CHEPAAKKAM
http://i62.tinypic.com/sevadg.jpg
Printable View
CHEPAAKKAM
http://i62.tinypic.com/sevadg.jpg
அன்பிற்கினிய திரு.ரவி சார் அவர்களுக்கு,
தாமதத்துக்கு மன்னிக்கவும். நேற்று திரிக்கு வரமுடியவில்லை. இன்றுதான் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். ‘கேளம்மா சின்னப் பொண்ணு கேளு’ பாடலுக்கு உங்கள் விளக்கம் அற்புதம். அதற்கு நன்றி தெரிவித்து பதில் போடலாம் என்று பார்த்தால், அதற்குள் ‘கலங்கரை விளக்கத்தை’ அலசி இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள். புரட்சித் தலைவரின் எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று கலங்கரை விளக்கம். படத்தை அருமையாக அலசியுள்ளீர்கள். ‘பல்லவன் பல்லவி...’ பாடலில் ‘ராக பாவங்கள் பாடலில் விளங்க...’ பாராவில் மக்கள் திலகத்தின் நடன அபிநயங்கள் கொள்ளை அழகு. அதிலும், பாட்டின் முடிவில் சரோஜாதேவி அவர்களின் கையை பிடித்துக் கொண்டு குதித்துக் கொண்டே சுற்றுவது மிகவும் கடினம். நின்ற இடத்தில் குதிக்கலாம். அல்லது குதிக்காமல் சுற்றுவதும் சுலபம். குதித்தபடியே வட்டமாக சுற்றுவது ரொம்ப கடினம். அதை அனாயசமாக செய்திருப்பார். நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகரான நீங்கள் மக்கள் திலகத்தின் படங்களை உங்கள் பார்வையில் இருந்து அலசுவது எங்களுக்கு வேறொரு கோணத்தில் அதைப் பார்க்க உதவுகிறது.
அதிலும் இடையிடையே நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் ஆங்கிலத் தலைப்புகளும் கவிதையும் உங்கள் உயர்ந்த விசாலமான குணநலன்களை காட்டுகிறது. ‘தின காலண்டர் போல தேதிகள் கிழிந்தவுடன் நம் வாழ்க்கையை தூக்கி எறிய வேண்டியதுதான்’ என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. இப்போது ஆயுளில் பாதிக்கும் மேல் கடந்து விட்டோம். இன்னும் 25 ஆண்டுகள் இருப்போம் (அதுவே அதிகம்) என்று வைத்துக் கொண்டாலும் (25x365) 9,125 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் நமக்கு என்ன ஈகோ வேண்டியிருக்கிறது? புத்தாண்டில் சந்திப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். இன்னும் 3 நாட்கள் உங்கள் பதிவுகள் வராது என்பது எங்களுக்கு ஏமாற்றமே. நட்புக்கோர் ‘கலங்கரை விளக்கம்’ நீங்கள். நன்றிகள் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
CHEPAAKKAM
http://i60.tinypic.com/33w4fac.jpg
தலைவரின் நினைநாள் அஞ்சலி தொடர்பான படங்களையும் போஸ்டர்களையும் பதிவிடும் நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றிகள். மேலே உள்ள போஸ்டர் அருமை. திரு.மதுரை குமார் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
CHEPAAKKAM
http://i62.tinypic.com/2hzzg2.jpg
CHEPAAKKAM
http://i62.tinypic.com/156vdj5.jpg
CHEPAAKKAM
http://i57.tinypic.com/11j2fc1.jpg
CHEPAAKKAM
http://i59.tinypic.com/4lnias.jpg
திரு.கோவிந்தராஜ் சார், அருமையான தகவல்களை பதிவிட்டுள்ளீர்கள். நேரத்தைப் பார்த்தால் விடிய, விடிய தூங்காமல் பதிவிட்டிருப்பது தெரிகிறது. தூக்கத்தை துறந்து தலைவர் புகழ் பாடும் உங்களுக்கு நன்றிகள். மேலே உள்ள தகவலும் தலைவரின் அட்டகாச ஸ்டைலும் என்ன உயர்வாக சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்