Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i61.tinypic.com/ezrc52.jpg
Printable View
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i61.tinypic.com/ezrc52.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i58.tinypic.com/2s6msuv.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i57.tinypic.com/295psgp.jpg
அரசியலின் அசிங்கம்
தமிழகத்தின் களங்கம்....
--------------------------------------
இப்ப எதுக்கு இந்த வார்த்தை ....அவசரப்படாம படிங்க.
1977. எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே...பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.
அடுத்த நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சி தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. ‘உடன் பிறப்பே. பார்த்தாயா. நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்) ? இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்கவில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்கு வீட்டை’ என்று எழுதி முடிக்கிறார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது. ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை.
கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்துவிடுகறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். மைக்கை பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா’ என்கிறார். கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
தொண்டன் தொண்டாவே இருக்கின்றான்.
தலைவன் தலைவனாகவே இருக்கிறான்.
படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளை கடந்த சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த தொண்டனும் கேட்கவில்லை.
அன்று நடிகரின் கட்சி ஊழலை பார்த்து கொதித்தவர்
இன்று நாடே பார்த்ததிர்ந்த ஊழலைப்ற்றி பேசவில்லையே என்று எந்த தொண்டனும் கேட்கவில்லை.
இதுதான் தொண்டர்களின் தியாகம்.
இந்த தேர்தலிலும் தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்
courtesy net
During Madurai meetiya Sundarapandiyan Suiting spot
http://i1170.photobucket.com/albums/...ps756c03d2.jpg
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு துபாயில் பழைய படம் திரைக்கு வருவது மிக்க மகிழ்ச்சி . சத்யம் அரங்கில் திரை உலக பிரபலங்கள் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த செய்தி அருமை .
1957 ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் முதல் தற்போது நடைபெறும் தேர்தல் வரை 57 ஆண்டுகள் வரலாற்றில் அரசியல் மேடையில் , பிரச்சார கூட்டங்களில் மக்கள் திலகத்தின் பெயரும் - அவருடைய படமும் பிரதான
இடம் பெற்று வருவது மக்கள் சக்தி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை நிரூபிக்கிறது .
அதே போல் 57 ஆண்டுகள் திரை உலக வரலாற்றில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து இன்னமும் ஓடிக்கொண்டிருப்பது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் செல்வாக்கு - அவருடைய உயிர் ரசிகர்களின் பேராதரவு
எம்ஜிஆரின் தொண்டர்களின் அரசியல் நிலையான ஓட்டு வங்கி நிலைத்திருப்பது என்பது உலகில் எங்கும் நடக்காத ஒரு மாபெரும் சரித்திர சாதனை .
மக்கள் திலகத்தின் ''பணக்கார குடும்பம் '' இன்று 50 ஆண்டுகள் நிறைவு நாள் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த சிறந்த படம் . படம் முழுவதும் அவருடைய பல விதமான
நடிப்பின் தாக்கத்தை காண முடியும் . சோக காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார் .
மிகவும் அருமையான பாடல்கள் .1964ல் மாபெரும் வெற்றி பெற்ற படம் .ஒன்று எங்கள் ஜாதியே என்ற பாடலில்
இடம் பெற்ற வரியான '' என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே '' என்ற பொன்னான பாடலை அன்றே
கணித்து எழுதிய கவியரசரை பாராட்டாமல் இருக்க முடியாது .