அருமையான பாடல். ஆம் இது தெலுங்கு படத்தின் தமிழாக்கம்.
Printable View
From Naastikan, Tamil dubbed version of Nastik (1954)(Hiindi)
Maanilmel Sila Maanidaraal Enna Maarudhal.........
http://www.youtube.com/watch?v=vAuyp_bEwyk
Dekh Tere Sansar Ki Haalat Kyo Ho Gayi Bhagwan........
http://www.youtube.com/watch?v=Zl0OqXbQzaM
The Hndi original was already posted by Krishna.
We sang this jugalbandhi only once. My friend from the north (border state) did not feel comfortable singing it ! :(
......................
எத்தனை வருஷம் ரெஸ்ட் கொடுத்தாலும் ,சுயமாக சிந்திக்க மாட்டேன் என்று சொல்லும் தன்மான சிங்கங்களை சீண்டியும் திருத்த முடியாது என்பதால் வரவேற்கிறேன். வாருங்கள். ஹிந்து,தினமலர்,கூகுள் இவற்றை புரட்டும் வேலை மிச்சம்.
வாருங்கள் கிருஷ்ணா.(ஜி வாங்கிய பட்டமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.)
என்னுடைய பிரிய வாசுவின் பதிவை cut paste செய்து அமுக்கியே துவங்கியிருக்கிறீர்கள்.எல்லோருடைய விருப்பமும் தங்கள் சொந்த சரக்கு மட்டுமே. (வாசு,சின்ன கண்ணன்,முரளி,மது உட்பட)புரிந்தததா?
'ஜீவிதமோ சபலமோ
என் ஜீவிதமோ சபலமோ
என்று சுகம் மலருமோ
பிரேமை என்றால் மதுரமோ'
'அனார்கலி' தெலுங்கில் இருந்து தமிழ் பேசிய போது நமக்குக் கிடைத்த பாடல். இந்தப் பாடலும் இந்தியிலிருந்து இறக்குமதியானதுதான். ஹிந்தி, தெலுங்கு தமிழ்ப் படுத்தப் படும்போது அதற்கு எல்லோரும் அழைப்பது ஜிக்கி என்ற கிருஷ்ணவேணியைத்தான். இந்தப் பாடலும் அப்படியே. இதில் அனார்கலி அஞ்சலிதேவி. சலீம் நாகேஸ்வரராவ். இசை ஆதி நாராயண ராவ்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YvQcOyK3Eoc
அதே 'அனார்கலி'(1953) இந்திப் படத்திலிருந்து. பிரதீப் குமார், பினாராய் நடித்த இப்படத்தின் லதா பாடிய பாடலான
'Yeh Zindagi Usi Ki Hai' (orijinal tune)
பாடல் பல மொழிகளிலும் ஹிட்டானது. இசை: சி.ராமச்சந்திரா
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Na2VxqcsvQo
அவ்வளவு ஏன்? ஒரிஜினல் தமிழ்ப்படமான நடிகர் திலகம் நடித்த 'கிருஷ்ணா' பிக்சர்ஸ் தயாரித்த 'காவேரி' படத்தில் பத்மினிக்காக ஜிக்கி பாடிய
'என் சிந்தை நோயும் தீருமா'
பாடலும் 'Yeh Zindagi Usi Ki Hai' பாடலைத் தழுவியதுதான். (இசையமைப்பு: ஜி.ராமநாதன் மற்றும் விஸ்வநாதன் ராமமூர்த்தி)
http://www.youtube.com/watch?v=ODjPNvmvHWM&feature=player_detailpage
ஒரே பாடல் பல மொழிகளில் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது!
Rajesh: Here is another song in the same tune as 'dekh tere sansar ki halat....' It was a popular tune in the 50s.
ananganai nikartha azhagane undhan aasai maravene........ by Jikki:
http://www.youtube.com/watch?v=01j-duTX0HA
There is another song in the same tune I am searching for. Transliteration is the problem ! :(
I think I posted more than my share of songs! :) See you later ! :)
பொங்கும் பூம்புனல்
மானிட இனம் காதலை வரவேற்கிறதோ இல்லையோ இயற்கை உவகை கொண்டாடுகிறதே காதலை..
டி.ஆர்.மகாலிங்கத்தின் மிக மிக மிக சிறந்த பாடல்களில் ஒன்று... அதுவும் எஸ்.ஜானகியின் குரல் இப்பாடலில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது...
பாடலின் நடுவில் ஓடம் பயணிப்பது போலே தாளமின்றி மெட்டு இனிமையாக அமைக்கப்பட்டிருப்பது அருமையோ அருமை...
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அபூர்வ பாடல்..
என்னைப் பார் படத்திலிருந்து டி.ஜி.லிங்கப்பா இசையில்
http://play.raaga.com/tamil/browse/m...-Paar-T0001587
வாசு,
உன் பதிவுகளை நான் ரசிக்கும் விதமே வேறு. என்னுடைய பதிவு போலவே நேசிப்பேன். இரவு நடக்கின்றது என்னுடைய விருப்ப என் பதிவு போன்றதே.விருந்தினர்களுடன் முழு நாளும் சென்று விட்டதால் ,இன்றுதான் பார்க்க முடிந்தது.
பந்தயம் விசேஷம்.)எனது சிறு வயது ரிலீஸ் பட அனுபவங்கள் ,8 வயது வரை ஆத்தூர் (ஸ்ரீதர்,ஸ்வர்ணா ,ராமச்சந்திரா ),8 இலிருந்து 10 வயது வரை கடலூர் (நான் அவதரித்ததால் புண்ணியம் பெற்ற ஷேத்திரம்)நியூ சினிமா,முத்தையா,பாடலி,கமர் (கொஞ்சம் சென்று பாபு புதுசு),11 வயது முதல் 16 வயது வரை கும்பகோணம் (ஜுபிடர் ,விஜய லட்சுமி,டைமண்ட் ,ராஜா,நூர்மஹால்,(கடைசி கற்பகம்) சம்பந்த பட்ட இனிய நினைவுகள் சுமந்தது.இன்னும் நான் மிக மிக நெருக்கமாக,அணுக்கமாக நேசிக்கும் என் அன்னையின் பெற்றோர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வசித்த ஊர்கள்.எங்களுக்கு விடுமுறையில் ஒரே நாதி.தாயார் ஒரே பெண்.தந்தையார் பக்கம் ஏராள உறவினர்கள் நூறுக்கும் மேற்பட்ட இருந்தும் பரிச்சயம் என் கல்லூரி நாட்களின் போது மட்டுமே சுமார் நெருக்கம் ஏற்பட்டது.
பந்தயம் பார்த்தது கடலூர் முத்தையாவில்.8 வயது சிறுவனாக.அப்போதே தனியாக தைரியமாக சினிமா செல்வேன். back bench என்று ஞாபகம்.(55 பைசாவோ,அறுபதோ நினைவில்லை).அதற்கு பிறகு இந்த படம் பார்த்த நினைவில்லை. மனதில் கிளைமாக்ஸ் காட்சி அவ்வளவு தங்கி விட்டது. காரணம் இந்த அபூர்வ பாடல்.நீங்கள் சொன்ன பிறகு கதையே ஒரு நிழல் போல என் நினைவின் அடுக்குகளில் இருந்து பீறிட்டெழுகிறது.என்னுடைய 8 வயது ஞாபங்களை மீட்டெடுக்கிறது. நீங்களும் அங்கே அப்போது இருந்திருக்க வாய்ப்புண்டு.(மதுரை சென்ட்ரல் இல் நானும் ,முரளியும் ஒரு காட்சியில் சந்திப்பை தவற விட்டு (மே 1972 ) 2012இல் 40 வருடம் கழித்தே சந்தித்தோம்.(உங்களையும் 1967 இல் தவற விட்டு 2012 இலேயே சந்தித்தேன்)
நல்ல வேளை வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்றதே இல்லையாகையால் ,வேண்டாத பழக்கங்கள் உருவாகவே வாய்ப்பில்லை.இன்று வரையும் இல்லை.
வாசு, அணு அணுவாக பாடலில் வாழ்ந்தேன்.
பொங்கும் பூம்புனல்
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை என்று புலம்பும் இவர் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார். தான் சொல்ல நினைப்பதைத் தன் கண் சொல்கிறதாம்..
காதலி என்ன சொல்கிறாள்.. இனிக்கும் கனவுகள் மறக்குமா எனக் கூறுகிறார்..
சபாஷ் மாப்பிளே படத்தில் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் இசையரசியின் குரல்களில் அருமையான டூயட் பாடல்
மனதில் இருக்குது ஒண்ணு
http://play.raaga.com/tamil/browse/m...illai-T0001472
வா ராஜேஷ். நடிப்பரசர் படங்களில் இசையரசி பாடலுடன் துவங்கு. (என் விருப்பம் தாய் தந்த பிச்சையிலே,மனம் படித்தேன்,அன்னமிட்ட கைகளுக்கு)
பொங்கும் பூம்புனல்
மங்கைக்கு மாங்கல்யமே பாக்கியம்...
இது ஒரு மொழிமாற்றுப் படமாக இருக்கலாம்.. இசை மக்களால் அதிகம் அறியப்படாத ஜீவன் என்பவர்..
இப்படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய அபூர்வ பாடல்
http://play.raaga.com/tamil/browse/m...lyame-T0002206