-
சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்ற போது. நம் புரட்சித்தலைவர் தமிழக முதல்வராக இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும், பாகிஸ்தான் அணி கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோருடன் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அருகில், எம். ஏ. சிதம்பரம் அவர்கள்.
http://i61.tinypic.com/2qbhh4x.jpg
-
கைவினை பொருட்கள் கண்காட்சிக்கு விஜயம் செய்த மக்கள் திலகம்
http://i59.tinypic.com/15x9utj.jpg
-
நம் புரட்சித்தலைருடன், 1983ல் இந்திய திருநாட்டிற்கு, உலக கோப்பை பெற்று தந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் அவர்கள்
http://i57.tinypic.com/30mwg88.jpg
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்ற போது. நம் புரட்சித்தலைவர் தமிழக முதல்வராக இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும், பாகிஸ்தான் அணி கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோருடன் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அருகில், எம். ஏ. சிதம்பரம் அவர்கள்.
http://i61.tinypic.com/2qbhh4x.jpg
Thanks for the image file Sir - Thalaivar with Sunil Gavaskar and Asif Iqbal.
-
http://i58.tinypic.com/2w591t5.jpg
என் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை 1975ல் சென்னை ராமவரம் தோட்டத்தில் நான் முதல் முறையாக நேரில் சந்தித்து எடுத்து கொண்ட படம் .40 ஆண்டுகள் உருண்டோடினாலும் அவர் மீது கொண்ட பக்தி பாசம் இன்னும் அதிகமாகவே உள்ளது .
இன்று பிறந்த நாள் காணும் நம் மக்கள் திலகத்தின் இனிய நன்னாளில் சில சாதனைகளை எண்ணி பார்க்கிறேன் .
மக்கள் திலகம் இல்லாமல் 27 ஆண்டுகள் சென்று விட்டாலும் அவர் புகழ் பாடும் உள்ளங்கள் , அவரை பற்றிய நினைவலைகள் கூறும் நல்லிதயங்கள் இருப்பது பெருமையாகும் . 2014 நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயரும் , புகழும் மாபெரும் வெற்றிக்கு உதவியாக இருந்தது .
http://i62.tinypic.com/15gp9oj.jpg
1965ல் வெளிவந்து மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவன் - மறு வெளியீடு .
உண்மையிலயே திரு சொக்கலிங்கத்தை பாராட்டியே தீர வேண்டும் .தென்னகமெங்கும் 120 அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் படத்தை வெளியிட்டார் . சென்னை அண்ணாசாலையில் தேவி பாரடைஸ் -ஆல்பட் -சத்யம் என்று மூன்று பெரிய அரங்கில் வெளியிட்டு இருந்தது , மற்றும் சென்னை நகரில் சத்யம் - ஆல்பட் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா ஓடியது சாதனைகளாகும் .
மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து 37 ஆண்டுகளாக ஓடிகொண்டிருப்பது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் . 2015ல் மக்கள் திலகத்திற்கு பல தினசரி , வார , மாத இதழ்கள் சிறப்பு கட்டுரைகள் ,காலண்டர் மலர் மாலைகள் தொடுப்பது சிறப்பு அம்சமாகும் .
-
தின இதழ் -17/01/2015
----------------------------
http://i57.tinypic.com/20afekh.jpg
-
-
-
-
-
-
ஜூனியர் விகடன் கேள்வி- பதில் -17/01/2015
-----------------------------------------------------
http://i57.tinypic.com/2937vvr.jpg
-
தினத்தந்தி -17/01/2015
---------------------------
http://i58.tinypic.com/2iou9u.jpg
-
-
-
-
-
-
Vijay tv - mannadhi mannan mgr - special programme
http://youtu.be/w-BK5MMO9oA
-
-
-
The Hindu - 17-1-2015
When Madras had Muhammad Ali in its corner
http://i57.tinypic.com/apbbs2.jpg
As boxer Muhammad Ali turns 73 on January 17, not many know that it was only 35 years ago, in January 1980, that crowds thronged Chennai’s Nehru stadium to witness the legend in action.
Organised by Tamil Nadu State Amateur Boxing Association and Apeejay, the exhibition bout that saw Ali taking on former heavy weight champion Jimmy Ellis left boxing fans dizzy with excitement.
The run-up to the match itself saw The Hindu ’s pages splashed with advertisements enticing spectators to the match. The tickets were priced at Rs. 100, 70, 50, 20, and 10. Connemara Hotel, which hosted the boxer in one of its luxury suites, also issued an advertisement with an accompanying sketch of the sportsman in deep sleep.
On arriving at Meenambakkam airport from Bombay, the boxer, accompanied by his wife, said: “When I saw thousands turning up to the airport to meet me and greet me, it sent my spirits soaring and I am overwhelmed at the attention bestowed on me. In this short visit a bond has sprung up between us, and I shall treasure this all my life.”
In a dramatic twist to an otherwise smooth press meet, the pugilist faced off with a reporter who questioned his weakness on the left hook. Challenging the reporter to join him on the podium he said “Son, in my 49 fights I have knocked out 32 of my opponents and I haven’t suffered much punishment. You see my face? Do you see any scars or disfigurements? It looks nice and clean isn’t it? That’s it, that is why I am the greatest.”
The match itself left fans longing for more. According to The Hindu ’s report dated Februrary 1, 1980, “The swift movements, cat-like reflexes, the shuffles and the lethal left jab were all there but were all too brief to savour in fullness.”
The proceeds of the programme, which included a session with local boxers and a bout between Ali and an aspiring young boxer, went to a boxing institute in the city.
In 1980, the city’s boxing fans were entertained by an exhibition bout
-
-
-
Glimpses of Mannathi Mannan MGR program telecasted in Vijay TV on 16-01-2015.
http://i62.tinypic.com/fm283a.jpg
-
Rare video clips shown in Vijay TV in Mannathi Mannan Program
http://i61.tinypic.com/ztghuu.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Article about Makkal Thilagam MGR in Ananda Vikatan magazine..
http://i59.tinypic.com/33yiz55.jpg
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே!
எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!
எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!
விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன்!
சிகரெட் பிடிப்பது மாதிரிநடிப்பதைத் தவிர்த்தார். 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்'ஹ¨க்கா' பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத் தார்!
'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!
http://i59.tinypic.com/whbpec.jpg
நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!
எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்... 'அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'
'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார்!
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!
ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார்!
அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!
http://i58.tinypic.com/ip1rvs.jpg
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். 'யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல' என்பாராம்!
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!
'நான் ஏன் பிறந்தேன்?' - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.
அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய 'எனது வாழ்க்கை பாதையிலே' தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்