Originally Posted by
esvee
Thedi vantha mappilllai - 29-8-1970
முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது
ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .
அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை