சார்
யாரவது மங்களம் (உண்டாகட்டும் காசேதான் கடவுளடா) பாடுங்க
Printable View
சார்
யாரவது மங்களம் (உண்டாகட்டும் காசேதான் கடவுளடா) பாடுங்க
இது நியாயமா
நேற்றுதான் - 5000
24 மணிநேரத்தில் 5100
எப்படி பாகம் - 2 நாளை துவங்காமல் இருக்க முடியும் .
சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் .....
திரு வாசு - திரு கிருஷ்ணா - திரு சின்னகண்ணன் - திரு ராகவேந்திரன் - திரு கோபால் - திரு மது
திரு கார்த்திக் இன்னும் பல நண்பர்கள் ...
இனிமையான பயணம் -இனிமையான பாடல்கள் - கனவு கன்னிகள் - கண்ணுக்கு விருந்தான படங்கள் - பாடல்கள் .
தொடரட்டும் பயணங்கள் .......
நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.
உருகுதே இதயமே அருகிலே வா வா
நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்
இளையராஜா இசை
sss சார் உங்க பங்கை காணவில்லை இன்று
//தொடரட்டும் பயணங்கள் .......// இந்தப் பயணங்க்ளில் தங்கள் பங்களிப்பும் அருமை எஸ்வி சார்.. நீல நிறம்.. வீட் போய் தான் கேக்கணும் பாக்கணும்..
கொஞ்சம் கால்ஸ் பேசி வர்றதுக்குள்ள பக் பக் பக்கங்கள்.. ம்ம் வெண்ணிலா முகம் தகவல்களுக்கு வீடியோவிக்கு நன்றி க்ருஷ்ணாஜி,மதுண்ணா.
பங்களிக்கும் எல்லோரையும் புதிய பாகம் தொடங்கச் சொல்லி ஆசைதான். மதுர கானங்கள் பல பாகங்களை சந்திக்கப் போவது உறுதி. நண்பர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பாகமாக ஆனந்தமாகத் தொடங்கலாம். அனைவருக்கும் நன்றி!
இரண்டாம் பாகம் தொடக்கி வைக்க நம் கிருஷ்ணா சாரை முன்மொழிகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.
வெண்ணிலவு இந்தப் பாட்டில் வந்திருக்கிறது..ஆனால் ரொமாண்டிக்கா இல்லை..சிறு பிள்ளைகளுக்காக என்றும் இனிக்கும் பாடல் இனிய இசையரசியின் குரலில்..ஹை க்விஸ் போடலாம் போல் இருக்கே..வேண்டாம்..பாட்டையே போட்டுடலாம்..
ஆமா..படம்.. படத்தைத் தயாரித்தது எஸ்.எஸ்.வாசன்.. ஸ்ரீதர் படம்..வசனம் சித்ராலயா கோபு..படம் போட்டுக் காண்பித்தால்..ஆமா இதுல எனக்கு என்ன இருக்கு என்று கேட்டாராம்..
ஸ்ரீதர் புரியாமல் விழிக்க, ஸீ நான்55 பைசா கொடுத்து வாங்கிப் படம் பார்க்கற ஆளோட மன நிலையைச் சொல்றேன்..படம் ஜோராத் தான் இருக்கு..ஆனா காமடி.. ம்ம் இவங்களைப் போய்ச் சேராது..என வாசன் சொன்னாராம்
(சித்ராலயா கோபு ஞாபகம் வருதே புத்தகத்தில்)
படம் செளண்ட் ஆஃப் மியூசிக் ஐத் தழுவி முழுக்கப் பாடல்கள் இருக்கும் வண்ணம் அதே சமயம் கொஞ்சம் கொஞ்சம் சஸ்பென்ஸ்., அழகுக்கு காஞ்சனா அறிவுக்கு ஸ்ரீதர் ஹீரோவுக்கு ஜெமினி பாட்டுக்கு எம்.எஸ்வி என எடுத்த படம் ..சாந்தி நிலையம் தான்..
*
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிராரோ
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது
கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும்
ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ
**
பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று சொல்லவும்வேண்டுமோ :)
//நான் வழிமொழிகிறேன்.// நானும் :)