https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a4&oe=5EF9EE11
Printable View
இன்று 46 ஆண்டுகள் நிறைவுப் பயணத்தில் "தங்கப்பதக்கம்"
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...41&oe=5EF95995
Thanks Nilaa
நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதம் வெளியான படங்களின் பட்டியல்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...18&oe=5EFAA157
Thanks nilaa
இன்றைய நாள் அன்றைய வருடம் - 01-06-1974, இந்திய திரைவானில் போலீஸ் படங்கள் பல வந்திருந்தாலும், முதல் முதலாக பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்ட படம் #தங்கப்பதக்கம். எஸ்.பி.சவுத்ரியாக நடிகர் திலகம் வாழ்ந்திருப்பார். அதுவரை இருந்த அதிக வசூல் படத்தை தங்கப்பதக்கம் முறியடித்தது. வெள்ளிவிழா
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e2&oe=5EF93ECChttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...dc&oe=5EF97D65
Thanks பழைய திரைப்பட நாளிதழ் விளம்பரங்கள்
ஆர்வமும் ஆசையும் மனம் முழுக்க...
தயக்கமும் அச்சமும் அலைக்கழிக்க...
துணிந்து விட்டேன்... துவங்கி விட்டேன்...
பிடிக்காதவர்களை ஒழிக்க புதிது புதிதாக வாத்தைகள் உருவாக்கி வக்கணைகள் பேசுவதில் வல்லவர்கள்தான் தமிழர்கள்...
அப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் கண்டு பிடித்த வார்த்தை OVer Acting....
திரையுலகின் தவப்புதல்வனை அவன் ஒரு சரித்திரம் என்று அறிய பட்டவனை விமரிசிக்க அவர்கள் எடுத்த ஆயுதம் Over Acting.....
ஓயாமல் எழுதினார்கள்.... உரக்க பேசினார்கள்... மிகைப்பட்ட நடிப்பு என்று.....
எழுதினார்கள், பேசினார்கள்..களைத்து கூட போய் விட்டார்கள் பேசியும் எழுதியும்.... Reaction ஒன்றும் இருந்ததில்லை நடிகர் திலகத்திடம் இருந்து....
Dr. T.S.நாராயண சுவாமி அவர்களுக்கு அளித்து பேட்டி ஒன்றில் இந்த over acting கூச்சலுக்கு உங்கள் பதில் என்ன? என்று அவர் கேட்க, முதன் முறையாக மனம் திறந்தார் நடிகர் திலகம்....
அவர் சொன்ன விளக்கம், அவர் மொழியிலே இங்கே தருகிறேன்.....
மிகை ஒன்றுமில்லை.... குறைத்தே தருகிறேன்...பொருத்தருள்வீர்....
இது அவரின் விளக்கம்...
நடிப்பென்பதே Exaggeration of expression தான்.
இதில் natural, un natural, over acting, under acting என்றெல்லாம் வகை படுத்துவதில் பொருளென்ன இருக்கிறது?
அரிதாரம் பூசிய அந்த கணமே natural என்பது போய் விடுகிறதே...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமென்பதில்லையே....... இந்த வரிகளை இயற்கையாக வாசித்தால் சாரம் எ ங்கிருக்கும்? மகாகவி ஊட்ட விரும்பிய உணர்ச்சி எப்படி பிறக்கும்?
இயக்குனர்கள் அறிவார்கள் உணர்ச்சி மிகு நடிப்பு எது, அந்த நடிப்பை யார் தர முடியும்? தான் இயக்கும் நடிகரின் limit எது எது என்பதை....
நான் நல்ல நடிகன் என்று என்னை இயக்கியவர்கள் கண்டதாலே உணர்வு பூர்வமான காட்சிகளில் காமிரா என் முகத்தை நோக்கி இருக்கும், close up காட்சிகள் அதிகம் இருந்தன...
நடிப்பில் என் எல்லை குறுகி இருந்தால் வேண்டாம் தொல்லை என்று கைகளால் முகத்தை மூடி கொள்ளுங்கள், தூணில் முகம் புதைத்து காமிராவிற்கு முதுகு காட்டுங்கள் என்றல்லவா சொல்லியிருப்பார்கள்?
Over acting என்ற குரல் ஓங்கி ஒலித்த ஒரு தருணத்தில் ஒரு படத்தில் அடக்கி வாசித்தேன்... அவ்வளவுதான் அதே critics திருப்பி அடித்தார்கள், சிவாஜி நடிப்பு சுகம் இல்லை என்று.....
அன்று நான் தீர்மானித்தேன். என் நாடக மேடை ஆசான்கள் சொல்லி தந்த பாடங்களை அப்படியே பின்பற்றுவது,
என் கற்பனையை உபயோகித்து என் திறமைகளின் எல்லைக்குள் நின்று நடிப்பது,
என்னுடைய ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது என்னவோ அதை மட்டும் தருவது என்று தீர்மானித்தேன்.
Over acting என்கிற பேத்தலுக்கு சிவாஜி கணேசனின் re action இதுவே...
இனி என்பார்வையில் இந்த over acting.....
தங்க பதக்கம் படத்தில் ஒரு காட்சி படமாக்க பட்டது.
சோ பார்த்து கொண்டிருந்தார் பட பிடிப்பை.
ஷூட்டிங் முடிந்ததும் நடிகர் திலகத்திடம் கேட்கிறார் இது over acting இல்லையா என்று.
சரி,இப்படி நடிக்கட்டுமா? என்று காமிரா இல்லாமல் சோ முன்னர் அதே காட்சியை வேறு மாதிரி நடித்து காட்டுகிறார் நடிகர் திலகம்... பிரமித்து போன சோ, இவ்வளவு அற்புதமாய் இருக்கிறதே, பின் ஏன் அப்படி நடித்தீர்கள் என்று கேட்டார்...
இப்படி நடித்தால் உன்னை போல் ஒரு நூறு பேரை கவரலாம்.
படம் வெளியான பிறகு பார், இந்த காட்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி என்று? நடிகர் திலகம் பதில் சொன்னார்...
படம் வெளியான பின்பு ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிகைகளும் பாராட்டின அந்த காட்சியை...
உயர் அதிகாரி ஒருவர் S.P.சவுத்திரியிடம் மனைவி இறந்து விட்ட செய்தியை சொல்லும் காட்சி அது....
இத்துடன் நிற்க விருப்பம் இல்லை எனக்கு....
கொங்கு தமிழ் பேசிய செங்கோடனாக நடித்தாரே, கண்டீர்களா ஏதேனும் மிகை நடிப்பை....
நவராத்திரியின் நவரசத்தில் எந்த ரசத்தில் இருந்தது மிகை?
தெய்வ மகன் படம்...தந்தை, இரு பிள்ளைகள்... மலைத்து நின்றவர்கள் ஆயிரம் ஆயிரம்....
மிகை என்று நகைத்தவர்கள் ஒருவரும் இல்லை...... இருவர் உள்ளத்தில்
பாவ மன்னிப்பில்
பாகப்பிரிவினையில்
பாச மலரில்..
தவ புதல்வனில்........எந்த படத்தில் இருந்தது மிகை பட்ட நடிப்பு?
கை ரிக் ஷா இழுத்த பாபு,
எங்கிருந்தோ வந்தாள் படத்தின் மனநலம் குன்றியவன் பாத்திரத்தில்
பிரஸ்டீஜ் பத்மநாபன்
பாரிஸ்டர் ரஜினிகாந்த்.. அவன்தான் மனிதனில் அந்த மானுடம் மிக்கவன்..
குறையொன்றும் இல்லை கோவிந்தா என்பார்கள் மாலவன் அடியார்கள்...
மிகை என்றும் இருந்ததில்லை எங்கள் திலகத்தின் நடிப்பில் என்பேன் நான்..
Vino Mohan.V.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...01&oe=5EF91FEC
Thanks Vino Mohan.V (Nadigarthilakam Fans F B )
'அவளா சொன்னாள் இருக்காது... அப்படி எதுவும் நடக்காது...நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை.. இல்லை இல்லை...உள்ளத்தில் உள்ளது... உதட்டிலே வந்ததா.....உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா...'
நாளை ( 03/06/2020 ) காலை 11.00 a.m. மணிக்கு கேப்டன் டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த "செல்வம்"
படத்தை கண்டு களியுங்கள். ¶
சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.