப்பர் வாங்கிட்டேன். எல்லாத்திலும் வந்திருக்கு]. இடைவேளைக்கு பிறகு அசோகன் மூலமாக வரும் பிரச்சனைகளை சமாளிக்க அவர் பத்மினிக்கு உதவி செய்ய முயற்சிப்பதும், முடியாமல் தவிப்பதையும் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.
ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை, செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.
இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.
மெல்லிசை மன்னர் வாலி கூட்டணி பாடல்கள் எல்லாம் சாகாவரம் பெற்றவை. மாதவி பொன் மயிலாள் பாடல் திரையிசையில் கரகரப்ரியா ராகத்திற்கே prime example என்று சொல்லுவார்கள். அதில் நடிகர் திலகத்தின் பங்கு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் நடிகர் திலகம் முதலில் நடக்கும் நடைக்கே அவ்வளவு கிரெடிட்டும் போய் விடும். முதல் சரணத்தில் (எண்ணம் என்ற) வரிகளை அவர் பாடி முடித்ததும் அன்பு என்ற காவியத்தின் என்ற வரிகளை பத்மினி பாடும்போது ஆரம்பிக்கும் ஷாட் அப்படியே continue ஆகும். பத்மினி முடித்தவுடன் ஒரு சின்ன gap முடிந்து முதுமை வந்த போதும் என்று TMS ஆரம்பிக்கும் நேரத்தில் மிக சரியாக நடிகர் திலகம் வாயசைக்க ஆரம்பிப்பார். அசந்து போவோம். அடுத்த முறை கவனித்து பாருங்கள்.
வெள்ளி மணி ஓசையிலே படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும்வரை
தவம் இருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!
அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோவில் சேர்ந்த ஒரு மலரும்
என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.
இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு.
இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.
கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக
என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.
அதே போன்று இரண்டாவது சரணத்தில் .
தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
ஆயிற்று, இன்றோடு 50 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.
நன்றி!
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b8&oe=5AA6B15B
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
99 வது வெற்றிச்சித்திரம்
முரடன் முத்து வெளியான நாள் இன்று
முரடன் முத்து 3 நவம்பர் 1964
https://i.ytimg.com/vi/M7C8i1fU62E/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/NsQygZjaW4U/h...IuqejXlYRLfrhA
https://upload.wikimedia.org/wikiped...adan_Muthu.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
100 வது வெற்றிச்சித்திரம்
நவராத்திரி வெளியான நாள் இன்று
நவராத்திரி 3 நவம்பர் 1964
http://oi68.tinypic.com/a1mjiv.jpg
https://cinemachaat.files.wordpress....t-1-sivaji.png
https://cinemachaat.files.wordpress....s-sivaji-2.png
http://oi64.tinypic.com/2zekso9.jpghttps://i.ytimg.com/vi/DqWKRny75nc/hqdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...athri-1964.jpg