-
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள் ... தொடர்ச்சி
ரூபா தேவி
http://imageshack.us/scaled/landing/8/vlcsnap503690.png
‘நல்ல சப்ஜெக்ட்’ என்று தயாரிப்பாளர்கள் வந்து கதை சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு கொடுக்கவிருக்கும் கேரக்டர் எனக்கு விருப்பமுள்ளதாக இருப்பதில்லை.
புதுமுகமான எனக்கு, இந்த குழப்பமான நிலைமையைச் சமாளிக்க, ஒரு வழி காட்டும் பதில் தேவை.
http://t0.gstatic.com/images?q=tbn:A...I5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
கொஞ்ச நாள் அப்படித் தான் இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல, இளைஞர் எல்லோருக்கும் தான்!
உங்களை நீங்கள் புரிந்து கொள்ளும் வயது வந்ததுமே தானாகச் சரியாகி விடும். ஆனால் அது வரை காலம் காத்திருக்க வேண்டும்!
K R Vijaya
http://mimg.sulekha.com/k-r-vijaya/i...-vijaya-06.jpg
இளங் கலைஞர்கள் வருகிறார்கள்; போகிறார்கள்—இரண்டு வருஷங்கள் கூட சிலர் நிலைத்திருப்பதில்லை.
திரையுலகில், வருங்காலத்தை எண்ணி — வளரவும் நிலைக்கவும் விரும்பும் புதிய இளைஞர்களுக்கு, உங்கள் அறிவுரை என்ன?
http://t0.gstatic.com/images?q=tbn:A...I5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
நான் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? புதிதாக வருபவர்கள், அன்றைக்கு தாங்கள் கண்டு கொண்டிருக்கின்ற சூழ்நிலையைத் தான் கவனிக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தை உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்களும் நிலைத்து விடுவார்கள் – உங்களைப் போல்!
சுமித்ரா
http://moviegalleri.net/wp-content/g...ctress_258.jpg
இது வரை சாதித்ததை விட, இனிமேல் ஒரு பெரிய லட்சியத்தை சாதிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா?
அப்படியானால் அந்தத் திட்டம் என்ன?
http://t0.gstatic.com/images?q=tbn:A...I5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருப்பது தான் திட்டமென்பது. காலம் பதில் சொல்லும் போது நீங்களே பார்த்துக் கொள்வீர்கள்.
-
செந்தில் சார், சென்னை வாசுதேவன் சார்,
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி
-
வாசு சார்
இயக்குநர்கள் வரிசையில் கே. விஜயன் நடிகர் திலகத்தை இயக்கிய படங்களைப் பற்றியும் அது மட்டுமின்றி அவருடைய மற்ற படங்களைப் பற்றியும் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாதை தெரியுது பார் திரைப்படத்தைப் பற்றிப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த படத்தின் இயக்குநர் நிமாய் கோஷ் அவர்களுடன் ஒரு முறை பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் நடிகர் திலகத்தை ஒரு படம் இயக்க வேண்டும் என பெரும் விருப்பம் கொண்டிருந்ததாகவும் ஆனால் அது நிறைவேறாமல் போனது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
விஜயன் இயக்கிய படங்களில் நடிகர் திலகத்தின் பாத்திரங்களை வித்தியாசமான முறையில் அணுகி, அவருடைய நடிப்பின் புதிய பரிமாணங்களைக் காண்பித்திருப்பார்.
அடுத்து தங்களுடைய இயக்குநர்கள் பட்டியலில் யார் இடம் பெறப் போகிறார்கள், ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடரில் அடுத்து இடம் பெறப் போகும் படம் என்ன, நடிகர் திலகத்தின் திரைப்பட நாயகியர் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போவது யார்..
என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்கும் வகையில் ஆவலைத் தூண்டுகிறது தங்கள் பதிவுகள்.
பாராட்டுக்கள்.
-
5000 பதிவுகளை தொட்டு இன்னும் சளைக்காமல் அதே துள்ளலுடனும் உற்சாகத்துடனும் பதிவுகளை பதிக்கும் ராகவேந்தருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடருங்கள் உங்கள் நற்பணியை
-
-
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் 5000 வது பதிவு மிக அருமை, நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர்திலத்தின் அருமையான பதில்கள்,
தொடரட்டும் தங்களின் தொண்டு.
-
Dear Ragavendra Sir -
உங்கள் பதிவு எப்பவும் போல வித்தியாசமாகவும் , அருமையாகவும் உள்ளது - எல்லோருடைய கேள்விகளுக்கும் தலைவர் எப்படி அருமையாக பதில் கொடுத்துள்ளார் ! Great Posting !!
:smile2::smokesmile:
-
Dear Vasu sir - as usual excellent postings - your narration about director vijayan is superb
:smile2::smokesmile:
-
Belated greetings raghavender sir for having achieved the unique landmark of 5000 postings in record time, wish you many more thouands,
all the very best,
-