me too...Quote:
Originally Posted by gopalu_kirtinan
but will it be possible in this latest 'trend & taste' of the young..?. (doubtful)
Printable View
me too...Quote:
Originally Posted by gopalu_kirtinan
but will it be possible in this latest 'trend & taste' of the young..?. (doubtful)
சகோதரி சாரதா,
தங்களின் "இமயம்" திரைப்படத் திறனாய்வுப் பதிவுகள் வழக்கம் போல் அருமை, அபாரம், அற்புதம். இமயமலைச் சாரலுக்கே எங்களை கொண்டு சென்று விட்டீர்கள். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!
நமது நடிகர் திலகம் எவ்வளவு பெருந்தன்மை வாய்ந்தவர் என்பதற்கு, தாங்கள் தொகுத்து வழங்கியுள்ள, அவரது திரைப்படங்களில் வரும், 'சக நடிகர்'களின் டூயட் பாடல்கள் பட்டியலே உயர்ந்த சான்று. அந்த அருமையான தொகுப்பில் சேர்ப்பதற்கு இன்னும் சில:
கண்ணான கண்ணனுக்கு அவசரமா - ஆலயமணி
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இருவர் உள்ளம்
ஆதி மனிதன் காதலுக்குப்பின் - பலே பாண்டியா
இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் - பராசக்தி
கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம் - சத்யம்
ஆகாயம் மேலே பாதாளம் கீழே - நான் வாழவைப்பேன் (ஸோலோ)
இமய வெற்றியைப் பெற்ற "திரிசூல"த்திற்குப்பின் வந்த இந்த "இமயம்", சராசரிக்கு சற்றுக் குறைவான வெற்றியைப் பெற்றதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். ["இமயம்" இலங்கையில் 100 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது. இன்னும் அதற்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எப்படியிருப்பினும், வட இமயத்திற்கு எதிர்முனையில், அடிச்சுவட்டில் இருக்கும் தென் இலங்கை நமது "இமயத்"திற்கு முடிசூட்டி மகிழ்ந்துள்ளது.]
ஸ்ரீவித்யா, கடினமான குணச்சித்திரங்களை கச்சிதமாக செய்யக் கூடிய சிறந்த நடிகை. சிவாஜி - ஸ்ரீவித்யா காம்பினேஷனில் தொடர்ந்து படங்கள் வராமல் போனது தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம்.
கூடுதல் தகவல்களை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கும் நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 127
கே: சிவாஜியை நடிகர் என்று அழைப்பது சரியா, கலைஞர் என்று அழைப்பது சரியா? (இராம.மோகன், புதுவை)
ப: நடிகர் என்று தான் அழைக்க வேண்டும். கலையுலகில் நுழைந்து விட்ட எல்லோருமே கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டாலும், நடிகர் என்று அழைக்கப்பட, சிவாஜி போன்ற சிலர் தானே இருக்கிறார்கள்!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
உண்மை திரு பம்மலார் அவர்களே ,
இன்றும் நடிகர் என்றால் அது நம் NT அவர்களையே குறிக்கும், இன்றும் எனக்கு தெரிந்த பல நண்பர்கள் அவர்கள் COMPUTERஇல் PASSWORD ஆக நடிகர் என்று நம் NT அவர்களையே வைத்துள்ளார்கள்
திரு.ஜேயார்,
தங்களது பாராட்டுக்கும், தகவலுக்கும் எனது பற்பல நன்றிகள்!
அந்த இனிய நண்பர்களுக்கு எனது பணிவான, கனிவான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 128
கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)
அன்புடன்,
பம்மலார்.
October 1 - Nadippu Dhinam
On Astro Vaanavil - Avan Thaan Nadigan, led by YG Mahendran.
On Astro Vellithirai 9pm - Thillaana Mohanambal
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 11
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
இணைந்த இதயங்களுக்கு சொந்தக்காரர்களான லதா-கோபால் காரில் மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். காரை கோபால் ஓட்டி வர, அருகே லதா அமர்ந்திருக்கிறார். இரவு நேரம், போதாக்குறைக்கு மழை வேறு.
மீண்டும் 'மூடப்பட்ட' ரயில்வே கேட்; 'மூட்' அவுட்டாகின்ற கோபால்; ரயில் 'குப்குப்'; கோபால் 'பக்பக்'.
ரயிலின் சப்தம் அதிகமாக, கோபாலின் BP எகுறுகிறது. பயம், அதிர்ச்சி, இயலாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை, எதிர்முனையில் இருப்பவர்கள் கூட எதிர்வாதம் செய்யாமல் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்னமாய் முகத்திலும், அகத்திலும், புறத்திலும் பிரதிபலித்துக் காட்டுகிறார் அண்ணல். "எப்படி பம்மல் இதெல்லாம் இவ்வளவு சுலபமாக இவரால் செய்து காட்ட முடிகிறது!!!" என அருகிலிருந்த நமது நடிகர்திலகம்.காம் ஆச்சரியத்துடன் அளவளாவ, "தங்கள் நிலை தான் எனக்கும்" என அடியேன் பதிலுரைக்க, அரங்கமும் ஆச்சர்யத்தால் அதிருகிறது. சினிமாவுலகின் ஒரே ஆச்சரியக்குறி சிவாஜி தானே!
மீண்டும் கோபால், ரயிலைக் கண்டவுடன் துடிப்பதைக் கண்ட லதா, ரயிலுக்கும் அவரது வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது எனத் தெளிந்து கோபாலைக் குடைந்தெடுக்க, முதலில் மறுக்கும் கோபால், சில நொடிகளிலேயே மனம் மாறி, "சொல்றேன், சொல்றேன்" என்கிறாரே, அந்த இடத்தில் அந்த ஒரு நொடியில் எத்தனை உச்ச உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். ஒரு கம்ப்யூட்டரை அவரருகில் வைத்து உணர்ச்சிகளை கணிக்கச் சொன்னால், அது infinite என்று தான் காட்டும்.
இந்த சமயத்தில் நமது ராகவேந்திரன் சார் ஒரு அரிய தகவலை பகிர்ந்து கொண்டார். "கோபாலும், லதாவும் காரில் அமர்ந்து கொண்டு எமோஷனலாகப் பேசும் க்ளோசப் காட்சிகள் எல்லாம் indoorலேயே படமாக்கப்பட்டவை. இருப்பினும், outdoorக்கான எஃபெக்ட்களை எவ்வளவு கனக்கச்சிதமாக தங்களது நடிப்பில் இருவரும் கொடுத்திருக்கிறார்கள், பாருங்கள்" என்றார். நன்றி, ராகவேந்திரன் சார். இதற்காகவே இருவருக்கும் Special Salutes.
தனது கடந்த கால சிங்கப்பூர் வாழக்கையை கிளைமாக்ஸோடு தொடங்குகிறார் கோபால். அதாவது, தான் ஏற்கனவே திருமணமானவன் என்கின்ற உண்மையை முதலில் கூறுகிறார். சுதாரித்துக் கொள்ளும் லதா முழுவதையும் கேட்கத் தயார் ஆகிறார். தனது பெற்றோருக்கு தான் ஒரே மகன் என்பதால் செல்வத்திலும், செல்வாக்கிலும் புரண்டதாகவும், கவலை, கண்ணீர், கஷ்டம் ஆகியவை என்னவென்றே தெரியாமல், மகிழ்ச்சியில் மட்டுமே திளைத்து வளர்ந்ததாகவும் கூறுகிறார். அமைதியான, அழகிய வங்கக் கடலோரம் எழும்பிய சுனாமி போல், அவரது இன்ப வாழ்விலும் சுனாமி உருவாக, அடுத்தடுத்து அடுக்கடுக்கான துயரங்கள்.
முதல் துயரமாக அவரது அன்னையார் அமரராகிறார். சோகம் என்றால் என்னவென்றே அறியாத கோபாலுக்கு, தாயின் மறைவு தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரது தந்தையார் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவர் மனம் சாந்தி அடையவில்லை. பைத்தியம் பிடித்தவர் போல் சிங்கப்பூர் எங்கும் அலைகிறார். மதி மயங்கிய நிலையில், நிம்மதியை நாடி முதல் தடவையாக, ஒரு நைட்க்ளப்பிற்குள் காலை வைக்கிறார். [அதன் மூலம் காலனையும் அழைக்கிறார் போலும்!]
அண்ணலின் profile close-up pose. அவர் வெள்ளித்திரையில் சுருட்டை பற்ற வைக்க, அவரின் அடியார்கள் திரையரங்கில் சூடத்தைப் பற்ற வைக்கிறார்கள். அரங்க மேடையில் தானே சூடம் ஏற்றக் கூடாது. எனது நாக்கையே மேடையாக்கினால் யார் என்ன சொல்ல முடியும் என ஒரு அடியவர் தனது நாவிலே சூடத்தை ஏற்றி இதயதெய்வத்திற்கு ஆரத்தி எடுக்கிறார். பக்தர்கள் பலர் தங்களது அன்புக்கரங்களில், கற்பூரத்தை பற்ற வைத்து, ஒரு வித வரிசையில் அருகருகே நின்று கொண்டு, அழகுற ஆரத்தி எடுக்கின்றனர். காணக் கண் கோடி வேண்டும்!
இன்று பல கோடிகளைக் கரியாக்கி பிரம்மாண்டம் எனக் கூறிப் படமாக்குகிறார்களே, அதிலெல்லாம் எங்கே இருக்கிறது பிரம்மாண்டம்? [அவையெல்லாம் பிரம்மாண்டமா, தண்டத்திலும் தண்டம் என சகோதரி சாரதா கூறுவது காதில் விழுகிறது]. அண்ணல் profile closeupல் சுருட்டை பற்ற வைக்கும் ஸ்டைலிலிருக்கிறது நிஜமான பிரம்மாண்டம். அவர் சுருட்டிலிருந்து வரும் புகை மண்டலம் பிரம்மாண்டம். வாயிலிருந்து சுருட்டை எடுத்து அவர் புகை விடும் அழகில், அந்த ஸ்டைலில் இருக்கிறது உண்மையான பிரம்மாண்டம். மெல்லிசை மன்னர்களின் preludeல் இருக்கிறது அந்த பிரம்மாண்டம். படம் பிடிக்கும் பிரசாத்தின் கேமரா பிரம்மாண்டம். இந்த இணையற்ற கூட்டணியே பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டம். [மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஒரு பேட்டியில் கூறியது இத்தருணத்தில் நினைவில் நிழலாடுகிறது. 'சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் அவர்கள் தான் பிரம்மாண்டம். அவர்களது படங்களில் வேறு பிரம்மாண்டங்கள் இருந்தால், ஒன்று அவை எடுபடாது அல்லது அவை இரண்டாம் பட்சமாகி விடும்!' எனக் கூறியிருந்தார்.]
சுசீலாவின் ஹம்மிங் இனிமை குறையாத கம்பீரத்துடன் மிதந்து வர, கண்ணீர்ப் பாவையாகவே அதுவரை தமிழ் சினிமாவில் பேர் வாங்கிய சௌகார் ஜானகி, கவர்ச்சிப் பாவையாக கலக்க வந்திருப்பதை யூகித்த கவியரசர்,
"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
எனப் பல்லவி பாடி அவருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார். இறுக்கமான மூடில் வரும் அண்ணலின் இதயத்தை இளகிய ஒன்றாக்க, tension நீங்கி அவர் casual நிலைக்குத் திரும்ப, "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்கின்ற ஆரம்ப வரியை ஒவ்வொரு முறையும் "பார்த ஞாபகம் இல்லையோ" என்றே அழுத்தம் கொடுக்காமல் சுசீலா பாடுகிறார். Simply Superb!
கண்ணீரும், கம்பலையும் தன்னிரு கண்கள் என இருந்த சௌகாரை கவர்ச்சிப் பதுமையாக ஆக்கிய பெருமை ஆக்டிங் தாதா சிவாஜியையும், டைரக்டர் தாதா மிராசியையுமே சாரும். Glamour doll ஆக வந்தாலும் அதுவும் தனக்கு tailor-made ரோல் தான் என இதிலும் மின்னுகிறார் சௌகார். On any basis, Sowcar is a wonderful performer. "புதிய பறவை" சித்ரா கேரக்டர், அவரது கேரியரிலேயே அவருக்கு கிடைத்த ஒரு மிக மிக வித்தியாசமான ரோல். இதனை அவரே பல முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். நடிகவேளுக்குக் கூட இந்த ரங்கன் ரோல், அவரது கலைப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத மைல்கல்.
கவர்ச்சியின் பிம்பமாக மைக்கைப் பிடித்துக் கொண்டு ஒரு புகழ்வாய்ந்த, தலைசிறந்த பாடகி எப்படிப் பாடுவாரோ, என்னென்ன பாவங்கள் கொடுப்பாரோ அது போலவே பாடல் முழுவதும் கறுப்பு நிற காஸ்ட்யூமில் வெளுத்து வாங்குகிறார் சௌகார். கோட்-சூட்-நெக்டை சகிதம், கம்பீரமாக இருக்கையில் அமர்ந்து சிங்கரையும், சாங்கையும் ரசித்துக் கொண்டே, சுருட்டை புகைப்பதும், புகை விடுவதுமாக விதவிதமான போஸ்களில், விதவிதமான ஸ்டைல்களில் கலக்குகிறார் கலையரசர். ஒரு இடத்தில், பாடலை ரசித்துக் கொண்டே தனது ஆள்காட்டிவிரலை லேசாக கடிக்கிறார் பாருங்கள், அதில் அவர் அப்படியே சூது, வாது தெரியாத கோபால் கேரக்டரின் அப்பாவித்தனத்தை படம் பிடித்துக் காட்டுகிறார். பாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் பாங்கு, நமது நடிகர் திலகத்தின் தனிப்பெரும் சிறப்பாயிற்றே!
ஆட்காட்டி விரலை அவர் கடிக்க, அதனால், அவரால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்கள் விசில், கிளாப்ஸ் என அதிர வைக்கின்றனர். இவற்றுக்கு இடையில் தீபாராதனை இல்லாமலா?! அதுவும் திவ்யமாக நடைபெறுகிறது.
இப்பாடலில் அண்ணல் மட்டுமா நடிக்கிறார். அவர் பிடிக்கும் சுருட்டு நடிக்கிறது. அவர் வாயிலிருந்து வரும் புகை நடிக்கிறது. அவரது ஒவ்வொரு அங்க அசைவும், அவரருகில் இருக்கும் அனைத்தும் நடிக்கிறது.
இரண்டாவது சரணத்தில்,
"உந்தன் மனதைக் கேளது சொல்லும்!
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!"
என்ற வரிகளின் போது, தன் இடது கையில் சுருட்டிருக்க, விரலால் உதட்டை வருடுகிறார் பாருங்கள், ஆஹா, ஆஹா!
அதே போல, மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் இணைப்பு இசையின் போது, தனது இடது கை நடுவிரலால், மேலுதட்டை வருடுவதும் ஸ்டைலின் உச்சம். இப்பாடலில், அண்ணலின் ஒவ்வொரு அசைவுக்கும், அரங்கில் ஜோதிமயம் தான்.
பாடல் நிறைவடைய, "உலகத்துலேயே நடிகன்னா என் தலைவன் ஒருத்தன் தான், வேற எவனும் கிடையாது", "எங்கள் தெய்வம் சிவாஜி", "எங்கள் உயிர் சிவாஜி" போன்ற கோஷங்களெல்லாம் பீறிட்டுக் கிளம்புகிறது. விசில் சத்தம் அடங்க நேரமாகிறது. நல்ல இசையை ரசித்த நடிகர் திலகம் திரையில் கரவொலி கொடுக்க, நல்ல performanceஐ ரசித்த நாம் அரங்கில் கரவொலி எழுப்புகிறோம்.
இசையை அவர் ரசித்தார். அவர் அசைவை நாம் ரசிக்கிறோம்!
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 129
கே: தங்கள் படங்களில் அதிகமான பஞ்ச் டயலாக்குகளை வைக்கத் தூண்டும் ஹீரோக்களின் குறிக்கோள், படத்தின் வெற்றியா? இல்லை தற்புகழ்ச்சியா? (வ.லெட்சுமணன், இராஜவல்லிபுரம்)
ப: 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஒரு காட்சியில், "எங்கிட்டயே சாந்தி தியேட்டர் எங்க இருக்குன்னு காட்றியா?" என்பார் நடிகர் திலகம். இத்தனை வருஷங்கள் போன பிறகும் அந்த பஞ்ச், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. சூட்சமம் இது தான். எப்போதாவது ஒரு முறை 'நச்'சென்று வைக்கப்பட்டால் அது பஞ்ச். படம் முழுக்க 'பஞ்ச்' தோரணமே தொங்கினால் அது 'நச்சு பிச்சு'.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2006)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 130
கே: வி.சி.கணேசனுக்கு அடுத்தபடியாக நடிக்கத் தெரிந்த நடிகர் யார்? (ஆர்.கே.கிருஷ்ணரங்கம், கருமாங்குளம்)
ப: பார்த்தீர்களா, பலரை எனக்கு விரோதிகளாக்கப் பார்க்கிறீர்களே!
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
அன்புடன்,
பம்மலார்.