தமிழக சிறைகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிட ஏற்பாடு
http://thatstamil.oneindia.in/news/2...ives-soon.html
Printable View
தமிழக சிறைகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிட ஏற்பாடு
http://thatstamil.oneindia.in/news/2...ives-soon.html
Murali sir, Mohan sir, Raghavendran sir...
Our thankless cine personalities whenever used to mention about K.Balachander's dialogues with P.Madhavan's direction, they always tell ONLY about 'Dheiva Thaii' and never mention about this wonderful 'Neelavaanam'.
For me also many years passed after watching Neelvaanam, but I also missed in that day. But every scene are evergreen in our hearts. In the movie, initially NT works at Shanthi theatre as 'gate keeper' (ticket kizhippavar) in first class entrance. When he is busy in his duty, we can hear the song 'paartha nyaabagam illaiyO' in back ground. The title also run in Shanthi theatre screen.Quote:
Originally Posted by Murali Srinivas
some years before when actress Rajashree was giving 'malarum ninaivugaL' in a tv channel (might be sun tv), she mentioned about NT with high respect and telecasted this song 'Oh.. little flower'. Both danced very well.Quote:
Originally Posted by Murali Srinivas
same like that actress/dancer Vijayalalitha also in her programme mentioned about NT as 'andha imayaththOdu naanum aadiyirukkEn enbathu enakku migapperiya gowravam' and she telecasted the song 'PonmagaL vandhaaL'.
Dear Sri Joe and friends,Quote:
Originally Posted by joe
Pls read opening page in our website, www.nadigarthilagam.com on this news.
Raghavendran.
It should have been done long back, but it's not too late either. Let's wish that this move fetches the expected results.Quote:
Originally Posted by joe
டியர் முரளி & ராகவேந்தர்,
'நீலவானம்' ஒரு அருமையான படம் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்தப்படம் பற்றி இப்படி துண்டு துண்டாக எழுதுவதை விட, யாராவது முழுமையான ஆய்வு (அனாலிஸிஸ்) அல்லது விமர்சனம் எழுதலாமே.
Dear Saradhaa,
நீலவானம் பார்த்து வெகு நாட்களாகி விட்டன. அதனால் ஒரு முழுமையான ஆய்வு சரியாக வருமா என்று சந்தேகமாக இருக்கிறது. பார்க்கலாம்.
உங்கள் வியட்நாம் வீடு என்னவாயிற்று?
அன்புடன்
கட்டிக்கொண்டிருக்கிறேன். இடையிடையே சிமெண்ட் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்சினை, மணல் லாரிகள் பறிமுதல்.... அதனால் ஆமை வேகத்தில் நடக்கிறது.Quote:
Originally Posted by Murali Srinivas
'வியட்நாம் வீடு முடிந்துவிட்டால், நான் வேண்டுமானால் முயற்சிக்கிறேன். அதற்குள் நீங்கள் முடித்துவிட்டால் விட்டு விடுகிறேன்.Quote:
Originally Posted by Murali Srinivas
'வியட்நாம்' என்றாலே இத்தனை கலகங்களும் பிரச்சனைகளும் இருக்கும் தானே! :)Quote:
Originally Posted by saradhaa_sn
வியட்நாம் வீடு
சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர்திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர்திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.
ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் உயர்பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத்தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளைகளால் ஏற்படும் வாழ்க்கைப்போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடுகட்டி குடிபுகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மனாப ஐயர். அதனால் பெயரே பிரிஸ்டிஜ் பத்மனாபன். கோடுபோட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு அதன்படியே நெறிபிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப்போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் பணிபுரியும் மூத்தபிள்ளை ஷ்ரீதர் (ஷ்ரீகாந்த்). மனைவிசொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற்கெல்லாம் 'பூம் பூம் மாடாக' தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மாமியாருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).
இரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தைகள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக்கூடையைத் துக்கிக்கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு "அம்மா, நான் ரிட்டையர்ட் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE" என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் "சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி" என்று சொல்ல "என்னன்னா சொல்றேள்?. அதுக்குள்ளாகவா?" அன்று கேட்க "என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு 'உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா'ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன். எல்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே" என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகி விட்டோம் என்ற சூன்யம்.... எல்லாம் கலந்த கலவையாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப்பிரவாகம்.
(அடப்பாவி மனுஷா... எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம்?. உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே..!. காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே... பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்...!!!)
வேலைமுடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் "டேய் ஷ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி 'அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்'ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா" என்ற் கெஞ்சுவதுபோல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிப்பிக்கல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்....
அப்பா ரிட்டையர்ட் ஆன முதல்மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து "அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப்பனம்" என்று நீட்டுவது கொடுமை.