சார்
நாம் கூட ஒரு முன் உதாரணமாக இருக்கலாமே...எதிர்பாற்பதர்க்கு பதில் !
Rks
Printable View
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
புரட்சித் தலைவர் பற்றி ஏதாவது வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார் என்று என்னைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். புரட்சித் தலைவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்குதான் நான் பதில் அளிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி எங்கள் திரியில் தவறாக விமர்சனம் செய்வோம்.(அரசியல் ரீதியிலேயே எடுத்துக் கொள்வோம்) ஆனால், நீங்கள் யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அது நியாயமாகுமா?
திரு. முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி வெளியாகும் என்று சகோதரர் திரு.செல்வகுமார் சில மாதங்களுக்கு முன் கூறினார். ‘எதிர்மறையாக இருந்தால் அதை தவிருங்களேன்’ என்று நீங்களே கோரினீர்கள். இதை ஏற்றுக் கொண்டு அவர் அந்தப் பேட்டியை பதிவிடுவதை தவிர்த்தாரே? அதேபோன்ற கோரிக்கையைத்தான் நாங்களும் வைக்கிறோம்.
அரசியல் ரீதியாக புரட்சித் தலைவர் பற்றிய விமர்சனங்கள் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எதிர்மறையான விமர்சனத்தை தவிர்க்கலாமே? என்றுதான் கூறுகிறோம். அப்படி உங்களுக்கு புரட்சித் தலைவரின் குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கை சரியில்லை என்று தோன்றினால், தாராளமாக அதைப் பற்றி நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கலாம். நானும் விளக்கம் அளிக்கத் தயார். அதை விட்டு, மதுரை திமுக மாநாட்டில் புரட்சித் தலைவர் ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார் என்று குறிப்பிட்டால், ஊழலுக்கு வக்காலத்து வாங்கியவர்களை எல்லாம் நாங்களும் பட்டியலிட முடியுமே? அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே கரண்ட் அஃபேர்ஸ் என்ற பிரிவு இருக்கிறது என்றால் நீங்களும் உங்கள் அரசியல் கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கலாமே? நானும் வந்து கலந்து கொள்கிறேன். எனக்கும் நீங்கள் ஆதரித்த 1975 அக்டோபர் 2 வரையிலான காங்கிரஸ் பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவோம்.
அதை விடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையே, ரஷ்ய மையால் கிடைத்த வெற்றி என்று சிவாஜி கணேசன் அவர்களின் திரியிலேயே கருத்து கூறுகிறீர்கள். அப்படி சொன்னவர்களை ‘‘நாம நல்லா தோத்துட்டோம். அதை முதல்ல புரிஞ்சுக்கங்க. அப்போதுதான், அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறுவோம்’’ என்று கூறி பெருந்தலைவர் காமராஜரே கண்டித்தார் என்று திரு.சோ அவர்களும், நவசக்தி நாளிதழ் ஆசிரியராக இருந்த திரு.பி.சி.கணேசன் அவர்களும் பதிவு செய்துள்ளனர்.
திரு.செல்வகுமார் சார் சொல்வது போல, எங்களுக்கும் நண்பர்களான திரு.ராகவேந்திரா சார், திரு.ரவி சார் போன்றவர்களை திரு.கோபால் அவர்கள் கடுமையாக விமர்சிக்கும்போதும், நீங்கள் கூறினீர்களே எகிப்து அதிபர் நாசர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வீடு தேடி வந்தார் என்று. ஆனால், நாசர் விசாரித்த பிறகுதான் நேருவுக்கே திரு.சிவாஜி கணேசன் அவர்களை தெரியும் என்று திரு.கோபால் கூறுகிறார். அதையெல்லாம் கேட்காமல், திரு.செல்வகுமாரை கேட்கிறீர்களே? நியாயமா?
நான் கடந்த வாரம் மதுரகானம் திரியிலேயே திரு.கோபால் அவர்களை கேட்டேன். ‘திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா?’ உடனுக்குடன் பதில் சொல்லாதீர்கள், நேரம் எடுத்துக் கொண்டு, மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களுக்கு கைகொடுக்கும். எழுத்தாற்றல் மிக்க நீங்கள் நல்ல கட்டுரைகள் எழுதினால் பாராட்டுக்கள் குவியும், நாங்களும் மகிழ்வோம்’ என்று நட்பு ரீதியில் ஆலோசனையும் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டார். ‘எனக்கும் சண்டை போடுவதில் விருப்பமில்லை’ என்று கூறினார். நானும் மகிழ்ச்சி தெரிவித்தேன்.
ஆனால், 3 நாட்களில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ‘தூங்காதே, திருடாதே, ஏமாற்றாதே என்று பாடிய புரட்சித் தலைவர் செய்ததென்னவோ அதைத்தான் என்று கூறுகிறார். என்ன இது? மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இருக்கிறதே? என்று வெறுத்துப் போய்விட்டேன். நீங்களும் கேட்க மாட்டீர்கள். நாங்களும் எதிர்வினை ஆற்றக் கூடாது என்று கூறுவது நியாயமா? என்பதை நீங்களே சொல்லுங்கள் திரு. முரளி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நவரச நாயகன் நம் தலைவர்..
http://i57.tinypic.com/2u6iblt.jpg
Tdy evening show at Madurai central theatre
ADIMAIPEN
HOUSE FULL
Information from Mr.R.Saravanan - Madurai