From 24/05/2019 Vellore Sri Ragavendira Theatre DTS., MakkalThilagam MGR in " Dharmam thalai kaakkum " daily 4 Shows Successful running......
Printable View
From 24/05/2019 Vellore Sri Ragavendira Theatre DTS., MakkalThilagam MGR in " Dharmam thalai kaakkum " daily 4 Shows Successful running......
27-05-2019 திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "சந்திரோதயம்" 53 ஆம் ஆண்டு துவக்கம்......... ஊடக துறை எப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அன்றே மக்கள் திலகம் ஆணி அடித்தார் போல சொல்லி வாழும் சிறந்த காவியம்.....வெளியான நாள் இன்று...
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகம் மற்றும் அரசியல் உலகின் "சந்திரோதயம் " உதயமான தினம் 27/05/1966. வெளியாகி 53ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபராக வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் .பத்திரிகைகளில் வெளியாகும் அபாண்டமான செய்திகளால் பெண்கள் மற்றும் குடும்பம் எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை உணர்த்தும் வகையில் அந்த காலத்தில் யதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டது . பத்திரிகை துறையில் நடைபெற்ற அநீதியான செய்திகளை எதிர்த்த காவியம் . வெகுளிப்பெண்ணாக செல்வி ஜெயலலிதா சிறப்பாக நடித்திருந்தார் .சோக நடிப்பில் பாரதி தனது திறமையை வெளிப்படுத்தினார் .
நாகேஷ் மனோரமா நகைச்சுவை நல்ல கலகலப்பு .பத்திரிகை நிர்வாகியாக நடிகவேள் எம்.ஆர்.ராதா தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தையும் அபாரமாக காண்பித்து வெளுத்து வாங்கியிருப்பார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா மோதல் காட்சிகள் படு சுவாரஸ்யம் .அசோகன், பண்டரிபாய் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒன்றி நடித்தனர் . இனிமையான பாடல்கள் அமைந்த வெற்றி சித்திரம் பல காட்சிகளில் முக்கால் கை சட்டையுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மிக அழகாக ஜொலித்தார் .
பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பே படத்தின் பெயரானது .
ஊடக பெருச்சாளிகளையும் , சமுதாய புல்லுருவிகளையும் தனது புரட்சிகரமான செயல்களினால் சாடும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ஆளுமை இதில் அதிகம் .
வசனங்கள் மிகவும் பேசப்பட்டது : எம்.ஆர். ராதா : விநியோகஸ்தரிடம் பேசுவது
அவன் படம் ஒரே தேதியில் வருகிறதா . அப்போ ஒன்னு செய்யறேன் . அவன்தை தாக்கறேன் . உன் படத்தை தூக்கறேன் ..தினகவர்ச்சி பத்திரிகை நிர்வாகியாக இருந்து கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்வோமா என்று தனது பெண் குமாஸ்தாவிடம் கூறுவது .. பத்திரிகை செய்திகளில் தவறை சுட்டிக்காட்டும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் அடிக்கடி நீ என்னுடன் மோதுகிறாய். என் லைனில் கிராஸ் பண்ணாதே . நாகேஷிடம் கவர்ச்சி பெண்ணின் புகைப்படம் கொண்டுவர சொல்லி கட்டாயப்படுத்தும் காட்சிகள் .இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஆர்.ராதாவிடம் என் எதிரி கூட எனக்கு சமமாக இல்லேன்னா அலட்சியப்படுத்துறவன் நான் . அதிருக்கட்டும். நான் கொடுத்த செய்தியை ஏன் திரிச்சி போட்டீங்க என்று பேசும் காட்சிகள் .இன்னும் பல காட்சிகள் உள்ளன . குடை பிடிச்சா சூரியன் மறையாது என்று எம்.ஆர்.ராதாவிடம் கூறும் வசனம் (அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் )
மந்தகாச புன்னகையுடன் சந்திரனில் இருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்சிமிட்டலுடன் கூடிய அறிமுக காட்சியை பார்ப்பவர்கள் நெஞ்சை அள்ளுவதாக இருக்கும் .பாவேந்தர் பாரதிதாசனை அறிமுகப்படுத்தும் டைட்டில் பாடல் புதியதோர் உலகம் செய்வோம் என்கிற அற்புத பாடல் அருமை.
புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பாடலில் சமுதாய சீர்திருத்த நோக்குடன் கூடிய
சமூக நலப்பாடல் -எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அழுத்தமான வரிகள் .
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் =அந்த காலத்தில் கல்யாணத்தில் நடைபெறும் சடங்குகள், சம்பவங்களை நினைவுபடுத்தும் பாடல் .
காசிக்கு போகும் சன்னியாசி -நாகேஷ் -மனோரமா (கணவன் மனைவி மோதலை )தீர்த்து வைத்து குடும்ப உறவுகள் மேம்பட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உபதேசம் செய்யும் வகையில் அமைந்த அருமையான பாடல்.
எங்கிருந்தோ ஆசைகள் - காதலை மென்மையாக உணர்த்தும் இனிமையான பாடல்.
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - எம்.எஸ்.வி. இசை அமைத்த மிக அழகான, அருமையான வரிகள் கூடிய இனிமையான, எப்போது கேட்டாலும் சலிக்காத காதல் பாடல் .
இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு பலமுறை சபாஷ் போடலாம் .
கெயிட்டியில் 89 நாட்கள் ஓடியது . (முகராசி 100 நாள் ஓடுவதற்காக 2 நாட்கள் தாமதமாக வெளியானது .). பாரத்தில் 70நாட்கள் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் கடைசியாக வெளியானது 1966ல் ) மேகலாவில் 92 நாட்கள் ஓடியது . ஸ்ரீநிவாஸாவில் 70 நாட்கள் ஓடியது .
100நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம். 1966ல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு 9 படங்கள் வெளியானது .குறைந்த இடைவெளிகளில் அடிக்கடி படங்கள் வெளியானதால் சில படங்களின் எதிர்பார்த்த வெற்றியில் பாதிப்பு ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது .. 1972க்கு பிறகு அதிக அரங்குகளில் பகல் காட்சியில்
மறுவெளியீட்டில் வெளியாகி சாதனை புரிந்தது .
பாட்டு புத்தகம்
http://i68.tinypic.com/2aev581.jpg
http://i64.tinypic.com/2ch86qf.jpg