https://scontent.fyto1-2.fna.fbcdn.n...25&oe=5F029100
Printable View
இன்று நண்பகல் 12:00 மணிக்கு...
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...55&oe=5F02A49A
Thanks Nilaa
பாரத் அவார்ட் 1971
1971 மார்ச் தேர்தலின் போது நடிகர் திலகம் தனது தலைவர் பெருந்தலைவர் காமராஜரை எப்படியாவது அரியணை ஏற்றிட வேண்டும் என முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தை எதிரணியினருக்கு முன்னரே பெரும் ஆரவாரத்துடன் மக்கள் திரளோடு திருத்தணியில் துவங்கி தமிழகமெங்கும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
எதிரணியில் எம்ஜிஆர் பிரச்சாரத்தை துவங்குவதில் தயக்கம் காட்டினார்,
நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் பெருந்தலைவர் காமராஜரை முதல்வர் ஆக்குங்கள் என வாக்கு கேட்டார்
ஆனால் எம்ஜிஆர்க்கு கலைஞர் கருணாநிதியை முதல்வர் ஆக்குங்கள் எனச் சொல்லி வாக்கு கேட்பதில் தயக்கம் இருந்ததால் பிரச்சாரத்தை துவங்காமல் இருந்தார், பின்னர் திமுகவின் மேல்மட்ட தலைவர்களது பேச்சு வார்த்தைகள் அதனையொட்டிய ஒப்பந்தங்கள் பின்னர் பிரச்சாரத்தை துவங்கினார்,
பிரச்சார மேடைகளில் இரு புறமும் பேச்சில் அனல் பறந்தது, தனிப்பட்ட தாக்குதல்கள் அரங்கேற்றம் ஆனது,
எம்ஜிஆர்:- சிவாஜியின் படங்களால் எனது படங்கள் கொடுக்கும் வசூலைக் கொடுக்க முடியுமா?
நடிகர் திலகம்:- எனது நடிப்பை உங்களால் கொடுக்க முடியுமா?
இன்னமும் இது போன்ற வார்த்தை மோதல்கள் நிகழ்ந்த ஒரு தேர்தல் தான் 1971 தேர்தல்
எப்படியோ தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியும் பெற்றுவிட்டது,
ஆட்சியையும் பிடித்து விட்டது, முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி ஏற்றுக் கொண்டார்,
பாரத் அவார்ட்-
1968 ல் உருவாக்கப்பட்ட பாரத் அவார்ட் அந்த ஆண்டிலிருந்து சிறந்த நடிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு வந்தது,
தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வரான
அந்த சூழலில் தான் சிறந்த நடிகருக்கான 1971 ஆம் ஆண்டிற்கான பாரத் அவார்ட் கமிட்டியின் செயல்பாடுகள் ஆரம்பமானது,
பிரச்சார மேடையில் "தன்னைப் போல நடிக்க முடியுமா" எனப் பேசியிருந்தார் நடிகர் திலகம்
அந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகவே பாரத் அவார்டில் அரசியல் நுழைந்தது,
மத்தியில் இருந்த இ.காங்கிரஸ் ஆட்சி திமுகவுடன் கூட்டணி கட்சி,
ஒரு வழியாக நடிகர் திலகத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே " பாரத் அவார்டை ரிக்*ஷாக்காரன் திரைப்படத்தில் எம்ஜிஆர் சிறப்பாக நடித்திருக்கிறார் எனச் சொல்லி விருதை அறிவித்தது,
பத்திரிகை செய்திகள் பளிச்சிடும் விதமாக வெளி வந்தது
நடிப்பு என்றால் சிவாஜி தானே
அது என்ன புதுஷா நடிப்பு என்றால் எம்ஜிஆர்
தமிழக மக்கள் சிரிப்போ சிரிப்பென சிரித்தார்கள்,
சரி ஒரு வழியாக மேடையில் எழுந்த பேச்சான நடிப்பு அதில் நான் ஜெயித்து விட்டேன் என பாரத் அவார்ட் பெற்றதன் மூலம் எம்ஜிஆர் காட்டிவிட்டார்,
மறுமுனையில் நடிகர் திலகம் எதற்கும் அலட்டிக் கொள்ளாதவராக விருது பெற்ற எம்ஜிஆர்க்கு நடிகர் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய விழா எடுத்துக் கொண்டாடினார்,
" எனது படங்களைப் போல உனது படங்களால் வசூலைக் கொடுக்க முடியுமா? "
இந்தச் சவாலுக்கு நடிகர் திலகத்திற்கு அரசியல் அரசாங்க அதிகாரம் தேவைப்படவில்லை
மாறாக மக்கள் பதில் கொடுத்தார்கள்
அடுத்து தொடர்ந்து வந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்களான
வசந்த மாளிகை
பட்டிக்காடா பட்டனமா
ராஜா
நீதி
தவப்புதல்வன்
ஞான ஒளி
என தமிழக திரையரங்குகளில் ஒரே வசூல் மழை, மக்கள் வெள்ளம், எதிர் தரப்பினருக்கு அமைந்த படங்கள்????
1972 ஆண்டில் மட்டுமே நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் சுமார் 40 திரையரங்குகளில் 100 நாட்களைக் கொண்டாடியதோடு "வசந்த மாளிகை, பட்டிக்காடா பட்டனமா, என இரண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் கொடுத்து என்றும் வசூல் சக்கரவர்த்தி " நடிகர் திலகம் சிவாஜி " தான் என மக்களே ஆளும் அரசாங்கத்திற்கு பதிலடிக் கொடுத்தார்கள்,
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...f9&oe=5F047609
Thanks Sekar
:நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்..கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம்மறைவதில் நான் சின்னக் குழந்தைய ம்மா..சொல்லத் தெரிய வில்லை..பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை..'
இன்று 08/06/2020 - மதியம் 02.00 p.m. மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி இல்.
நடிகர்திலகம் நடித்த - " எங்கிருந்தோ வந்தாள் " படம் " சிறந்த குடும்ப / வெற்றி படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர் திலகம், ஜெய லலிதா, பாலாஜி, முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தங்கத் தேரோடும் வீதியிலே..ஊர் கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே..லெட்சுமி கல்யாணம்..நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணோம்.. தமிழில் தருவது.. கால நேரம் சேரும் போது கழுத வந்து மறிச்சாலும் காரியங்கள் நடக்குமடா...'
இன்று 08/06/2020 மெகா 24 இல் மதியம் 02.30 p.m. மணிக்கும் நடிகர்திலகம் நடித்த " லட்சுமி கல்யாணம் " குடும்ப படத்தை கண்டு மகிழலாம். ¶
இதில் நடிகர்திலகம், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.
இன்று 08/06/2020 - காலை 11.00 a.m. மணிக்கு கேப்டன் தொலைக்காட்சி இல்
நடிகர்திலகம் நடித்த முழு நீள சிரிப்பு படம் - ' கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி ' கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.