Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் பால் அளவற்ற பாசமும் அன்பும் வைத்துள்ள ரசிகர்கள், உணர்ச்சி வசப் படுவது இயற்கையே. ஆனால் அந்த உணர்ச்சி வசத்தால் அவர்கள் உந்தப் பட்டு எடுக்கும் முடிவுகள் மிகவும் மன வருத்தத்தினை அளிக்கின்றன. நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த ஒரு ரசிகர் உணர்ச்சி மேலீட்டால் விபரீத முடிவிற்கு சென்றதாகவும் சுற்றியிருந்த நமது மற்ற நண்பர்கள் நல்ல வேளையாக அதனை தொடக்கத்திலேயே தடுத்து அவரைக் காப்பாற்றி விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக எந்த வித விபரீத முடிவிற்கும் ரசிகர்கள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் இப்போது இருக்கும் நிலையே தொடரவும் சிலை அங்கேயே தொடர்ந்து இருக்கவும் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் வழக்கறிஞர்கள் மூலமாக சம்பந்தப் பட்டவர்களால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது வழ்க்காடு நிலையில் உள்ளதால் தயவு செய்து ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம்.