-
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
https://www.youtube.com/watch?v=ZNQS...ture=endscreen
-
-
Yesterday, 17th July, 2015, I was fortunate to chat with my long time ... nearly 40 years friend... Kudanthai Sadagopan Srinivasagopalan. What a time we had recollecting our golden period spending our times for Nadigar Thilagam. Ours was "THENNAGA SIVAJI KOLGAI PARAPPUM KUZHU" that was a group of pen friends & sivaji fans, who would share all the information regarding the release of Sivaji films in his / her respective town / village, how it performed at the box office, share collection details, etc. Pollachi Kirubakaran, Umaithurai Palanisamy, Madurai Jaihindpuram Kannan, Kovilpatti Rajasekaran, Ugene Rayan, Rajapalayam Engal Sivaji Vijayan, Bangalore Ulsoor Jeyakumar of Neethi Sivaji Ganesan Kalai Kuzhu, Mayavaram Sekar, Mukunthan of Ilaiya Thalaimurai Sivaji Ganesan Rasikar Mandram, Kandi Kathirkaman who used to send copies of Simmakural magazine from Sri Lanka, Haji Mohamad (now in Arab country I learn), His handwriting was exemplary and would be very catchy to the eyes...
Oh God, we can't get those days. We will write the matter that would normally run to 5 to 6 pages in a postcard. தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதுவோம். வெளிநாட்டு நண்பர் ஏர்மெயில் கடிதத்தில் எழுதுவார். அந்தக் காலங்கள் வராதா என மனம் நிச்சயம் ஏங்கும். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு 1970 களின் மத்தியிலிருந்து 1980களின் மத்தி வரை மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில். இதில் பம்பாயிலிருந்து நண்பர் ஆறுமுகம் அவர்களும் எழுதுவார்கள். மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊரிலிருந்து நாங்கள் அஞ்சல் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் விவரங்கள், மக்களிடம் வரவேற்பு, போஸ்டர்கள், நோட்டீஸ்கள் என அவரவரிடமிருக்கக் கூடியவற்றை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.
நடிகர் திலகத்திற்கு ரசிகனாய் இருந்தது மட்டுமின்றி இவ்வளவு பெரிய நட்பு வட்டாரத்தை அந்த காலத்திலேயே எங்களால் உருவாக்கி இன்று வரை அதைப் பேண முடிகிறது என்றால் அதுவே நடிகர் திலகத்தின் மகிமை எனலாம்.
தங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி சீனிவாச கோபாலன் அவர்களே. இது போன்று நம்முடைய மற்ற நண்பர்களும் இணைந்து விரைவில் சந்தித்து மகிழ வேண்டும் என்பது என் ஆவல்.
-
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...18&oe=56122C9A
அனைவருக்கும் உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். மத நல்லிணக்கத்தை நடிகர் திலகத்தின் படங்கள் வலியுறுத்த என்றைக்குமே தவறி்யதில்லை. தனது இறுதி வரையில் தேசபக்தி, மத நல்லிணக்கம், இறையாண்மை இவற்றைப் பேணி வந்தார் நடிகர் திலகம். அந்த வகையில் பாவ மன்னிப்பு, இமைகள், எழுதாத சட்டங்கள் என பல திரைப்படங்களில் இஸ்லாமிய கதாநாயகனாக நடித்து மனிதம் மட்டுமே நிரந்தரம், மனித நேயம் மட்டுமே உண்மையானது என நிரூபித்தார்.
இந்த நாளில் மணநாள் கொண்டாடும் மக்களுக்கும் சேர்த்து இந்த இனிய பாடலை நினைவுறுத்தி வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.
எழுதாத சட்டங்கள் திரைப்படத்திலிருந்து இளைய ராஜா இசையில் அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=QMLsCevbK1w
-
-
-
https://scontent-sin1-1.xx.fbcdn.net...50233339_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
-
சிவாஜிக்கு அரசு ஏன் மணிமண்டபம் கட்ட வேண்டும்... அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே!'
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட அரசு இடம் அளித்தும் மண்டபத்தை கட்டாமல் நடிகர் சங்கம் ஏமாற்றி வருவதாக சிவாஜி சமூக நலப்பேரவை குற்றம்சாட்டி, உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுதான் இலவசமாக நிலம் கொடுத்துவிட்டதே. மணிமண்டபத்தையும் அரசே கட்ட வேண்டுமா... அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே, என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Social activists strongly condemned Sivaji Manimandapam request இது குறித்து சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி மறைவுக்கு பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிதர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு தமிழக அரசு அடையாறு சத்தியா ஸ்டியோ எதிரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை நடிகர் சங்கத்திற்கு ஒதுக்கியிருப்பதாக அறிவித்தது. அரசு இலவசமாக அளித்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி இதுகுறித்து பேசுவார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் இருக்காது. மணிமண்டபம் வரும் என்று நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதன் பின்னர் நடிகர் சங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து எந்த பணியும் நடைபெறவில்லை. தொடர்ந்து நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது. தன்னுடைய கலைத்திறனால் நடிப்பாற்றலால் உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிகர் சங்கமோ தனிப்பட்ட அமைப்போ மணிமண்டபம் அமைப்பதைவிட தமிழக அரசே அமைப்பது அவருக்கு பெருமைசேர்ப்பதாக அமையும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும், நடிகர்களையும் அழைத்துள்ளோம்," என்றார். கடும் எதிர்ப்பு இந்த கோரிக்கை மற்றும் உண்ணாவிரத அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "ஏன் இதை அரசு கட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இடத்தைக் கேட்டு வாங்கிய நடிகர் சங்கமே கட்டுவதுதானே முறை? நடிகர் சங்கத்தை எதிர்த்தல்லவா இவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அதுவும் இல்லாவிட்டால், நல்ல செழிப்பான நிலையில் உள்ள சிவாஜி குடும்பமே இதைக் கட்டலாமே? சிவாஜியின் பேரன் இப்போது பல கோடி சம்பளம் பெறும் முன்னணி நடிகர்தானே?", என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்து வருகிறது.
Read more at: http://tamil.filmibeat.com/news/soci...st-035767.html
COURTESY ONE INDIA
-
-