http://oi68.tinypic.com/20ac3sj.jpg
Printable View
http://oi66.tinypic.com/12151mv.jpghttp://oi68.tinypic.com/9bit08.jpg
நன்றி V C G திருப்பதி
எங்கள் சிவாஜி ஒரு straight forward... *சிவாஜி தொழிலில் வெற்றி பெற்றதற்க்கு காரணம், அவருடைய versatality,sincerity and punctuality.....
*அவரது straight forwardness ஆகிய நேர்மையான குணமும் அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்...
... *முழமையான வெற்றி நாயகனாக, இத்தரணியில் தொழில் பக்தி கமழ உலா வந்த, தெய்வப்பிறவி அவர் என்றால், ஒரு துளியும் மிகையல்ல.....
அவர் மீது நாங்கள் ( கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம்) நாட்டம் கொண்டுள்ளதற்கு முதல் காரணம் இதுவே.....
இது போக, தேசிய நீரோட்டம், நாட்டின் மீது காட்டும் தன்னலமற்ற அக்கறை....,
சரித்திர முன்னோர்களை மதிக்கும் பாங்கு...,
அரசியலை தூய்மையாக, கண்ணும் கருத்துமாக மதிக்கும் தொலைநோக்குப் பார்வை.....
இவைகளைப் பார்த்து தான், அவர்மீது நாங்கள் கொண்டுள்ளோம் பக்தியை.....
நேர்மையான ஒழுக்கமுறையை கடைபிடித்து வாழ்ந்த ஒரு மகான் அவர்....
அவரைப் புரிந்து கொள்ள அனைவருக்கும் ஞானப்பார்வை அவசியம் தேவை..
கொடை தன்மையில், ஒரு நடிகனும் அவருக்கு இணையில்லை..... அதை ஒரு போதும் வெளிக்காட்டிக் கொண்டதுமில்லை......
குடும்பத்தை ஒரு கோயிலாகவே பாவித்த, கூட்டுக்கடும்ப பாரம்மர்யத்தில் உலக சாதனை படைத்த கோமகனார், எங்கள் சிவாஜி......
இவைகளையெல்லாம் மதித்து தான் கொண்டாடுகிறோம் அவரின் புகழை.....
இன்னும் ஆயிரம் தனித்துவமான குணங்கள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன.....
எடுத்துச் சொன்னால் எண்ணிலடங்காது....
எங்களைப் போன்ற அவர்பால் ஈர்ப்புளளளோர் உலகில் பரந்து விரிந்துள்ளோம் எண்ணிக்கையற்றோராய்...
அவரை நாங்கள் சும்மா பாசாங்கு கொண்டு கொண்டாடவில்லை....
பாசத்தோடு எதையும் எதிர்பாரா தொண்டுள்ளம் கொண்டு பூஜிக்கிறோம்....
கலைக்குரிசலின் தொண்டர்களுக்கு இனிய காலை வணக்கம் நட்புகளே......
http://oi68.tinypic.com/2aktie.jpg
நன்றி Nirmal Thiyagarajan
https://www.facebook.com/bagya.laksh...0852867430468/
இதை பார்த்ததும் என்ன இது சம்பந்தம் இல்லாத பதிவு என்று என்னை கோ பிக்காதீர்கள் சிவாஜி அவர்கள் செய்த உதவியை சொன்னால் பல பேர் நம்புவதில்லை.அவரின் போட்டியாளர் என்று நாம் நினைக்கும் எம்ஜி ஆர் சொல்கிறார் ஒரு இரண்டு நிமிடம் கேளுங்கள் பின் ஷேர் செய்யுங்கள் நன்றி
நன்றி vijaya R
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...33&oe=5CF1EEFE
Friends, it may sound odd, but believe me, was literally in tears when designing the above image. Wanted to share and I am sure you would agree.
சில அலுவல்கள் காரணமாக சில நாட்களாக இத்திரிக்கு வரமுடியாமலும்
பதிவுகளை மேற்கொள்ளவும் இயலாமல் போய்விட்டது.
பதிவுகள் தொடரும்..
பசி ஒரு பள்ளத்தாக்கு.
புகழ் ஒரு சிகரம்.
பள்ளத்தில் கிடப்பவன் சமதளத்திற்கு வரவும், சமதளத்தில் இருப்பவன் சிகரத்தை அடையவேண்டும் என்பதுமே உலகில் ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கிறது.
ஒருவனின் பசியை மட்டும் போக்கிடும் கருவியாக இருந்துவிட்டால் போதும்... புகழின் சிகரத்தை அவனே எட்டிவிடுவான் என்கிறார் ஓர் அறிஞர்.
எவரிடமும் யாசகம் பெறாமல் சுயமரியாதையோடு பட்டினி கிடப்பவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப் போகிறேன் என்று கருதியதால்தான் வள்ளலார் அவர்களால் அன்னதானம் செய்ய துவக்கப்பட்ட தர்மசாலை அடுப்பின் நெருப்பு நூற்றாண்டினைக் கடந்தும் இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது.
" நீங்கள் மிகுந்த பசியோடு இருக்கும்போது உங்கள் உணவை, உங்களருகில் பசியோடிருப்பவர்க்கு வழங்கினால் உங்களின் பலம் அந்த உணவைக் காட்டிலும் அதிகமாகும்" என்கிறார் புத்தபெருமான்.
இதையேத்தான் தமிழ்மறை திருக்குறளில், " ஈதல்... இசைபட வாழ்தல்..." என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அந்தப் பொய்யாமொழியாரின் பொன்வார்த்தைகளுக்கேற்ப வாழ்ந்திட்ட நடிகர்திலகத்தின் புகழுக்கு புகழ்ச் சேர்க்கும் வண்ணம் 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபதாம் வார நிகழ்ச்சி மூன்று உபயதாரர்களுடன் மூன்று பகுதிகளாக நேற்று மதியம் இனிதே நடந்தேறியது.
சென்னை-23, அயன்புரம், திரையுலகத் தெய்வம் சிகர மன்றத்தினர்களான திரு. K.சுகுமார், திரு.S. விஸ்வநாதன், திரு. G. சம்பத்குமார், திரு. K.துரைராஜ், திரு. G. சௌந்தர்ராஜன், திரு. G. பூவராகன், திரு. R. சித்தார்த்தன், மற்றும் S.குமரன் ஆகியோர் முதல் பகுதிக்கு உபயதாரர்களாகவும்,
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திரு.ரவிநாராயணன் அவர்கள் இரண்டாம் பகுதிக்கு உபயதாரராகவும்,
சென்னை, மடிப்பாக்கம், சந்தோஷ்புரத்தைச் சார்ந்த திருமதி. ருக்மணி நாகநான் அவர்கள் மூன்றாம் பகுதியின் உபயதாரராகவும் இருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் திரு.வைரபாரதி அவர்களும், சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவரும், 'எம்.எஸ்.வி. டாட் காம் ' அமைப்பைச் சேர்ந்த திரு. சுவாமிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்ச்சிக்குப் பெருமைச் சேர்த்தனர்.
நிகழ்ச்சியின் உபயதாரர்களுக்கு நூல்களும், நினைவுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தனர் திரு. நந்தகுமார், திரு. மிட்லண்ட் சங்கர், திரு. பாலாஜி ஆகியோர்..
சிறப்பு விருந்தினர்களுக்கு நடிகர்திலகத்தின் நூல்களும், 2019 ஆம் வருட நாள்காட்டிகளும் குழுவின் சார்பாக திரு. தணிகாச்சலம் அவர்களால் வழங்கப்பட்டன.
பின்னர், சிறப்பு விருந்தினர்கள் திரு.வைரபாரதி அவர்களும், திரு. சுவாமிநாதன் அவர்களும் அன்னதானத்தைத் துவக்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்களோடு சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்களான இதயவேந்தன் திரு. RS.சிவா, மிட்லண்ட் திரு. சங்கர், திரு. AK. தணிகாச்சலம், திரு.கோவை சேது, திரு. சொர்க்கம் நாகராஜ், திரு. ஜெகன், திரு. S.ராமஜெயம், திரு.P.துவாரகநாத், திரு. பாலாஜி, திரு. காமராஜ், திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு.பாஸ்கர், திரு. சுப்பிரமணியன், திரு.கல்தூண் ரவி, திரு. தங்கமாரியப்பன், திரு. கருணாகரன், திரு. KS. நரசிம்மன் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டது சிறப்புக்குரியது.
சீடர்களில் யாரோ ஒருவர் கேட்டார்...
' நீங்கள் ஏன் எப்போதும் தரையின் மீதே அமர்கிறீர்கள் ' என்று. அதற்கு புத்தர் சொன்னாராம்... ' தரையின் மேல் அமர்பவன் தடுக்கி விழமாட்டான் ' என்று!"
ஆம். புகழின் உச்சியின் இருந்தபோதும் கீழேயே இருந்த எம் திலகத்தின் புகழ் எப்போதும் வீழ்வதேயில்லை.
அன்புடன் வான்நிலா விஜயகுமாரன்.
http://oi67.tinypic.com/2lve89h.jpghttp://oi67.tinypic.com/2nu0kye.jpghttp://oi63.tinypic.com/2qd1y89.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
17:02:2019 அன்று நடைபெறவிருக்கும் குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் 52 வார தொடர் அன்னதானத்தின், இருபத்தோராம் வார நிகழ்ச்சியில் பகுதி இரண்டிற்கான அழைப்பு....
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi64.tinypic.com/2zswgap.jpghttp://oi67.tinypic.com/2468fuq.jpg
இன்று முதல் ஈரோடு சங்கீதா a/c Dts தினசரி 4 காட்சிகளாக குதூகல ஆரம்பம்
http://oi68.tinypic.com/jtp6dk.jpg
நன்றி திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம்
கள்ளர் குடியில் பிறந்த கொடை வள்ளல் " சிவாஜி "
------------------------------------------------
சிவாஜி கணேசன் மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.
அவற்றை காண்போம்.
* தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.
* பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
* கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
* பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.
* மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)
* கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
* தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)
* சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
* சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
* 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
* மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
* 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.
* சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.
* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
* 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.
* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.
* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
* கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
* திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
* தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.
* தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)
* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)
* தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
* கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.
* சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.
*வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)
* சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
* 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.
* 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
* 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)
* 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)
* 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
* 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
( இன்றைய மதிப்பு 75 லட்சம்)
* 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)
* 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)
* 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)
* 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)
* 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)
* 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.
* 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)
*1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)
* 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
* 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)
*1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)
* 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)
* பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.
* 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)
* 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
* 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)
* 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)
* 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)
* 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)
தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!
சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு செய்த தொண்டுகள் ஏராளம்.
சிவாஜி கணேசனுக்கு ஏன் அரசாங்க செலவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என வினவியவர்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது அவசியம். அவர் தமிழுக்கும் இந்திய தேசத்திற்கும் செய்த தொண்டுகளுக்கு எத்தனை மணிமண்டபங்கள் கட்டினாலும் ஈடாகாது.
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
(தகவல்கள் : புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை வெளியீடு:- நடிகர் திலகம் 90 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு மலர் 27.01.2019)
http://oi66.tinypic.com/2ppjyv5.jpg
நன்றி Vasudevan.S
நல்லா வந்திருக்கு படம். நிச்சயம் ஜெயிச்சிரும்’ என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்றார் சிவாஜி. அப்போது இயக்குநரும் தயாரிப்பு தரப்பிலும், ‘சார், க்ளைமாக்ஸ் நேரத்தை வேணும்னா குறைச்சிடலாம். கொஞ்சம் கட் பண்ணிக்கலாம்’ என்று சொன்னார்கள். உடனே சிவாஜி, ‘எதுக்கு கட் பண்றீங்க? கொஞ்சம் கூட குறைக்கக்கூடாது. ரஜினி நல்லாத்தானே பண்ணிருக்கான். அவனும் வளர்ந்துட்டிருக்கறவன். அவன் நல்லா வளரட்டும்’ என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்றாராம்.
அவரின் பரந்த மனதை உணர்ந்து ‘நான் வாழவைப்பேன்’ யூனிட் மொத்தமும் நெகிழ்ந்து, நடிகர்திலகத்தைப் பாராட்டித்தள்ளியது.நான் வாழவைப்பேன் என பல்லாயிரம் மக்களை வளப்படுத்திய நல்ல உள்ளம் அல்லவா அவர் !
நன்றி marimuththu Ramasamy marimuththu
.....
பின்னூட்டம்
நடிகர் திலகம் சிவாஜியின் மிக உயர்ந்த குணங்களில் இதுவும் ஒன்று......உயர்ந்த மனிதனில் அசோகன், திருவிளையாடலில் தருமி நாகேஷ், குலமா குணமாவில் வாணிஶ்ரீ, பாசமலரில் சாவித்ரி, தில்லானாவில் மனோரமா மற்றும் வைத்தி கதா பாத்திரங்களை வாழ வைத்தவர்....இன்னும். எவ்வளவோ இருக்கு இது வெறும் சாம்பிள் மட்டுமே. பானுமதிக்காக கள்வனின் காதலி, அறிவாளி, அம்பிகாபதி, மக்களைப் பெற்ற மகராசி மற்றும் சாரங்கதாரா படங்களில் தன்னை ஒரு கட்டுக்குள் வைத்துக். கொண்டே. நடித்திருப்பார் நடிகர் திலகம்..............கள்வனின் காதலி படப்பிடிப்பின் போது நடிகர் திலகத்தை கணேசா என்று பெயர் சொல்லி அழைத்தவர்.......படம் வளர வளர நடிகர் திலகத்தின் நடிப்பையும் நற் குணங்களையும் கண்ட அஷ்டாவதினி பானுமதி மிஸ்டர் என்ற அடை மொழியுடன் அழைக்கத் தொடங்கினார்.....
........
UYARNDA MANITHAN ASOKAN/SSR PALA PADANGAL/PALUM PAZHAMUM SAROJA DEVI/ENGIRUNDO VANDAL JAYALALITHA,IVARHALAIYUM SERKKALAM
http://oi68.tinypic.com/210fwoi.jpghttp://oi67.tinypic.com/99m2ac.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi64.tinypic.com/30a6d74.jpg
நன்றி கலைக்கடவுளின் இதயங்கள்