Quote:
பொய் சொல்ல போறோம்
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `பொய் சொல்லப் போறோம்' தொடர், 50-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.
சாய்ராம் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான காலனியில் குடியிருப்பவர்களை காலி பண்ணுவதற்கு பண்ணிய கலாட்டாக்கள், காலனியில் குடியிருப்பவர்கள் வாடகை தராமல் சாய்ராம் குடும்பத்தினரை படுத்திய பாடுகள் என தொடரும் நகைச்சுவை காட்சிகள் சிரிப்பு மயமானவை.
சாய்ராமிற்கு பிரச்சினை மேல் பிரச்சினை வர, தனது நண்பனிடம் சென்று ஐடியா கேட்கிறார். அவனோ "இதற்கு ஒரே வழி, நாடிமுத்து ஜோசியரை பார்ப்பதுதான்'' என்கிறான். சாய்ராமும் ஜோசியரை சென்று பார்க்க அவரோ "இன்னும் 6 மாதத்தில் நீ உயிர் இழந்து விடுவாய்'' என்று அதிர்ச்சி வெடிகுண்டை வீசுகிறார்.
ஜோசியர் சொன்னதில் சாய்ராம் அதிர்ச்சியடைகிறார். ஆனாலும் மனதை தேற்றிக் கொண்டு அடுத்த ஜென்மத்தில் பிறக்கப்போகும் பிறப்பு பற்றி கேட்கிறார். அதற்கு நாடிமுத்து ஜோதிடர், "முதுகில் ஒரு ரூபாய் சைசிற்கு மச்சம் உள்ள தாத்தா ஒருவர் உனது காலனியில் இருக்கிறார். அவருக்கு தத்து மகளாக இருக்கும் பெண்ணிற்கு திருமணமாகி அவள் மகனாக நீ பிறப்பாய்'' என்று கூறுகிறார்.
சாய்ராம் தன் அடுத்த ஜென்மத்து தாத்தாவை தேட, அது சாமிநாதன் என்று தெரியவர அவரை தாத்தா, தாத்தா என்று கூப்பிடத் தொடங்குகிறார். அவரது தத்து பெண்ணையும் தேடுகிறார். தனது அடுத்த ஜென்மத்து அம்மாவை சாய்ராம் கண்டுபிடித்தாரா... அல்லது இந்த ஜென்மத்து அம்மாவை சாய்ராம் கண்டுபிடித்தாரா, அல்லது இந்த ஜென்மத்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்தாரா என்பதை தொடரும் நகைச்சுவை காட்சிகள் விவரிக்கிறது.
நடிப்பு : மோகன்ராம், சாய்ராம், விஜய் சாரதி, பூவிலங்குமோகன், நளினி, தேவதர்ஷினி, ஆர்த்தி, பாலாஜி, அரவிந்த் ராகவ், சாமிநாதன், ஸ்ரீலதா, ராஜஸ்ரீ, தீபா.