Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
வசந்த மாளிகை களேபரங்களுக்கு நடுவே என்னுடைய பதிவையும் படித்து அதற்கு பதிலளித்த தங்களுக்கு மிகவும் நன்றி.
சென்ற ஆண்டு இதே நாளில் நமது தாய்த்திரியின் ஒன்பதாம் பாகத்தில் "வசந்த மாளிகை" 39-வது உதய தினத்தை முன்னிட்டு தாங்கள் பேசும் படம், பிலிமாலயா, பொம்மை, மதி ஒளி உள்பட பல்வேறு தலைசிறந்த சினிமா ஏடுகளில் வசந்த மாளிகை பற்றிய விசேஷப்பதிவுகள் வெளியானதை அள்ளி அள்ளி வழங்கினீர்கள். அவையனைத்தும் எங்கள் சேமிப்பில் உள்ளன. இன்றைய தினம் அவற்றை மீண்டும் பார்வையிட்டபோது மலைத்துப்போனேன். பம்மலாரின் தொண்டே பெரும் தொண்டு என்று அதிசயித்தேன். அந்த ஒரு திரைக்காவியத்துக்கு மட்டும் எவ்வளவு ஆவணங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள் (சரியாகச்சொன்னால் வசந்த மாளிகைக்கு மட்டுமே 54 ஆவணங்கள். அனைத்தும் விலைமதிப்பில்லா மாணிக்கங்கள்). இவற்றின் பின்னே இருப்பது தங்களது தளராத முயற்சி, அயராத உழைப்பு.
தற்போது தாங்கள் வழங்கியுள்ள இன்னொரு அசத்தும் ஆவணமான 'எதிரொலி' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட ஒர்க்கிங் ஸ்டில் மிக மிக அருமை. நடிகர்திலகம் தன் அற்புத நடிப்பை செய்து காட்ட அதை இயக்குனர் சிகரம் கே.பி. அவர்கள் (ஸ்டில்லில் எவ்வளவு இளமையாக இருக்கிறார்) கூர்ந்து கவனிக்கும் அந்த அற்புதப்பதிவுக்கு ஒரு சிறப்பு நன்றி. ஏனென்றால் இதுபோன்ற அரிய பொக்கிஷங்கள் எங்கும் கிடைக்காது.
வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்கு நடுவே, மறவாமல் 'பாவ மன்னிப்பு' திரைக்காவியத்தின் பாட்டுப்போட்டி விளம்பர ஆவணத்தையும் தந்து அசத்தி விட்டீர்கள். அசத்தல் மன்னருக்கு அளவில்லாத நன்றிகள்.