http://i501.photobucket.com/albums/e...pse7b18367.jpg
Printable View
ரவி,
ஒரு இரண்டு மூன்று விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். PM மூலமாக சொல்வதைத்தான் நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் நீங்களே திரியில் பொதுவாக எழுதியிருப்பதால் இங்கே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்.
நண்பர் சிவா உங்கள் பதிவில் ஒரு சில எழுத்து பிழைகளை சுட்டிக் காட்டினர். உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழை எப்படி பேச வேண்டும் என்பதை இந்த அகிலத்திற்கே கற்றுக் கொடுத்த தமிழன், தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் மத்தியில் எந்த வித சுயநலமுமின்றி தமிழ் வளர்த்த தமிழ் தாயின் தலைமகன் நடிகர் திலகம். அவரின் ரசிகர்கள் தமிழை தவறாக கையாண்டுவிடக் கூடாது என்ற உணர்வின் அடிப்படையில் வந்த பதிவே அது. அதற்கு உங்கள் பதில் தேவையை விட சற்று அதிகமாகவே காரமாக இருப்பதாக எனக்குப் படுகிறது. நம்மை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் சிவா சார்.
இரண்டாவது பாயிண்ட். பதிவுகளை பாராட்டுவதில்லை. இதற்கும் நான், நான் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவன். காரணம் நீங்கள் மட்டுமல்ல இங்கே பலருக்கும் என் மேல் இந்த குறை உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். நான் பாராட்டுவதில்லை என்று சொல்லி விட்டு, பாராட்டுவதால் உங்கள் இடம் பறி போகாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். என் இடம் என்று நீங்கள் உத்தேசிப்பது moderator என்ற பதவியை என்றால் அதை எனக்கு தந்தவர்கள் Hub Admin. அவர்கள் நாளை நான் இந்த பதவிக்கு தகுதியற்றவன் என்று நினைத்தால் இதை என்னிடமிருந்து எடுத்து விடுவார்கள். எனவே எனக்கு அந்த நாற்காலி மோகம் இல்லை. அதல்ல, திரியில் எனக்கு இருக்கும் இடம் என்பதைதான் நீங்கள் சொல்லுகிறீகள் என்றால் அது தர வரிசையில் அமைந்தது அல்ல. எழுது பொருளும் எழுதும் முறையுமே பதிவுகளை வாசகனுக்கு பிரியமுள்ளதாக மாற்றுகிறது. இது பலருக்கும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எழுதுவதில்லை. நான் என மனதில் என்ன உணர்கின்றேனோ அதை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன். வாசகனின் மனமும் என் எழுதும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது அது அவனுக்கு பிரியமுள்ளதாக மாறுகிறது. அப்படியில்லாத பட்சத்தில் எந்த எழுத்தும் கவனிக்கப்படாமல் போகும். இதை நன்கு உணர்ந்த நான் மற்றவர்களை போட்டியாக நினைப்பதோ அவர்கள் வந்தால், வளர்ந்தால் என் இடம் போய் விடுமோ என்று ஒருக்காலும் நினைத்தில்லை. இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் பல ரசிகர்களுக்கும் இந்த திரியை அறிமுகம் செய்து வைத்து அவர்களை உள்ளே இழுத்து வந்திருக்க்றேன். இந்த திரியைப் பொறுத்தவரை நான் கடைசி தொண்டன் இந்த திரியில் என்னால் முடியும் காலம் வரை பதிவிடுவதே என் இலக்கு.
பாராட்டு என்று சொன்னால் ஒரு பதிவு என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் அதை நான் மனதார பாராட்டுவேன். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஜோ எழுதிய சில கவிதைகள், சாரதா எழுதிய சில திரைப்பட ஆய்வுகள் [ராஜா, நீதி, என்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் 100வது நாள் விழா இப்படி நிறைய சொல்லலாம்], கார்த்திக்கின் கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, உத்தமன் பட அனுபவங்கள், வாசுவின் பாதுகாப்பு படப்பிடிப்பு நேரிடை வர்ணனை, கடலூரில் சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவம், என் மண் என் மக்கள் பதிவு, சுவாமியின் பாவமன்னிப்பு - 51, புதிய பறவை காட்சிக்கு காட்சி வர்ணனை, கோபாலின் ஸ்கூல் of acting-ல் வந்த கட்டபொம்மன், தெய்வமகன், ராகவேந்தர் சாரின் சில பொக்கிஷ பதிவுகள், பார்த்தசாரதியின் பாடல் ஆய்வுகள், அவரின் அன்னை இல்லம் படத்தில் இலை போட்டு சாப்பிடும் காட்சியின் continuity பற்றிய பதிவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் சில நாட்கள் முன்பு நீங்கள் எழுதிய கர்ணன் பற்றிய பதிவும் அது நன்றாக அமைந்திருந்ததால் பாராட்டியிருக்கிறேன்.
ஆனால் அதே நேரத்தில் 1000 பதிவு, 2000 பதிவு போட்டுவிட்டார். ஆகவே உடனே பாராட்ட வேண்டும் என்று சொன்னால் சாரி, அது எனக்கு உடன்பாடில்லாத விஷயம். ஆகவே இது போன்ற விஷயங்களை புறந்தள்ளி திரியின் மேன்மைக்கு பங்களிப்பு செய்யுமாறு அனைவரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
இதுவரை என்னுடைய பழைய பதிவுகளை 2008 மற்றும் 2009 காலகட்டங்களில் வந்தவற்றை திரியின் புதிய வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீள் பதிவு செய்து வந்தேன். எனக்கு அந்த சிரமம் வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ சில நண்பர்கள் என் பதிவுகளை மீள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம். பதிவுகளில் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சில நகாசு வேலைகள் செய்து போடுகின்றனர். முழுமையாக எடுத்து போட்டு விட்டால் எனக்கும் மீள் பதிவு போடும் வேலை மிச்சம்.
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் acid test-ற்கு போவதற்கு முன் மதுரையில் 1969 முதல் இருவர் படங்களும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற விஷயத்தில் எப்படி perform செய்தன என்பதை ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.
1969-ல் மே மாதம் 1-ந் தேதி வெளியான அடிமை பெண் மதுரை சிந்தாமணியில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை அந்த குழுவில் இருக்கக்கூடிய சில முதிர்ந்த ரசிகர்கள் 1961-லேயே இதே சிந்தாமணியில் தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்த சாதனை பாச மலர் திரைப்படத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 1969-ல் நடந்தது பத்திரிக்கையில் விளம்பரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 1961-ல் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதேயாகும்.
அதே 1969 நவம்பரில் தீபாவளிக்கு மதுரை சென்ட்ரலில் வெளியான சிவந்த மண் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றை ஒன்றை ஒன்று மிஞ்சும் போட்டியை அரங்கேற்றிடதானே இரு தரப்பும் விரும்பும்? சிவந்த மண் சாதனையை முறியடிக்க 1970 பொங்கலுக்கு மதுரை சிந்தாமணியில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தை நம்பினர் எம்ஜிஆர் ரசிகர்கள். அந்த படத்திற்கு வணிக ரீதியாக நல்ல response இருந்தும் 75 காட்சிகள் மட்டுமே தொடர் அரங்கு நிறைந்தது. சிந்தாமணி அரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் அரங்கத்திற்கு மிக அருகிலே அமைந்திருக்கும் பிரபலமான அசைவ உணவகம் அம்சவல்லி பவன். அதன் உரிமையாளர் அன்றைய நாட்களில் திமுக ஆதரவாளர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர். சிந்தாமணியில் வெளியாகும் எம்ஜிஆர் படங்களை பெரிய அளவில் சப்போர்ட் செய்வது அவர் வழக்கம். அவர் போன்றோர் முயற்சித்தும் கூட மாட்டுக்கார வேலன் 75 காட்சிகள் மட்டுமே தொடர்ந்து அரங்கு நிறைந்தது.
1970 ஏப்ரல் 11-ந் தேதி சனிக்கிழமை மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு மிகப் பெரிய வெற்றி பெற்று முதல் 32 நாட்களில் அதாவது ஏப்ரல் 11 முதல் மே 12 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 106 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 106 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் [106 Continuous House Full Shows] என்ற சாதனையை புரிந்தது. பாச மலர் இந்த சாதனையை புரிந்தபோது ஆவணப்படுத்த தவறி விட்டதால் இம்முறை எச்சரிக்கையாக இருந்து இதை ஆவணப்படுத்தினார்கள். ஒரு கருப்பு வெள்ளை படம் செய்த சாதனை மாற்று முகாம் தரப்பை மேலும் உஷ்ணப்படுதியது.
அதே 1970 மே மாதம் 21-ந் தேதி வியாழக்கிழமை மதுரை சென்ட்ரலில் என் அண்ணன் ரிலீஸ் ஆனது. மாட்டுக்கார வேலனை compare செய்தால் என் அண்ணன் படத்தின் ரிப்போர்ட் அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் மாற்று முகாம் ரசிகர்கள் விடவில்லை. எப்படியும் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை காட்டிட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். ஆனால் என் அண்ணனும் மாட்டுக்கார வேலன் போல் 75 காட்சிகளோடு ஹவுஸ் புல் விட்டுப் போனது. அதன் பிறகு அதே 1970-ம் வருடத்தில் எம்ஜிஆருக்கு மேலும் 3 படங்கள் வெளியாகின. என் அண்ணனுக்கு பின் ஜூலையில் வெளியான தலைவன் படமும் சரி ஆகஸ்ட் 28 வெளியான தேடி வந்த மாப்பிளை படமும் ரிப்போர்ட் பெரிதாக இல்லாததாலும் இரண்டுமே தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டதாலும் தொடர் ஹவுஸ் புல் வாய்ப்பே இல்லாமல் போனது. அதன் பிறகு 1970 அக்டோபர் 9-ந் தேதி சிந்தாமணியில் எங்கள் தங்கம் வெளியானது. ஆனால் அதுவும் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆக மொத்தம் மதுரை மாநகரில் 1970-ம் ஆண்டில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற இலக்கை எந்த எம்ஜிஆர் படமும் எட்டவில்லை.
நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை வியட்நாம் வீடு 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த பின் அடுத்து வெளியானது எதிரொலி. அது 1970 ஜூன் 27 சனிக்கிழமை அன்று தங்கத்தில் வெளியானது. அதன் பிறகு 1970 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை நியூசினிமாவில் ராமன் எத்தனை ராமனடி ரிலீஸ். நல்ல ரிப்போர்ட் பிளஸ் நல்ல பப்ளிக் audience, ஆயினும் மூன்றாவது வாரம் ஹவுஸ் புல் விட்டுப் போனது. தீபாவளிக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள். இரண்டு படங்களின் வெற்றி பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் ஒரு படத்திற்கு மூன்றாம் வாரத்தின் தொடக்கத்திலும் மற்றொரு படம் 3 வது வாரம் நடுவிலும் வைத்து விட்டுப் போனது. போதாக்குறைக்கு நான்கே வார இடைவெளியில் பாதுகாப்பு ரிலீஸ். அதுவும் தங்கத்தில். 1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.
(தொடரும்)
அன்புடன்
நாட்டாமை,
தூக்கிடுவேன்னு தெரியும். என்னா ....கொஞ்சம் எல்லோரும் ரசிச்ச பிறகு தூக்கியிருக்கலாம்.(அப்போ கண்ணீர் விட்டதாக சொன்ன அத்தனை பதிவுகளையும் தூக்கியிருக்க வேண்டுமே? ஏன் என்னுடையதை மட்டும்?)
100 நாள் தொடர் காட்சிகள் suspense போல விரிகிறது.
உன் கருத்தில் நான் உடன் படுகிறேன். selective ஆக பாராட்டுவதே சிறந்தது.
ஆனால் நீயும் பராட்டினவங்க லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன போது ,உன் கருத்தில் நீயே மாறு பட்டு விட்டாயோ என்ற சந்தேகம் தலை தூக்காமல் இல்லை.
கற்றோரைக் கற்றோரே காமுறுவர்... இங்கு படிக்காத மேதையுடன் ஆவலுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள விழைந்த சான்றோரைப் பாருங்கள். மணிபாலில் ... கர்நாடகத்தில் அந்தக் காலத்தில் ஒரு சிறிய டவுன். மணிபால்... அந்த ஊரின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கல்லூரி நிறுவனர் திரு டி.எம்.ஏ.பாய் மற்றும் டீன் திரு கிருஷ்ணா ராவ் அவர்களுடன் நடிகர் திலகம்.
https://scontent-b-iad.xx.fbcdn.net/...b7&oe=54330C3A
இவ்விழாவினைப் பற்றிய மேல் விவரங்களையும் மேற்காணும் நிழற்படத்தினையும் நமது அருமை நண்பர் திரு ஸ்வாமி துரைவேலு அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் தனிப்பட்ட முறையிலும் நம் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி. இதே போல் இவ்வாய்ப்பிற்காக முகநூல் பக்கத்திற்கும் நன்றி.
https://www.facebook.com/photo.php?f...t=like_tagged#
dear Kalnayak sir.
சிலசமயங்களில் நாம் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக அமைந்துவிடுவது சகஜமே. சிவாசார் ஒரு யதார்த்தத்தில் ரவிசாரைப் பாராட்டிய கையோடு optimistic ஆக சில எழுத்துப் பிழைகளைசுட்டிக்காட்டப் போய் அது positive criticism ஆக எடுத்துக்கொள்ளப்படவில்லை. Grown ups still need to grow up! யாரும் யாரையும் காயப்படுத்தி சுகம்காண எண்ணுவதில்லை. தற்செயலாக அமையும் சில நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவையே. வலிகளை மறப்போம். வழியினில் தொடர்வோம், நடிகர்திலகத்தின் புகழார்வலர்களாக! This thread should not become a see-saw game centre!
ரவிசார். சிவா உங்கள் எழுத்துக்களை மனதாரப் பாராட்டியுள்ளார். உங்கள்மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாகவே சில பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளார். Kindly take it positively and continue to contribute sir. A friend is one who indicates our mistakes at right time right before our face. If one just endorses whatever we do, he may be a friendly foe!!