விஜய் தொலைக்காட்சியில்
புதிய தொடர் ‘ரெட்டை வால் குருவி’
https://www.youtube.com/watch?v=SRrGd_AA6Bw
https://www.youtube.com/watch?v=iAWJdfz4j5k
Printable View
விஜய் தொலைக்காட்சியில்
புதிய தொடர் ‘ரெட்டை வால் குருவி’
https://www.youtube.com/watch?v=SRrGd_AA6Bw
https://www.youtube.com/watch?v=iAWJdfz4j5k
Quote:
குட்டி பத்மினி இயக்கும் ராமானுஜர் - கருணாநிதி வசனம் எழுதுகிறார்
நடிகை குட்டிபத்மினி தற்போது 63 நாயன்மார்கள் தொடரை தயாரித்து ஒளிபரப்பி வருகிறார். அது நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அடுத்து ராமானுஜர் என்ற ஆன்மீக தொடரை இயக்க இருக்கிறார். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தி.மு.கழக தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். குட்டி பத்மினியின் வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சீரியல் இயக்குனராக குட்டி பத்மினி பணியாற்றுகிறார். ஆர்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுபற்றி குட்டி பத்மினி கூறியதாவது: வைணவ தர்மத்தை பாமர மக்களுக்கு எடுத்துரைத்த மகத்தான மகான் ராமானுஜர், திராவிட தமிழ் வேதமான திவ்யபிரபந்தத்தை மக்களின் மனதில் ஆழப் பதியச் செய்து மதத்தில் பல புரட்சிகளை செய்த மாசற்ற மகான் ராமானுஜர், அவர் பிறந்து ஆயிரமாண்டுகளாகும் இந்த நேரத்தில் இந்த தொடரை ஒளிபரப்புவதில் பெருமை கொள்கிறோம். ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக படம் பிடித்து நெடுந் தொடராக நேயர்களுக்கு வழங்க இருக்கிறோம். கருணாநிதியின் கைவண்ணத்தில் இது உருவாவது இன்னும் சிறப்பு என்கிறார் குட்டி பத்மினி
நன்றி: தினமலர்
சன் தொலைக் காட்சியில் 30 -03 - 2015 முதல்
ஆதிரா
https://www.youtube.com/watch?v=ZnoEEbtS9pY
சன் தொலைக் காட்சியில் 30 -03 - 2015 முதல்
கேளடி கண்மணி
https://www.youtube.com/watch?v=NjWB3nmMjnEQuote:
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கு கேளடி கண்மணி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் சாதனா, அர்னவ், ராமச்சந்திரன், சுஜாதா, கிருத்திகா, பிரியங்கா, புவி, கீதா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, முத்துச்செல்வன். வசனம், எழில்வரதன்.
ஒளிப்பதிவு, மீனாட்சிபட்டி பி.காசிநாதன். இசை, கிரண். பாடல், யுகபாரதி. கிரியேட்டிவ் டைரக்டர், மதுமோகன். இயக்கம், ஓ.என்.ரத்தினம். கிரியேட்டிவ் ஹெட், தயாரிப்பு, ‘மெட்டிஒலி’ சித்திக். ‘தாயின் பாசம் தாகம் தீர்க்கும் தண்ணீர் போன்றது. குழந்தையின் சிரிப்பு, வெயில் நேர காற்று போன்றது. காற்றுக்கு காற்றாகவும் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும், மாயாவுக்கு அன்னையாகவும் இருப்பவள் பவானி. அவளின் ஆசைகளை, மாயா நிறைவேற்றுகிறாளா என்பது கதை’ என்றார் இயக்குனர்.
Manoj (Night) Shyamalan's 10-episode psychological thriller “Wayward Pines”
premieres on FOX tv (USA and Canada) on May 14, 2015.
http://screenrant.com/wayward-pines-tv-show-trailer/
https://www.youtube.com/watch?v=RsQ9Fl0VCkk
https://www.youtube.com/watch?v=2WHLpPvo3ZE#t=11
Quote:
சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை
மங்கை தொடரை இயக்கிய அரிராஜன் அதன் பிறகு சினிமா இயக்கச் சென்று விட்டார். சில படங்களை இயக்கி விட்டு தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துவிட்டார். அவர் இயக்கும் புதிய தொடர் என் தங்கை. இதில் பாண்டியராஜன் கதையின் நாயகனாக நடிக்கிறார்
ஒக்கேனக்கல் பரிசல் துறையில் பரிசல் காண்டிராக்டராக இருக்கும் பாண்டியராஜன் தன் தங்கைகள் 4 பேருக்கும் அரசு உத்யோகம் பார்க்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொடுக்க போராடுகிறார். திருமண வயதை தாண்டிய அண்ணனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கட்டிவைக்க தங்கைகள் போராடுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்ச்சி போராட்டமாக உருவாகிறது என் தங்கை. பெரும்பாலான படப்பிடிப்புகள் ஒக்கேனக்கலை சுற்றி நடந்து வருகிறது. பாண்டியராஜன் தங்கைகளுக்காக மாப்பிள்ளை தேடி பல ஊர்களுக்கு செல்லும்போது அந்தந்த ஊர்களுக்கு கதை செல்லும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
காமெடியும், செண்டிமெண்டும் கலந்த உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...2452000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
விஜய் அவார்ட்ஸ் விழாவில், பிரபுதேவா-ஸ்ருதிஹாசன் நடனம்
ஆண்டுதோறும் நடந்து வரும் மிகப்பெரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான விஜய் அவார்ட்ஸ் விழா நாளை (ஏப் 25) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடுகிறார். அவர் "மை லைஃப் மை வே" (என் வாழ்க்கை என் வழி) என்ற தீம் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடுகிறார். அதனுடன் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே" பாடலுக்கும், "போக்கிரி பொங்கல்" பாடலுக்கும் நடனம் ஆடுகிறார்.
ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமலஹாசனின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். லட்சுமி மேனன் திகில், காதல் மற்றும் பேய் பாடல்களுக்கு ஆடுகிறார். இவர்கள் தவிர பிந்து மாதவி, ராய் லட்சுமி, இனியா, நந்திதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடனமாட இருக்கிறார்கள். பிரபுதேவா நடனங்கள் தவிர மற்ற நடனங்களுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த ஆண்டு சிறுபட்ஜெட் படங்கள்தான் அதிகமான விருதுகளை பெற இருப்பதாக ஜூரி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
நன்றி: தினமலர்
Quote:
திருச்செல்வத்தின் புதிய தொடர் கைராசி குடும்பம்: நாளை முதல் ஒளிபரப்பு
கோலங்கள் தொடர் மூலம் புகழ்பெற்ற திருச்செல்வம் தற்போது இயக்கும் தொடர் கைராசி குடும்பம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஊர் உலகத்தில் கைராசி குடும்பம் என்று பெயர் எடுத்த ஓரு கூட்டுக் குடும்பம். ஒரே ஒரு பெண்ணின் வருகையால் கைராசி என்ற எடுத்த பெயரை இழந்து விடுகிறது. பின்பு பெரும் போராட்டத்துக்கு பிறகு மீண்டும் தன் கைராசி குடும்ப பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்கிறது என்கிற கதை
ஜெயா தொலைக்காட்சியில் நாளை (ஏப் 22) தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கோலங்கள் போன்றே பெரும் வரவேற்பை பெறும் என்ற சேனல் தரப்பும், திருச்செல்வமும நம்புகிறார்கள். முதல் கட்டமாக 200 எபிசோட்களுக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். வரவேற்பை பொறுத்து எபிசோட்கள் அதிகரிக்கப்படும். ப்ரைம் டைமில் தொடங்கும் தொடர் அதனை தக்க வைக்குமா என்பது போக போகத் தெரியும்.
நன்றி: தினமலர்
Quote:
ராஜ் டி.வியில் புதிய டப்பிங் தொடர்
தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது, அது இங்குள்ள கலைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ராஜ் டி.வி. வருகிற மே 4ந் தேதி முதல் அழகிய லைலா என்ற புதிய டப்பிங் சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
பார்வதியும், ருத்ராவும் பால்ய பருவத்திலிருந்தே நண்பர்கள், இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் ருத்ரா ராணுவ தளபதியாகிறான். பார்வதி, ருத்ராவை காதலிக்கிறாள். ஆனால் ருத்ரா நாடுதான் முக்கியம் என்று சொல்லி காதல், பாசம், சென்டிமென்ட்டுக்கு அப்பாற்பட்டு வாழ்கிறான். ருத்ராவின் காதலை பெற பார்வதி தொடர்ந்து போராடுவதுதான் சீரியலின் கதை.
சீரியல் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளது.- பிரமாண்ட ராஜஸ்தான் அரண்மனைகள், கொடுமையான பாலைவனம் ஆகியவற்றில் கதை நடக்கிறது. இந்தியில் பிரமாண்டமான முறையில் தயாரான தொடர் இது. இதில் பார்வதியாக பிரபல இந்தி நடிகை சனியா இரானி நடித்துள்ளார். ருத்ராவாக ஆஷிஷ் சர்மா நடித்துள்ளார்.
நன்றி: தினமலர்
Quote:
விஜய் டி.வி விருது விழா: சிறந்த படம் வேலையில்லா பட்டதாரி, நடிகர் தனுஷ்
விஜய் டி.வி. ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (ஏப் 25) நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. இதில் வேலையில்லா பட்டதாரிக்கு சிறந்த படம், நடிகர், நடிகை என மூன்று விருதுகள் கிடைத்தது. விருது பட்டியல் வருமாறு:
சிறந்த படம்: வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடிகர்: தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை: அமலா பால் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)
சிறந்த இசை அமைப்பாளர்: அனிருத் (பல படங்கள்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: கெவ்மிக் (ஜிகர்தண்டா)
சிறந்த பாடகர்: பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா)
சிறந்த கலை இயக்குனர்: சாபுசிரில் (லிங்கா)
சிறந்த நடன இயக்குனர்: ஷோபி (ஜீவா)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பெருமாள், நிரஞ்சனா (காவியத் தலைவன்)
சிறந்த பின்னணி இசை: சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா)
சிறப்பு விருது: சதுரங்க வேட்டை
சிறந்த சண்டை இயக்குனர்: சுந்தர் (கோலிசோடா)
சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)
சிறந்த துணை நடிகை: சீதா (கோலிசோடா)
சிறந்த புதுமுக நடிகை: மாளவிகா நாயர் (குக்கூ)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: விஜய் மில்டன் (கோலி சோடா)
சிறந்த பாடலாசிரியர்: கபிலன் (யான்)
சிறந்த வசனகர்த்தா: பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்
)சிறந்த காமெடியன்: தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
ரசிகர்களின் விருப்ப படம்: கத்தி
ரசிகர்களின் விருப்ப நடிகை: ஹன்சிகா மோத்வானி
ரசிகர்களின் விருப்ப இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்
சிறப்பு இயக்குனர் விருது: கே.எஸ்.ரவிகுமார்
சிறப்பு ஜூரி விருது: மெட்ராஸ்
சிறந்த அறிமுக இயக்குனர்: ராஜூ முருகன் (குக்கூ)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாரா (சைவம்)
விழாவில் ஏவிஎம் சரவணனுக்கு சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.
இதனை கமலஹாசன் வழங்கினார்.
பிரபு தேவா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நன்றி: தினமலர்
Quote:
விஜய் பிளஸ்: வருகிறது புதிய சேனல்
விஜய் டி.வியை ஸ்டார் நிறுவனம் வாங்கிய பிறகு பல புதிய நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர்கள், லைவ் ஷோக்கள் மூலம் முதல் இடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. புதிய படங்களை திரையிடுவதிலும் மற்ற சேனல்களை முந்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் டி.வியிலிருந்து, விஜய் பிளஸ் என்ற புதிய சேனல் விரைவில் வர இருக்கிறது.
புதிய சேனலின் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் பிளஸ் ஒளிபரப்பை துவங்குவதாக இருந்தது. ஆனால் புதிய சேனலுக்கு லைசென்ஸ் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் ஒளிபரப்பும் தள்ளிப்போகிறது. வருகிற தீபாவளிக்கு முன்னதாக விஜய் பிளஸ்சை கொண்டு வர நிர்வாகம் பணிகளை முடுக்கி விட்டுள்ளது
"விஜய் பிளஸ் முழுக்க முழுக்க பொழுபோக்கை மையமாக கொண்டிருக்கும், குறிப்பாக இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிறைய இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய விளையாட்டு போட்டிகள் தமிழ் வர்ணனையுடன் விஜய் பிளஸ்சில் இடம் பெறும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டி.வி நேரடி ஒளிபரப்பு செய்தபோது அதன் வழக்கமான நிகழ்ச்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஸ்டார் பிளஸ் தொடங்கப்பட்டால் இதுபோன்ற நேரடி நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாகும், அடுத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தையும் ஸ்டார் குரூப் வாங்க இருக்கிறது. அப்போது விஜய் பிளஸ்சில் அது நேரடியாக ஒளிபரப்பும். என்கிறது விஜய் பிளஸ் வட்டாரம்.
நன்றி: தினமலர்
Quote:
கைராசி குடும்பத்திற்கு வில்லி ஸ்ரீவித்யா
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கைராசி குடும்பம் தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். நிறைய நட்சத்திரங்கள் தொடரில் இருந்தாலும் தனது வில்லத்தனமான கேரக்டரில் நடித்து பெயரை தட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.
கடைசியாக நடித்த சித்திரம் பேசுதடி சீரியலிலும் வில்லியாகத்தான் நடித்திருந்தார். இதிலும் வில்லி கேரக்டர்தான். தென்றல், பொன்னூஞ்சல் போன்று கைராசி குடும்பமும் ஸ்ரீவித்யாவின் பெயர் சொல்லும் குடும்பமாக இருக்கும் என்று நம்புகிறார்.
"கூட்டுக் குடும்பங்களில் அன்றன்றைய மனநிலையே வில்லத்தனமாக அமையும். அது மாதிரி அடிக்கடி வில்லத்தனம் செய்யும் கேரக்டர் என்னுடையது. எனது பார்வையில் சரி என்று படுகிற விஷயங்கள் மற்றவர்களுக்கு வில்லத்தனமாக தெரியும். ஆடியன்சிடம் திட்டு வாங்கினாலும் அவர்கள் மனதில் பதிவது வில்லி வேடங்கள்தான்" என்கிறார் ஸ்ரீவித்யா.
நன்றி: தினமலர்
Quote:
கேரள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவின் ஹீரோயினாக வந்தவர் ஸ்ருதிராஜ், ராமகிருஷ்ணா, ஜெர்ரி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதனால் கேரளாவுக்கே திரும்பிச் சென்று விடாமல் சின்னத்திரை நடிகையானர். இன்று சின்னத்திரை நடிகைகளில் முதல் 5 இடத்துக்குள் இருக்கிறார் ஸ்ருதி.
தென்றல் சீரியல்தான் ஸ்ருதிக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. 5 ஆண்டுகள் தென்றல் தொடரில் நடித்தார். அது முடிந்ததும் கேரளாவிலேயே செட்டிலாகி மலையாள சீரியல்களில் நடிப்பது என்றுதான் முடிவு செய்திருந்தார். ஆனால் தென்றல் படப்பிடிப்புகள் முடிந்த மறு மாதமே அவருக்கு அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் தன் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார்.
அன்னக்கொடி தொடரில் ஐந்து பெண்களில் மூத்த பெண் கவுரியாக நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் உற்சாகமாக நடித்து வருகிறார். "கூட்டுக் குடும்பத்தின் கதை. படப்பிடிப்பு தளமும் கூட்டுக் குடும்ப கலகலப்புடன் இருக்கிறது. தென்றல் தொடருக்கு பிறகு சொந்தங்கள் விட்டுபோனமாதிரி கவலையில் இருந்தேன். ஆனால் அன்னக்கொடி என் கவலையை போக்கி விட்டாள்" என்கிறார் ஸ்ருதி.
நன்றி: தினமலர்
சன் தொலைக் காட்சியில் 11 -05 - 2015 முதல்
குலதெய்வம்https://www.youtube.com/watch?v=h8ZhrCcvcEw
http://www.dailymotion.com/video/k4cwW23afahHnZb7oI1
https://www.youtube.com/watch?v=ZLEru-xDGnw
Quote:
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையானார்
திருமுருகன் தற்போது குலதெய்வம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இதில் திருமுருகன் இதற்கு முன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் நடித்த பலர் நடிக்கிறார்கள். சில புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா. இவர் நாதஸ்வரம் ஷூட்டிங் பார்க்க வந்து அதன் மூலம் நடிகையானவர்.
நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த கீதாஞ்சலி ஐஸ்வர்யாவின் அக்கா. அவர் நடிப்பதை சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையில் பார்க்க வந்துவிடுவார் ஐஸ்வர்யா. அப்போது யூனிட்டில் உள்ள எல்லோருக்குமே அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் சுறுசுறுப்பும், அழகும் பிடித்துப்போன இயக்குனர் திருமுருகன் அடுத்த தொடரில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்படி குலதெய்வம் தொடரில் மவுலியின் பேத்தியாக நடிக்கிறார். கதையில் 8ம் வகுப்பு மாணவியாக நடிக்கும் ஐஸ்வர்யா நிஜத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்
http://img1.dinamalar.com/cini//CNew...3545000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன்.
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார்
ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது அனைவருமே "நீங்க அழகா இருக்கீங்க நடிக்கலாமே" என்று சொல்ல ஆரம்பித்தனர். கவுதமி இவரது நிகழ்ச்சியை பார்த்து விட்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடிக்க அழைத்தபோது அன்பாக மறுத்துவிட்டார். ஈராஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாடகத்தை தயாரித்து அதனை யூ டியூப்பில் வெளியிடும் புராஜக்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வந்திதாவுக்கு அழைப்பு விடுத்தது அதையும் தவிர்த்து விட்டார்
http://img1.dinamalar.com/cini//CNew...1112000000.jpg
வந்திதாவின் ஆசையெல்லாம் நடனத்திலும், மருத்துவத்திலும் சாதிக்க வேண்டும் என்பதுதான். அடுத்ததாக டூரிஸம் பெஸ்டிவெல் நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கும் டான்ஸ் பெஸ்டிவெல் இது. ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை முதலில் நடத்திய அபிராமி சினிமாவில் நடிப்பதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வந்திதா சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்
Quote:
திண்டுக்கல் சரவணனின் பழைய சோறு Vs பர்ஹர்!
கடந்த இரண்டரை ஆண்டுகளாக டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற நிகழ்ச்சியில் டாடியாக திண்டுக்கல் சரவணனும், மகனாக செந்திலும் நடித்து வருகின்றனர். டாடி பழமொழி அல்லது தத்துவம் சொல்வது. அதைக்கேட்கும் மகன், அதை கலாய்ப்பதோடு, சந்தேகம் கேட்பது போன்ற இந்நிகழ்ச்சி டிவி நேயர்களிடையே பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி இந்த மாதத்தோடு நிறைவு பெறுகிறதாம்.
அதனால் ஜூலை மாதத்தில் இருந்து, பழைய சோறு Vs பர்ஹர் என்றொரு புதிய நிகழ்ச்சியை வழங்குகிறார் திண்டுக்கல் சரவணன். இந்த நிகழ்ச்சியில் டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடித்த செந்திலுக்கு பதிலாக வினோத்பாபு என்றொரு டான்சர் இணைந்து கலக்கப்போகிறாராம்.
இந்த புதிய நிகழ்ச்சியைப்பற்றி திண்டுக்கல் சரவணன் கூறும்போது, இதில் கிராமம்-நகரத்து பழக்க வழக்கங்களை ஒப்பிடுவது. என்னதான் நாகரீகம் மாறிவிட்டபோதிலும் இப்போது நமது பழைய வாழ்க்கைமுறைகளை நவீன காலத்து மக்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லப்போகிறேன்.
மேலும், டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சியில் டயலாக்காக விசயங்களை கூறினேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு விசயத்தையும் விசுவலாகவே நடித்துக் காட்டப்போகிறேன். அதனால் இது இன்னும் புதுமையாக இருக்கும். அதோடு, இன்றைக்கு கிராமத்தில் உள்ள ஒருவர் சைக்கிளில் அலுவலகம் சென்று வருகிறேன் என்று சொன்னால், சைக்கிளில்தான் போய் வருகிறீர்களா? என்று கேட்பார்கள்.
ஆனால் இன்றைக்கு நகரத்தில் வாழ்பவர்கள், வீட்டில் இருந்து காரில் போய் பீச்சில் இறங்கி அங்கே ஒரு சைக்கிளை எடுத்து ஓட்டுகிறார்கள். அந்த சைக்கிள் விலையே 5 ஆயிரம்தான். ஆனால் இங்கே மாத சைக்கிள் வாடகை 12 ஆயிரம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற இன்றைய வாழ்க்கை முறைகளை காமெடியாக சொல்லப்போகிறேன். அதேசமயம் இவை சிந்திக்கும்படியாகவும் இருக்கும் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.
நன்றி: தினமலர்
Quote:
7 ஊர்களில் நடக்கும் திகில் கதை ஏழாம் உயிர்
சரவணன் மீனாட்சி தொடரின் முதல் பகுதி, காஞ்சனா, காத்து கருப்பு தொடர்களை இயக்கிய அழகர் தற்போது ஏழாம் உயிர் என்ற தொடரை இயக்கி வருகிறார். இது வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திரைப்படங்களில் வரும் பேய், திகில் படம் மாதிரி இதுவும் மர்மம் கலந்த ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
பாசமலர் ஹீரோயின் லட்சுமி, வில்லி நடிகை சூசன், ரவி, ஸ்டாலின் உள்பட பலர் நடிக்கிறார்கள். 7 ஊர்களில் வாழும் 7 பெண்களுக்கு ஒரு தீய சக்தியால் ஆபத்து வருகிறது. அந்த தீய சக்தியை அழித்து நல்ல சக்தி அவர்களை எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் கதை. தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி, காசி உள்ளிட்ட 7 ஊர்களில் 7 பெண்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மாவட்ட ஊர்களில் குறிப்பாக குற்றாலத்தைச் சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட 7 ஊர்களும் கதையில் ஒரு கேரக்டராக வருவதால் அந்த ஊரைப் பற்றிய பல சிறப்பு தகவல்களும் காட்சி வழியாக வெளிப்படுத்தப்படுவது இதன் சிறப்பு அம்சமாகும்.
நன்றி: தினமலர்
Quote:
டிஷ்கவரி சேனலில் யோகாவின் கதை -
http://img1.dinamalar.com/cini//CNew...5133000000.jpg
பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமையை பரப்பும் முயற்சியில் இருக்கிறார். அதையொட்டி வெளிநாட்டு சேனலான டிஷ்கவரி சேனல், ";ஸ்டோரி ஆஃப் யோகா" என்ற நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்புகிறது. இமயமலையில் தொடங்கி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் முடிகிறது இந்த தொடர். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், ஆசிரமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல யோக முனிவர்களின் வாழ்க்கை வரலாறும், யோகா மூலம் அவர்கள் இறைவனை தரிசித்த கதையையும் காட்டுகிறார்கள்.
யோகாகுரு ராம்தேவ், ஆர்ட் ஆப் லிவ்விங் ரவிஷங்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் யோகா பற்றி பேசுவதோடு செயல் விளக்கமும் அளிக்கிறார்கள். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் யோகா மரபுகள் காட்டப்படுகிறது. இந்தியாவில் யோகா உருவான விதம், வளர்ந்த விதம் தற்போதுள்ள நிலவரம் போன்றவவை நிகழ்ச்சியில் முக்கியத்துவம் பெறுகிறது. யோகாவின் மிக நுணுக்கமான விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது.
யோகாவை கடைபிடிக்கும் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் யோகா பற்றி பேசுவதோடு செய்தும் காட்டுகிறார்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. டிஷ்கவரி தமிழில் வருகிற 21ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
Quote:
இராமானுஜர் சீரியல் யூனிட்டை ஆச்சர்யப்பட வைக்கும் கருணாநிதி!"
1947ல் ராஜகுமாரி என்ற படத்திற்கு வசனம் எழுதத் தொடங்கியவர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா, பாசப்பறவைகள், மண்ணின் மைந்தன், நியாய தராசு, பெண் சிங்கம், பொன்னர் சங்கர் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
அப்படி அவர் எழுதிய வசனங்கள் காலத்தால் அழியாமல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதோடு பல படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார் கருணாநிதி. இந்த நிலையில், சமீபகாலமாக சின்னத்திரையிலும் அவரது பேனா இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், தென்பாண்டி சிங்கம் உள்பட பல சீரியல்களுக்கு ஏற்கனவே கதை வசனம் எழுதியுள்ள கருணாநிதி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் ஆகிய தொடர்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார்.
இதில் இராமானுஜர் என்ற இந்து மார்க்கத்தின் தொடருக்கு முதன்முதலாக தனது பேனாவை பயன்படுத்தி வருகிறார் கருணாநிதி. குறிப்பாக இந்த சீரியலின் கதை வசனங்கள் அவரது ஆலோசனையின் பேரில்தான் எழுதப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த பிறகும், கடைசியில் மொத்த ஸ்கிரிப்டையும் படிக்கும் கருணாநிதி, ராமானுஜர் பற்றிய தான் அறிந்த பல விசயங்களையும் இணைத்து அனுப்புகிறாராம்.
92 வயதிலும் கருணாநிதிக்கு இருக்கிற ஞாபகசக்தி மற்றும் எழுத்து மீது கொண்ட ஆர்வத்தினை இராமானுஜர் சீரியல் யூனிட்டில் உள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.
நன்றி: தினமலர்
Quote:
மவுலிவாக்கம் கட்டிட விபத்து பின்னணியில் உருவாகும் எங்க வீட்டுப் பெண்
கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பலமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் எங்க வீட்டுப்பெண். வாழ்க்கையை கனவுகளோடு எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர் சுமித்ரா. அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. தந்தை கலெக்டர். திடீரென அவர் கட்டுப்பாட்டில் உள்ள அபார்ட்மெண்ட் கட்டிவரும் ஒரு பலமாடி கட்டிடம் இடிந்து விழுகிறது. கலெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார். சுமித்ராவின் திருமணம் நின்று போகிறது. நன்றாக இருந்த குடும்பம் ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வருகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...3536000000.jpg
அதன் பிறகு சுமித்ரா போராடி தன் குடும்பத்தையும், தந்தையையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. சுமித்ராவாக ஹரிசித்ரா நடிக்கிறார் அவரது தந்தை கலெக்டராக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். தாயாக யுவஸ்ரீ நடிக்கிறார். இவர்கள் தவிர சரத்பாபு, கவிதாலயா கிருஷ்ணன், பாத்திமா பாபு, ராம்மோகன், ஜூனியர் பாலையா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
Quote:
மகாபாரதம் தொடருக்காக பிரமாண்ட குருஷேத்திர போர்
சென்னை: சன் டி.வி.யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகும் தொடர் ‘மகாபாரதம்’. தமிழ் நடிகர்களைக் கொண்டு தமிழில் சினிவிஷ்டாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் பிரமாண்ட தொடர் பற்றி இயக்குனர் ‘செங்கோட்டை’ சி.வி.சசிகுமார் கூறியதாவது:
தமிழில், தமிழுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட எந்தவொரு சரித்திர தொடரும் 50 எபிசோடுகளை கடந்தது இல்லை. நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக இத்தொடரை ஒளிபரப்பாகி வருகிறோம். 120 எபிசோடுகளை கடந்துள்ளோம். தமிழுக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த தொடரில் மற்றவர்கள் சொல்லாத நுட்பமான கருத்துக்களைச் சொல்கிறோம். பிரமாண்டமும், கருத்தும் ஒருசேர இருப்பதே இதன் சிறப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து வழங்கி வருகிறோம். கற்பனையான பிரம்மாண்டத்தை விட உண்மை யான கருத்துக்கே, இந்த மகாபாரதம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது.
நாளை ஒளிபரப்பாகும் தொடரில், பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணன் சமாதான தூது வந்து, துரியோதனின் செயல் கண்டு வருந்தியது, தன் சமயோஜித புத்தியால் விதுரனின் விஷ்ணு தனுசை உடைக்கச் செய்தது, தான் யார் என்று விஸ்வரூபம் காட்டி குருஷேத்திர போர் பிரகடனம் செய்ததும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் ஒளிபரப்பாக உள்ளன. அதைத் தொடர்ந்து குருஷேத்திர போர் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. அதை எட்டு கேமரா படமாக்குகிறது. 50க்கும் மேற்பட்ட நடிகர்கள், 40க்கு மேற்பட்ட தேர்கள், 100 குதிரைகள் என பெரிய அளவில் எடுக்க இருக்கிறோம். இது சின்னத் திரையில் புதிய வரலாறு. இவ்வாறு கூறினார்.
நன்றி: தினகரன்
Quote:
கோவை சரளாவின் செல்லமே செல்லம் பாகம் 2 தயாராகிறது -
காமெடி மற்றும் குணசித்திர நடிகை கோவை சரளா செல்லமே செல்லம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டி நிகழ்ச்சி போன்றது அதில் குழந்தைகள் மட்டும் கலந்து கொள்வார்கள். இதில் குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள். கோவை சரளா காமெடியாகவும், ஜாலியாகவும் நிகழ்ச்சியை நடத்துவார்
இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து செல்லமே செல்லம் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறது சரிகம நிறுவனம். இதன் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. "சரிகம நல்ல தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் செல்லமே செல்லம் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்ந்துள்ள நிகழ்ச்சி. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறோம்" என்றார் சரிகம நிறுவனத்தின் துணை தலைவர் பி.ஆர்.விஜயலட்சுமி.
நன்றி: தினமலர்
Quote:
பூவிழி வாசலிலே: குழந்தையை மையமாக கொண்ட புதிய தொடர் - New serial in Raj tv
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை மையமாக கொண்டு பூவிழி வாசலிலே என்ற திரைப்படம் வந்தது. அதே போன்று தற்போது ராஜ் டி.வியில் வருகிற 13ந் தேதி முதல் பூவிழி வாசலிலே என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
தேன்மொழி என்ற குழந்தையை சுற்றி நடக்கிற கதை. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த தேன்மொழியின் பாட்டி திடீரென இறந்த விடுகிறார். அவரது இறுதி சடங்கு நிறைவேற்ற பணம் இல்லாமல் தவிக்கும் தந்தை உள்ளூர் ஜமீன்தாரிடம் மகள் தேன்மொழியை அடமானமாக வைத்து பணம் வாங்கி இறுதி சடங்கை நிறைவேற்றுகிறார். சில வருடங்களில் கடனை அடைக்கமுடியாமல் தந்தை இறந்து போகிறார். இதனால் தேன்மொழியை தாயிடமிருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் ஜமீன்தார்.
ஒரு கட்டத்தில் மனம் மாறும் ஜமீன்தார், தேன்மொழியை அவள் தாயிடம் ஒப்படைக்கிறார். ஈஸ்வரன் என்கிற நல்ல மனிதர் தேன்மொழியை படிக்க வைக்க நினைக்கிறார். ஒரு கொலை வழக்கில் அவரும் ஜெயிலுக்கு போய்விடுகிறார். அதன் பிறகும் தேன்மொழி வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறாள் என்பதுதான் கதை. திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...0220000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
ரேஸில் முந்தும் லட்சுமி
பிரபல திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்து ஒளிபரப்பி வரும் லட்சுமி வந்தாச்சு சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னேறுகிறது. வாணி போஜன், அனு பிரகாஷ், நாதன், ஹரிப்ரியா நடிக்கிறார்கள்.
>கூட்டுக் குடும்பமாக இருக்கும் நாட்டாமை நாச்சிமுத்து குடும்பத்துக்கு மூத்த மருமகளாக வருகிறாள் தேன்மோழி. தன் கணவன் தங்கவேலுவை கைக்குள் போட்டுக் கொண்டு குடும்பத்து நிர்வாகத்தை தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடுகிறாள். ஆரம்பத்தில் மருமகளின் செயலால் வெறுப்படையும் நாச்சிமுத்து பின்பு அவள் செய்வதுதான் சரி என்று வழிக்கு வருகிறார். இதைப் பயன்படுத்தி நாச்சிமுத்துவின் இரண்டாவது மகன் வெற்றிவேலுவை வீட்டைவிட்டு வெளியேற்ற திட்டமிடுகிறாள். இந்த நிலையில் வீட்டுக்கு இரண்டாவது மருகளாக வருகிறார் லட்சுமி. தேன்மொழியின் திட்டங்களை முறியடித்து லட்சுமி குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பது கதை. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...0206000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
ஆயிரம் எபிஷோடுடன் சரவணன் மீனாட்சி தொடர் நிறைவு பெறுகிறது!
கடந்த 2011 நவம்பர் 7-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த தொடரின் சீசன் 1-ல் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடித்தனர். அவர்களுக்கிடையே நடிப்பில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகி அந்த தொடர் நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வந்தது. மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த தொடரில் மதுரையைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் சிலர் நடித்தனர். மேலும், அந்த தொடரில் உருகி உருகி இயல்பாக ரொமான்ஸ் செய்து நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கிடையே நிஜத்திலும் காதல் உருவானதை அடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் செந்தில் நடித்தபோதும், ஸ்ரீஜா நடிப்பை நிறுத்தி விட முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அந்த தொடரின் சீசன் 2ல் புதிய ஜோடிகளாக ரசித்ரா-கவின் களமிறங்கினர். அவர்களது ரொமான்சையும் நேயர்கள் ரசித்தபோதும், பெரிய அளவில் இல்லை. அதனால் தற்போது 950 எபிசோடுகளை கடந்து விட்ட சரவணன் மீனாட்சி தொடரை 1000 எபிசோடுடன் முடித்துக் கொள்ளப்போகிறார்களாம். அதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் இப்போது நடந்து வரும நிலையில், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே சரவணன் மீனாட்சியை விஜய் டிவியில் கண்டுகளிக்க முடியும் என்கிறார்கள.
>அதனால் அந்த தொடரில் வருடக்கணக்கில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் வேறு சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினமலர்
Quote:
மை லவ் பிரஃம் அனதர் ஸ்டார்: ஜூலை 30 முதல் புதிய கொரியன் தொடர்
புதுயுகம் தொலைக்காட்சி கே வரிசையில் உலக புகழ்பெற்ற கொரியன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மை லப் ப்ஃரம் அனதர் ஸ்டார் என்ற தொடர் வருகிற 30ந் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை ஜான் டீ யா இயக்கி உள்ளார். கிம் சோ ஹயூன், ஜுன் ஜி ஹியுன் நடித்துள்ளனர். 21 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் உலக புகழ்பெற்றதாகும்.
http://img1.dinamalar.com/cini//CNew...2846000000.jpg
வேற்று கிரகத்தில் இருந்து ஒரு இளைஞன் பூமியை ஆராய்ச்சி செய்வதற்காக வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதன் பிறகு 400 வருடங்கள் பூமியில் தங்கி ஆராய்ச்சி செய்துவிட்டு கிளம்பும்போது, தான் வந்தபோது காப்பாற்றிய பெண்ணின் தோற்றத்தில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அந்த பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு பிரபலமான நடிகை. அவர்கள் காதல் நிறைவேறியதா? இளைஞன் பூமியிலிருந்து திரும்பிச் சென்றானா என்பது கதை.
நன்றி: தினமலர்
அபூர்வ ராகங்கள் Aug 10, 2015Quote:
அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல் துளசி!
தென்றல் சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதிராஜ்.
அந்த தொடரில் அவர் நடித்த துளசி என்கிற கதாபாத்திரம் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதையடுத்து ஆபீஸ் என்ற தொடரில் நடித்த ராஜீ கேரக்டரும் ஸ்ருதிராஜை பேச வைத்தது. இப்போது அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, அபூர்வ ராகங்கள் என்றொரு தொடரில் டைட்டில் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதிராஜ். ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இதற்கு முன்பு நடித்த சீரியல்களை விடவும் வெயிட்டான வேடத்தில் நடிக்கிறாராம் அவர்.
குறிப்பாக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளிப்பது மட்டுமின்றி, ஒரு போர்க்குணம் கொண்ட பெண்ணாகவும் நடிக்கிறாராம் ஸ்ருதிராஜ். அதேசமயம், அவருக்கென்று பெண் ரசிகைகள் அதிகமாக இருப்பதால், சென்டிமென்ட் காட்சிகளும் இந்த தொடரில் அதிகமாக உள்ளதாம்.
அதனால், இந்த அபூர்வ ராகங்கள் தனக்கு சீரியல் உலகில் முன்னணி நடிகை என்கிற அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்ருதிராஜ்.
நன்றி: தினமலர்
Quote:
விஜய் சித்திரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் 7 கதைகள்
விஜய் தொலைக்காட்சி, விஜய் சித்திரம் என்ற நிகழ்ச்சியை நாளை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இது ஒளிபரப்பாகும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது நாவலை ஒரு திரைப்படத்தின் தரத்தில் படம்பிடித்து இரண்டு மணிநேர திரைப்படமாகவே ஒளிபரப்புகிறார்கள். நாளை முதல் அடுத்த 7 வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் கதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது வருமாறு:
1. .பாயம்மா: மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் பெண், தன் மகள் இன்னொரு மதத்தவரை காதலித்து அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கும்போது அவர் என்ன செய்கிறார் என்கிற கதை.
2. இரண்டாம் ஆதாம்: ஒரு நடுத்தர வயது பெண் தனது கணவரையும் இந்த சமூகத்தையும் எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற கதை.
3. மாரி: அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஒரு இளம் பெண் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாள் என்கிற கதை.
4. தவளைக் கண்ணன்: பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பவர்களில் ஒருவன் அரசியல்வாதியாகிறான். இன்னொருவன் அவனது செயலாளர் ஆகிறான். அதன் பிறகு அவர்கள் நட்பு எப்படி இருக்கிறது என்கிற கதை.
5. கணேஷ் வசந்த்: எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாந்தர்களான கணேசும், வசந்தும் ஒரு முக்கிய வழக்கில் எப்படி துப்பறிகிறார்கள் என்கிற கதை.
6. அந்த ஒரு நிமிடம்: இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.
7. பஞ்சாபகேசன் தேவசகாயம்: ஊட்டியில் உள்ள காப்பி எஸ்டேட்டில் நடக்கும் ஒரு கொலையை துப்பறியும் கதை
நன்றி: தினமலர்
Quote:
ஒரே தொடரில் இரண்டு கதைகள்
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் தொடர் மற்ற தனியார் தொலைக்காட்சி தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கே.ஏ.ராஜபாண்டியன் எழுதிய கதையை சையத் ரஃபிக் பாஷா இயக்குகிறார்.
முதியவர்கள், குழந்தைகள் அடைக்கலமாகி இருக்கும் அன்பு இல்லம் தான் கதை களம். இங்கு நடக்கும் சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான, திடுக்கிடும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல் கணவனால் ஏமாற்றப்பட்ட கலா தன் குழந்தையுடன் அன்பு இல்லத்தில் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு கதை.
பார்வை இழந்த ஆனந்தன் அநாதையாக அன்பு இல்லத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கு அவனுக்கு ரஞ்சனி என்ற பெண்ணின் அன்பும், காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதை எதிர்த்து காதலர்கள் போராடுவது தனிக் கதை. இப்படி
ஒரே இடத்தில் நடக்கும் இரண்டு கதைகளுடன் தொடர்கிறது நிழல்கள் தொடர். தற்போது இது 100 வது எபிசோடை கடந்திருக்கிறது. பொதிகை டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
Quote:
சின்னத்திரையின் பேய் சூசன்.
இப்போதெல்லாம் சின்னத்திரையாக இருந்தாலும் சரி, பெரிய திரையாக இருந்தாலும் சரி நடிகைகளுக்கு பேயாக நடிப்பதற்கு பிடித்திருக்கிறது. பெரிய திரையில் ஹன்சிகா, த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பெரிய நடிகைகளே பேயாக நடிக்கிறார்கள். சின்னத்திரையில் அப்படி ஒரு வாய்ப்பு சூசனுக்கு கிடைத்திருக்கிறது.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏழாம் உயிர் தொடரில் அவர்தான் பேயாக நடிக்கிறார். ஏழு பெண்களின் உயிரைக் குடிக்க வேண்டும் என்பது சூசன் பேயின் திட்டம். இதுவரை மூன்று பெண்களை கொன்று உயிரை குடித்துவிட்டார் அடுத் எபிசோடிலிருந்து 4வது உயிரை குடிக்க திட்டம் போடுகிறார். அவரது பட்டியிலில் சீரியலின் நாயகி லட்சுமி விஸ்வநாத்தும் ஒருவர். அவரையும் கொல்கிறாரா. இல்லை அவர் இவரை அழிக்கிறாரா என்பதுதான் சீரியலின் கிளைமாக்ஸ்.
"பெரிய திரையில் பேயாக நடிப்பது ரொம்ப சிம்பிள் 2 மணி நேரம் பயமுறுத்தினால் போதும் சின்னத்திரையில் அப்படியில்லை. தினமும் 30 நிமிடம் பயமுறுத்த வேண்டும். அதனால் இது சவாலான விஷயம்தான்" என்கிறார் சூசன்.
நன்றி: தினமலர்
Quote:
வில்லி வேடம் கேட்கும் தேவிப்பிரியா!
ஒரு காலத்தில் சின்னத்திரை சீரியல்களை கலக்கி வந்தவர் தேவிப்பிரியா. நாயகி, வில்லி என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார். அதோடு, சினிமாவிலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். என்றாலும் அவரது கவனம் சீரியல்களிலேயே அதிகமாக இருந்ததால் சினிமாவில் பெரிய அளவில் வளர முடியவில்லை. ஆனால் இப்போது அவர் சீரியல்களிலும் வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதும், சினிமா வாய்ப்புகளையும் அதிகமாக வரவேற்கிறார். காரணம், என்னதான் சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தாலும் சினிமா நடிகை என்கிறபோதுதான் மரியாதையும், சம்பளமும் சின்னத்திரை உலகில் அதிகமாக கிடைக்கிறதாம்.
அதன்காரணமாக, கத்துக்குட்டி படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடித்த தேவிப்பிரியா தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் சீரியல்களைப் பொறுத்தவரை, வில்லி வேடங்களுக்கே அவர் முதலிடம் கொடுக்கிறாராம்.
என்னைக்கேட்டால், சீரியல்களில் வில்லிதான் கதாநாயகியே. கதையை நகர்த்தி செல்லும் மொத்த பொறுப்பும் வில்லியிடமே இருப்பதால் அதில்தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால்தான் நான் வில்லி வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறும் தேவிப்பிரியா, சினிமாவில் வில்லி வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். அந்த வகையில், சினிமா-சின்னத்திரை இரண்டு மீடியாக்களிலும் மெகா வில்லியாக ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்பதுதான் தேவிப்ரியாவின் ஆசையாக உள்ளதாம்.
நன்றி: தினமலர்
Quote:
புதிய சரித்திர தொடர் வீர மார்த்தாண்டன்
திரைப்படங்களைப்போல சின்னத்திரையிலும் சரித்திர தொடர்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எல்லா சேனல்களுமே சரித்திர தொடர்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டுகிறது. ஆனால் அதனை தயாரிப்பதற்கு பெரிய பட்ஜெட் ஆகும் என்பதால் டப்பிங் சீரியல்களை வாங்கி ஒளிபரப்புகிறார்கள்.
ஜீ மராட்டி டி.வியில் ஒளிபரப்பான ஜெய் மல்ஹார் என்ற தொடரை ஜீ தமிழ் வீர மார்த்தாண்டன் என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறது. தேவத்த நாகே, சுரபி ஹண்டா, இஷா கேஷ்கர் நடித்துள்ளனர். கார்த்திக் கெண்டே இயக்கி உள்ளார்.
வீர மார்த்தாண்டன் மாபெரும் வீரன் மற்றும் சிவபக்தன். சிவனின் ஆசியோடும், அருளோடும் அவன் மக்களுக்கு ஆற்றும் சேவை எதிரிகளை வெல்லும் போர் என ஆன்மீகமும், சரித்திரமும் கலந்த கற்பனை கதை. திங்கள் முதல் வெள்ளி வரை ஜீ தமீழ் சேனலில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது
நன்றி: தினமலர்
Quote:
மெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர்
மோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
சீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.
புதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு
நன்றி: தினமலர்
Quote:
விஜய் டி.வியின் புதிய தொடர் களத்து வீடு!
http://img1.dinamalar.com/cini//CNew...3604000000.jpg
திரைப்படங்களின் தரத்துக்கு நிகராக வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்புவது விஜய் டி.வியின் வழக்கம். அந்த வரிசையில் அடுத்து வரும் தொடர் களத்து வீடு.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.
சங்கரபாண்டியன், தேவிப்ரியா, சிவன் ஸ்ரீனிவாசன், அனிலா, மாணிக்கம், ராஜேஷ், காயத்ரி, ஹேமா, மனோகரன், பாலன், ஜீத்து, ரீமா, சம்பத், ஜெயபிரகாஷ் பிரபு கண்ணன் நடிக்கிறார்கள். அருள் அரசன் இயக்குகிறார், சாய் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் களத்து வீடு, காரை வீடு, கம்மா வீடு என்கிற மூன்ற பெரிய வீடுகள் இருக்கிறது. அதில் மூன்று பெரிய குடும்பங்கள் வசிக்கிறது. அதில் களத்து வீட்டு செல்வாக்கை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கார வீட்டுக்காரர்களும், கம்மா வீட்டு காரர்களும் முயற்சிக்கிறார்கள். அதை களத்து வீட்டுக்காரர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை.
நன்றி: தினமலர்
Quote:
கலைஞர் டிவியில் இன்று (நவம்பர் 2-ந்தேதி) முதல் புதிய மெகா தொடர் கண்ணம்மா வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் பழிவாங்கும் கதையில் உருவாகிறது.
அதாவது, தனது கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீனிவாஸ் என்பவன் பண மோசடி செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்குகிறார் தொழிலதிபர் சங்கர நாராயணன். இதையடுத்து அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது மகள் கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்யும் ஸ்ரீனிவாஸ், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகு கண்ணம்மாவை தவிக்க விட்டு பழிதீர்க்கிறான்.
இதையடுத்து கண்ணம்மா என்னென்ன நடவடிக்கை எடுக்கிறாள் என்பதுதான் இந்த தொடரின் கதையோட்டம். முற்றிலும் குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த கண்ணம்மா தொடரில் சோனியா லீடு ரோலில் நடிக்கிறார். அவருடன் பொள்ளாச்சி பாபு, கிருத்திகா, ராஜசேகர், சுமங்கலி, அழகு உள்பட பலர் நடிக்கின்றனர். என்.கிருஷ்ணசாமி கதை திரைக்கதை வசனம் எழுத, மூலக்கதை எழுதி இயக்குகிறார் வேதபுரி மோகன். என்.எஸ்.பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார்.
http://img1.dinamalar.com/cini//CNew...5626000000.jpg
வேல் மீடியா தங்கவேல் தயாரித்துள்ள கண்ணம்மா தொடரின் டைட்டீல் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார்.யில் புதிய தொடர் கண்ணம்மா!
நன்றி: தினமலர்