Originally Posted by
Gopal,S.
வாசு,
உன் பதிவுகளை நான் ரசிக்கும் விதமே வேறு. என்னுடைய பதிவு போலவே நேசிப்பேன். இரவு நடக்கின்றது என்னுடைய விருப்ப என் பதிவு போன்றதே.விருந்தினர்களுடன் முழு நாளும் சென்று விட்டதால் ,இன்றுதான் பார்க்க முடிந்தது.
பந்தயம் விசேஷம்.)எனது சிறு வயது ரிலீஸ் பட அனுபவங்கள் ,8 வயது வரை ஆத்தூர் (ஸ்ரீதர்,ஸ்வர்ணா ,ராமச்சந்திரா ),8 இலிருந்து 10 வயது வரை கடலூர் (நான் அவதரித்ததால் புண்ணியம் பெற்ற ஷேத்திரம்)நியூ சினிமா,முத்தையா,பாடலி,கமர் (கொஞ்சம் சென்று பாபு புதுசு),11 வயது முதல் 16 வயது வரை கும்பகோணம் (ஜுபிடர் ,விஜய லட்சுமி,டைமண்ட் ,ராஜா,நூர்மஹால்,(கடைசி கற்பகம்) சம்பந்த பட்ட இனிய நினைவுகள் சுமந்தது.இன்னும் நான் மிக மிக நெருக்கமாக,அணுக்கமாக நேசிக்கும் என் அன்னையின் பெற்றோர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வசித்த ஊர்கள்.எங்களுக்கு விடுமுறையில் ஒரே நாதி.தாயார் ஒரே பெண்.தந்தையார் பக்கம் ஏராள உறவினர்கள் நூறுக்கும் மேற்பட்ட இருந்தும் பரிச்சயம் என் கல்லூரி நாட்களின் போது மட்டுமே சுமார் நெருக்கம் ஏற்பட்டது.
பந்தயம் பார்த்தது கடலூர் முத்தையாவில்.8 வயது சிறுவனாக.அப்போதே தனியாக தைரியமாக சினிமா செல்வேன். back bench என்று ஞாபகம்.(55 பைசாவோ,அறுபதோ நினைவில்லை).அதற்கு பிறகு இந்த படம் பார்த்த நினைவில்லை. மனதில் கிளைமாக்ஸ் காட்சி அவ்வளவு தங்கி விட்டது. காரணம் இந்த அபூர்வ பாடல்.நீங்கள் சொன்ன பிறகு கதையே ஒரு நிழல் போல என் நினைவின் அடுக்குகளில் இருந்து பீறிட்டெழுகிறது.என்னுடைய 8 வயது ஞாபங்களை மீட்டெடுக்கிறது. நீங்களும் அங்கே அப்போது இருந்திருக்க வாய்ப்புண்டு.(மதுரை சென்ட்ரல் இல் நானும் ,முரளியும் ஒரு காட்சியில் சந்திப்பை தவற விட்டு (மே 1972 ) 2012இல் 40 வருடம் கழித்தே சந்தித்தோம்.(உங்களையும் 1967 இல் தவற விட்டு 2012 இலேயே சந்தித்தேன்)
நல்ல வேளை வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்றதே இல்லையாகையால் ,வேண்டாத பழக்கங்கள் உருவாகவே வாய்ப்பில்லை.இன்று வரையும் இல்லை.
வாசு, அணு அணுவாக பாடலில் வாழ்ந்தேன்.