http://i64.tinypic.com/282e2hs.jpg
http://i65.tinypic.com/34zmxbm.jpg
http://i67.tinypic.com/5b1a50.jpg
http://i63.tinypic.com/2cpovti.jpg
http://i64.tinypic.com/e7xkjt.jpg
http://i65.tinypic.com/2954k5s.jpg
Printable View
“பிறக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கலாம்
தாயின் பிரசவ வலி...
அதனால்தான் அம்மாவின் வலி உணர்ந்து ,
அதுவும் அழுது கொண்டே பிறக்கிறதோ ..?”
... படித்தவுடன் பாராட்டினேன் நண்பரின் நல்ல கற்பனையை..!
.... அது சரி....தாய்மையின் பிரசவ கால பெரும் வலியை நீங்களும் உணர வேண்டுமா..?
ஒரு கதையோ , கவிதையோ எழுதிப் பாருங்கள்..!
ஆம்.... ஒரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் .... ஒரு பேறு கால பெரும் வலியே..!
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் , எம்.ஜி.ஆரின் “மீனவ நண்பன்” படத்திற்காக ஒரு பாடல்...
கவிஞர் முத்துலிங்கத்தை கூப்பிட்டு பாடல் எழுதச் சொல்லி இருக்கிறார்கள்..!
கையில் பேப்பரும் , பேனாவும்...!
கண்களை மூடி , கதாநாயகி லதாவை கண் முன்னே கற்பனையில் கொண்டு வந்த கவிஞர் எழுதினார் இப்படி :
"அழகுகள் உன்னிடத்தில் அடைக்கலம்...
உன் அங்கங்கள் மன்மதன் படைக்கலம் "
எழுதி முடித்த திருப்தியோடு இந்த வரிகளை இயக்குனர் ஸ்ரீதரிடம் வாசித்துக் காட்டினார் கவிஞர் முத்துலிங்கம்...
“இன்னொரு தடவை வாசியுங்க..” என்றார் ஸ்ரீதர்....வாசித்தார் கவிஞர்....
ஸ்ரீதர் தன் நகத்தை கடித்துக் கொண்டே கேட்டார் : "படைக்கலமா ? படைக்களமா ?"
முத்துலிங்கம் அசரவில்லை ... "கலம் என்றால் ஆயுதம் ; களம் என்றால் யுத்தம் நடக்குமிடம்.... இரண்டும் எழுதலாம் .... நான் எழுதியது படைக்கலம்.. ."
ஸ்ரீதர் இன்னும் தீவிரமாக நகம் கடித்தார் .....அவருக்கு திருப்தியாகவில்லை...!
எம்.ஜி.ஆர். வந்து கேட்டால் என்ன சொல்வாரோ...?என்ற கவலை அவருக்கு..!
முத்து முத்தாக வியர்வை அரும்பியது முத்துலிங்கத்திற்கு...
ஸ்ரீதர் என்ன நினைத்தாரோ...”சரி..இருக்கட்டும்” என்றார்...
இப்போதுதான் மூச்சு வந்தது , முத்துலிங்கத்திற்கு..
திடீர் என இடையில் ஒரு குரல்.. “அண்ணே..”
முத்துலிங்கம் திகைத்து திரும்பிப் பார்த்தார்... இசையமைப்பாளர் எம்.எஸ்.வி...
“என்ன..?” என்றார் ஸ்ரீதர்....
எம்.எஸ்.வி. கைகளால் காற்றில் கோலம் வரைந்து கொண்டே இப்படிச் சொன்னார்... “அந்த முதல் வரியில் வருதே அடைக்கலம்..?”
“ஆமாம்...அதனால் என்ன ..?”
“அதைக் கேட்டா எனக்கு ஏதோ சர்ச் பாதிரியார் ஞாபகம் வருதுண்ணே..”
ஸ்ரீதர் , கவிஞர் முத்துலிங்கம் இருவருமே திகைத்து நின்றார்கள்... !
இயக்குனர் ஸ்ரீதர் , முத்துலிங்கத்தின் முகத்தைப் பார்க்க ....
....முத்துலிங்கம் எம்.எஸ்.வி.யைப் பார்க்க....
எம்.எஸ்.வி.யோ எம்.ஜி.ஆர். வந்து விடப் போகிறாரே என கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க....
வேறு வழியில்லை...!
அந்தக் கவிஞன் முத்துலிங்கம் மூச்சையடக்கி , கண்களை மூடி சில நொடிகள் அமர்ந்து இருந்தார்....அதன் பின் பேனாவை எடுத்து , இன்னொரு பாடலை பிரசவித்தார்....
அவர் பிரசவித்த அந்தப் பாடல் வரிகள் , எல்லோருக்கும் பிடித்துப் போனது...
எம்.ஜி.ஆருக்கும் ...
ஏன்..? நமக்கும் கூட...!
அதுதான் ஜேசுதாஸ் – வாணி ஜெயராம் குரல்களில் , நாம் கேட்டு ரசிக்கும் இந்தப் பாடல்:
"தங்கத்தில் முகமெடுத்து , சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ...
நீ... மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ..?”
# இந்த வரிகளை ஈன்றெடுக்க எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்..?
# “பிறக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கலாம் தாயின் பிரசவ வலி”...
ஆனால்.... பார்ப்பவர்களுக்கும் , படிப்பவர்களுக்கும் தெரிவதில்லை படைப்பாளியின் வலியும் , வியர்வையும்...!
courtesy net
http://i65.tinypic.com/4lge20.jpg
மதுரை மாநகரில் கள்ளழகர் விஜய திருவிழா !!
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். வழங்கும்
"மதுரை வீரன் " வெற்றி உலா வரும் திருவிழா !!!
வெள்ளித்திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு ஆன பின்பும் , மறுவெளிஈட்டில்
22/04/2016 முதல் நாள் வசூல் ரூ.19,100/- ஈட்டியதாக மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்
தகவல் தெரிவித்தார் .
தமிழ் இந்து -23/04/2016
http://i68.tinypic.com/2vkx16p.jpg