https://scontent.fyto1-2.fna.fbcdn.n...37&oe=5F03B4DB
Printable View
09-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
ரிஷிமூலம் - காலை 6:30 க்கு ஜீ திரை சேனலில்
பாலும் பழமும் - காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
கலாட்டா கல்யாணம் - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...df&oe=5F032D99
ரசகுறைவு என்று நாசுக்காக முகத்தை சுளியுங்கள்..... பரவாயில்லை..
பண்பு குறைவான பதிவு என்று கூட கடிந்து கொள்ளுங்கள்...
பொருட்படுத்த போவதில்லை...
இப்போது எதற்கு ! பழங்கதை ! என்று பம்மாத்து செய்யுங்கள்.... எனக்கொன்றுமில்லை...
பீடிகை பலமாயிருக்கிறதே, நேரே வா ! சொல்ல விரும்பியதை சொல்லி விட்டு போயேன் என்று உரிமையோடு நேச குரலும் ஒலிக்கிறது...
இதோ பூர்வாங்க பீடிகைக்கு காரணம்.....
அந்நாளைய முதல்வர் பொன்மன செம்மல் வீட்டில் விழா,
ஸ்ரீதேவி வந்திருக்கிறார் நிகழ்ச்சிக்கு.
ஜானகி அம்மையார் ஆளுயர குத்து விளக்கொன்றை ஏற்றி வைத்திருக்கிறார்..
அந்த விளக்கின் எழிலில் லயித்து போய் அதையே பார்க்கிறார் ஸ்ரீதேவி.
நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்வேளையில் அன்போடு அந்த ஆளுயர விளக்கை ஸ்ரீதேவிக்கு பரிசளிகிறார் வள்ளல்.... திகைத்துதான் போய் விட்டார் ஸ்ரீதேவி...
இப்படி ஒரு பதிவு !
இருநாளைக்கு முன் கண்டேன் !
நேரு கோட்டை போட்டுகொண்டு ரஜினி ஒவ்வொரு அளப்பாக அளந்து கொட்டும் போது தேங்காய் சீனிவாசன் சொல்வாரே, புல்லரிக்குதுப்பா ! என்று....
அப்படி புல்லரித்து போய் நின்றேன் அந்த குத்து விளக்கு பதிவு கண்டு....
புல்லரித்து போய் நின்ற தருணத்தில் என்றோ படித்த ஒரு செய்தி நினைவு வந்தது.
அந்த செய்தியை இங்கு பதிவிட போகிறேன்....
அதற்குத்தான் இந்த பீடிகை, பில்ட் அப் எல்லாம்....
1965-66 ஆம் ஆண்டு வாக்கில்...
நாட்டின் பொருளாதாரம் இன்றுபோலவே நலிந்திருந்தது அன்றும்...
PM.Cares என்கிற ஜோடனை இல்லாமல் நிதி திரட்ட நாடு முழுக்க பயணப்பட்டார் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி....
தமிழ்நாட்டுக்கும் வந்தார்.....
வந்தாரா? வரட்டும்.. இன்னொரு காட்சியை காண்போம்...
நடிகர் திலகம் இல்லத்தில் ஒரு வழமையாம்.. எழுதப்படாத விதியாம்...
அந்த வீட்டு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானால் அந்த பெண்ணுக்கு சீதனமாக தர இருக்கும் ஆபரணங்களை அந்த பெண்ணின் தாயார் திருமணம் நடை பெறுவதற்கு முன்பு வரை அணிந்திருந்து திருமணத்தின் போது பெண்ணுக்கு அணிவிப்பார்களாம்...
நடிகர்திலகத்தின் அன்பு மகளுக்கு அப்படி வாங்கிய சீதன நகைகளை கமலாம்மா அணிந்திருந்தார்...
நிதி திரட்ட வந்திருந்த சாஸ்திரியை நடிகர் திலகம் சென்று பார்த்தார் தலைமை செயலகத்தில்..... உடன் கமலாம்மாவும் சென்றார்..
பிரதமர் திரட்டும் நிதிக்கு தன் பங்களிப்பாக தங்க பேனா ஒன்றை தந்தார் நடிகர் திலகம்...
அந்த தங்க பேனா நடிகர் திலகத்திற்கு வந்த விதம்?
ஸ்கூல் மஸ்டர் படத்தில் guest roll ஒன்றை செய்ததற்காக திரு. B.R.பந்துலு பரிசளித்தது அந்த தங்கப்பேனா.....
அதன் எடை 100 சவரன்....
பொன்னான மனம் இருப்பவர்களுக்கு கூட வராது, 100 பவுனை தானமாக தர...
இதனுடன் முடியவில்லை, இந்த சம்பவம்...
அருகில் இருந்து கவனித்து கொண்டிருந்த கமலாம்மா சட்டென்று மகளுக்கு ஸ்ரீதனமாக தர தான் அணிந்திருந்த நகைகளை மொத்தமாக கழற்றி பிரதமரிடம் கொடுத்து விட்டார்.. தன்னுடைய மூக்குத்தியையும் தாலியையும் கூட கழற்றி தர எத்தனிக்கிறார்..
நெகிழ்ந்துபோன பிரதமர் very touching ! Very touching ! என்று விழிகளில் நீரோடு தடுத்து விட்டார்...
திருமதி. லலிதா சாஸ்திரி நெகிழ்ந்து போய் அப்படியே கமலாம்மாவை ஆர தழுவி கொண்டார். கமலாம்மாவின் அந்த தன்னலமற்ற செயல் தன்னை மிகவும் நெகிழ்வித்ததாக நடிகர் திலகம் அந்த சம்பவத்தை விவரித்திருந்தார்.
சிலர் எரிச்சல் அடையலாம்.
கோபம் கூட வரலாம் பலருக்கு...
ஆத்திரம் மூளலாம் வேறு சிலருக்கு...
வீ. பா. கட்டபொம்மனில் கட்டபொம்மன் சொல்வாரே தானாதி பிள்ளையை பார்த்து ஒரு சொல்...
அதையே நானும் சொல்கிறேன்....
நீவிர் சினம் காக்க !!
Thanks Vino Mohan
ரஜினிகாந்தை ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்தார் எம்ஜிஆர்
டி.ராஜேந்திரை உருட்டி எடுத்தார் எங்கள் தலீவர்,
இப்படி எல்லாம் செய்திகள் சொல்லி அப்போதைய எம்ஜிஆர் ரசிகர்கள் பெருமை பேசிக்கொள்வார்களாம்,
கடைசியில் பழனிபாபா தொடர்பாக ஒரு நிகழ்வு பற்றி வி.சி.க.தலைவர் சொல்லும் புதிய தகவல்,
https://www.facebook.com/sekar.paras...3811286069074/
Thanks Sekar
(ஏழுத்துருவுில்)........தமிழக அசியலில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்குகொண்ட எம் ஜி அர் ஒருவுரைக்கண்டு மிரண்டார் என்றால் அது பழநிபாபா அவர்களுக்குத்தான் அவருடைய உரை நெருப்பு பொறி பறக்ககூடீய ஒரு உரை, என்ன பேசுவார் எதைச்சொல்லுவார் என்கிற எதிர்பார்ப்பபு கேட்பவர்களிக்கிடையே இருக்கும் என்பதைவிட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு இருந்த ஒர் அச்சம் இருந்தது ஏனென்றால் எம் ஜி அர் அவர்களுகு இவர் நெருக்கமாக இருந்தார். மிக நெருக்கமாக இருந்தார். அந்த நேரத்திலே ஓர் கப்பல் வாங்குவுதிலே முறை கேடு ஊழல் முறை கேடு நடந்தது என்றகிற வதந்தி அதாவது செய்திகள் பரவியது வதந்தி அல்ல செய்தி செய்தியாக செய்திகள் வேகமாக பரவியது அப்பொழுது கலைஙர்; ஒரு கேள்வியை எழப்பினார் யார் அந்த பழனிபாபா அவர்தான் அந்தக் கேள்வியை முதலிலே எழுப்பகிறார் .எம் ஜி ஆருக்காக தமிழக அரசுக்காக கப்பல் வாங்குவதற்கான பேரத்தை பேசுவுதில் பழனிபாபா தலையிட்டிருக்கிறார் யார் அந்த பழனிபாபா அந்த அளவுக்கு எம் ஜி ஆருக்கு நெருக்கம் உடனே தன்மீது ஊழல் முறைகேடு சுமுத்தப்படுகிறது என்ற அச்சத்தில் அவர் யார் என்றே எனக்கத் தெரியாது என்று எம் ஜி அர்; சொல்லியிருக்கிறார். இதனால் அத்திரம் அடைந்தவர் போர் குணம் உள்ளவர் அதனால் துணிச்சல் அவரிடத்தில் இயல்பாகவே இருந்தது, எம் ஜீ அர் மிகப்பெரிய செல்வாக்கள்ள தலைவராக தி மு க வை பின்னுக்குதள்ளி அட்சிக்கு வந்தவர் அவரை விமர்சிப்பதற்க அன்றைக்கு யாருக்குமே தைரியம் கிடையாது தி மு க வைத்தவிர வேறு யாரும் அவரை விமர்சிக்கமாட்டார்கள் ஆனால் எம் ஜி அர்; அவர்களை விமர்சிக்கிற தணுிச்சல் அவரை தனிப்பட்ட முறையிலேயே கண்டிக்கிற தணிச்சல் அவருடைய நடவடிக்ககைளை அணுகுமுறைகளை விமர்சிக்கிற ஆற்றல் அன்றைக்கு பழனிபாபா அவர்களுக்கு இருந்தது,
ஒர் தகவலை காயல் மவுருப் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கொஞ:சநேரம் அவைகளை புரட்டிப்பர்த்தேன் எந்த அளவுக்கு பழனிபாபா அவர்கள் துணிச்சலும் புத்திக்கூர்;மையும்; சமயோசிதமும் உள்ளவர் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டியிருக்கின்றார். எம் ஜி ஆர்; பழனிபாபாவை அழைத்து ராமாவரம் தோட்டத்திலே அவரே உரையாடகிறபோது மேசையிலே இருக்கிற அப்பிள் பழத்தை வெட்டி சாப்பிடுங்கள் என்று அவர் கையிலே ஒர கத்தியை கொடுத்து அதை வெட்டிச்சாப்பிட்டுக்கொண்டிருங்கள் நான் மேலே அல்லது வேற எற்பாடு செய்கிறேன் என்ற சொல்லிவிட்டு எம் ஜி அர் போய்விட்டார்
அந்தக்கத்தியை எடுத்து அப்பிளை வெட்டிச்சாப்பிட்டுக்;கொண்டிருக்கும்பொழுது ஏம் ஜி அர்; நெருக்கமாக வந்து இந்த சமயத்தில் உன்னை நான் கைது செய்யமுடீயும் ; என்னை கொல்ல முயற்ச்சித்தாய் என்று வழக்குப் போடமுடீயும் ஏனென்றால் இக்கத்தியில் உன் கை ரேகை படிந்திருக்கிறது என்று சொன்னாராம் சராசரியாக நம்மைபோன்றவர்கள் இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்போம் ஏனென்றால் அவர் செல்வாக்கு மிகுந்தவர் அவருடைய ஆற்றல் வலிமை நமக்கத்தெரியும் உடனே நமக்கு இயல்பாக பயம் வரும் ஆனால் அந்த இடத்தில் பழனிபாபா அவர்கள் அப்படியா இப்பொழது நிங்கள் பேசிய பேச்சு அனைத்தும் என் சட்டைப்பைக்குள் இருக்கிற மைக்கிரோ போனில் பதிவாகிக்கொண்டிருக்கிறது அதுவும் ; இங்கே பதிவாகவில்லை வேறு ஒர் இடத்தில் பதிவாகிக்கொண்டிருக்கிறது ஏன்ற அவர் சொன்னதும் அடிப்போய்விட்டாராம் எம் ஜி அர் .எப்படி அவரை கைது செய்யமுடீயும் அப்போது இப்போது இருப்பதைப்போலஅன்றைய்ட்போன் கிடையாது இப்போது இருப்பைபோல இந்த வசதியம் கிடையாது ஆனால் அவருடைய பிரைன் அவருடைய மூளை அந்த இடத்திலே அப்படி சமயோசிதமாக சிந்தித்திருக்கிறது அப்படி எந்த இடத்திலும் துணிச்சிலாக கருத்துச்சொல்லக்கூடீயவர் கருத்து மட்டுமல்ல செயல்படுத்தக்கூடீயவர் செயல்படுத்துவதுமட்டமல்ல மற்ற இளைஞர்களை இயக்கக்கூடீயவர் அவரைப்போல மற்றவர்கள் இயங்கவேண்டும் என்கிற அளவுக்கு மற்றவர்களை வழிநடத்தத்கூடீயவர் ஆனால் மதவெறி அவரை மாற்றிவிட்டது
அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !
இதோ அதன் படி !
படி அல்ல, என் அன்னையின் மடி !
இப்படித்தான் துவங்குகிறது அந்த டெலி பிலிம்..
சத்ரபதி சிவாஜி என்பது அந்த டெலி பிலிம்மின் பெயர்...
1974 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சிவாஜி மகாராஜா அரியணை ஏறிய 300 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட பம்பாய் தூர்தர்ஸன் அந்த டெலி பிலிமை தயாரிக்க திட்டமிட்டது.
அவர்கள் பட்ஜெட் மிக குறைவு...
நடிகர் திலகத்தை தயக்கத்துடன் அணுகிறார் திரு. நாராயண சாமி. பம்பாய் D. D. யின் உயர் அதிகாரி அவர்...
உள்ள நிலையை சொல்லி, தயாரிப்பு செலவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற நிலையையும் சொல்கிறார்.
பம்பாய் தொலை காட்சி நிலையத்திற்கு பருத்தி புடவையாய் காய்த்தது அன்று..
அப்படிதான் சொல்ல வேண்டும்.
புன்னகையோடு அந்த தொலைக்காட்சி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் நடிகர் திலகம்... ஊதியம் ஒன்றும் வேண்டாம் என்கிறார்....
அதனுடன் நிற்கவில்லை.
தயாரிப்பு செலவு முழுதும் தன்னை சேர்ந்தது என்கிறார்.
AVM அவர்களிடம் N. T. பேச, அவரும் ஸ்டுடியோவை கட்டணம் இல்லாமல் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறார்.
தஞ்சை வாணன், வசனம் எழுதி தருகிறார்...
அந்த வசனம் தான் அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !!!
அந்த டெலி பிலிம் 1974 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பம்பாய் தொலைக்காட்சி நிலையத்தால் தமிழில் ஒளி பரப்பு செய்ய பட்டது.
பின் நாடு முழுவதும் அத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழில் அப்படியே ஒளி பரப்பின..
எவ்வளவு பெரிய அங்கீகாரம் தமிழனுக்கு....
மராட்டிய மன்னனின் சரித்திர சாதனையை ஒரு தமிழ் கலைஞன் தமிழிலேயே நடித்து நாடு முழுக்க ஒளி பரப்பப்படுகிறது என்கிற நிகழ்வு !
மட்டுமல்ல, பம்பாயில் நேரு பூங்காவில் உள்ள சத்திரபதி சிவாஜியின் திரு உருவ சிலை அமைக்க பட பெரும் தொகையை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.....
அந்த மாநிலத்தில் பல இடங்களில் உள்ள மாவீரன் சிவாஜியின் சிலைக்கு நிதி கொடுத்திருக்கிறார் இந்த சிவாஜி....
மராட்டியத்திற்கு நடிகர் திலகம் செய்த உதவிகள் ஏராளம், ஏராளம்....
அவரின் தாராள மனதிற்கு இன்னுமொரு நிகழ்வு சான்றாக இருக்கிறது....
1961-62 ஆம் ஆண்டு.
Y.B.சவாண் மகாராஷ்டிராவின் முதன் முதல் அமைச்சர் அப்போது.
மஹாராஷ்டிராவில் உள்ள koyna அணை உடைந்து போகிறது....
பேரிடர் அது... பெரும் சேதம்.. உயிர் சேதமட்டுமல்ல, எதிர்கால வாழ்வே கேள்வி குறியாக போனது மராட்டியருக்கு.
அணையை புனரமைக்க வேண்டும். அதுவும் உடனேயே, தாமதம் உதவாது...
நாட்டில் உள்ள நல்லோர் யாவரும் உதவி செய்யுங்கள் ! உடனடியாக !என்று அபய குரல் கொடுக்கிறார் அம்மாநிலத்தின் முதல்வர்...
என்ன கொடுப்பான்? எதை கொடுப்பான்?
என்று இவர்கள் எண்ணும் முன்னே,
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான் எங்கள் கர்ண வீரன்...
துணைக்கரம் நீட்டுகிறார் நம் தூயவர்....
நாட்டின் எந்த ஒரு நிறுவனத்தை காட்டிலும்....
எந்த ஒரு தனி மனிதனை காட்டிலும்,
எந்த ஒரு பாலிவுட் நடிகரை காட்டிலும்
அதிகமாக, தனி ஒரு மனிதனின் நன்கொடையாக 11 லட்சங்களை நிதியாக தந்தார் நடிகர் திலகம்...
தேசம் அந்நிய நாட்டுடன் போரில் இறங்கிய போது 65, 000 ரூபாய் கொடுத்த நடிகரின் பெயர் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வந்தது அன்று, பலரும் பேசுகிறார்கள் இன்றும் அது பற்றி..
1961 ஆம் ஆண்டிலேயே
அண்டை மாநிலம் கூட அல்ல, மத்திய இந்தியாவில் ஒரு மாநிலம்..
பேரிடரில் சிக்கி தவிக்கும் தருணத்தில்
நடிகர் திலகம் மனம் துடித்து
கொடுத்த தொகை 11, 000, 00....
தோழர்களே ! நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த கொடையை பற்றி...
வருமான வரி துறைக்கு மட்டுமே இந்த தகவலை தந்திருக்கிறார் எங்கள் தங்க ராஜா...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...44&oe=5F06DC27
Thanks Vino Mohan
இப்போது ஊரடங்கு சமயத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிகம் ஒளிபரப்பப்படுவதில் நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களே அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
இன்று மட்டுமல்ல... தனியார் தொலைக்காட்சிகள் துவக்கப்பட்ட நாளிலிருந்தே நடிகர்திலத்தின் திரைப்படங்களே அதிகம் ஒளிபரப்பப்பட்டன என்பதற்கு கீழ்க்கண்ட பட்டியல் ஆதாரமாக உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
அப்போது மாதந்தோறும் ஒளிபரப்பாகும் நம்மவரின் படப்பட்டியலை நடிகர்திலகத்தின் புகழ்ப்பரப்பிய இதயவேந்தன் மாதஇதழில் பதிவிட்டிருந்தனர்.
கீழ்க்காணும் பட்டியல் 2004 செப்டம்பர் மாதத்தின் பட்டியல்!
#எப்பவும்_இவர்_ராஜா!
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ad&oe=5F06E210
Thanks Nilaa
10-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் ........................................."பாக்கியவ தி"
காலை 9 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்................"தாய்க்கு ஒரு தாலாட்டு "
பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் சேனலில்................................... "ஜல்லிக்கட்டு"
மாலை 3 மணிக்கு முரசு டிவியில் .............................................."ரத் த பாசம்"
Thanks Sekar
தமிழ்த் திரைத்துறையை அதிக காலம் யார் வாழ வைத்தது??
திரைக்கலைஞர்கள் யாரால் அதிக காலங்கள் வாழ்வாதாரம் பெற்றார்கள்?
எந்த ஹீரோவின் திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்பட்டதோ அந்த ஹீரோவால் தானே திரையுலகின் கலைஞர்கள் வாழ்வை பெற்றிருக்க முடியும் என்பதை ஒரு ஸ்கூல் மாணவன் கூட சொல்லி விடுவான்,
நடிகர் திலகம் சிவாஜி 285 நேரடியான தமிழ்த் திரைப்படங்களின் ஹீரோ என்பதனால் அவரது திரைப்படங்களின் மூலமே அதிகமானோர் வாழ்வாதாரம் பெற்றிருக்க முடியும்,
ஒரு படத்தில் சராசரியாக 1000 பேர்கள் பணியாற்றி இருந்தாலும் கூட 285000 பணியாளர்கள், கலைஞர்கள் தங்களது வாழ்வை நகர்த்திக் கொண்டார்கள் என்ற எளிமையான கணக்கீட்டைக் காணலாம்,
ஆனால் திரைத்துறையினரிடம் அதற்கான விசுவாசத்தை காண முடிந்ததா?
வெறும் 100 படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர்களை மட்டுமே திரைப்பட காட்சிகளில் தூக்கிப் பிடித்து புகழ் பாடி வருகின்றனர்,
"ஏழைக்கு ஒரு வேளை சோற்றை மட்டுமே கொடுத்து விடாதே
அவனுக்கு வாழ்நாள் முழுவதும் சோறு
கிடைக்கும் படி தொழிலை காட்டிவிடு"
ஆம் நடிகர் திலகம் அவர்கள் ஒரு வேளை சோற்றை மட்டுமே போடுகின்ற விளம்பரங்களில் ஈடுபடாமல் எத்தனையோ திரைக் கலைஞர்களுக்கு தொழிலை எளிதில் கற்றுக் கொள்ள ஏதுவான வழிகளை காட்டினார், ஏராளமான புதுமுகங்களுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்பளித்தார்,
தொடர்ந்து நடிகர் திலகத்தை நினைவு கொள்ள மறக்கும் பட்சத்தில் தமிழ்த் திரையுலகம் கொரோனாவைக் காட்டிலும் மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்,
Thanks Sekar