நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(4)
'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/sr.jpg
Printable View
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(4)
'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/sr.jpg
சாப்பாட்டு ராமனையும், 'நடிகர் திலகம்' விஜயகுமாரையும் தரிசிக்கப் போகும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது பொறாமையுடன் கூடிய வாழ்த்துக்கள்.
http://www.shotpix.com/images/02312842086170597606.jpghttp://www.shotpix.com/images/08536754696266829192.jpg
The one and only style king in the world
இந்த ஒரு போஸிற்கு ஈடுஇணை உண்டா?!
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-38.jpg
சாதனை புரிந்த ராமன்
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-37.jpg
http://sim.in.com/db285f1d0db577dd03...da55_ls_lt.jpg
"மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....
அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....
"மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....
"தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...
"சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...
"யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,
"அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி சடேலேன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!
"கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர ஆனால் ஆழமான
தேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு 'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
இன்று மாலை இந்த அதியற்புதக் காட்சியைக் நீங்கள் கண்டு களிக்கையில் கண்டிப்பாக அந்த நேரம் என்னை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அது.
நன்றி!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .
வாசு தேவனை நினைத்தே படம் பார்க்க போவோருக்கு வாழ்த்துக்கள் .
ஆனால் இவ்வளவு சிரம பட்டு விஜயகுமார் தேடும் பெண் குண்டு புஷ்கி விஜயா !!!!!!?????
வாசுதேவன் சார்,
உங்கள் ஊரிலிருந்து ஊர்வலமாக வந்து கடலூரில் நடிகர் திலகத்தின் படத்தை வந்து பார்த்த அனுபவம், தெய்வத்தை காண பாத யாத்திரை போவதற்க்கு இணை. அற்புதமாக கொடுத்திருக்கிறீர்கள்.
வம்ச விளக்கு பட பாடல் காட்சி அபாரமானது. 80-களில் ஒரு தீபாவளி-க்கு கடலூர் வேல்முருகன் திரை அரங்கில் தீபாவளி அன்றே காலை காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டங்களுடன் பார்த்து ரசித்தது நினைவிற்க்கு வருகிறது. இந்த பாடலுக்கு தியேட்டரே அதகளமானதுவும் மறக்கமுடியாமல் நெஞ்சில் இருக்கிறது. அற்புதமான இந்த பாடல் காட்சிக்கும், அதன் மூலம் என் இளமை காலத்தை நினைவில் கொண்டுவந்ததற்கும் நன்றி!!!
"ராமன் எத்தனை ராமணடீ" திரைப்பட காட்சிகளும், அதற்கான உங்கள் விவரிப்பும் பெருமையாக இருக்கிறது!!! இந்த காவியத்தையும் வேல்முருகன் திரை அரங்கில்தான் கண்டு களித்திருக்கிறேன்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தையே கட்டிப் போட வைக்கும் 'இருவர் உள்ளம்'
கலைஞர் தொலைக்காட்சியின் டிரெய்லர் இதோ காணொளியாக.
http://www.youtube.com/watch?feature...&v=SvQtzPiaoTE
டியர் கல்நாயக் சார்,
தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி!
ஒரு சந்தோஷமான விஷயம். நீங்களும், நானும் ஒரே நாளில் ஒன்றாக கடலூர் வேல்முருகன் தியேட்டரில் 23-10-1984 தீபாவளியன்று காலை 9.30 மணி காட்சி (ரசிகர் ஷோ) பார்த்திருக்கிறோம். உள்ளே நடந்த ரகளைகளையெல்லாம் கவனித்திருப்பீர்கள்.
ஆனால் அந்த தீபாவளிக்கு முன்தினமே நாங்கள் 'வம்சவிளக்கு' படத்தை நாங்கள் பார்த்து விட்டோம். எப்படி என்கிறீர்களா? தீபாவளிக்கு முதல்நாள் இரவே (இரவு 10.30 மணி ஆட்சி) விழுப்புரம் ரசிகர்களின் அன்புத்தொல்லை தாளாமல் சீத்தாராம் தியேட்டரில் முன்னமே போட்டு விட்டார்கள். முன்கூட்டியே விழுப்புர நண்பர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட நாங்கள் தீபாவளி முன்தினம் ஆறுமணிக்கெல்லாம் கடலூரிலிருந்து புறப்பட்டு எட்டுமணிக்கெல்லாம் விழுப்புரம் சென்று செம ரகளையோடு இரவு அந்த ரசிகர் காட்சியைப் பார்த்து விட்டு பின் ஒரு வேனைப் பிடித்து மூன்று மணிக்கெல்லாம் கடலூர் வந்து பெயருக்கு வீட்டில் குளித்துவிட்டு தீபாவளியன்று வேல்முருகன் தியேட்டருக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆஜர். நீங்கள் சொன்னது போல 'மனிதன் கதை இது' பாடலில் உச்சகட்டமாக தியேட்டர் அல்லோலகல்லோலப் பட்டது. அன்று நடந்தவைகளும் தங்களுக்குத் தெரியுமே!
'ராமன் எத்தனை ராமனடி' யும் வேல்முருகனில் பின்னிப் பெடல் எடுத்தது. ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்புல் தான். ஒவ்வொரு காட்சிக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான். நீங்களும் என்னுடைய பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. அடிக்கடி எழுதுங்கள்.
நண்பர்களே,
பரவசத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு என் நடிப்பு தெய்வம் எனக்கு வழங்கிய சொர்க்கானுபவத்தை ,கலைஞர் TV யில் 3.30-7.00 அனுபவித்தேன்
நான் முதல் முறை கிருஷ்ணவேணி திரையரங்கில்,1975 இல் பார்த்ததை விட கண்ணாடி மாதிரி சிறு கீறல் கூட இல்லாத print .என்ன அழகு அசல் முடியில் என் திலகம் !!!!
அப்பாடா, ஒரு திரைக் கதை,வசன வித்தகர்,ஒரு தேர்ந்த இயக்குனர்,ஒரு கேமரா வித்தகர்,ஒரு திரை இசை திலகம்,கவியரசு எல்லாம் சேர்ந்து .......
என்னை படைத்து இதை பார்க்க வைத்த கடவுளுக்கு கோடி நன்றிகள்.
என் ego ஐ தூக்கி எரிந்து விட்டு,இந்த நடிப்பு கடவுளின் தொடரை தொடருவேன்.