-
இவர்களுக்கு ஒரு சல்யூட்!
--------------------------------------------
இந்தப் பதிவு உங்களை வெகு நிச்சயம் பரவசப்படுத்தும்!
சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்--கலைமகள் பூங்கொடி11
தனி நபர்களாக எம்.ஜி.ஆர் லெஜண்ட் என்று இதுவரை ஐந்து பகுதிகளை சிங்கப்பூரில் நடத்திக்காட்டிய ஜயண்ட்ஸ்!1
இதில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆரின் அசுர சாதனை ஒன்றை தனியே பதிவிடுவேன்11
இனி,,,விஷயத்துக்கு வருவோம்1
சென்னை வந்திருக்கும் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்--பூங்கொடியை நேற்று அடியேன் உட்பட கனரா வங்கி சரவணன் ராஜகோபால்--திரு கோபால கிருஷ்ணன்-திரு சிவாஜி பாபு முருகேசன்--திரு பாபு--திரு ஹயாத் ஆகியோர் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் சந்தித்து நேற்றைய எங்கள் மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டோம்!
அவர்கள் அறையின் உள்ளே நுழைந்த எங்களை வரவேற்றது---எம்.ஜி.ஆர்11
சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்--ஹோட்டலுக்குப் போனதுமே செய்த முதல் காரியம்11
வரவேற்பு அறையில் ஒரு சிறிய டேபிளில் எம்.ஜி.ஆர் படத்தை வைத்து வணங்கி விட்டு--தங்கள் அன்றைய நிகழ்ச்சியில் கவனம் செலுத்தியிருக்கிறார்11
எப்போது அவர் சென்னை வந்தாலும்--கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மாலை சூட்டி பிரார்த்தனை செய்து விட்டே மற்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவார்!
அன்றும்,,அதைப் போலவே--கலைமகள் பூங்கொடி-மற்றும் தம்முடன் வந்திருந்த வாணி ஆகியோருடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குச் சென்று விட்டார்!
திரும்பவும் தம் அறைக்கு வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி??
அவர் டேபிளில் வைத்திருந்த எம்.ஜி.ஆர் ஃபோட்டோவுக்குக் கீழே அழகான வெள்ளை விரிப்பு1 அந்த விரிப்பின் மேல் புன்னகையுடன் எம்.ஜி.ஆர்1 அவருக்கு எதிரே கொத்தாக சிரிக்கும் உதிரிப் புஷ்பங்கள்!!
நாம் வெறும் எம்.ஜி.ஆர் புகைப்படம் தானே வைத்தோம்! இந்த அலங்கார ஜோடனை எப்படி வந்தது?
ஹோட்டல் ரிஸப்ஷனை தொடர்பு கொண்டு கேட்க--அறையை சுத்தம் செய்ய இரு இளைஞர்களை அனுப்பியதாக ஹோட்டல் நிர்வாகி தெரிவித்து--ஏன்? ஏதேனும் பிரச்சனையா என்று கவலையுடன் கேட்க-
அவர்களை என் அறைக்கு அனுப்புங்கள் என்று சிங்கையார் சொல்ல--நடுக்கத்துடன் இரு இளைஞர்கள் வயது--16--17 --வருகிறார்கள்!
நடுக்கத்துடன் வந்த அந்த இரு இளைஞர்களும்--டேபிள் மேல் இருந்த எம்.ஜி.ஆர் என்னும் நோபிள் மனிதருக்கு நாங்கள் தான் அப்படி அலங்கரித்தோம்!! அதிகப் பிரசங்கித் தனமாக இருந்தால் எங்களை மன்னிச்சுடுங்க சார்! எம்.ஜி.ஆர் மேல் எங்களுக்கு பெரிய அளவில் இருக்கும் பக்தியின் காரணமாக--தலைவரை வெறும் டேபிளில் பார்க்க எங்கள் மனம் ஒப்பவில்லை!!
அந்த இரு இளைஞர்களின் விளக்கம்--அனுபவப்பட்ட சிங்கப்பூர் குழுவுக்கும்--அதைக் கேட்ட எங்கள் குழுவுக்கும் ஆனந்த அருவியைக் கண்கள் கொட்டிய அதே சமயம்--
ச்சே! இன்றைய ஆட்சியாளர்களின்--எம்.ஜி.ஆரால் பயன் பெற்றவர்களின் இன்றைய பாசாங்குத் தன பக்தியை எதிர்பார்த்தோமே!!எம்.ஜி.ஆரைப் பார்த்தே இராத ! இந்த இளைஞர்களின் இந்த செயலுக்கு முன்னால் அவர்கள் கால் தூசி பெறுவார்களா என்ற நியாயமான வெட்க உணர்ச்சி வெடித்துக் கிளம்பியது!!
இன்று வரை அந்த இரு இளைஞர்களும் தினமும் அந்த அறையில் புதிதாக மலர்களை அர்ப்பணித்து வருகிறார்கள்!!
கடற்கரை வந்து எனக்கு மாலை அணிவிக்கிறாயே? இதோ உன் அறையில் உனக்காகவே இப்படி பூக்களுடன் காட்சி தருகிறேன் பார்11 என்று சிங்கப்பூர் எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஜி.ஆர் கூறுவது போல் எனக்குத் தோன்றுகிறது!! உங்களுக்கு???... Thanks Friends...
-
இந்திய திரையுலகிலும் அரசியலிலும் வெற்றிக்குஒருவன். புரட்சித்தலைவர். எம்.ஜி.ஆர். தான் இன்றையதலைமுறை ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது அதனால்தான் படம் வரும்போதும் விழா.நடத்தும்போதும் புரட்சித்தலைவரின் படத்தையேபோடுகிறார்கள் அன்றைய நடிகர்கள் சிவாஜி. ஜெமினிகணேசன் ரவிச்சந்திரன் அரசியல்வாதிகள் கருணாநிதி மூப்பனார் படங்களைப் போடுவதில்லை ஆக என்றுமே சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் ஒருவர்தான் அவரைச் சொன்னால்தான் வெற்றி கிடைக்கும் என்றநம்பிக்கைத் தொடரட்டும் இந்த ரசிகர்களுக்கு தெரிந்தரகசியம் புரட்சித்தலைவரின் அருளால்வாழும் அரசியல்வாதிகளுக்கு தெரியாதது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்ற கெத்தேஇரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...
-
பல்லாண்டு வாழ்க!
----------------------------------
மக்கள் திலகம் இதில் ஜெயிலராக ஜொலித்திருப்பார் லதா மேடம் பொம்மை விற்கும் பெண்ணாக காட்சியின் தரம் இவரால் உயர் தரம்
கொடுமையான ஆறு கைதிகள் கடுமைகாட்டாமல் திருத்தும் திருத்தமான நடிப்பு
இந்திய வரைபடத்திற்கு பின் மனிதனுடைய படத்தினை வரைந்து கிழித்து விடுவார் பின் வரைபடத்தை ஒன்று சேர்க்க தவிக்கும் பெண்களிடம் மனித உருவத்தை ஒன்று சேர்க்க சொல்லி தனி மனிதன் திருந்தினால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்ற கருத்தை தெளிவு படுத்தி உயர்ந்த கருத்தை நம் மனங்களில் பதிவிடுவார்!
தேசிய விருதுக்கு தகுதியுள்ள படம்
இப்படத்தின் கடைசி காட்சி கண்கொள்ளா காட்சி ரசிகர்கள் இருக்கையை விட்டு கிட்டத்தட்ட பறப்பார்கள் விசில் விணணை பிளக்கும் திரையரங்கம் கரவொலியால் அதிரும்!
வில்லனை துரத்த அறுபது வயது இளைஞனான நம் மக்கள் திலகம் ஜீப்பின் பின்னால் ஓடுவார் இருபது வயது வாலிபனுக்கு கூட சாத்தியமில்லை
ரசிகர்களின் கரவொலிக்கு காரணம் இதுவே
அதோ எழுந்து வருகிறார்கள் பாருங்கள் அறிவு ஜீவிகள் இது கேமராவின் விந்தை என்று கூறி!
சமீபத்தில் எத்தனையோ ஆங்கில படங்கள் வருகின்றன ஆனால் நாம் ஏன் டோனிஜாவை கொண்டாடுகிறோம் மனிதனின் ஆற்றலுக்கும் கேமராவின் விந்தைக்கும் வித்தியாசத்தை அறிந்ததனால்!
ஹயாத்!... Thanks Friends...
-
-
-
குமுதம் வார இதழ் -07/11/18
http://i65.tinypic.com/2lvfhh5.jpg
http://i66.tinypic.com/kajyww.jpg
நாடோடி மன்னன் வெளியான தேதி 22/8/1958. குமுதம் இதழில் தவறாக 1956 என்று பிரசுரம் ஆகியுள்ளது .
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "படகோட்டி " திரைப்படத்தின் புகைப்படங்கள் சில
நண்பர்களின் பார்வைக்கு .
தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i67.tinypic.com/zmfnnt.jpg
-
-