இன்றைய கால கட்டத்தில், புதிய படங்களே அரங்கு நிறைய தவித்துக்கொண்டிருக்கும் போது, நமது மக்கள் திலகத்தின் காவியங்கள், பல முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்ட போதிலும், அகன்ற திரையில் அவரது அழகு முகத்தை காண, அரங்குகளில் அலை மோதும் கூட்டம் ஒன்றே போதும், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி இவர்தான் என்பதை நிலை நாட்ட.
உலகத்திலே, இதைப்போல் repeated audience கொண்ட ஒரே நடிகர் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே ! எனவே, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களை world super star என்றும் அழைக்கலாம்.
தகவலை அளித்திட்ட திரு. மதுரை சரவணன் அவர்களுக்கும், அதனை இந்த திரியில் பார்வையாளர்கள் பலரும் அறியும் வண்ணம் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், நன்றி !