// ரகசிய போலீஸ் 115 - 1968 பொங்கல் முன்பு வந்த சூப்பர் ஹிட் படம் //
Is it a 100 days movie..?.
If so, in which theatres..?. any ads?.
Printable View
// ரகசிய போலீஸ் 115 - 1968 பொங்கல் முன்பு வந்த சூப்பர் ஹிட் படம் //
Is it a 100 days movie..?.
If so, in which theatres..?. any ads?.
11.1.1968 அன்று வந்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
திருச்சி - ஜூபிடர் மற்றும் சேலம் - பேலஸ் இரண்டு அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அன்றைய தினத்தந்தி பேப்பரில் விளம்பரம் வந்துள்ளது .
சென்னை - கோவை - மதுரை போன்ற நகரங்களில் 10 வாரங்கள் மேல் ஓடியது .
20 அரங்குகள் 50 நாட்கள் ஓடியது .
ரகசிய போலீஸ் 115 ஓடிக்கொண்டிருந்த 43 வது நாளில் தேர் திருவிழா படமும் 11 வது வாரத்தில் குடியிருந்தகோயில் படமும் வந்த நேரத்தில்
ரகசிய போலீஸ் 115 பல இடங்களில் நூறு நாட்கள் ஓடுவது தடைப்பட்டது .
1968ல் வசூலில் இடம் பெற்ற 5 படங்களில் இடம் பெற்றது .
1. குடியிருந்தகோயில்
2. ஒளிவிளக்கு
3. தில்லானா மோகனாம்பாள்
4. ரகசிய போலீஸ் 115
5. பணமா பாசமா.
வினோத் சார்,
மதியம் வீட்டுக்கு லஞ்சுக்கு போனபோது தலைவரின் குடியிருந்த கோயில் படத்தின் 'நான் யார் நான் யார்' பாடல் ஒளிபரப்பானது (சன் லைப்). எத்தனையோ தடவை இந்த பாடலை பார்த்திருந்தாலும் இன்னும் எனக்கு ஒரு புதிய பாடலாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் தலைவரின் நடிப்பை பார்த்து பிரம்மித்து போனேன். இந்த ஒரு பாடிலிலே நவரசத்தையும் காட்டுகிறார்..எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஒரு பாடலின் நடிப்பின் முன் வேறு யாரும் நிற்க முடியாத நடிப்பு..அதை பார்க்க பார்க்க மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போதே இன்னொரு சேனல் (முரசு) அதே பாடலை ஒளிபரப்பியது. இந்த பாடல் மட்டும் குண்டடி படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதா.. 1967 மற்றும் 1968ல் வெளிவந்த படங்களில் சில காட்சிகள் குண்டடி படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்..அடிமைப்பெண் படத்தில் கூட சில காட்சிகள் முன்பு எடுக்கட்டபட்டவை என்று நினைக்கிறேன்..அதே போல ரகசிய போலீஸ் படத்திலும் ஜஸ்டின் சண்டை காட்சி அப்படி எடுக்கப்பட்டதா..இது என் நீண்ட நாள் ஐயம்..தீர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற ஜஸ்டின் சண்டைகாட்சி 1966லே [குண்டடி படுவதற்கு முன் ] படமாக்கப்பட்டது .
அதே போல்
புதிய பூமி
அன்னமிட்டகை
ஒருதாய் மக்கள்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
காவல்காரன்
குடியிருந்த கோயில்
நம்நாடு
தலைவன்
போன்ற படங்கள் 1966ல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது .
அதன் விவரம் பின்னர் பதிவிடுகிறேன் .