http://i65.tinypic.com/10p84yr.jpg
http://i64.tinypic.com/14tla8m.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள் " வெளியான நாள் 23/05/1976 வெளியாகி, 43 ஆண்டுகள் நிறைவு.
கோவை செழியன் தயாரிப்பில், நாஞ்சில் கே. மனோகான் கதை வசனத்தில் உருவானது .படகோட்டி படத்தை ஒளிப்பதிவு செய்த பி.எல்.ராய் இந்த படத்திலும் திறமையை காட்டினார் .கே.சங்கர் இயக்கம் .
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் உருவான பாடல்கள் :
1.ஆடிய பாதங்கள் அம்பலத்தில் - பி.சுசீலா
2. பழத்தோட்டம் என் தோட்டம் _ வாணி ஜெயராம்
3. கந்தனுக்கு மாலையிட்டால் - வாணி ஜெயராம்
4. வாரேன் வழி பார்த்திருப்பேன் - டி.எம்.எஸ். .டி.கே.கலா
5. நாளை உலகை ஆள வேண்டும் - கே.ஜே .ஜேசுதாஸ் - எம்.எஸ்.வி.
6. நான் மாட கூடலில் - பி.சுசீலா
குமரிக்கோட்டம் படத்தினை ஒப்பிடும்போது இந்த படத்தில் எம்.எஸ். வி.யின் இசை திறமை சற்று குறைவு என்று சொல்லலாம்
சண்டை காட்சிகள் அபாரம் . குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் மான்கொம்பு சண்டை காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சுறுசுறுப்பும், விறுவிறுப்பும், வேகமும் , ஸ்டெப்புகளும் , கிடுக்கி பிடிகளும் கலக்கல் மட்டுமல்ல அசத்தல் .அந்த சண்டை காட்சியில் ரசிகர்கள் ஆரவாரம், அலப்பரை அரங்கை அதிர வைத்தது .படத்தின் உயிர்நாடியாக இந்த சண்டைக்காட்சி திகழ்ந்தது .இந்திய திரைப்பட உலகில் எந்த நடிகரும் இப்படிப்பட்ட சண்டை காட்சியில் நடிக்கவோ,ரசிகர்களை கவரும் வண்ணம் சோபித்த வரலாறில்லை . அந்த காலத்தில் பத்திரிகை விமர்சனங்களும் வெகுவாக புகழ்ந்து தள்ளின .
நாகேஷ்,- தேங்காய் ஸ்ரீநிவாசன் நகைச்சுவை அரசியல் நெடியுடன் அமர்க்களம் .
நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு வில்லன் வேடம் திறம்பட \செய்திருந்தார் .
ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் முதல் நாள் நண்பர்கள் /ரசிகர்களுடன் மேட்னி காட்சி பார்த்து ரசித்தது மகிழ்ச்சியான தருணம் .
ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் 101 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம். 100 வது காட்சிக்கு வில்லன் நடிகர் கே.கண்ணன் வருகை தந்து சிறப்பித்தார் .ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர் .
சாந்தம் அரங்கில் 75 நாட்கள் ( தினசரி 4 காட்சிகள் ) ஓடியது .100நாட்கள் 3 காட்சிகளில் ஓடியதற்கு சமம் . ஸ்ரீகிருஷ்ணாவில் 82 நாட்கள் , உமாவில் 68 நாட்கள் கமலாவில் 50 நாட்கள் ஓடியது . மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி வெற்றிநடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
#மக்கள்திலகத்தின் #டெம்ப்ளேட் (Template)
மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு 1979ல் மதுரை மாவட்டம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தபோது, நடந்த சம்பவம். மார்ச் மாதம் 3ம் தேதி அவரிடம் பதினைந்து வயதிலிருந்து மக்கள் திலகம் அவர்களின் தேவையான பணிகளை கவனித்து வந்தவர் சபாபதி என்பவர். வெளியூர்களுக்கு செல்லும் போது, கூடவே செல்பவர். இன்னும் சொல்லபோனால் மக்கள் திலகம் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படிபட்ட இவர் எப்போதுமே மக்கள் திலகம் அமர்ந்து செல்லும் காரில் தான் கூடவே செல்வார்.
திடீரென ஒரு நாள் சபாபதிக்கு விபத்து நேர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குச் சென்று தன் உதவியாளர் சபாபதியையும், மற்றவர்களையும் பார்க்கும் பொழுது சபாபதிக்கு காயங்கள் மிக அதிகமாக இருந்த நிலையில் சபாபதி படுக்கையில் உணர்வற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த மக்கள் திலகம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். முக்கியமான டாக்டர்களிடம் இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தேவையானால் சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். வந்து தண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்.
அடுத்து இரண்டு நாளில் சபாபதி இறந்து விட்ட செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சற்று நேரம் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டார். பிறகு சபாபதி உடைய சடலத்தை மருத்துவ பக்குவத்துடன் சென்னைக்கு எடுத்து வர உத்தரவு இட்டார். அதன்படி, சபாபதியுடைய உடல் கட்சி தலைமை கழகத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசியல் மரியாதையுடன் அன்று மாலை மைலாப்பூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் திலகம் அவர்கள் இது போன்ற எவ்வளவோ பேர்கள் சவ அடக்கத்துக்கு காரிலும், நடந்தும் சென்று உள்ளார். தன்னிடம் 1957ல் இருந்து 1979வரை தன் கூடவே இருந்து தனக்கு வேண்டிய பணிகளை செய்து வந்த ஒரு நல்ல உடன்பிறப்பை இழந்து விட்டோமே என்று மன வருத்தத்தோடு கண்ணீர் சிந்தலோடு சபாபதியுடைய உடல் அடக்கத்தின் உடலை குழியில் வைத்தபொழுது முதல் ஆளாக நின்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிய மக்கள்திலகம் அவர்கள் மூன்று முறை கையில் மண்ணை அள்ளி குழியில் போட்டார். #இது #ஒரு #சாதாரண #விஷயம் #அல்ல தன்னிடம் வேலைசெய்யும் எவ்வளவுதான் நல்ல வேலைக்காரனாக இருந்தபோதிலும் அவன் ஒரு வேலைக்காரன்தான் என்று நினைப்பவர்கள் உலகத்தில் அதிகம் பேர், ஆனால் மக்கள் திலகம் அவர்கள் அப்படி அல்ல. இது அவருடைய வரலாற்றில் ஒரு பெரிய அம்சம் ஆகும்.
மக்கள் திலகம் மற்ற தலைவர்களைப் போல் மேடைப்பேச்சோடு நின்றுவிடாமல் தனது கொள்கைகளைத் தானும் கடைசிவரைக் கடைபிடித்தவர்.ஒவ்வொரு தனிமனித இதயங்களில் ஊடுறியவர்...
#அஇஅதிமுக #கட்சித்தலைமைகளே...!
புரட்சித்தலைவர் தனது கொள்கைகள் அனைத்தையும் ஒரு 'டெமப்ளேட்' ஆக (Template ) விட்டுச் சென்றுள்ளார்... #பொதுமக்களின் #இதயங்களில் #நேர்மையாக #ரீச் ஆகும் அத்தனை நல்ல விஷயங்களும் அதில் அடக்கம்.
தனிமனிதனின் வாழ்வில் புரட்சித்தலைவரின் பங்கீடு எந்தளவு உள்ளது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் மேற்கண்ட பதிவு...
தொண்டர்களல்லாத பொதுமக்களின் அன்பும் ஆதரவும் வேண்டுமென்றால் புரட்சித்தலைவர் வழியைக் கடைபிடித்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் மக்கள் சக்தி தான் மகோன்னத சக்தி...
இதன் மூலம்...எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளையும் அநாயாசமாக வெல்லலாம்...
ஏனெனில் எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளுக்கும் உங்களுக்கான விளக்கங்களை மக்களே அளித்து, ஆட்சிப்பீடத்தில் அமர்த்திவிடுவர்...
#மக்கள் #நீதிமன்றத்திற்கு #அத்தனை #அளப்பரியசக்தி...
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்...! முகநூலில் பாலு சார்................ Thanks wa.,
மக்கள் குரல் -25/05/2019
http://i67.tinypic.com/nq484n.jpg