பாடினார் கவிஞர் பாடினார் – 3
*
வணக்கம்”
நிமிர்ந்து பார்த்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிற்கு ஆச்சர்யம்.. “வாங்க பால முருகன்.. என்ன இந்தப் பக்கம்”
“சும்மாத் தான் வெங்கடேஷ்ங்க்ணா.. ஜஸ்ட் பார்க்க வந்தேன்..வழக்கம் போல பிஸியா..’
“மியூசிக்கே மூச்சா இருக்கறவனோட பிஸியைக் கேக்கணுமா என்ன.. ஒரு டியூனை என்னோட அஸிஸ்டெண்ட் போட்டுட்டாரு..பாட்டுக்கு யாரைப் போடலாம்னு யோசனையில இருக்கேன்…சொல்லுங்க”
“இதோ” கூடவந்தவரைக் காண்பித்தார் பாலமுருகன் “இவரும் கொஞ்சம் நல்லாவே பாட்டு எழுதுவார்.. டென் த் படிக்கறச் சொல்லவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்காராக்கும்..பாரதிதாசனே முன்னுரை எழுதியிருக்கார்”
“ஐ ஸீ” என்று சற்றே அசுவாரஸ்யத்துடன் பார்த்தார் இசையமைப்பாளர்.. ரொம்ப யங்கா இருக்க்காரே நல்லா எழுதுவாரா.. நான் நம்ம கவிஞரையே (கண்ணதாசன்) இன்னொரு பாட்டும் எழுதச் சொல்லிடலாம்னு ப்ரொட்யூஸர்கிட்டக்க சொல்லியிருந்தேன்..ம்ம் சரி.. டைரக்டர் மாதவன் சொல்லியிருந்தவர் தானே இவர்.. டைரக்டரே ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருக்கார்.. என்ன கேக்கறீங்களா..”
ஆஹா “ என்றார் பாலமுருகன்.. கூடவே தலையாட்டினார் வந்திருந்த கவிஞர்.
சிச்சுவேஷன்னு ஒண்ணும் இல்லை.. ஹீரோயின் காலேஜ்ல படிச்சவ ஆனாலும் கிராமத்துப் பொண்ணு
“ஆஹா”
“என்னக் கிண்டல் பண்றா மாதிரி இருக்கு ..சரி விடுங்க.. அவளோட ஹஸ்பெண்ட் நிலத்துல கிணறு தோண்டறான்..ஆழம் ஆழமாத் தோண்டினாலும் தண்ணி வரலை..கட்டக்கடோசில தண்ணிவருது..ஹீரோ மயக்கமாயிடறார்.. ஹீரோயின் அந்தத் தண்ணியையே ஹீரோ மொகத்துல தெளிக்கறார்..அடுத்த சீன் பாட்டு வரணுமாம்..”
“டூயட்டா”
“ஏங்க ஹீரோ நிலத்துல பாடுபட்டு முன்னேறுகிற மாதிரி கதையாம்.. டூயட்லாம் நம்ம கவிஞரே சூப்பராப் போட்டுக் கொடுத்துட்டார்.. இது கிராமக் கூத்து மாதிரி..ரெண்டு பொண்ணுங்களுக்குள்ள சண்டை வர்ற மாதிரி இருக்கணுமாம்..”
“மூணு பொண்ணு வச்சுக்கலாமா” உடன் வந்திருந்த கவிஞர் கேட்க “பரவாயில்லையே சரி யாருக்குள்ள சண்டை வைக்கறாமாதிரி” என்றார் இசையமைப்பாளர்..
“மூணு பொண்ணுன்னா திரிவேணி சங்கமமா வெச்சுக்கலாம் கங்கை யமுனை சரஸ்வதி..ஆனாக்க இது தமிழ்க் கிராமம் ஆச்சுதுங்களே.. காவேரி வைகை அப்புறம் ம்ம் கங்கையையே கொண்டுவந்துடலாம்..
“கொஞ்சம் இருங்க..என் உதவியாளரைக் கூப்பிடறேன்..ராஜா” உதவியாளர் வந்தார் (பிற்காலத்தில் இளையராஜா எனப் பிரபலமானவர்).. “ நீங்க ஒரு மெட்டுப் போட்டீங்கள்ள..அதப் போட்டுக் காட்டுங்க..இவர் எப்படி பாட்டு தர்றார்னு பார்ப்போம்”
ராஜா மெட்டுப் போட அந்தப் கவிஞரின் பயணம் அந்தப்பாட்டிலிருந்து துவங்கியது.. அந்தக் கவிஞரின் பெயர் முத்துலிங்கம்.. பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்தபொன்னியம்மா..
சைலண்ட்டாக ஆரம்பிக்கும் பாடல் பொன்னி வைகை கங்கை என கச்சைகட்டிக்கொண்டு மூன்று நதிகளும் சண்டை போடுவது சுவாரஸ்யமாகவே இருக்கும்..(உரையாடல் எல்லாம் என் கற்பனையூரில் நடந்தது!)
https://www.youtube.com/watch?featur...&v=Uo7QPV9J8YQ
*
சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் பிற்ந்தவர் முத்துலிங்கம்..பத்தாம் வகுப்பு வரை படிப்பு வரவில்லை..ஆனால் கவிதை வந்தது.. பத்தாம் வகுப்பையே தனிக்கல்வி முறையில் படித்துத் தேறினார் அவர். பின்னர் முரசொலியில் வேலை வாய்ப்பு..
பட்டிக்காடா பட்டணமா வசனகர்த்தா பாலமுருகனின் பழக்கம் ஏற்பட்டு பின் பொண்ணுக்குத் தங்கமனசில் முதல்பாடல்.. ம.தியின் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையிட்டாள் பாடல் எழுத வாய்ப்பு வந்தது..
தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவன் இருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப்பாடுகின்றேன்.. என வாணி ஜெயராமின் உருக்கமான குரலில் வீணை நாதமும் சேர்ந்து கொண்டு மிக அழகாக அமைந்தது அந்தப் பாடல்
அது ஹிட் ஆக தொடர்ந்து ம.தி படங்களில் எழுத ஆரம்பித்தார்..
மீனவ நண்பன் என்ற படம்..ஸ்ரீதர் இயக்கி ம.தி நடித்து முழுவதும் ஷீட் செய்யப்பட்ட நிலை..திடீரென்று எம்.ஜி.ஆருக்கு ஒரு சிந்தனை.. நம்ம முத்துலிங்கத்துக்குப் பாட்டு கொடுத்தீங்களா.. இல்லீங்க..
சரி சரி..அவரை டூயட் எழுதச் சொல்லுங்க
படமே முடிஞ்சாச்சேங்க
பரவால்லை..கனவுக்காட்சியில சேர்த்துக்கலாம்..
அப்படி எழுதியபாடல் தான்
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
*
https://www.youtube.com/watch?featur...&v=Uo7QPV9J8YQ
*
இன்று போல் என்றும் வாழ்க படத்திற்கு இவர் எழுதிய அன்புக்கு நான் அடிமை பாடலும் மிகப் பிரபலம்..
அதுவந்த கதையும் கொஞ்சம் சுவாரஸ்யம் தான்.. பாடல் எழுதுகையில் தயாரிப்பாளர் ஏதோ சொல்லிவிட்டாராம்.. கவிஞர்கள் எல்லாம் கொஞ்சம்கோபக்காரர்கள் போல.. எனில் இவருக்கும் சுர்ரென்று கோபம் வந்துவிட்டது..எழுந்து சென்று விட்டாராம். பின் எம்.எஸ்.வியும் டைரக்டரும் தான் அவரை சமாதானப் படுத்தி அழைத்துவந்தார்களாம்..அதற்காக போட்ட வரிகள் – அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை..
ம.தி பாடுவதாக எடுக்கப் பட இன்ஸ்டண்ட் ஹிட்..
**
இவர் எழுதிய மேலும் சில பாடல்கள்
ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ – பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு எழுந்து –அதே படம்
சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம் – உதய கீதம்
மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ – கிழக்கே போகும் ரயில்
சின்னச் சின்ன ரோஜாப்பூவே – பூவிழி வசலிலே
இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
இதயம் போகுதே –புதிய வார்ப்புக்கள்..
பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – எங்க ஊரு ராசாத்தி
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் – தூறல் நின்னு போச்சு
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக் கொள்ளும் (ஈரமா இருந்திருக்குமோ)
8
நாம் பார்க்கப் போவது
ஆறும் அதுஆழம் இல்லை..அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது அய்யா
அது அந்த சின்ன ரம்யா கிருஷ்ணன் மனசு தான்யா
https://www.youtube.com/watch?featur...&v=7oEyzJmlE9k
**
அடுத்த பாடலாசிரியர் கவிஞர் என்பதை விட நாவலாசிரியர் , அஸிஸ்டெண்ட் டைரக்ஷன், நடிப்பு எனப் பிரபலமானவர்..
அவர்ர்ர்ர்..
(அப்புறமா வாரேன்) :)