Esvee sir,
வரி நீங்கலாக நடிகர் திலகத்தின் உத்தமன் திரைப்படம் 173 நாட்களில் 6,17,000 மேல் வசூல் செய்துள்ளபோது (பத்திரிகை ஆதாரம் கொடுத்துள்ளேன் )...
அந்த பத்திரிகை விளம்பரத்தில்
அதுவரை திரையிடப்பட்ட அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை, HOUSEFULL காட்சிகள் சாதனையை முறியடித்து என்றொரு வாக்கியம் உள்ளது பாருங்கள்
http://i501.photobucket.com/albums/e...ps21763e16.jpg
"உலகம் சுற்றும் வாலிபன்" உத்தமனுக்கு முன்பு வந்த படம் தானே ? அதில் எதாவது மாற்றம் இருக்கிறதா ?
மாற்றம் இல்லாத பட்சத்தில் உத்தமனின் வசூல் அதிகபட்சமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது !
173 நாட்களில் வசூலான தொகையே அது வரையில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகபட்சவசூல் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் முரியடிக்கபடவில்லை என்பது எப்படி உண்மையான தகவலாக எடுத்துகொள்ள முடியும் ?
உங்களுக்கு வந்த தகவல் படி "வசந்தமாளிகை" 325 நாட்கள் ஓடி 9,44,000 வசூல் செய்தது "உலகம் சுற்றும் வாலிபன்" கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது என்பது எந்த வகையில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் என்பதை யோசியுங்கள் !
வசந்தமாளிகை திரைப்படம் இலங்கையில் இரண்டு திரை அரங்கில் 250 நாள் ஓடிய விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது .
http://i501.photobucket.com/albums/e...ps34d4a35c.jpg
அதுபோல நீங்களும் உலக சுற்றும் வாலிபன் ஓடிய நாட்கள் பத்திரிகை விளம்பரம் தயவு செய்து முதலில் பதிவிடவும். அதை நிறைய பேர் பார்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். !
நீங்கள் குறிப்பிட்டுள்ள FIGURES இல் ஒன்று தவறான தகவல் என்பது திண்ணம் !
அவர் சொன்னது இவர் சொன்னது என்றால்...இலங்கையில் வசிக்கும் என்னுடைய நண்பர் மற்றும் இலங்கை பந்து வீச்சாளர் திரு முத்தையா முரளிதரன் அவர்களின் மைத்துனருமான திரு சிவகுமாரன் கூறிய தகவலின் படி நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை படத்தின் வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை என்று நான் கூட கூறலாம்.
நடுநிலை செய்தித்தாள் விளம்பரம் இருந்தால் இது போல தகவல்கள் பதிவிடலாம். வசூலை பொருத்தவரை இதுபோல அவர் கூறுவது..இவர் கூறுவது...ரசிகர் மன்ற நோட்டீஸ்...ஒரு நடிகரை ஆதரிக்கும் பத்திரிகை தகவல் இவை ஒன்றும் ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று உரைத்தவரே நீங்கள் தானே எஸ்வி சார் !
இப்போது மட்டும் எப்படி உங்கள் தகவல் ஆதார ஆவணமாக எடுத்துகொள்ள முடியும் ?
எங்கள் திரியில் திரு சிவா எழுதினாலும் பத்திரிகை ஆவணம் இல்லாதபட்சத்தில் நீங்கள் அதை எடுத்துகொள்ளவேண்டாமே !