MY FAVOURITE FIGHT SCENE IN ARASAKATTLAI MOVIE
https://www.youtube.com/watch?v=EGgDmdJUoS4
Printable View
MY FAVOURITE FIGHT SCENE IN ARASAKATTLAI MOVIE
https://www.youtube.com/watch?v=EGgDmdJUoS4
MY FAVOURITE SCENE IN ARASAKATTLAI
https://www.youtube.com/watch?v=6f27enoFhhs
மக்கள் திலகத்துடன் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த அருமையான படம் அரசகட்டளை . நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ஓட்ட வில்லை . பாடல்கள் எல்லாமே பிரமாதம் .
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் - காதல் பாடல்கள் - கொள்கை பாடல் என்று ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் . அரசியல் நெடி வசனங்கள் மிகவும் அனல் பறக்கும் அளவிற்கு இருந்தது .
பி.எஸ். வீரப்பா - நம்பியார் - அசோகன் - மனோகர் -என்று காட்சிக்கு காட்சி இவர்கள் தோன்றி படத்திற்கு விறுவிறுப்பை உண்டாக்கினார்கள் .
அரசகட்டளை - ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் .
SALEM - ALANKAR -1970
http://i58.tinypic.com/261et7d.jpg
BANGALORE - NEW CITY - 1970
http://i39.tinypic.com/sfgirs.jpg
மாட்டுக்காரவேலன் படம் தென்னாடெங்கும் வெற்றிகரமாக 127 வது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
சண்டைகாட்சிகள்
விறுவிறுப்பான காட்சிகள்
இனிமையான பாடல்கள்
என்று ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .
http://youtu.be/p4sEwW4mZ_0
சென்னை
மிட்லண்ட் -105- நாட்கள்
கிருஷ்ணா -86- நாட்கள்
மேகலா -70- நாட்கள்
நூர்ஜஹான் -57 - நாட்கள்
பெங்களூர்
ஸ்வஸ்திக் - 42 நாட்கள்
நியூ சிடி - 42 நாட்கள்
லக்ஷ்மி - 42 நாட்கள் .
புரட்சித்தலைவரின் தீவிர பக்தரும் நமது சகோதரருமான மும்பை திரு. பூமிநாதன் ஆண்டவர் தன்னுடைய பேஸ் புக்கில் மக்கள் திலகத்தின் வண்ண உருவங்கள் கொண்ட புகைப்படங்களை வெளியிடுகிறார். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு உங்கள் பார்வைக்கு. சகோதரர் பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு மிகவும் நன்றி. திரு. பூமிநாதன், இதய தெய்வத்தின் பதிவுகளை இந்த திரியிலும் பதிவிடுமாறு தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
http://i58.tinypic.com/b8tv81.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
ONE & ONLY BEAUTIFUL CUM STYLE KING OF WORLD CINEMA
http://i1170.photobucket.com/albums/...ps6c334ded.jpg
2000 பதிவுகள் முடித்தமைக்கு வாழ்த்து தெரிவித்த நமது திரியின் அன்பு
தோழர்களுக்கும், தொலைபேசி, அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் கூறிய
நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.
ஆர்.லோகநாதன்.
நண்பர் திரு.வினோத் அவர்களின் அரச கட்டளை, என் அண்ணன் பதிவுகள்
பிரமாதம் . சேலம் அலங்கார் 60 அடி உயர கட் அவுட் பதிவுக்கு நன்றி.
என் அண்ணன் விமர்சனம் அருமை.
புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி. வி.என்.ஜானகி அம்மையார்
அவர்களின் 18 வது நினைவஞ்சலி முன்னிட்டு, அன்னாரின் புகைப்படங்கள் /செய்திகள் வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் நாடோடி மன்னன், அடிமைப்பெண்,
என் அண்ணன் பதிவுகள் கண்டு மகிழ்ச்சி.
நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களின் பதிவுகள் மீண்டும் இடைவெளி இன்றி தொடரவேண்டும் என்பது வேண்டுகோள்.
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகளில் புரட்சி தலைவரின் புகைப்படங்கள் /செய்திகள் பிரம்மாண்டம்.
ஆர். லோகநாதன்.
நமது திரி நண்பர்களுக்கு ஒரு தகவல்
-------------------------------------------------------------------
மும்பையில் இருந்து நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர், தன் சொந்த ஊருக்கு போகும் வழியில் சென்னை வந்து , இன்று மாலை காட்சியில்
பேபி ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
திரைப்படம் பார்த்து அகமகிழ்ந்தார்.
சற்று தாமதமாக வந்ததால் டைட்டில் பார்க்க முடியவில்லை என கூறி
மிகவும் வருத்தபட்டார்.
சென்னை நண்பர்கள் சிலரை பார்த்து அளவளாவியது குறித்து மகிழ்ச்சி
தெரிவித்தார்.
மீண்டும் மும்பை திரும்பும் வழியில், சென்னை வர நேர்ந்தால் டைட்டில்
ஆரம்பத்தில் இருந்து பார்க்கலாம் . முயற்சிக்கவும் என வேண்டுகோள் விடுத்தேன். முயற்சிக்கிறேன் என பதிலளித்தார்.
சென்னை, மதுரை, கோவை, சேலம்,பெங்களுரு, புதுவை, திருப்பூர்,நெல்லை,தூத்துக்குடி , ஷிமோகா ஆகிய ஊர்களில் உள்ள நண்பர்களின் தொலைபேசி /அலைபேசி எண்கள் அடங்கிய விவரங்கள்
அவருக்கு அளித்தேன்.
30 வயது இளைஞராகிய திரு. பூமிநாதன் ஆண்டவர் புரட்சி தலைவர் மீது மாறாத அன்பு கொண்டவர் போல் சிறிது நேரம் பேசியது ஆச்சர்யமாக
இருந்தது. இந்த காலத்து இளைஞர்களையும் புரட்சி தலைவரின் வசீகரம்
கவர்ந்து இருப்பது விந்தையே.
மும்பை திரும்பியதும், தொடர்ந்து நமது திரியில் புரட்சி தலைவரின்
பதிவுகள் தொடரட்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.
ஆர். லோகநாதன்.
திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமதி சுதா விஜயன் அவர்கள் இந்து (ஆங்கிலம் ) நாளிதழில்
வெளியிட்ட விளம்பரம்.
http://i58.tinypic.com/dw5s1w.jpg
http://i58.tinypic.com/28a1bp.jpg
FRIDAY DAILY THANTHI AD
மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் - உலகமெங்கும் பரவிய வெற்றி சின்னம் -திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் மூலம் அதிமுக - வெற்றி பெற்ற திரு நாள் 21.5.1973.
http://i59.tinypic.com/20hvmhh.jpg
41 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த இனிய நாளில் அதிமுக என்ற இயக்கம் இன்று 37 மக்களவை உறுப்பினர்களையும்
11 ராஜ்யசபா உறுப்பினர்களையும் மொத்தம் 48 எம்பிக்களையும் , பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும்
மாநில கட்சிகளில் முதலிடத்தையும் பிடித்து மக்கள் திலகத்தின் இயக்கம் இன்று டெல்லியில் தலை நிமிர்ந்து
நடக்கிறது என்றால் அது புரட்சித்தலைவரின் புகழுக்கு கிடைத்த மகத்தான வெற்றி வெற்றி வெற்றி .
21.5.1970 - BANGALORE - INDIAN EXPRESS PAPER
http://i59.tinypic.com/2m3g1p2.jpg
IT IS QUITE TRUE. No body can deny. The great influence of our beloved god M.G.R. and his still existing vote bank had only fetched such a big victory for his party.
thank you very much vinodh sir.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
21-05-1970 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "என் அண்ணன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் பக்க தோற்றம் :
http://i58.tinypic.com/2e1bmv4.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
21-05-1970 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "என் அண்ணன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் பக்க தோற்றம்
http://i59.tinypic.com/ezelxz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/2vc88ic.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சென்னை, மே. 21–
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அ.தி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி வரலாற்று சாதனை பெற்றுள்ளது. இதுவரை எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு இந்த அளவுக்கு எம்.பி.க்களை பெற்றுள்ளது.
முதல் முறையாக அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளது. முதல்– அமைச்சரும் அ.தி.மு.க. பொது செயலாளருமான ஜெயலலிதாவின் துணிச்சலான, நேர்மையான நடவடிக்கைக்கும், அவரது மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. 44.30 சதவீத ஓட்டுகள் பெற்று மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த கட்சியும் இந்த அளவுக்கு ஓட்டுக்களை பெற்றது இல்லை.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய 2 தொகுதியில் மட்டும் பா.ஜனதா கூட்டணிக்கு கிடைத்துள்ளது. ஆளும் கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவிடாமல் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளையும் அள்ளிச் சென்றுவிட்டது.
முதல்–முறையாக சென்னையில் உள்ள 3 எம்.பி. தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 217 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. ஓட்டுக்களை அள்ளிக்குவிந்துள்ளது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 151 ஆக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் அடிப்படையில் 217 சட்டசபை தொகுதிகளை அ.தி.மு.க. தன் வசப்படுத்தியுள்ளது.
ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. தற்போது 217 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு அமோக செல்வாக்கும், ஆதரவும் பெருகி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழகத்தில் 93 சதவீத வெற்றியாகும். எதிர்கட்சிகளை வேரோடு சாய்த்துவிட்டது போன்ற வெற்றியை பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 17 தொகுதியில் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கன்னியாகுமரி, விளவங்கோடு, சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய 7 தொகுதிகளில் பா.ஜனதா அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது.
தி.மு.க.வுக்கு பாளையங்கோட்டை, திருவாரூர், ஆத்தூர் (திண்டுக்கல்) கூடலூர் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும், பா.ம.க.வுக்கு பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய 4 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.
தி.மு.க.வுக்கு 4 சட்டசபை தொகுதியில் அதிக ஓட்டு கிடைத்தாலும் ஒரு எம்.பி. தொகுதி கூட கிடைக்கவில்லை. அதே சமயம் பா.ம.க. 4 சட்டசபை தொகுதியில் கிடைத்த ஓட்டு மூலம் ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 59,637 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் கிரிராஜன் 59,422 வாக்குகள் பெற்று இருக்கிறார்.
இதேபோல் மத்திய சென்னைக்குட்பட்ட துறைமுகம் சட்டசபையில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 35,385 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் 34,661 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் விஜயகுமாருக்கு 56,526 வாக்குகளும், தயாநிதிமாறனுக்கு 56,062 வாக்குகளும் கிடைத்துள்ளன. சென்னையில் இந்த 3 சட்டமன்ற தொகுதிகளில்தான் அ.தி.மு.க.வுக்கு வாக்கு வித்தியாசம் குறைவு மற்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் அதிகம் பெற்றுள்ளது.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் பா.ஜனதாவின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 60,439 ஓட்டுகளும், அ.தி.மு.க.வின் நாகராஜனுக்கு 54,102 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள் ளது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார் கோவிலில் மட்டுமே அ.தி.மு.க.வை விட அதிக ஓட்டு பெற்றுள்ளார். திருமாவளவனுக்கு 58,294 ஓட்டுகளும், அ.தி.மு.க.வின் சந்திரகாசிக்கு 49,604 வாக்குகளும் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரியின் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், பா.ஜனதாவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். இங்கு வசந்தகுமாருக்கு 52,095 ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் 49,239 வாக்குகளே பெற்று 2–வது இடத்தில் உள்ளார்.
அ.தி.மு.க. அரசு தனது 3–வது ஆண்டு சாதனையை கொண்டாடும் இந்த நேரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பரிசாக இந்த வெற்றியை அளித்துள்ளனர்.
இந்த வெற்றி 2016 சட்டசபை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
courtesy malaimalar
"அசத்தல் நாயகர் ஆயிரத்தில் ஒருவன்"
'எங்கள் தங்கம் மக்கள் திலகம்'எம்.ஜி.ஆர்.!!!!................இன்னும் நூறு வருடம் சென்றாலும் அவருக்கு நிகராக மற்றொருவர் இல்லை! புரட்சி தலைவர் மில்லியனுக்கு மேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!
புரட்சி தலைவர் நாமம் வாழ்க!!!!