நிலாப் பாடல் 75: "மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதோ ஒரு அற்புதமான காதல் பாடல். நிலவை காதலிக்கும் காதலன் நிலவிடம் சொல்கிறாராம் அவர்கள் காதலை மாநிலம் கொண்டாடுகிறதாம். ஆனால் கதையில் யாருக்கும் தெரியாமல் அல்லவோ காதல் புரிவார்கள். தெரிந்தபின்புதான் நடந்தது தெரியுமே. ஒட்டக்கூத்தர் மட்டும் என் கையில் கிடைத்தால்... அவரால் அம்பிகாபதியின் எவ்வளவு அரிய பாடல்கள் கிடைக்காமல் போயிற்று தமிழுக்கு. சரி. சரி. கம்பனுக்கு வம்பனாய் வந்து இன்னும் கம்பனை பேசும்போது அவரையும் பேச வைக்கிறாரே. அவரும் பெரிய தமிழ்ப் புலவர்தானே.
சமஸ்க்ரித்த வார்த்தைகளும் கலந்து பாடல்கள் வரியப்பட்ட காலம். ஏன் கம்பனும் சமஸ்க்ரிதத்தில் பண்டிதராய் இருந்தே கம்பராமாயணத்தை தமிழில் எழுதினார் என்பது வரலாறு. வெகு சிலவே இருந்தாலும் நன்றாகவே உள்ளது. தஞ்சை என். ராமையா தாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் இப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளதாக நமது வாசுதேவன் அவர்கள் நடிகர் திலகம் திரி ஒன்றில் எழுதி இருக்கிறார். இந்த பாடலை எழுதியவர் அந்த பாடலாசிரியர்களில் எவர் என்று தெரியவில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லுவீர்:
http://www.mayyam.com/talk/showthrea...-Events/page74
பாடலுக்கு இசையமைத்தவர் இசைமேதை ஜி. ராமநாதன். பாடகர் திலகத்துடன் அஷ்டாவதானி பானுமதி அவர்களும் இணைந்து பாடி இன்றும் பேச வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்றபடி காதல் கொண்டாடும் பாடல்தான். இரவில் சந்தித்து காதல் வளர்க்கின்றனர் என்பதற்காகவே "சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி தீபமாய் ஒளிவீசுதே கண்ணே" என்று பொருத்தமாகவே வரிகளை வைத்து கொண்டாடுகிறார் பாடலாசிரியர். கம்பீரத்துடன் நடிகர் திலகமும், பானுமதியும் நடித்து பாடலுக்கு அம்பிகாபதி, அமராவதியாய் வாழ்ந்திருக்கிறார்கள். சரி பாடல் வரிகள், காணொளிக்கும் உங்களுக்கும் இடையே நான் எதற்கு. இதோ கிளம்புகிறேன்.
------------------------------------------------------------------------------
மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே
மாநிலம் கொண்டாடுதே
பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு
பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே.. கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே.
மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே.
சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி
சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே
தீபமாய் ஒளிவீசுதே...
மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி
மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி
மௌனமாய் நம்மை வாழ்துதே...கண்ணா
மௌனமாய் நம்மை வழ்த்துதே..
மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே...கண்ணா..
மாநிலம் கொண்டாடுதே..
ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
அன்பே.........................இன்பம்
எங்கே........................இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்
நீரோடு நீர் போல நாம் கூடுவோம்
அன்பே.........................இன்பம்
எங்கே........................இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்
நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே
தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே
உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
? முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே (2)
அன்பே.........................இன்பம்
எங்கே........................இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்
வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே
காணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே
வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை
கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை
இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
-------------------------------------------------------------------------------------
https://www.youtube.com/watch?v=MevVM6OyhNg
இதற்கு மேல் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?