அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=K-KrtpX5gao
பாக்கு வெத்திலே படத்திலிருந்து...
Printable View
அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=K-KrtpX5gao
பாக்கு வெத்திலே படத்திலிருந்து...
ஹாய் குட்மார்னிங்க்க் ஆல்
ஹாய் ராகவேந்தர் சார் வாங்க….:)
அந்த ராமனும் இந்த சீதையும் தங்கத் தேரில் ஊர்கோலம் போனார்.. பாக்குவெத்தலைன்னு மங்களமா பேர்வச்சுட்டு சோஓஓகம்.. ஹீரோயின் யார்.. கோபிகாவோட அம்மா சாயல் இருக்கே! :)
கலைமாமணியே..—தேரிலே உலாவரும் செந்தூரப் பூவண்ணமே ம்ம்.. ஒல்லி விஜயன்..ஒல்லி சரிதா..
லஷ்மி வந்தாள் மகராணி போல் – முத்துராமன் வடிவுக்கரசி..ம்ம்
பணம் பெண் பாசம் முத்துராமனின் சொந்தப் படம் ஜாவர் சீதாராமனின் கதை..மதுரை சென் ட்ரலில் ரீலீஸ் என நினைவு.. ஓடவில்லை
கதையில் வரும் அகங்கார, சதுரங்க வாழ்க்கையில் தேர்ந்தபக்கா பிஸினஸ்மேன் சக்ர பாணி பாத்திரத்தில் முத்துராமன் பொருந்தவில்லைஎன்று தான் சொல்லவேண்டும் (இந்தப்பாட்டைப் பார்த்தபிறகு..அதுவும் லஷ்மி காரக்டருக்கு வடிவுக்கரசி நற நற)
அதே போல் பணக்கார சக்ரபாணியின் இளகிய மனம் கொண்ட இளமை, செழுமை, இனிமை பாலா –கதையில் படித்த போது படங்கள் (வர்ணம் என நினைக்கிறேன்) அழகாக ம்னதில் பதிய அதற்கு எப்படி முத்துராமன் சரிதாவை செலக்ட் செய்தார் எனத் தெரியவில்லை.. மோகன் காரெக்டரில் விஜயன்..கதைப்படி கட்டுமஸ்து இளைஞன்..மூக்குக் கண்ணாடி எல்லாம் கிடையாது..ம்ம்
படம் தோல்விக்கு இன்னொரு காரணம் காலகட்டம்.. ஐதிங்க் 66இலோ 67இலோ குமுதத்தில் தொடராக வந்த நாவல் ( என் சகோதரி பைண்ட் பண்ணி வைத்திருந்த புத்தகத்தை நான் எண்பதுகளில் படித்த நினைவு)
பின் வெளியானது எண்பதுகள் இல்லியோ..
பாவம் முத்துராமன்..இதன் பிறகு நடித்த போக்கிரி ராஜா தான் அவர் கடைசிப்படம் என நினைக்கிறேன்..(ஆயிரம் முத்தங்கள் ஷீட்டிங்க் சென்று ஊட்டியில் ஹார்ட் அட்டாக்.. அப்புறம் அந்த ஸேடிஸ்ட் வில்லனுக்கு மலையாள ஆக்டர் ஒருவரைப் போட்டிருந்தார்கள் என நினைவு..)
ம்ம்.. ரேர் சாங்க்ஸ்க்கு ஒரு தாங்க்ஸ்..
Courtesy: Tamil Hindu
காதலைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்லித் தீருவதில்லை. ஆன்மாவின் துடிப்பு, இரு உயிர்கள் ஒன்றாகும் சங்கமம் என்றெல்லாம் சொல்லப்படும் இந்த உணர்வு, ஒரு விதத்தில் அடுத்தவர் மீது கொள்ளும் அதீத ஆதிக்க மனப்பான்மையே என்ற பார்வையும் உண்டு. காதலர்கள் தாம் விரும்புகிறபடியே மற்றவர் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தையே ‘உன் விருப்பப்படியே நான் இருப்பேன்‘ என்ற காதல் மொழிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.
அதீதமான எதிர்பார்ப்பையும் ஒருவருக்காக மற்றவர் மாறும் விழைவையும் சுவையாக, ஆனால் மாறுபட்ட முறைகளில் கூறும் தமிழ் - இந்திப் பாடல்களைப் பார்ப்போம். உனக்கு விருப்பமானவற்றையே நான் பேசுவேன். நீ பகலை இரவு என்று சொன்னால் நானும் அப்படியே சொல்வேன் என்கிறான் இந்திக் காதலன். நான் பேச நினைப்பதை நீ பேச வேண்டும் என்று கோருகிறாள் தமிழ்க் காதலி. இரு பாடல்களையும் பாருங்கள்:
இந்திப் பாட்டு.
திரைப்படம்: சஃபர் (பயணம்)
பாடலாசிரியர்: இந்திவர்
பாடியவர்: முகேஷ்
இசையமைப்பு: கல்யாண் ஆனந்த்ஜி
பாடல்:
ஜோ தும்கோ பசந்த் ஹோ
வோ ஹீ பாத் கஹேகா
தும் தின் கா அகர் ராத் கஹேகா
தோ ராத் கஹேகா
...
...
பொருள்:
உனக்கு என்ன விருப்பமோ
அதையே என் உரையாகக் கொள்வேன்
நீ பகலை இரவென்று கூறினால்
புகலுவேன் நானும் அது இரவென்றே
என்னுடன் நீ இருந்திராவிட்டால்
இறந்திருப்பேன் என்றோ நான்
நிறைவேறிவிட்டது வாழ்க்கையின்
நீண்ட லட்சியம் உன் மூலம்
வாழ்வை உனது வசீகரம் என
வாயார நான் சொல்லுவேன் (உனக்கு என்ன விருப்பமோ)
விரும்புவேன் (உன் சொல்) நிறைவேற்றுவேன்
விரிவாகப் பாராட்டுவேன் - உன்னை மட்டும்
கண்களில் ஒளி இருக்கும்வரை
காணுவேன் உன்னை மட்டுமே
என்னுடைய பேச்சுகள் மூலம்
எடுத்துரைப்பேன் உன் எழில் யாவும்
உனக்கு என்ன விருப்பமோ
அதையே என் உரையாகக் கொள்வேன்
நீ பகலை இரவென்று கூறினால்
புகலுவேன் நானும் அது இரவென்றே.
இதே கருத்தை இன்னொரு பார்வையில் எடுத்துக்காட்டும் தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.
திரைப்படம்: பாலும் பழமும்.
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்திரராஜன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல்:
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் யாவும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசி ஆற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்
சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நம்மையன்றி வேறேதும் இல்லை
நான் பேச
தேர்னு தேடிப்பார்த்தா தெரிஞ்ச பாட்டா இருக்கா
அப்புறம் ரதம்னு தேடிப்பார்த்தேனா இது கிடைச்சது
தேடிவரும் தெய்வ சுகம் ரவிச்சந்திரன் பாரதி..
https://youtu.be/droaLG0M8ts
அல்லி விழி துள்ளிவரும் வெள்ளி ரதம்னு வருதுங்க்ணா..:)
சி.க,
'தங்க ரதம் வந்தது வீதியிலே' ஞாபகம் வரலியா? அது கூட மறந்து போச்சா? (தேங்க்ஸ் சிம்ரன் from பஞ்ச தந்திரம்) என்னை தூங்க விடலன்னா உமக்குத் தூக்கம் வராதா?:)
https://youtu.be/7bJgAbV91mA
இந்தாங்க.
'அழகு ரதம் பொறக்கும்... அது அசைஞ்சி அசைஞ்சி நடக்கும். 'கற்பூரமா' புடிச்சுக்குவீங்கதானே!:) அட 'தாராபுரம் தாம்புரம்... இப்ப புரியுதா?
https://youtu.be/9NVsYQRLwbc
அப்புறம் ....பனியனும்,:) கெளதமியும் பாடும்,
'வானத்துல வெள்ளி ரதம்' இருக்கே.
https://youtu.be/InGis3MPuso
ரகம் ரகமா 'ரதம்' பாடல்கள் இருக்கே.
http://www.inbaminge.com/t/d/Deiveeg...gal/folder.jpg
இன்னொன்னு. 'ஓடுவது அழகு ரதம்'. ஸ்ரீகாந்தும், உமக்கு ரொம்பப் பிடிச்ச 'நற நற' வடிவுக்கரசியும்:) 'தெய்வீக ராகங்களி'ல் ஓடிக் கொண்டே பாடும் பாடல். ஆனால் பாடல் சுவை. தமிழ் கொஞ்சுகிறது. அட! வடிவுக்கரசி கூட கவர்ச்சியாய் தெரிகிறாரே!:) வாணியும், ஜெயச்சந்திரனும் பின்னணி. இசை 'மெல்லிசை மன்னர்' அருமையான டியூன். மன்னரை 'ராஜா' ஓரங்கட்டினாலும் மன்னர் மன்னர்தான் என்று நிரூபிப்பார். ஆனால் ஸ்ரீகாந்துக்கு பின்னணியாய் ஜெயச்சந்திரனை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். பாலா ஜஸ்ட் ஓகே.
https://youtu.be/13fyZbSr9tc
எனிவே திரும்ப திரும்ப போட்டாலும் 'தேடி வரும் தெய்வ சுகமே' தனிதான். தேங்க்ஸ்.
சி.க,
இங்கே கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது. (இப்ப வெளுப்பியா!):) அக்னியிலிருந்து அருமையா தப்பிச்சாச்சு. சுகமா இருக்கு.
'வெயிற்கேற்ற மழையுண்டு':) (ரவி, மன்னிக்க!)
ஆமாம்! 'பணம் பெண் பாசம்' சரி! அப்புறம் 'பணம் பகை பாசம்னு' ஒன்னு இருக்கா? அதுக்கும் புத்தக பைண்டிங் உங்க வீட்டில் இருக்கா?:) இருந்தா சொல்லுங்களேன்.
இது...இது...இதுதான் 'ரசிக வேந்தர்' என்பது.
ராகவேந்திரன் சார்,
நன்றியோ நன்றி! என்ன அருமையான பாடல்கள்! மறந்தும் மறந்து போக இயலாத பாடல்கள். அதுவும் பாலாவின் 'லஷ்மி வந்தாள்' லக லக லக. செமை பாட்டு, இதெல்லாம் என்னோட பாலாவின் தொடரில் வரப் போகுது. 'பிராயச்சித்தம்' பாடல்களுக்காக தவம் கிடந்த ஒரு படம். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் பல குப்பை என்றாலும் பாடல்கள் கோபுரம். அதில் சித்தமும் ஒன்று.
சார்,
'சாமி செஞ்ச பொம்மைகள் போலே' என்ற இன்னொரு பாடல் 'பிராயச்சித்த'த்தில் பிரசித்தம் என்று நினைவு. சரியா ராகவேந்திரன் சார்? சுசீலா பாடியிருப்பார். அந்தப் பாடலை எனக்காக தரவேற்ற முடியுமா?
வாசு சார்..:) எக்கச் சக்கமா ரதம் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்.. எதுல ஏறறதுன்னு தெரியலை..இப்ப வீட்ல இல்லையா..போய் த் தான் கேக்கணும்..
பிராயச்சித்தம்னு தேடினா தகிடதம்னு ஒரு பாட் சிக்கிச்சு.. நா கேக்க முடியாத்..இதானா பாருங்க :)
https://youtu.be/csljOEQK31Y
தங்கரதம்லாம் நினைவுக்கு வந்துச்சுங்க்ணா.. இந்த தேடி வரும் தெய்வ சுகம் போட்டாச்னு நினைவு இல்லை அதான் :)
இன்னொரு பாட் நான் தேடிக்கண்டு பிடிச்சு வச்சுருக்கேனாக்கும்..ஜெயந்தி..ஜோடி மறந்த் போச்.. இன்னும் சில மணி நேரத்துல போடறேன்..:)
பணம் பகை பாசம் புத்தகமால்லாம் வரலை.பட் ஒரே ஒரு பாட் நீஙக் போட்டதா நினைவு..சரியா..ஸ்ரீகாந்த்...
சி.க, கல்நாயக், ரவி
ஆச்சி அந்த காலத்தில் ஆடாத ஆட்டமா? அதுவும் காபரே!ம்ம்.. இப்போது உடம்பு கொஞ்சமும் முடியாமல் படுத்த படுக்கையாய் கிடக்கிறார். காலமடி காலம்.
இதோ ஆச்சி காபரே ஆடிய 2 பாடல்கள் தருகிறேன்.
'அந்த ரதிக்கு நான் தங்கை'
https://youtu.be/eVVNTKWoXwY
'காலத்தில் இது நல்ல காலம்'
https://youtu.be/dz7F1sKmyT8