http://i57.tinypic.com/afkjzl.jpg
எஸ்வீ சார்
அருமையான அட்டகாசமான அபூர்வமான ஆவணங்களுக்கு உளமார்ந்த நன்றி
FLIMALAYA - MAGAZINE
http://i62.tinypic.com/11hweuc.jpg
ஃபிலிமாலயா பத்திரிகையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் நிழற்படங்களுக்கு மிக்க நன்றி வினோத் சார்.
Sivaji Ganesan Filmography Series
103. Santhi சாந்தி
http://i1146.photobucket.com/albums/...ps2fbfc47a.jpg
தணிக்கை – 15.04.1965
வெளியீடு – 22.04.1965
தயாரிப்பு – ஏ.எல்.சீனிவாசன் –ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், நாகையா, ஆர். விஜயகுமாரி, தேவிகா, சந்தியா, கே.மனோரமா, தாம்பரம் லலிதா, சீதாலக்ஷ்மி, கௌரவ நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமம் மற்றும் பலர்
கதை வசனம் – எம்.எஸ்.சோலைமலை
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி
ஒளிப்பதிவு – ஜி.விட்டல்ராவ்
ஒலிப்பதிவு – கே.துரைசாமி, உதவி – வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், கிருஷ்ணமூர்த்தி
கலை – ஹெச்.சாந்தாராம், அலங்காரம் – டி.வி.அண்ணாமலை
செட் பிராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
ஸ்டில்ஸ் – சி.பத்மனாபன்
விளம்பர டிசைன் – ஜி.ஹெச்.ராவ்
பத்திரிகை விளம்பரம் – அருணா அண்ட் கோ
ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி.வைத்தியநாதன்
மேக்கப் – ஆர். ரங்கசாமி, டி.டி.சுந்தரம், எம்.கஜபதி, ஆர்.ராமசாமி, பி.கிருஷ்ணராஜ், வி.பத்ரையா, பி.செல்வராஜ்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், வி.கங்காதரன், என்.விவேகானந்தம்
தயாரிப்பு நிர்வாகம்- பிஎல்.ராமநாதன், ஏ.வி.சுந்தரம்
ப்ராசஸங் – ஏவிஎம் ஸ்டூடியோஸ் லாபரட்டரி
ஸ்டூடியோ – சாரதா [லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்]
ஆர்சிஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
எடிட்டிங் – ஏ.பால்துரைசிங்கம்
அசோஸியேட் டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலங்கம், உதவி – எஸ்.எஸ்.தேவதாஸ், சீனிவாசன்
இசையமைப்பு – மெல்லிசை மன்னர்கள் – விஸ்வநாதன்-ராமமூர்த்தி, உதவி – கோவர்த்தனம்-ஹென்றி டேனியல்
டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
இன்று முதல் விளம்பர நிழற்படம் – நன்றி இதயவேந்தன் வரலாற்றுச் சுவடுகள்
http://i1146.photobucket.com/albums/...ps0ea07b1c.jpg
சிறப்பு செய்திகள்
தணிக்கையில் சர்ச்சை ஏற்பட்டு மறுபரிசீலனைக்குப் பிறகு சான்றிதழ் வழங்கப்பட்ட படம். கௌரி என்ற பெயரில் ஹிந்தியில் நடிகர் திலகத்தின் திரைப்பட நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது.
எம்.எஸ்.சோலைமலையின் ஏற்றிய விளக்கு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
தனி நடிப்பு உத்தியில் மனப்போராட்டக் காட்சியில் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பு தமிழ்த்திரையுலகில் நிலைத்த புகழ் பெற்றதாகும். இக்காட்சிக்கு உரையாடலை எழுதியவர் தஞ்சைவாணன்.
சென்னையில் வெளியான திரையரங்குகள் சாந்தி, மஹாராணி சயானி
நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை சாந்தி – 100 நாட்கள்
சாந்தி - பாடல்கள்
1. வாழ்ந்து பார்க்க வேண்டும் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
2. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் – பி.சுசீலா, எம்.எஸ்.ராஜு (விசில்)
3. செந்தூர் முருகன் கோவிலிலே – பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ்
4. செந்தூர் முருகன் கோவிலிலே – பி.சுசீலா
5. ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் – பி.சுசீலா
6. யாரந்த நிலவு – டி.எம்.சௌந்தர்ராஜன்
காணொளிகள்
யார் அந்த நிலவு
http://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
http://www.youtube.com/watch?v=4WTNYltDmc4
செந்தூர் முருகன் – விஜயகுமாரி நடிகர் திலகம்
http://www.youtube.com/watch?v=4DLLz6WvKq0
செந்தூர் முருகன் விஜயகுமாரி தேவிகா எஸ்.எஸ்.ராஜேந்திரன்
http://www.youtube.com/watch?v=PltcGPIh_7A
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
http://www.youtube.com/watch?v=cGLE1UikfZQ
நடிகர் திலகம் - ஓர் உளவியல் அதிசயம்
சாந்தி...
நடிகர் திலகம் என்னும் நடிப்புச் சுரங்கத்தை அள்ள அள்ளக் கிடைக்கக் கூடிய ஏராளமான நடிப்புப் புதையலில் இன்னும் ஒரு குவியல். பல காட்சிகளில் மிகவும் நுட்பமான நுண்ணசைவுகளில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு காட்சியைப் பற்றியுமே ஏராளமான ஆய்வேடுகளைப் படைக்கலாம். நடிப்புப் பள்ளி நடிப்பிலக்கணம் என இவருடைய பரிமாணங்களுக்கு இன்னொரு சான்று.
தன் தாயிடம் தன் காதலை வெட்கத்தோடும் அதே சமயம் தீர்மானமாகவும் சொல்லும் காட்சி. இக்காட்சியில் ஒவ்வொரு வசனத்திலும் அவர் தரும் nuances உரையாடல் உணர்விற்கு எவ்வாறு பயன்படுத்தப் படலாம் என்பதற்கான உதாரணம்.
தனியே மனப் போராட்டத்தில் அல்லாடும் காட்சி...
கனவு என்றாலே கதாநாயகியை அரைகுறை ஆடைகளோடு ஆடவிட்டு காதல் என்ற பெயரில் அந்த ஒரு உணர்வைத் தவிர மற்ற அனைத்து உணர்வுகளையும் வெளியிடுவது தான் பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் காணப்படும் கசப்பான நிகழ்வு. ஆனால் நாயகனின் மனப் போராட்டத்தையும் அவனுடைய சோகம், கோபம், ரௌத்திரம் போன்ற இதர உணர்வுகளும் ஒரு மனிதனின் கனவுகளில் இடம் பெறும் என்பதை எடுத்துக் காட்டியவர் நடிகர் திலகம். புதிய பறவை, நிச்சய தாம்பூலம் போன்ற படங்களில் அந்தக் கதாநாயகனின் உணர்வுகள் பாடலாக வெளிப்பட்டன. இப்படத்தில் உரையாடலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
கனவுக் காட்சியில் உணர்ச்சி மயமான உரையாடல் காட்சியில் அதுவும் மோனோ எனப்படும் தனிநபர் மனப் போராட்டக் காட்சியில் நடித்து உலக அளவில் இலக்கணம் படைத்தவர் நடிகர் திலகம் மட்டுமே.
இன்னொருவனின் மனைவியுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவனாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. உறவு முறையில் பெரிய அளவில் தடுமாற்றம் ஏற்படக் கூடிய, கத்தி மேல் நடப்பது போன்ற கதாபாத்திர அமைப்பில் சற்றும் வழுவாமல் மிகச் சிறப்பாக இப்பாத்திரத்தைத் திரையில் வடித்த நடிகர் திலகத்திற்கு இதற்காகவே நூறு முறை பாரத ரத்னா வழங்கலாம். உலக அளவில் இதைப் போன்ற மிகச் சிறந்த நடிப்பை யாராலும் தந்ததில்லை தர முடியாது என்பது நிதர்சனம்.
இதே போல நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் காட்சி...
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் விசில் அடித்துக் கொண்டே படிக்கட்டில் இறங்கவேண்டிய காட்சி. கீழே சற்றும் பார்க்காமல் அந்த டைமிங்கை வைத்தே அவளைப் பார்த்துக் கொண்டே விசிலடித்துக் கொண்டே டக்கென இறங்குவது..
தலைவா... நீ சரித்திர நாயகனய்யா..
ஓங்கி உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் சாந்தி திரைப்படம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்ததற்கு இன்னொரு காரணம்...
http://www.indusladies.com/forums/at...-devika-1-.jpg
இன்னும் பல படங்கள் நடிகர் திலகம் தேவிகா இணையில் வந்திருக்கக் கூடாதா... என ஏங்க வைக்கும் கெமிஸ்ட்ரி...
இவற்றோடு தமிழ்த்திரையுலக இசைக்குப் பொற்காலம் அமைத்துத் தந்த மெல்லிசை மன்னர்கள் இணையில் வெளிவந்த உன்னத இசைக்காவியம்.
பாடல்கள் மட்டுமா... நடிகர் திலகத்தின் தனி நடிப்புக் காட்சியில் ட்ரம்ஸ் பயன்படுத்தியிருக்கும் உத்தி... ட்ரம்ஸ் மட்டுமே பயன்படுத்தியிருக்கும் உத்தி..
கவியரசரின் பாடல்கள் வரிகளிலேயே கதையைச் சொல்லும் தனித்துவம்..
தொய்வடையாத வகையில் படத்தை எடுத்துச் சென்றிருக்கும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்..
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தந்த பீம்சிங்கின் இயக்கம்..
சாந்தி மறக்கமுடியாத படம் மட்டுமல்ல, இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டிய படம்.
சாந்தி- 1965
ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.
பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.
கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.
உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது?
எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான் ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.
மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
Thanks ESVEE.
டியர் இராகவேந்தர் சார்,
நடிகர் திலகத்தின் 104வது திரைக் காவியப் பதிவுடன் உங்களது
திருவிளையாடலைத் துவங்குங்கள் இந்த திரியில்.
கோபு.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கோபு சார். நிச்சயம் தொடரும்..
அடுத்து..
ஓம். நமசிவாய...
ஒரு முன்னோட்டம்...
ஹிந்தியில்...
http://www.youtube.com/watch?v=S5wvNGifnSU
Sivaji Ganesan Filmography Series
104. Thiruvilaiyadal திருவிளையாடல்
http://i1094.photobucket.com/albums/...lar/Sivan1.jpg
தணிக்கை – 16.07.1965
வெளியீடு – 31.07.1965
தயாரிப்பு – ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்
நடிகர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், திருமதி கே.பி.சுந்தராம்பாள், மனோரமா, ஜி.சகுந்தலா, பேபி சுசரிதா
கௌரவ நடிகர்கள் – டி.எஸ்.பாலய்யா, முத்துராமன், நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர், கருணாநிதி, டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, ஏ.பி.நாகராஜன், ஈ.ஆர்.சகாதேவன், பி.டி.சம்பந்தம், டி.என்.சிவதாணு, திருமதி தேவிகா
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பாலமுரளிகிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி
பாடல்கள் – தவத்திரு சங்கர்தாஸ் சுவாமிகள் – ஞானப்பழத்தை, கவிஞர் கண்ணதாசன், உதவி – பஞ்சு அருணாசலம்
சங்கீதம் – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி
ஒளிப்பதிவு டைரக்டர் – கே.எஸ்.பிரசாத்
ஒளிப்பதிவு – வி.செல்வராஜ், ராஜன். உதவி – கணேச பாண்டியன், பத்மநாபன், கே.தங்கவேலு
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி
ஒலிப்பதிவு – கே.துரைசாமி, உதவி- ஆர்.எஸ்.வேதமூர்த்தி, டி.டி.கிருஷ்ணமூர்த்தி, ஜோ அலோஷியஸ், மாதவன்
எடிட்டிங் – ராஜன், டி.ஆர்.நடராஜன்
கலை – கங்கா, உதவி-செல்வராஜ்
அரங்கம் – எம்.எஸ்.ராமசாமி.
அரங்க நிர்மாணம் – ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
அரங்க அலங்காரம் – சினி கிராஃப்ட்ஸ், ஃபிலிமோ கிராஃப்ட்ஸ், வாஹினி
ஓவியம் – ஆர்.முத்து, வி.பரமேசுவரன்
மோல்டிங் – சிதம்பரம், உதவி – ஜெயராமன்
எலெக்டிரிஷியன்ஸ் – சி.என்.புருஷோத்தமன், டி.எம்.தக்ஷிணாமூர்த்தி, உதவி-ஜெயராம் நாயுடு
ஃப்ளோர் இன்-சார்ஜ் – சாரதா ஸ்டூடியோ - என்.எஸ்.நாகப்பன், ஏ.எம்.சுந்தரம், எஸ்.பி.பாலு, என்.பஞ்சாபகேசன்
நடன அமைப்பு – பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சின்னி-சம்பத், உதவி-லக்ஷ்மி நாராயணன்
ஸ்டண்ட் – சாரங்கன் கோஷ்டியினர்
ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், சி.கே.ராஜமாணிக்கம். உதவி – சி.கே.ஹரி, நாகலிங்கம்
மேக்கப் – ரங்கசாமி, ராமசாமி, மாணிக்கம், தக்ஷிணாமூர்த்தி, பீதாம்பரம், பெரியசாமி, பத்மநாபன், சேதுபதி
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ், உதவி – என்.நரசிங்க ராவ், ஏ.சங்கர் ராவ்
விளம்பரம்- மின்னல் – சாந்தி ப்ப்ளிஸிடி சர்வீஸ்
டிஸைன்ஸ் – பக்தா
நிர்வாகம்- கே.வெங்கடாசலம், கே.என்.வைத்தியனாதன்
புரொடக்ஷன் நிர்வாகம் – எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி.வைத்தியநாதன்
புரோகிராம்ஸ் – எஸ்.எஸ்.சேதுராமன், ஏ.சுந்தரேசன்
ஸ்டூடியோ – சாரதா- லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
பிரண்ட்ட் அண்ட் பிராஸ்ஸ்டு அட்
ஜெமினி ஸ்டுடியோஸ் லேபரட்டரி, சென்னை
ஆதரவாளர் – சென்ட்ரல் டாக்கி டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், திருச்சி 8
அஸோஸியேட் டைரக்டர் – கே.கே.ஸம்பத்குமார்
திரைக்கதை வசனம் டைரக்ஷன் ஏ.பி.நாகராஜன்
திருவிளையாடல் விளம்பர நிழற்படங்கள் – பம்மலாரின் ஆவணப் பொக்கிஷத்திலிருந்து..
Quote:
'விரைவில் வருகிறது' விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC4203a.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : ஆகஸ்ட் 1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC4217a.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC4210a.jpg
50வது நாள் : தினத்தந்தி : 18.9.1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC4212a.jpg
75வது நாள் : The Hindu : 13.10.1965
http://i1094.photobucket.com/albums/...GEDC4214aa.jpg
100வது நாள் : தினத்தந்தி : 7.11.1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC4205a.jpg
100வது நாள் : The Hindu : 7.11.1965
http://i1094.photobucket.com/albums/.../GEDC4204a.jpg
25வது வெள்ளிவிழா வாரம் : தினத்தந்தி : 14.1.1966
http://i1094.photobucket.com/albums/.../GEDC4218a.jpg
திருவிளையாடல் –
பம்மலாரின் ஆவணப் பொக்கிஷம் – தொடர்ச்சி
Quote:
வெண்திரை : ஜூன் 1965 : அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4237a.jpg
[தனது தொடக்க இதழான 'ஜூன் 1965' இதழின் அட்டையில், "திருவிளையாடல்" திரைக்காவியத்தினுடைய புகைப்படத்தை வெளியிட்டு முதல் இதழிலேயே பெருமை தேடிக் கொண்டது 'வெண்திரை' சினிமா மாத இதழ்]
இதே இதழின் உள்ளே பிரசுரமான காவியக்காட்சிகள்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4241a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4242a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4243a.jpg
கல்கி 22.08.1965 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...kiReviewfw.jpg
திருவிளையாடல் பாடல்/காட்சிகளின் அணிவகுப்பு
பாட்டும் நானே பாவமும் நானே - ஐந்து இசைக் கருவிகள் - ஐந்து பாத்திரங்கள் - ஐம்புலன்களையும் கட்டிப் போடும் அட்டகாசமான நடிப்பு, இசை, குரல், வரிகள் --
நடிகர் திலகம், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தர்ராஜன், கண்ணதாசன் கூட்டணி - கேட்கவும் வேண்டுமோ - காலத்தால் அழியாத காவிய கானம்
http://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை--
இந்தப் பாத்திரத்திற்கு வேறு நடிகரை அழைத்திருந்தாராம் ஏ.பி.என். அவர்கள். அந்த நடிகர் நடிகர் திலகத்தின் நாடகக் குழு உறுப்பினர். ஆனால் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து இயக்குநரிடம் விடுத்த ஆலோசனை - ஐயா இப்பாத்திரத்தை தாங்களே ஏற்று நடிக்க வேண்டும். இயக்குநருக்கோ தயக்கம். இருந்தாலும் தயக்கத்தை உதறிவிட்டு தானே ஏற்று நடிக்க முன் வந்தார். நமக்கு காலத்தால் அழிக்க முடியாத சிறந்த காட்சி கிடைத்தது. இதோ காணுங்கள்...
http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வெச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக்கணக்கை மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கை மாத்தவில்லே போய் விழுந்தாரு ...
என்பது போன்ற கருத்தாழமிக்க வரிகளை கண்ணதாசன் புனைய, நெஞ்சைத் தொடும் ராகத்தை மெல்லிய மெட்டில் மகாதேவன் அமைக்க, சௌந்தர்ராஜன் ஜீவனுள்ள குரலில் பாட, இவர்களின் கடின உழைப்பை திரையில் அங்கீகரித்து உயிர் கொடுத்த நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பில் மற்றொரு பாடல்
பாத்தா பசு மரம் படுத்து விட்டா நெடுமரம்
http://www.youtube.com/watch?v=3Fu0546rs1g
இதற்கு முன்பும் இதற்கு பின்பும் வராத வர முடியாத நடிகர்கள், காட்சி, உரையாடல், ஒளிப்பதிவு, வேகம்.....
நாகேஷ் என்றால் தருமி, என்று முத்திரை பதித்த படம்... வார்த்தைகளில் அடங்காத வர்ணிக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட காட்சி
திருவிளையாடல் என்றால் தருமியின் காட்சி இல்லாமலா...
http://www.youtube.com/watch?v=6JRjHh91Gx4
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko
மாணவனுக்கு சந்தேகம் வந்தால் அறிவில் தெளிவு. கணவனுக்கு சந்தேகம் வந்தால் வாழ்வில் முறிவு. மன்னனுக்கு சந்தேகம் வந்தால்...
வந்தது....
சந்தேகம் தீர்ந்ததா..
தீர்ந்தது...
திருவிளையாடல் போல் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த காவியம் வரப்போவதில்லை என்ற தீர்மானம் பிறந்தது...
அந்த சந்தேகம்... அதற்கான காரணம்...
http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
டி.ஆர்.மகாலிங்கம் ஐயா,
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, நீ இருக்கையிலே நாங்கள் இருந்ததும் பெரும் சாதனை...
http://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA
எத்தனை ஆண்டுகள், எத்தனை கலைஞர்கள், எத்தனை உழைப்பு, இவற்றின் உருவமே திருவிளையாடல் படைப்பு... இதனைப் பற்றிக் கூற
http://www.youtube.com/watch?v=8BN5bdI0GY4
சிறப்புச் செய்திகள்
1. வடநாட்டு ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் 1965ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
2. சிவலீலா என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் படமாக்கப்பட்டது.
3. சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான இரு விருதுகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் பெற்றது.
4. தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டுமென்றாலும், எந்த ஒரு விழாவானாலும் முதலில் ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்ப தேர்ந்தெடுக்கப்படும் திரைக்காவியம்.
5. தேவர்கள் கண்ணிமைக்க மாட்டார்கள் என்பது புராணங்களில் கூறப்படும் ஐதீகம். இதற்கேற்ப சிவனாகத் தோன்றும் காட்சிகளில் நடிகர் திலகம் கண்ணிமைக்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.
திருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்
சாந்தி,கிரௌன், புவனேஸ்வரி
- புகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.
திருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...
சென்னை சாந்தி – 179 நாட்கள்
சென்னை கிரௌன் – 179 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்
மதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்
சேலம் சாந்தி – 132 நாட்கள்
திருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்
கோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்
நாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்
கரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்
குடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்
பாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்
நெல்லை ரத்னா – 100 நாட்கள்
தஞ்சை யாகப்பா – 100 நாட்கள்
மற்றும்
காஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்
பல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்
வேலூர் ராஜா – 84 நாட்கள்
தாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்
பெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்
பெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்
மேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.
- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.
Excellent work Mr Raghavendra Sir and there are lot of informations in this film where all of them
are still relevent not only for today but also in the years to come.
Regards
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவிஞர் கா.மு.ஷெரீஃப்...?
இதோ ஒரு விவாதத்தின் சுட்டி
மேற்காணும் சுட்டி இடம் பெற்ற இணையப்பக்கத்திற்கான இணைப்பு - https://kavikamu.wordpress.com/page/2/Quote:
“பாட்டும் நானே” யாரெழுதியது?
https://kavikamu.files.wordpress.com...aane.jpg?w=645
திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்
https://kavikamu.files.wordpress.com...ff-1.jpg?w=645
https://kavikamu.files.wordpress.com...ff-2.jpg?w=645
ஆதாரம்:
நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,
ஆசிரியர் : ஜெயகாந்தன்
வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17