-
நடிகர் கமல்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது: குடியரசுத்தலைவர் வழங்கினார்
நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி கலைஞானி கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். கவியரசு வைரமுத்துவுக்கும் இவ்விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
-
-
-
-
-
விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள்
''கமல்ஹாசனின் படம் என்றாலே, அதில் இயக்குநர் 'பெயர்’ மட்டுமே போட்டுக் கொள்ளலாம். படம் முழுவதும் அவருடைய ஆதிக்கம்தான் இருக்கும் என்று கூறுவது உண்மைதானா?''
''பொய்! அவரைப் பத்தின தப்பான புரிதலில் இதுவும் ஒண்ணு. அவரே ஒரு ஹிட் டைரக்டர்தான். 'தெனாலி’, 'தசாவதாரம்’ படங்களையும் அவரே டைரக்ஷன் பண்ணியிருக்கலாமே! என்னை ஏன் கூப்பிடணும்?
'தசாவதாரம்’ல என் வேலை என்னன்னு அதில் வேலை பார்த்த எல்லாருக்குமே தெரியும். ஆனா, 'தசாவதாரம்’ கே.எஸ்.ரவிகுமார் படம் இல்லை. 'சேரன் பாண்டியன்’, 'நாட்டாமை’யை வேணும்னா நீங்க 'கே.எஸ்.ரவிகுமார் படங்கள்’னு சொல்லலாம்.
பெரிய ஹீரோ நடிச்சா, அது அவங்க படம்தான். அப்படி கமல் சார் நடிக்கிற படங்கள் அவர் படம்தான். ரஜினி சார் நடிச்சா, அதை எந்த இயக்குநர் இயக்கினாலும் அது ரஜினி சார் படம்தான். ஏன்னா, அந்த ஹீரோக்களோட இன்வால்வ்மென்ட் அந்தப் படங்களில் பெருசா இருக்கும்; இருக்கணும். அது இல்லைன்னாதான் தப்பு.
டிஸ்கஷன்ல உதவி இயக்குநர் ஒருத்தர், சஜஷன் ஏதாவது சொன்னா கேட்டுக்கிறோம். கமல் சார் சொன்னா கேட்கக் கூடாதுனு நினைச்சா, நமக்கு 'திமிர்’, 'ஈகோ’னு அர்த்தம்.
'கிரேன்’ மனோகர்னு ஒரு நடிகரை உங்களுக்குத் தெரியும். அவரோட அண்ணன் குணா. அவர் என்னோட எல்லாப் படங்களிலும் கூடவே இருப்பார். கிரேன் ஆப்பரேட்டர். கேமராமேன் பக்கத்துலயே நின்னுப்பார். 'இப்ப எடுத்தது எப்பிடிடா இருக்கு?’னு குணாகிட்ட கேட்பேன். யோசிக்க மாட்டான், 'சுமார்தான் சார்’ம்பான். நானும், 'ஒன்மோர் சார்’னு சொல்லிடுவேன். குணா பேச்சைக் கேட்கும்போது கமல் சார் பேச்சைக் கேட்க மாட்டேன்னா, அது என் தப்புதானே தவிர, கமல் சார் தப்பு கிடையாது.
ஹீரோக்கள் சஜஷன் சொல்லணும். அப்படிச் சொன்னாத்தான் அவங்க அந்தப் படத்துல இன்வால்வ் ஆகி இருக்காங்கனு அர்த்தம்!''
--------------
''ஒரு படம் சக்சஸ் ஆகும்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?''
'' 'அவ்வை சண்முகி’ல டான்ஸ் மாஸ்டர் பாண்டியன், மடிசார் மாமி அவ்வை சண்முகினு கமல் சாருக்கு ரெண்டு கெட்டப். அவர் 'பாண்டியன்’ கெட்டப்ல இருக்கும்போது அவர்கூட நல்லா க்ளோஸா நின்னு பேசுவேன். 'அவ்வை சண்முகி’ கெட்டப் போட்டுட்டார்னா, கொஞ்சம் தள்ளி நின்னுதான் பேசுவேன்.
ஒருமுறை அப்படித் தள்ளி நின்னு 'அவ்வை சண்முகி’கிட்ட சீன் சொல்லிட்டு இருந்தேன். அப்போ 'சண்முகி’யோட முந்தானை லேசா விலகி இருந்துச்சு. எனக்குச் சங்கடமாகிருச்சு. ஸ்க்ரிப்ட் பேடை குனிஞ்சு பார்த்துப் பேச முடியலை. கொஞ்சம் தள்ளி வந்து, காஸ்ட்யூமரை வரச் சொல்லி, 'முந்தானையைக் கொஞ்சம் சரி பண்ணுங்க’னு சைகையாலயே சொன்னேன். அதைப் பார்த்துட்டு சிரிச்ச கமல் சார், 'படம் சக்சஸ்ங்க. முந்தானை விலகினது உங்களுக்குக் கூச்சமா இருக்குதுனு சொன்னா, அப்ப அந்த கேரக்டர் க்ளிக் ஆகிடுச்சுனுதானே அர்த்தம். சண்முகி சக்சஸ் ஆயிட்டா’னு சொன்னார்.
இப்படி எல்லா சக்சஸ் படங்களுக்கும் பட வெற்றிக்கான சிக்னல்கள் ஷூட்டிங் ஸ்பாட்லயே கிடைச்சிரும்!''
----------------------
Copied From: Ananda Vikatan
-
டிஸ்கஷன்ல உதவி இயக்குநர் ஒருத்தர், சஜஷன் ஏதாவது சொன்னா கேட்டுக்கிறோம். கமல் சார் சொன்னா கேட்கக் கூடாதுனு நினைச்சா, நமக்கு 'திமிர்’, 'ஈகோ’னு அர்த்தம்.
Valid Point KSR.. Now we can understand why Kamal, KSR Combo could do many films..
-
Rajni before Kamal and Mammotty before Mohan Lal
As we all know, Mohan Lal's latest super hit and also one of the highly acclaimed film Drishyam is going to be remade in Tamil. Jeetu Joseph who directed the original Malayalam version will also be handling the Tamil version with Kamal Haasan playing the lead role.
Earlier Jeetu was quoted in media reports saying he wanted Superstar Rajinikanth to act in the Tamil remake. Rajinikanth who watched the film was highly impressed with the film. But a scene in which Mohan Lal was beaten up by a Policeman and the former not hitting back till the end made Rajini not to accept the offer to star in its remake. Rajini felt that such a scene would not go well with his audience and also he did not prefer changing it for his sake. Only then Jeetu showed the film to Rajini's good friend cum competitor Kamal who accepted to star in the Tamil remake.
Now the Interesting news that has recently emerged about Drishyam is that Mohan Lal himself was not the initial choice for the lead character 'George Kutty' in the film. Jeetu Joseph had initially narrated the script to Lal's senior and equally popular star Mammotty who felt the Mohan Lal will be the perfect choice for the lead role in the film.
With this it can be interpreted that only on Mammotty's withdrawal and voluntary suggestion Mohan Lal was approached for the role but what has to be noted is the comradire shared by the two stars who are still competitors in Malayalam film industry.
http://www.indiaglitz.com/Rajni-befo...il-news-106069
-
விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - III
பொன்விழி, அன்னூர்.
''ரீ-மேக் படம் எடுப்பதாக இருந்தால், எந்தப் படத்தை தற்போது எடுப்பீர்கள்?''
''திரு. ஆர்.எஸ்.மனோகரின் 'இலங்கேஸ்வரன்’ என்ற நாடகத்தை, சிறிய மாற்றங்களுடன்!''
எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.
''ஒரு மனிதனின் பலம் பலவீனமாவது எப்போது?''
'' 'சரிவில் யானை’ ஓர் உதாரணம். நமக்குச் சரிவுகள் பல உண்டு. பீடு நடைஎல்லாம் அக்கம் பக்கம் பார்த்துத்தான் போட வேண்டும்!''
அ.யாழினி பர்வதம், சென்னை-78.
''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?''
''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?''
''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே.
இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''
பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்.
'' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?''
''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''
http://www.vikatan.com/av/2011/01/19/images/p24.jpgஞான.தாவீதுராஜா, பழவேற்காடு.
''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?''
''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''
எம்.எஸ்.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம்.
''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!''
'' 'ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை
இறந்த பின், சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு!’ ''
சியாமளா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?''
''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''
என்.குமார், தஞ்சாவூர்-8.
''விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?''
''அது அவரவர் தீர்வு. இதில் என் கருத்துக்கு ஏது இடம்?''
லீலா ராம், தக்கலை.
''ஒபாமாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?''
''வெள்ளை மாளிகையின் விக்கிரமாதித்ய சிம்மாசனம் என்ன என்ன பாடுபடுத்துகிறது என்று பரிவுடன் விசாரிப்பேன்!''
ப.தங்கமணி, சூசைபாளையம்.
''நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?''
''எனினும்.''
பொன்விழி, அன்னூர்.
''பாலசந்தர் - பாரதிராஜா ஒப்பிட முடியுமா?''
''அப்பா - அண்ணன்!''
சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.
''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?''
''நட்புதான்!''
சிவக்குமார், திண்டுக்கல்.
''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?''
''எப்போதும் நாகேஷ். அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லோரும்!''
பாரதி, சேலம்-9.
http://www.vikatan.com/av/2011/01/19/images/p24a.jpg ''உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?''
''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''
எஸ்.சந்தோஷ், சென்னை-75.
''பழம்பெரும் திறமையான நடிகர் நடிகைகளுடன் (காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி) சேர்ந்து நடித்தவர் நீங்கள். ஆனால், ஏன் மறைந்த கலைத் திறன் மிகுந்த நடிகர் ரகுவரனுடன் இணைந்து நடிக்கவில்லை? தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருந்தால், மறுக்காமல் பதில் கூறவும்!'
'http://www.vikatan.com/av/2011/01/19/images/p26.jpg'இன்னும் நேரம் இருக்கிறது. பாத்திரம் கூடி வரும்போது செய்யலாம் என்று எண்ணித் தவறவிட்டது தவிர, வேறு காரணம் இல்லை!''
ப.தங்கமணி, சூசைபாளையம்.
''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?''
''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!
வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''
எம்.மாலதி, நன்னிலம்.
''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''
சூரியகுமார், திருப்பூர்-4.
http://www.vikatan.com/av/2011/01/19/images/p26a.jpg ''உங்கள் தமிழ் அற்புதமாக இருக்கிறது. ஆனால், உங்கள் மகள்கள் தமிழ் பேசத் தடுமாறுகிறார்களே! அதோடு, உங்கள் மகள்களைப்பற்றிப் பேசும்போது, நீங்கள் ஸ்ருதியைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அக்ஷராவும் அதீதத் திறமைகள் நிரம்பியவராகத் தெரிகிறார். அவரைப்பற்றியும் இனி பேசலாமே?''
''பேசினால் போச்சு. அக்ஷராவும் ஸ்ருதி அளவு தமிழ் பேசுவார். துணை இயக்குநராகப் பணி புரிகிறார் மும்பையில். அற்புதமான நடனக் கலைஞர்!''
சா.தேவதாஸ், திருச்சி-2.
''உங்கள் திரைக்கதைகள் எங்களைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலாவது, வருடத்துக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முற்படுவீர்களா?''
''இரண்டு கண்டிப்பாக நடக்கக்கூடியது.''
வி.பவானி, திருவாரூர்.
'' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?''
''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''
ஆர்.பார்த்திபன், சென்னை-91.
http://www.vikatan.com/av/2011/01/19/images/p26b.jpg ''சமீபத்தில் 'ஆளவந்தான்’, 'உன்னைப்போல் ஒருவன்’ படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. 'ஆளவந்தான்’ படத்தில் 'ஞாபகம்... அதுதானே உன்னுடைய வியாதி!’ என்று ஒரு வசனம். 'உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் 'மறதி... ஒரு தேசிய வியாதி!’ என்று ஒரு வசனம். என்ன சொல்ல வருகிறீர்கள் கமல் சார்?''
''அது 'கல் பேசாது!’ என்று வெகுண்ட அதே நடிகர் திலகம், பக்திப் பரவசத்தில் மிதக்கும் வசனங்கள் பேசவில்லையா? அதேபோல்தான்! ஒரு பாத்திரத்தின் மனோபாவம் வாக்கியமாகிறது. நான் சொல்ல வருவது குணாதிசயங்கள்!''
வி.மலர், செங்கல்பட்டு.
''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''
''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''
ப.ராகவன், சேலம்-4.
''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.)
''இருக்கலாம்!''
கிருத்திகா அரசு, தஞ்சாவூர்.
''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?''
''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''
கி.சம்பத், வேதாரண்யம்.
''சார், நீங்கள் ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவது இல்லை. உங்களின் அதிதீவிர ரசிகனாக அங்கு உங்களை ஃபாலோ செய்ய விருப்பம்... சாத்தியமா?''
''உங்கள் விருப்பம் நிறைவேற வேறு ஒரு திட்டம் இருக்கிறது. விரைவில் சொல்கிறேன்!''
எம்.கே.ராஜா, மன்னார்குடி.
''காமம் இல்லா காதல் சாத்தியமா?''
''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''
எஸ்.ராதாமணி, ராமநாதபுரம்.
''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?''
''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''
-
What stops Hari from approaching Kamal?
After delivering the blockbuster hit film Singam 2, director Hari has started his next with Vishal and Stuhi Haasan titled as 'Poojai'. The director has promised that Poojai will be a triangular action flick and also a better version of the films he has made so far.
In a recent interview the director has expressed his wish to work with all mass heroes but added that he gets nervous whenever he thinks of working with 'Ulaganayagan' Kamal Haasan. "Kamal knows everything (about cinema). I will be skeptic of my ability answer the questions he would pose. I will meet him only when I complete a script that does not require him to question anything", the director has said.
To another questions the 'Saamy' director has revealed that he never watches international films and he will not watch even Tamil films while his films are in progress.
http://www.indiaglitz.com/What-stops...il-news-106406