-
1962 - தேர்தல் நினைவலைகள் இரா .செழியன்
திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் முதல் முறையாக களமிறக்கப்பட்ட தன்னுடைய தேர்தல் செலவுக்காக வாக்காளர்களாகிய பொதுமக்கள் ரூ. 1, ரூ. 2 எனக் கொடுத்தனர். அதோடு, எம்.ஜி.ஆரும் நாடகம் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்தார் என நினைவுகூர்கிறார் மூத்த அரசியல்வாதியான இரா. செழியன் (93).
மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் சகோதரரான இரா. செழியன், மக்களவை உறுப்பினராக திறம்படப் பணியாற்றியவர். தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த நான், 1944 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டேன். 1962-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக 18 தொகுதிகளில் போட்டியிட்டு, 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அப்போது பொதுத் தொகுதியாக இருந்த பெரம்பலூரில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட எனக்கு தேர்தல் செலவுக்காக கட்சி சார்பில் ரூ. 2,000 தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டதாக மக்களவைத் தொகுதி இருந்தது.
என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் மாநிலத் தலைவர் பழனியாண்டி போட்டியிட்டதால், தேர்தல் செலவுக்கு ரூ. 2,000 போதாது என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக, மூன்று நாள்கள் தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்த எம்ஜிஆர் திரையரங்குகளில் நாடகம் நடத்தினார். அதைக் காண வருவோருக்கு கட்டணம் நிர்ணயித்து, அதில் கிடைத்த 10,000 ரூபாயை 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் பிரித்துக் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினோம்.
தற்போது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது போன்ற நிலைமை அந்தக் காலத்தில் இல்லை. வாக்கு கேட்டுச் செல்லும்போது எங்களை வரவேற்க யாரும் மாலை அணிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்ததால், தேர்தல் செலவுக்கு ரூ. 1, ரூ. 2 என மக்கள் கொடுத்தனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு 1,88,926 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனியாண்டிக்கு 1,33,536 வாக்குகளும் கிடைத்தன. 55,390 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்த வெற்றிக்கு, அண்ணா மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே காரணம்.
பெரம்பலூர் தேர்தலின் போது பிரசாரம் செய்த எம்ஜிஆரைக் காண, ஆண்கள், பெண்கள் தங்களது குழந்தைகளுடன் இரண்டு நாள்கள் காத்திருந்த நிகழ்வெல்லாம் நடந்தது.
அப்போதெல்லாம் பணம், ஜாதி பார்த்து மக்கள் வாக்களித்தது கிடையாது. மக்களை நம்பி தலைவர், தலைவரை நம்பி மக்கள் என்பதே அந்தக் காலத்தில் ஜனநாயகத்தின் மூலதனமாக இருந்தது.
தற்போது தலைவரை நம்பி மக்கள் என்ற சூழல் இருக்கிறது. கழகமே குடும்பம் என்றார் அண்ணா. ஆனால், தற்போது குடும்பமே கழகமாகி விட்டது. 1967-இல் பெரம்பலூர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால், 1967, 1971 மக்களவை பொதுத் தேர்தல்களில் கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
1972-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறி அதிமுக தொடங்கியதும், அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்ட நான், 1977 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தேன்.
வயது முதிர்வு காரணமாக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றார் அவர்.
courtesy - dinamani
-
எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!
http://i68.tinypic.com/6edsuv.jpg
M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’
சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.
ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.
ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.
ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.
எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.
எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.
http://i65.tinypic.com/6gdc77.jpg
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவர் நடித்த எல்லாப் படங்களுமே பிடித்தமானவைதான். ஆனால், எம்.ஜி.ஆருக்கு தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம், புதிய பரிமாணத்தில் அவர் அற்புதமாக நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ‘பெற்றால்தான் பிள்ளையா?’
-
அன்று
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1981ல்
எமது புரட்சித் தலைவர் நடாத்திய பொழுது
அதில் கலந்து கொள்ள இலங்கையின் அப்போதைய
எதிர் கட்சித் தலைவர் திரு அமிர்தலிங்கம் கலந்து
கொள்ள தமிழ் நாடு வந்தவர்
நாட்டு அரச வழக்கப்படி
முதல்வரை சந்தித்து அதன் பின்
எதிர் கட்சித் தலைவரை சந்திக்க வேண்டும்.
ஆனால் அவரோ திரு கருணாநிதி அவர்களை கண்டு மகிழ்ந்து
சொன்னார்
நீங்கள் இன்று முதல்வராய் இருந்திருந்தால்
தமிழீழம் மலர்ந்து விடும் .................................
இதனால் மனம் ஒடிந்த புரட்சித் தலைவர் கோபத்தில்
சொன்னார்கள், அதன் பின் மனம் வருந்தி மன்னிப்பும் கேட்டார்கள்
புரட்சித் தலைவர் என்னும் பெரும் தகை.
அது இலங்கையிலும் எதிர் ஒலித்தது.
அப்போது நான் சொன்னேன் ...........1981 ம் ஆண்டு
உங்கள் தமிழர் தலைவர் ஆட்சிக்கு வந்தால்
இலங்கைத் தமிழார் என்றொரு இனம்
இருக்கின்றதா என்று கேட்பார்.
அப்போது தெரியும்
என் தலைவன் அருமை.
நடந்தது என்ன
என் அருமைத் தமிழ் சொந்தங்களே
தமிழன் தலைவன் என்று
அன்றிலுருந்து இன்று வரை சொன்னவர்
செய்தது என்ன?
1. மகளை அனுப்பி இலங்கை ஜனாதிபதியிடம் பண முடிப்பு வாங்கி இலங்கையில் தமிழர் நலமாக வாழ்கின்றனர் அன்று அறிக்கை.
2. புது டில்லியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணித் தலைமைக்கு தொலைபேசியில் பேசாமல் தந்தி மேல் தந்தி அனுப்பியபடி அறிக்கை மேல் அறிக்கை.
3. இலங்கையில் தமிழர் பிரச்சினை முடிவு பெரும் வரையில் உண்ணாவிரதம் . ஆம் கலை பத்து மணியில் இருந்து மதியம் வரை .
4. இறுதிப் போரில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப் பட்ட போது, தமிழகமெங்கும் போராட்ங்கள் நடந்த பொழுது ............................... இந்திய இறையாண்மை பாதிக்கப் படும் வகையில் தமிழக அரசால் நடக்க முடியாது என்று எம்மை கை கழுவி விட்ட
சாணக்கியம்...
mukappu noolil irunthu
-
-
-
-
-
-
-