Dear Murali Sir,
Thanks for your kind words.
Regards,
R. Parthasarathy
Printable View
Madam,
Expect many more postings from you like before in other
NT Thread also.
Dear Mr. Ganesh,
Please post us more of your articles. While I am tied up with annual planning activities, which will ease up some time during the coming week after which I will be able to post some, may I request you to post your articles regularly and delight all of us.
Regards,
R. Parthasarathy
Vanaja,
Nice picture you draw. As many of the friends told here, please continu and bring out the hidden artist in you.
I also know little about drawings and got some prizes in school days.
Once when I started to draw Shivaji sir's picture, keeping his photo as model by side (same like Vivek keeps his father-in-law photo as model for 'pichaikkaran' title in Parthiban Kanavu). After finished drawing it was noway connected to Shivaji's face and reminded some others. I asked some of the friends to find out who's picture is that. Many of them told it was like M.R.R.Vasu.
So, I wrote the name of M.R.R.Vasu in that picture and showed to everyone, and told them I draw Vasu's picture and got the appreciation as it was very natural. (If I started to draw Vasu's picture, it might have ended as Nambiar's. That much my drawing skill).
அன்புச் சகோதரி வனஜா,
நடிகர் திலகத்தின் உருவத்தினை மிக அழகாக ஓவியமாக்கி எங்களுக்கு தந்ததற்கு உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். இன்னும் இது போல் பல ஓவியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Dear Adhiram,
Your narration about your drawing is interesting. Pls share your drawings of NT if you have any
http://greetings.webdunia.com/cards/..._16_162506.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/...ps7e39311e.jpg
இந்த குடியரசு தினத்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், (குழந்தைகள் கண்ட குடியரசு) கன்னடம், (மக்கள ராஜ்யா 1960) தெலுங்கு, (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம் 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும் , தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபக சக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் நடிகர் திலகம் சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடு வகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
http://i1087.photobucket.com/albums/...ps652fe1e0.jpg
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல நம்மையும் மிரள வைக்கிறதே...எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் நடிகர் திலகம் என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
http://i1087.photobucket.com/albums/...ps38ae55d5.jpg
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
http://i872.photobucket.com/albums/a...suda/KKKNT.jpg
http://i872.photobucket.com/albums/a...ereleasefw.jpg
http://i872.photobucket.com/albums/a...dreleasefw.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்பட ஸ்டில் - பம்மலாரின் தொகுப்பிலிருந்து ... பாகம் 8ல் பதியப் பட்டது
http://i1094.photobucket.com/albums/...malar/KKK1.jpg
http://i1094.photobucket.com/albums/...malar/KKK2.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4195a.jpg
மிக்க நன்றி சகோதரி வனஜா அவர்களே! தங்களுடைய அற்புதமான வரைபடங்களுக்கு நன்றி!
டியர் வாசுதேவன் சார் / ராகவேந்திரன் சார்,
இந்தியக் குடியரசின் 64 ஆம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் "குழந்தைகள் கண்ட குடியரசு" திரைப்படத்தின் Coverage ஐ முழுமையாக அளித்து அசத்தியதற்கு நன்றி.
வாசு,
ஆஹா! ஆஹா! பின்னி விட்டீர்கள். உங்கள் பக்த துக்காராமிற்கு நேரில் பாராட்டி நன்றி தெரிவித்தேன். குழந்தைகள் கண்ட குடியரசு ,மிக மிக அபூர்வமானது. எங்கேயிருந்தையா இவைகளையெல்லாம் தேடி தேடி கொண்டு வருகிறீர்கள்? உங்கள் நடையில், உங்கள் involvement கொப்பளிக்கும் அழகை பல முறை வியந்திருக்கிறேன். மிக மிக நன்றி.
ராகவேந்தர் சார்,
தகவல்கள்,ஆவணங்கள் ,புகை படங்கள் அருமை. வாசுவிற்கு அருமையான support .
திருவாளர்கள்..பார்த்தசாரதி,வாசுதேவன் மற்றும் ராகவேந்திரா: என் வணக்கம்.
உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி.கரும்பு தின்ன கூலியா? அந்த மகாகலைஞனைப்பற்றி எழுதுவது நமக்கே ஒரு கெளரவம் அல்லவா?உங்கள் ஆதரவுடன்,தொடர்ந்து எழுத ஆசை.
இன்று குடியரசு தின விசேஷ பரிசாக வாசு அவர்கள் ஒரு பெரிய விருந்தே வைத்து விட்டார்கள்.இப்படி ஒரு ஆழ்ந்த பக்தியா? வாழ்க.தலைவர் புகைப்படமா அது?பார்க்க பார்க்க வியப்பாக உள்ளது.தமிழ் சினிமாவிற்கே முதன்மையான நடிகர்.வெற்றி நடிகர்.அப்பொழுதே தன் கட்டபொம்மன் நடிப்பால் உலகப்புகழ் பெற்றவர்,ஒரு கெளரவ வேடத்தில் நடிப்பதே அபூர்வ விஷயம்.சரி அதை விடுங்கள்..அந்த ஒப்பனை!! எவ்வளவு சௌந்தர்யமான தன் முகத்தை எவ்வளவு குரூபமாக ஆக்கி கொண்டுள்ளார்!!அவர் எப்படி நடிப்பை நேசித்திருக்கவேண்டும்! பூஜித்து இருக்க வேண்டும்!!இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்க!வாசு ஸார் குறிப்பிட்டதைப்போல அப்பொழுது என்ன வசதியிருந்தது? இருந்த ஒரே YOU tube பௌதிக பரிசோதனை சாலையில் இருந்த U tube தான்!தன் கற்பனை வளத்தை முழுவதும் பயன்படுத்தி அல்லவா அப்படிப்பட்ட பாத்திரங்களில் நடித்திருக்கவேண்டும்.இனி அவர் போல ஒரு மஹாகலைஞனை எப்பொழுது காண்போம்?
அம்மணி வனஜாக்ஷி அவர்களே!!
மிக அருமையான ஓவியங்கள்..தத்ரூபமான கண்கள்.நீங்கள் ஒரு கண்கள் specialist.
வெறும் கண்களைப்பார்த்தே அந்த நபர் யார் என சொல்லிவிடலாம்.
கர்ணன்: தலைவர் அற்புதம்..அந்த கன்னங்களில் இன்னும் ஒரு பங்கு செழுமையை சேர்த்தால் புகைப்படம் ஆகிவிடும்.(தலைவரும் பன்முகம் கொண்டவர் என்பது நீங்கள் அறியாதது அல்லவே!)எம் வி ராஜம்மாவும் அருமை..
பத்மினி:Takes the cake..Top class..
சரோதேவிகா:தேவிகாவின் கண்கள்,சரோஜாதேவியின் மூக்கு,..
தொடருங்கள்..இது கட்டளை.
வனஜா,
வரை கலை என்பது அதிலும் இயல்பு தன்மையோடு (true to the content) வரைவது என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே "கைவரக்கூடிய" இந்த கலை உங்களுக்கு கை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். பத்மினியும் சரி தேவிகாவும் சரி பளிச்சிடுகிறார்கள். ஒரு தோள் மறைத்து ஒரு தோள் பளிச்சிட நிற்கும் "கர்ணன்" கம்பீரம். தொடருங்கள்.
ஜெனரல் சக்கரவர்த்தி என்று நீங்கள் சொன்னாலும் எனக்கு என்னவோ "கோட்டை மதில் மேலே வெள்ளைப் பூனை" நினைவுதான் வந்தது/வருகிறது.
அன்புடன்
வாசு,
உங்கள் பதிவிற்கு போவதற்கு முன் என்னுடைய மனப்பூர்வமான நன்றி. காரணம் உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவு இந்த திரியில். என்று வரும் இந்த நாள் என நினைத்திருந்த என் போன்றோருக்கு மன மகிழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு மீண்டும் நன்றி. மகுடிக்கு கட்டுப்படும் நாகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா என்பது தெரியாது. ஆனால் நீங்களும் சரி ராகவேந்தர் சாரும் சரி நடிகர் திலகம் என்ற பெயருக்கு கட்டுப்பட்டவர்கள் என்பது மட்டும் முற்றிலும் உண்மை என்று எனக்கு தெரியும். அதுதான் உங்களை மீண்டும் இங்கே கொண்டு வந்திருக்கிறது. தொடருங்கள்!
குழந்தைகள் கண்ட குடியரசு நான் பார்த்ததில்லை. 10 நிமிடங்கள் மட்டுமே வருவார் என்று சொல்கிறீர்கள்! ஆனால் உங்கள் பதிவை படிக்கும் எவரும் அதை பத்து நிமிட சிறப்பு தோற்றமாக நினைக்கவிடாமல் ஒரு முழு நீள பாத்திரமாக அதை உருவகப்படுதியிருக்கும் உங்கள் எழுத்து வன்மைக்கு பாராட்டுக்கள்!
உங்களின் ஆதங்கம் உண்மை! இது போன்ற சிறப்பு தோற்றங்கள் போதிய அளவில் பேசப்படவில்லை என்பது சரியான கணிப்பே! Contemporary விஷயங்களை கூட பழைய படங்களைப் பற்றிய பதிவில் லாவகமாக நுழைப்பதில் உங்களின் தனி திறமை பளிச்சிடுகிறது! ஹரி - சிங்கம் பற்றிதான் குறிப்பிடுகிறேன்.
மேலும் மேலும் எழுதுங்கள்!
அன்புடன்
vanaja madam,
Superb. I couldn't take my eyes off. It looks like R.N.Nagaraja Rao's real photograph and the speciality is Eye.(I will call you Eye specialist. Not "I specialist ??)
A small request. When we meet in Chennai(As discussed),you have to make a portrait for me(my own) to treasure it.
அன்புச் சகோதரி வனஜா
தங்களின் ஓவியங்கள் இப்பாடலைத் தான் நினைவூட்டுகின்றன ... அடுத்த வீட்டுப் பெண் படத்தில் வரும் கண்களும் கவி பாடுதே ... என்பது போல் தங்கள் ஓவியங்களின் பலமே கண்கள் தான். உயிரோட்டமாயுள்ளன தங்கள் வரைகலை ஓவியங்கள்.
இது போல் மேலும் மேலும் தாங்கள் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
http://www.mayyam.com/talk/attachmen...1&d=1359126491
http://www.mayyam.com/talk/attachmen...2&d=1359127002
http://www.mayyam.com/talk/attachmen...3&d=1359127311
கண்பட்,
தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் நடையில் வசீகரம் உள்ளது.(எழுத்து நடை)
நண்பர்களே,
நேற்று polymer TV யில் விஸ்வரூபம் நிகழ்ச்சியில், கமல் தனது குருவான நடிகர்திலகத்தை போற்றியிருந்தார்.(அவருக்கே உரிய முறையில்).இந்த படம் வெற்றி பெற குருவின் சார்பில் நம் வாழ்த்துக்கள். சிஷ்யருக்கு.
life of Pi என்ற Ang Lee யின் படம், ஆஸ்கார் பட விழாவிற்கு, பல category க்கு பரிந்துரைக்க பட்டுள்ளது. இந்த படம் ஆஸ்காரில் பல விருதுகள் வாங்க அனைத்து நடிகர்திலக பக்தர்களும்,நமது நடிப்பு கடவுளை பிரார்த்திப்போம். (இந்த படத்தில் பாண்டிச்சேரி சம்பத்த பட்ட காட்சியில், நடிகர்திலகம்-வாணிஸ்ரீ மிளிரும், வசந்த மாளிகை posture நல்ல prominent ஆக காட்ட படும்.)
நடிகர் திலகத்தை விட சிறப்பான அழகு ,உலகிலே அந்த ப்ரம்மனால் கூட திருப்பி செய்ய முடியாத விஷயம். கண்கள், மூக்கு, நெற்றி,புருவம், தலையமைப்பு, ஆண்மையான உதடுகள், அற்புதமான காது மடல்(lobe கூட அப்படிப்பட்ட அமைப்பு), சரியான மேலுடல் /கால்களின் proportion (அந்த நடையழகை கூட்டி காண்பிக்கும்).He is an artists' total delight (Photographers' too).
என்னைப்பற்றி ஹீ...ஹீ ...ஹீ நானே சொல்லி கொள்ள கூடாது. பல நாடுகளில் பெண்களிடம் நடந்த ஓட்டெடுப்பில் ,handsome category யில்தான் வைக்க பட்டுள்ளேன் என்பதை உறுதியாக,இறுதியாக கூறி கொள்வேன்.
என்னை பொறுத்த வரை NT யின் uniqueness --
Sophistication ,Rustic , Simpleton , common , dignified royalty என்று எல்லாவற்றுக்கும் பொருந்த கூடிய, மனோரஞ்சித முக,உடலமைப்பு. mischievousness,sadness, serenity ,baffoonary, powered rage to name it all will come at ease with conviction.
எந்த angle இலும் சிறப்பாகவே தெரியும் முக அமைப்பு. (உலகத்திலேயே எனக்கு தெரிந்து இவர் ஒருவரே)
நீங்கள் சொன்னது போல் ,artist angle இல் my special choice three -fourth side pose .
(மூக்கழகர் NT யும், மூக்கழகி வாணிஸ்ரீயும் side by side இழையும் காதல் காட்சிகளில், compatabilty ஐ ரசித்ததுண்டா?)
வாசு சார்,
தங்கள் எழுத்தில் நான் கண்ட speciality ....
நாங்கள் கடலை சுருக்கி, கடுகாக்கி வரைகிறோம். நீங்கள் கடுகை மலையாக விவரிப்பது ,பிரமிப்பை தருகிறது. நடிகர் திலகத்தின்,ஒவ்வொரு அசைவும்,பார்வையும், gesture உம் ,படு உன்னிப்பாக கவனிக்க பட்டு பெருக்கி வரைய வேண்டிய அதிசயம். அதை நீங்களும், பார்த்தசாரதியும் நன்கு ,நாங்கள் சுவைக்க எழுத்தோவியம் ஆக்கும் அழகு அலாதி. அந்த காட்சியை பார்க்காதவர்கள் கூட கற்பனை கடலில் மிதக்கலாம், உண்மைக்கு அருகாக. அதுதான், தங்கள் எழுத்தோவிய சிறப்பு.
Hi Handsome!,
அது மட்டுமா..
எல்லா ஒப்பனையையும் கலைத்து விட்டு,
ஒரு நாலு முழ வேட்டியும்,கதர் ஷர்ட்டும் அணிவித்து,
நெற்றியில் மூன்று கோடு திருநீறு இடுங்கள்..
இவரா..
கர்ஜித்த சிங்கம்?,
மயக்கிய மயில்?,
பாய்ந்த புலி?,
பயந்த மான்?,
ஒயிலாக நடந்த அன்னம்?
மண்டியிட வைத்த யானை?
என்றெல்லாம் வியப்படைவீர்கள்..
:smokesmile:
கோபால்,
நீர் Handsome மட்டுமா?
Somehand உம் கூட அல்லவா!
என்ன ஒரு எழுதும் திறன்?
(ம்ம்ம் எந்த emoticon போடுவது??)
(இதற்குப்பெயர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி cum சிவகுமார் பாணி(யோ))
'குடியரசை'க் கண்டு குதூகலித்த சந்திரசேகரன் சார், கோபால் சார், (கைபேசியிலும் பாராட்டு) Ganpat சார், ( தங்களுடைய U tube மேட்டர் டாப் சார்) சகோதரி வனஜா (தங்களுடைய 'வசந்த மாளிகை' ஓவியத்தைக் காண ஆவலாயிருக்கிறேன்) அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.
டியர் முரளி சார்,
தங்களுடைய மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி. சற்று இடைவெளி விட்டு தாய் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். அதை மகிழ்ச்சியாய் கொண்டாடிய தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கும், எண்ணத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி.
அன்புச் சகோதரி வனஜா,
தங்களுடைய விருப்பமான ஞாயிறும் திங்களும் நிழற்படம் - மிக அபூர்வமானது . ஆனால் தனி ஸ்டில் தான் என்னிடம் உள்ளது. 40 ஆண்டுகள் கழித்து தற்போது தங்களுக்காக அதனைத் தேடியெடுத்து வெளியே எடுத்து நிழற்படமாக்கித் தந்துள்ளேன். இது நிச்சயம் அனைவருக்குமே உள்ளம் மகிழ்வூட்டும் என்பதில் ஐயமில்லை.
http://i872.photobucket.com/albums/a...psc6ab26b2.jpg
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒன்றினைத் தவிர மற்றவை அனைத்தும் நம் பம்மலாரின் கைங்கரியம் தான். அவருக்குத் தான் நன்றி. ஏற்கெனவே மற்றொரு திரியில் பதியப் பட்ட நிழற்படங்களே.
அன்புடன்
ராகவேந்திரன்
ஞாயிறும் திங்களும் நிழற்படத்தில் நம்மவரைக் கண்ட கண்களை அகற்ற மனமில்லை..
நன்றி நம் இராகவேந்திரருக்கு..
எடுத்தவரை இப்படத்தின் படச்சுருள்கள் இப்போதும் இருக்குமா?
வாசுதேவன் அவர்களே
குழந்தைகள் கண்ட குடியரசு விவரணக் கட்டுரையும் அதில் மிளிரும் நடிப்பரசர் பற்றிய சிலாகிப்பும்..மிக அருமை..
மனநிறை நன்றிகள் உங்களுக்கு..
அன்புச் சகோதரி வனஜா
தங்களுக்காக மேலே தரப்பட்டநிழற்படம் முற்றிலும் கருப்பு வெள்ளையாக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது.
பயனுள்ளதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.
மெய்சிலிர்க்க வைத்த கட்டுரை... வாசுதேவன் அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும்..
மெத்தப்பொருத்தமாய் கூடுதல் சித்திரங்கள்... இராகவேந்திரருக்கு நன்றிகள்..
கண்பட் அவர்கள், கோபால் அவர்களின் களைகட்டும் பதிவுகளுக்கும்
வரைகலை வனஜா அவர்கள் வழங்கிய +வழங்கப்போகும் விழிவிருந்துகளுக்கும்
பாராட்டுகள்+ நன்றிகள்....
நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசையில் அந்தத் தங்கச்சுரங்கத்தில் இருந்து அள்ள அள்ளக் குறையாத கட்டிகளை வெட்டி வெட்டித்தரும் அனைவரோடு என் சிறுகரமும்...
படம்: பாபு
பாடல்: இதோ எந்தன் தெய்வம்
உடல்மொழிக் கவிதை:
குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
உலகில் எங்கும் காணா அந்த அரிய கலைதேவன் நமக்காய் வந்தது நம் அதிர்ஷ்டம்...
2) படம்: படிக்காத மேதை..
பாடல் : ஒரே ஒரு ஊரிலே..
பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..
பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என
ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?
Nature OR Nurture?
NT is always a wonderful puzzle to me!
சில கேள்விகளுக்கு விடையில்லை!
சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே அழகு!
Madam Vanaja,
Excelent drawings of NT and his pairs.
Mr Kaveri Kannan,
Amazing write up of our NT
காவேரிக்கண்ணன் சார்,
தங்கள் கனிவான பாராட்டிற்கு என் அன்பு நன்றிகள்.
தங்களின் நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசை பதிவு (பாபு பற்றும் படிக்காத மேதை) உன்னதம். தங்களின் தன்னிகரில்லா தமிழ் உணர்வைப் போற்றுகிறேன். தங்கள் தமிழைப் படிப்பதில் பெருமை அடைகிறேன். நன்றி! "கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?" எனக் கேட்டிருந்தீர்கள். அவர் 'தெய்வப் பிறவி' அல்லவா!
அன்புள்ள திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களே,
நடிகர் திலகம் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நடித்த "குழந்தைகள் கண்ட குடியரசு" படத்தைப் பற்றி நீண்ட, ஆனால் சுவையான ஒரு கட்டுரையை அளித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.
தாங்கள் மீண்டும் வருகை புரிந்தது இந்தத் திரிக்கு புதிய வேகத்தைக் கொடுத்து விட்டது. பம்மலாரும் இணைந்தால்? ஆஹா! (பம்மலாரே:- காதில் விழுகிறதா?)
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. காவேரி கண்ணன் அவர்களே,
நடிகர் திலகத்தின் உடல் மொழிக் கவிதை அபாரம். அதை விட தங்கள் தமிழ் மிகவும் அபாரம்!
அதே "பாபு" படத்தில், முதல் முறை பாலாஜி வீட்டில் கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தேவி, இவரது இலையில் இருந்து பதார்த்தத்தை எடுத்து சாப்பிட்டவுடன், பயந்து, பாலாஜி மற்றும் சௌகாரிடம் குழந்தையை மன்னித்து விடுங்கள் என்று கூறியதும், இருவரும் மாறி மாறி ஸ்ரீ தேவியை, இவ்வளவு நாள் கத்திரிக்காயே சாப்பிட மாட்டாள், இப்போது சாப்பிடுகிறாளே என்று கூறியவுடன், நடிகர் திலகத்தின் முகத்தில் வினாடி நேரத்தில் தோன்றி மறையும் அதிர்ச்சி, அதிசயம், நம்ப முடியாத தன்மை, கண்ணீர் மற்றும் ஆனந்தம்! Spontaneity - இந்த வார்த்தையின் இலக்கணம் நடிகர் திலகம் வகுத்ததன்றோ!
தொடருங்கள்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி